1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜி பட தலைப்புகளால் ஒரு கதை

அத்தியாயம் 1:
உயர்ந்தமனிதன் உதித்த உன்னத இல்லம்:
​அந்தக் கிராமத்தில் "விடிவெள்ளி" முளைக்கும் முன்பே "உயர்ந்த மனிதன்" கணேசன் தன் பணிகளைத் தொடங்கிவிடுவார். அவர் அந்த ஊரின் "கௌரவம்" மிக்க பெரியவர்; ஒரு "தெய்வ மகன்" என்று அனைவராலும் போற்றப்பட்டவர். அவர் வாழ்ந்த இல்லம் ஒரு "வசந்த மாளிகை". அங்கே உறவுகளுக்கு இடையே "பச்சை விளக்கு" எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும். கணேசன்  மெத்த படித்திருந்தாலும் "படித்தால் மட்டும் போதுமா? "என்ற எண்ணம்  கொண்ட "நிறைகுடம்" அவர்.

 ஒழுக்கமே உயர்வு என வாழ்ந்த  "உத்தம புத்திரன்"ஆன 
​அவருக்கு "முத்துக்கள் முன்று" போலே மூன்று மகன்கள். மூத்தவன் " ராஜராஜ சோழன்"
போன்ற நிர்வாகத்திறன் கொண்டவன், இரண்டாவது மகன் "வீரபாண்டிய கட்டபொம்மன்" போன்ற வீரம் கொண்டவன், இளையவன் "பாசமலர்" போன்ற பாசம் கொண்டவன். அவர்களுக்கு ஒரு தங்கை, அவள் அந்த வீட்டின் "வெள்ளை ரோஜா". அவளுக்கு ஒரு "லட்சுமி கல்யாணம் "போல்  செய்து பார்க்க வேண்டும் என்பது கணேசனின்  நீண்ட நாள் ஆசை. அந்த இல்லம் ஒரு "அன்புக்கரங்கள் " நீட்டும் "சொர்க்கம் "போன்று விளங்கியது.

​அத்தியாயம் 2: திருவிழாச் சடங்குகளும் முன்னேற்பாடுகளும்...
அந்த ​ஊரில் " காவல் தெய்வம்"
விழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கின. இது அந்த மண்ணின் "பாரம்பர்யம்". திருவிழா என்பது ஒரு சமுதாயம் "நாம் பிறந்த மண்"ணுக்காக ஒன்று சேரும் இடம்" என்று  கணேசன் தன் பிள்ளைகளிடம் கூறினார். 

"முதல்தேதி "அன்று கிராமத்துக் கோயிலில் பிள்ளையார் சுழி போட்டு, மங்கல இசை முழங்க காப்புக் கட்டப்பட்டது. இது அந்த ஊர் மக்களின் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை நிலைநாட்டும் "ஊரும் உறவும்" நிகழ்வு.

​பெண்கள் அனைவரும் "இரு மலர்கள்" போல ஜோடியாகச் சேர்ந்து ஆற்றுக்குச் சென்று  மங்கல நீர் எடுத்து வந்தனர். 

"இளைய தலை முறை" ஊர் முழுவதும் தோரணங்கள் கட்டினர். "தம்பி, இது நம் கடமை, இந்த மண்
 நம் "செல்வம்" போன்றது" என்று கணேசன் உபதேசித்தார். திருவிழாச் சந்தையில் "பார்த்தால் பசி தீரும்" அளவுக்குப் பலகாரங்கள்; குழந்தைகளுக்குப் "புதிய பறவை "போலத் துள்ளிக் குதிக்கும் பொம்மைகள். அங்கே  "தில்லானா மோகனாம்பாள்" நாட்டியம்  ஊரையே கட்டிப்போட்டது. 

இரவு நேரங்களில் "நவராத்திரி"க்கு செய்யப்படும் கொலு போலவும் , 
"தீபம்" வெளிச்சத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. 
அந்த ஊர் தெய்வத்துக்கு "முதல் மரியாதை", " ராஜ மரியாதை"யாக செய்யப்பட்டது 

​அத்தியாயம் 3: அந்த நாள் பகையும் ரத்தப் பாசமும்...
"​வாழ்க்கை" என்பது எப்போதும் 
"சாந்தி" கொடுப்பது அல்லவே .
அந்த ஊரில் ஒரு இருட்டு பாழ் மண்டபம் சதிகளுக்கு "துணை"யாக இருந்தது. அங்கே "அந்த நாள்" பகையை மனதில் வைத்திருந்த "முரடன் முத்து" என்ற வில்லன், "இரும்புத் திரை" மறைவில் இருந்து சதி செய்தான். 

ஒரு காலத்தில், கணேசனின் தந்தை ஒரு " தங்கச் சுரங்கம்"
போன்ற நிலத்தை ஊர் பொதுநலனுக்காகக் கொடுத்தபோது, முத்துவின் தந்தை அதைத் தடுத்தார். 
கணேசனின் தந்தையிடம் மேலாளராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தவர் முத்துவின்  தந்தை "காத்தவராயன்".
அவர் "உத்தமன்" அல்ல,
பேராசை கொண்டவர். 
"புதையல்" போனற நிலத்தை ஊருக்குக் கொடுத்தால் நமக்கு என்ன லாபம்? 
என்று கணேசனின் தந்தையைத் தடுத்தார். 

அது "வம்சவிளக்கு"ஆன  கணேசனுக்கு சேர வேண்டிய   சொத்து என்றாலும், முத்துவின் தந்தை அந்த நிலத்தின் பத்திரங்களை மறைத்து வைத்து துரோகம் செய்தார்.
​இந்தத் தகராறு ஊர் பஞ்சாயத்து "தீர்ப்பு"க்கு வந்தது. அங்கே கணேசனின் தந்தை சொத்துக்கு "நானே ராஜா" 
தன் உண்மையை நிரூபித்தார்.ஊர் மக்கள் முத்துவின்  தந்தையைத் "திருடன்"  என ஏசி, ஊரை விட்டே ஒதுக்கி வைத்தனர். 

இதனால் அவர் ஊர் "பந்தம்" அகல  வெளியேறி, வறுமையில் வாடி ஒரு அநாதையாகச் செத்தார். தன் தந்தை செய்த தவற்றை நினைக்காமல்  கணேசன் குடும்பத்தால்தான் என் தந்தை அநாதையாகச் செத்தார்" என்று முத்து  வஞ்சினத்தில் "விஸ்வரூபம்" எடுத்தான். 
அவன்  தீய வழியில் முன்னேறி, இப்போது துளி " துளி விஷம்"
போலே பகையை மனதில் ஏற்றி பழிவாங்கத் துடித்தான்.
​.
​அத்தியாயம் 4: திருவிழாத் தேரும் தீயவன் திட்டமும்..
​திருவிழாவின் சிகரமான தேரோட்டம் அன்று ஒரு "விடிவெள்ளி"யில், முத்து  ஒரு பயங்கரமான திட்டத்தைத் தீட்டினான். அவன் ஊர் தேரின் அச்சில்  "நேர்மை"அற்ற முறையில் ஒரு ரகசியக் கருவியைப் பொருத்தினான். தேர் நகரும்போது அது முறிந்து, பெரும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சதி செய்து "திரும்பி பார்"க்காமல் சென்றான்.

இது ஒரு "சவாலே சமாளி" ரகப் பிரச்சனை அல்ல, ஊர் மக்களின் உயிருடன் விளையாடும் விளையாட்டு! கணேசனினின் இரண்டாவது மகன்,  அந்தத் தேரை ஆய்வு செய்தபோது, ஏதோ ஒரு விஸ்வரூபம் எடுக்கும் ஆபத்தை உணர்ந்தான். ""அன்புள்ள அப்பா", இது ஒரு துரோகம்!" என்று கத்தினான்.
​வில்லன் முத்து  தன் ஆட்களுடன் வந்து, "இன்றுடன் உங்கள் கௌரவம் மண்ணோடு மண்ணாகும்" என்று எகத்தாளமாகச் சிரித்தான். அப்போது கணேசன் அமைதியாக முன்னே வந்தார். 

முத்து! நீ ஒரு "அறிவாளி" என நினைத்துக் கொண்டு  சதி செய்கிறாய். 
நீ செய்வதில் " தர்மம் எங்கே?"
உனக்கு "பாவ மன்னிப்பு" கூட கிடைக்காது என கர்ஜித்தார். கணேசனின் மகன்கள் "திரிசூலம்"போல மூன்று திசைகளில் இருந்து பாய்ந்தனர். அந்த இடம் "சிவந்த மண்" ஆக மாறியது.

​அத்தியாயம் 5: ஞான ஒளியும் சுப மங்களமும்
​இறுதியில் முத்துவை சுற்றி வளைத்தனர். ஒரு "திருப்பம்" ஆக ,கணேசன் அவனுக்குத் தண்டனை கொடுக்கவில்லை. "உன் தந்தை அன்று செய்த துரோகத்தை மறைத்து, உன்னை ஒரு " மனிதரில் மாணிக்கம் " ஆக வளர்க்க நினைத்தேன். ஆனால், நீ "அவன் தான் மனிதன்" என்று சொல்லத் தகுதியில்லாதவனாக மாறிவிட்டாய்!" என்றார். முத்துவின்  சதியால் தேருக்கு ஏற்படவிருந்த பாதிப்பைச் சரிசெய்ய அவனையே வேலை வாங்கி "நீதி "செய்தனர்.
இது அவனுக்கு ஒரு "ஞான  ஒளி"யைக் கொடுத்தது. 

அவன் தன் தவறு உணர்ந்து அழுது நீங்கள்தான் உண்மையான "உயர்ந்த மனிதன்" என்று அவன் அவர் காலடியில் விழுந்தான்.
​ஊரில் "சாந்தி" நிலவியது. 

கணேசனின் மகள் திருமணம் "சுமங்கலி"களின் ஆசியோடு இனிதே நிறைவேறியது. அந்த இல்லம் மீண்டும் ஒரு "குடும்பம் ஒரு கோயில்" போல ஜொலித்தது. வானில் கதிரவன் மறைய, நிலவு ஒரு வெள்ளை ரோஜாவாகப் பூத்தது. ஊர் மக்கள் கணேசனைப் பார்த்து, "எங்க ஊர் ராஜா" நீங்கதான்" என்று வாழ்த்தினர்.

செந்தில்வேல் சிவராஜ்..

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்