1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

நீதி

நீ "தீ "...
வழக்கமான  சட்டத்தை மாற்றிய கதை.கதையின் மூலமும் அதுவே.
எத்தனை திரைப்படங்கள் குற்றத்தையும், தண்டனையையும் வைத்து வெளியாகியுள்ளதோ தெரியாது.
ஆனால் முதலிடம் மாறாது "நீதிக்கு".
ஒரு தீர்ப்பின் பலன் உண்மையாய் எது செய்யப்பட வேண்டுமோ அதை சொன்னதுக்காக நீதியை போற்ற வேண்டும்.இன்றைய நிலையில் வைத்துச் சொன்னால் 130 கோடி மக்களுக்கான சரியான நீதி,படத்தில் சொல்லப்பட்ட கருத்து.
பல சரித்திர படங்களை விட இதுவே பெரும் சரித்திரம்.
அடித்தட்டு மக்களுக்கான நீதி என்று வைத்துக் கொண்டாலே, அந்த வருடத்தையே( 1972 )
நீதிக்காக கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்.ஏன் கமர்ஷியல்?  எதையும் ஐனரஞ்சகமாகவே சொன்னால் தான் தமிழன் பார்க்கிறான்.

முதல் காட்சியிலேயே ஹீரோ ஒரு ஏழை விவசாயியை லாரி ஓட்டி கொன்று விடுகிறார்.தெரியாமல் தான்.சட்டப்படி பல ஆண்டுகள் தண்டனை தானே! இப்படித்தானே தொடரும்.ஆனால் ,
இதையே சற்று மாற்றி இக் கதையை ஹுரோவிடம் இயக்குனர் சொல்ல வருகிறார் என்று வைத்ததுக் கொள்ளுங்கள்.ஹீரோ ..நீங்கள் அந்த பாதிக்கப்பட்ட விவசாயியின் குடும்பத்தை கவனித்து கொள்ள வேண்டும்,இது தான் கதை சார், என்று பெரிய ஹுரோக்களிடம் கதை சொன்னால், மூன்றாவது வரிக்கே  கதை சொல்வதை நிறுத்த சொல்லி விடுவார்கள்.இக் கதை ,நடிகர்திலகத்திடம் வந்ததால்,...
அந்த மூன்றாவது வரிதான்..அதிலிருந்தே அந்த ஹீரோ பாத்திரத்தை தன்னில் முழுதும் ஏற்றி கொண்டிருப்பார் நடிகர்திலகம்.இத்தனைக்கும் இது டாக்குமென்ட்ரி டைப்பில் தான் கேட்பதற்கு இருக்கும்.இதை கமர்ஷியலாகவே கலக்கி ....கலக்கி என்ன? அசால்ட்டாகவே பிச்சு உதறியிருப்பார்.
அந்த மீசை ,தலையில் ஒரு கர்சீப் கட்டு, ஒரே டிரஸ் போட்டுக் கொண்டே ஹீரோவின் அநாயசமான கம்பீர வலம்,படம் முழுதும் ஊர்வலம் தான். அத்தனை கெத்து இருக்கும் ஒவ்வொரு ஷாட்டிலும்.
செம போராத்தானே இருக்கும்! இந்த கதையை கேட்கும் போது.படத்தில் அப்படி ஏதும்..ம்ஹும்ம்.
இந்த கதையை ஜாலியா எடுக்கும் படி இல்லை.அதே சமயம் சோகத்தை தவிர சொல்லும் படியாகவும் எடுப்பதற்கும்  வாய்ப்பில்லை!  ஆனால் ,படத்தை பார்த்தால் வேற லெவல்.அந்த மைய கருத்து எல்லோரிடமும் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக சுவாராஸ்யமான காட்சிகள் பிணைப்பு திரைக்கதை தான் படத்தின் வெற்றிக்கு காரணம்.
அந்த புளியமரத்தின் கதை ,மனோரமாவின் டிராக்டர் ரிப்பேர் வேடிக்கைகள், என்று இடை இடையே அமைக்கப்பட்ட காட்சிகள் படத்தை வெகுவே  சுவாராஸ்யப்படுத்தி விடுகின்றன.
சௌகார், காந்திமதி, சுப்பையாவின் சோக வசன காட்சிகள் வரும்போதெல்லாம் ,நடிகர்திலகம்  கமெண்ட்களாலும் , நடிப்பாலும்  காட்சிகளை பிரமாதப்படுத்தி முடிப்பார்.

முரட்டுத்தனமாக வாழும் லாரி டிரைவரின் வாழ்க்கையில், சந்தர்ப்பங்கள்,சூழ்நிலைகளின் குறுக்கீடுகள் அந்த லாரிடிரைவரின் வாழ்க்கையை எப்படி மாற்றிப் போடுகிறது, என்றும் கதை செல்வதாக இருந்தாலும் அந்த கோணம் மனதில்  வராததற்கு காரணம், ஒரு குற்றத்தின் தண்டனைப் பலன் எப்படி இருந்தால் நன்மை தரும் என்று இந்த சமூகத்திற்கு ஆழ மைய கருத்தாய் சொல்ல வந்த கதை என்பதே காரணமாய்  இருக்கலாம்.சமூகத்திற்கு இது போன்ற கற்பனைகளே தேவை.

உண்மையாகவே வீரமாய் இருப்பவன் மிரட்டல், உருட்டல் எல்லாம் எல்லோரிடமும், எந் நேரமும் காண்பித்து  கொண்டிருக்க மாட்டான்.இந்த ஒரு குணமும் அந்த லாரி டிரைவரின் பாத்திரத்தில்.உசிலை மணியின் தண்ணீர் பானையை உடைப்பதிலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் நடந்து கொள்வதிலும் இக் குணத்தை பிரதிபலித்திருப்பார் நடிகர்திலகம்.
கதாநாயகியை வைத்துக் கொண்டு காடு மேடெல்லாம் சுற்றி திரியாமல் கதையை ஒட்டி வருவதாலேயே  கதைப் போக்கின் இயல்புத் தன்மை சிதையாமல் இருக்கும்.
காஷ்ட்யூமை பொறுத்த வரை கதாநாயகியை தவிர எல்லோருக்கும் நேச்சுரலான செலக்ஷன்.கண்களை உறுத்தும் பாத்திரங்களுக்கு பொருத்தமில்லாத ஆடை வடிவமைப்பு எல்லாம் இதில் இல்லை.
நடிகர்திலகத்தின் நீல டிரஸ், அந்த மிடுக்கில் லாரி டிரைவர்களுக்கு ஏன் இந்த ஆடையை டியூட்டி ட்ரெஸ்ஸாக வைத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கவே செய்கிறது.
குற்றங்கள் மலிந்து கிடக்கும் இச் சமூகத்திற்கு ,தீர்ப்புகள் வார்த்தைகளால் எழுதப்படாமல் 
இதயத்தால் எழுதப்பட வேண்டும்,
என்பதே சரியான நீதி! 

செந்தில்வேல் சிவராஜ்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்