1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

ஒரே பேமிலி..5 போலீஸ்...

இன்னைக்கு நாம பேசப்போற மேட்டர் சாதாரணமானது இல்ல... இது ஒரு 'லெஜண்டரி ரெக்கார்ட்'.
​சினிமாவுல வாரிசுகள் வர்றது புதுசு இல்ல, ஆனா வந்த அத்தனை பேரும் 'சிங்கத்தோட கால்தடத்தை' அப்படியே ஃபாலோ பண்றதுதான் இங்கே ஆச்சரியமே! உலக சினிமா வரலாற்றை எடுத்துப் பாருங்க... ஹாலிவுட்ல இருந்து கோலிவுட் வரைக்கும் எத்தனையோ பெரிய ஃபேமிலிஸ் இருக்கு. ஆனா, ஒரே குடும்பத்துல இருந்து மூணு தலைமுறை, அஞ்சு பேரு, 'போலீஸ்' அப்படிங்கிற அந்த ஒரு கெத்தான ரோலை செஞ்சு காட்டியிருக்காங்கன்னா... அது  'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் அவரோட குடும்பம் மட்டும்தான்!

​மத்தவங்களுக்கு எல்லாம் இது ஒரு கேரக்டரா இருக்கலாம்... ஆனா இந்த குடும்பத்துக்கு அது ஒரு பரம்பரை ரத்தம்! 'தங்கப்பதக்கம்' சௌத்ரில ஆரம்பிச்சு, இன்னைக்கு 'லெனின் பாண்டியன்' தர்ஷன் ராம்குமார் வரைக்கும்... அந்த போலீஸ் யூனிஃபார்முக்கே ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்திருக்காங்க.

​"போலீஸ் யூனிஃபார்ம் இவங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு நச்சுனு செட் ஆகுது?"
​"என்னதான் ஊர்ல ஆயிரம் பேர் காக்கி சட்டை போட்டு நடிச்சாலும், இந்த சிவாஜி ஃபேமிலிக்கு மட்டும் அது செம்ம 'ஆப்டா' உட்காருதுல்ல... அதுக்கு பின்னாடி ஒரு மூணு அதிரடி காரணம் இருக்கு!

​1. அந்த கம்பீரமான DNA:
நடிகர் திலகத்துக்கே உண்டான அந்த அகலமான தோள்பட்டை, நேர் கொண்ட பார்வை, அப்புறம் அந்த வெண்கலக் குரல்... இதெல்லாம் அப்படியே அடுத்தடுத்த தலைமுறைக்கும் 'ஜெராக்ஸ்' எடுத்த மாதிரி வந்திருக்கு. இவங்க சும்மா வந்து நின்னாலே, அந்த இடத்துல ஒரு அதிகாரம் தானா வந்துடுது. அந்த யூனிஃபார்ம் இவங்களைப் போடல, இவங்க அந்த யூனிஃபார்முக்கே ஒரு கெத்தைக் கொடுக்குறாங்க!

​2. எஸ்.பி. சௌத்ரி போட்ட 'ஸ்கெட்ச்':
அன்னைக்கு 'தங்கப்பதக்கம்' படத்துல சிவாஜி சார் ஒரு போலீஸ் அதிகாரியா வாழ்ந்து காட்டினாரு பாருங்க... அதுதான் இன்னைக்கு வரைக்கும் தமிழ் சினிமாவுக்கே ஒரு 'பெஞ்ச் மார்க்'. 'போலீஸ்னா இப்படித்தான் நடக்கணும், இப்படித்தான் பேசணும்'னு அவர் ஒரு ரூட் போட்டு கொடுத்தாரு. அந்த ரூட்ல வர்றதுனால, இவங்க குடும்பத்துல இருக்குற ஒவ்வொருத்தருக்கும் அந்த காக்கி சட்டை ரொம்ப நெருக்கமான ஒண்ணா மாறிடுச்சு.

​3. அந்த 'கெத்து' பிளஸ் 'பாசம்':
இவங்க ஃபேமிலி நடிச்ச படங்கள்லே ஒரு எமோஷன் இருக்கும். அதனாலதான் ஜனங்களுக்கு இவங்களை போலீஸா பார்க்கும்போது ஒரு தனி மரியாதையே வருது.

​மொத்தத்துல சொல்லப்போனா...
காக்கி சட்டை இவங்களுக்கு வெறும் வேஷம் இல்ல பாஸ்... அது இவங்க ரத்தத்துலயே ஊறுன ஒரு ஸ்டைல்! அஞ்சு பேர் நடிச்சாலும் அஞ்சு பேருமே அந்தப் பதவிக்கு ஒரு தனி கௌரவத்தைச் சேர்த்திருக்காங்க!"

​வாரிசுகள் வர்றது சாதாரண விஷயம், ஆனா ஒரே குடும்பத்துல இருந்து மூணு தலைமுறை... அஞ்சு பேரு... அந்த கம்பீரமான காக்கி சட்டையைப் போட்டு கலக்குனது 'அன்னை இல்லம்' மட்டும்தான்!

​1. காட்ஃபாதர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!
​முதல்ல  'சிம்மக்குரலோன்' நடிகர் திலகம். காக்கி டிரஸ்ஸுக்கே ஒரு கௌரவத்தைக் கொடுத்தவர் இவர்தான். 'நவராத்திரி' படத்துல அந்த ஒன்பது வேஷத்துல ஒருத்தரா ஆரம்பிச்ச அந்தப் பயணம்... அப்புறம் என் மகன் ராஜா, தீர்ப்பு, வெள்ளை ரோஜா, திருப்பம்னு 20 படங்களுக்கு மேல காக்கி சட்டையில மிரட்டியிருப்பார். ஆனா, எல்லாத்துக்கும் மேல அந்த மகுடம் இருக்கே... அதுதான் S.P. சௌத்ரி! இன்னைக்கு வர்ற எந்த மாஸ் போலீஸ் படமா இருந்தாலும், அதுக்கு 'அப்பா, தாத்தா, காட்ஃபாதர்' எல்லாமே நம்ம 'தங்கப்பதக்கம்' சௌத்ரி தான்!

​2. வாரிசு சிங்கம் - இளைய திலகம் பிரபு!
​அப்பாவோட அந்த கம்பீரத்தை அப்படியே தன் தோள்ல ஏத்திக்கிட்டு வந்தவர் நம்ம பிரபு சார். 'அன்னை இல்லத்துல' இருந்து வந்த ரெண்டாவது தலைமுறை சிங்கம்! 'அக்னி நட்சத்திரம்' கௌதம் விஸ்வநாத் கேரக்டரை யாராலயும் மறக்க முடியாது. அந்த மிடுக்கு, அந்த வேகம்... 'தர்மசீலன்' மறவன் படத்துல எல்லாம் வேற லெவல் சம்பவம் பண்ணியிருப்பாரு. இதுல ஒரு ஸ்பெஷல் என்னன்னா, 'திருப்பம்' படத்துல அப்பாவும் மகனும் சேர்ந்து போலீஸ் யூனிஃபார்ம்ல புகுந்து விளையாடி இருப்பாங்க!

​3. அதிரடி நாயகன் - விக்ரம் பிரபு!
​மூணாவது தலைமுறையில விக்ரம் பிரபு என்ட்ரி கொடுத்தப்போ, பப்ளிக் சொன்ன ஒரே கமெண்ட்... 
"போலீஸ் டிரெஸ் இவரு மாட்டிட்டா வேற  லெவல் சம்பவமா ஆகிப்போகுதுன்னு "..
' 'சிகரம் தொடு' படத்துல ஆரம்பிச்சு, 'துப்பாக்கி முனை' வரைக்கும் கலக்குனவர், 'டாணாக்காரன்' படத்துல தமிழ் சினிமாவே பார்க்காத ஒரு ஹார்டான போலீஸ் டிரைனிங் கதையை ரத்தமும் சதையுமா கொடுத்து மிரட்டியிருப்பாரு!
சிறை படத்துலே அந்த ரோல் ரொம்பவே நேச்சுரல்.

​4. நீட்டான ஆளுமை - துஷ்யந்த் ராம்குமார்!
​விக்ரம் பிரபுக்கு முன்னாடியே சினிமாவுக்கு வந்தாலும், துஷ்யந்த் ராம்குமார் கம்மியான படங்கள் தான் பண்ணாரு. ஆனா, அவரும் தன் பங்குக்கு அந்த காக்கிப் பரம்பரைன்னு நிரூபிக்க 'தீர்க்கதரிசி' படத்துல ஒரு நீட்டான போலீஸ் அதிகாரியா வந்து செமயா ஸ்கோர் பண்ணியிருப்பாரு!

​5. லேட்டஸ்ட் வரவு - தர்ஷன் ராம்குமார்!
​இப்போ இந்த 'காக்கிப் பட்டாளத்துல' அஞ்சாவது ஆளா வந்து சேர்ந்திருக்கார் தர்ஷன் ராம்குமார்.  'லெனின் பாண்டியன்' ..செம்ம நேச்சுரலா இருக்கு! இது வழக்கமான கமர்ஷியல் போலீஸ் இல்ல, ரொம்பவே டிபரண்ட்டான ஒரு ரோல்.

​போலீஸ் டிரஸ்ஸை போடறது யாரு வேணா செய்யலாம், ஆனா அந்த டிரஸ்ஸை போட்டதுக்கு அப்புறம் வர்ற அந்த 'ராஜ கம்பீரம்' இருக்கே... அது எல்லாருக்கும் வராது. நடிகர் திலகம் ஆரம்பிச்சு வச்ச அந்த 'காக்கி சாம்ராஜ்யம்', மூணு தலைமுறையைத் தாண்டி இன்னைக்கு தர்ஷன் ராம்குமார் வரைக்கும் கெத்து குறையாம நிக்குது.
​உலகத்துல எத்தனையோ சினிமா குடும்பங்கள் இருக்கலாம், ஆனா ஒரே வீட்டுல இருந்து அஞ்சு பேரு போலீஸா வந்து மிரட்டுறது இதுதான் 'ஃபர்ஸ்ட் டைம் இன் ஹிஸ்டரி'. இது வெறும் சாதனை இல்ல... அன்னை இல்லத்தோட 'ஆளுமை'!
இது 'அன்னை இல்லம்' ரத்தத்துல ஊறுன அந்த கம்பீரம்! 












கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்