1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

டபுள் ஆக்சன் ரகசியங்கள்

 ஒரே ஆளு... ஆனா ரெண்டு பேரு! சிவாஜி கணேசனின் Double Action மேஜிக்! 
இன்னைக்கு நாம சூர்யாவோட '24' படத்தையோ இல்ல கமலஹாசனோட 'தசாவதாரம்' படத்தையோ பார்த்துட்டு, 'என்னடா டெக்னாலஜி இது!'ன்னு வியந்து போறோம். ஆனா, இந்த 'ஒரே ஆளு ரெண்டு பேரு' மேஜிக் எப்படி ஆரம்பிச்சது? அதுக்கும் முன்னாடி, அந்த காலத்துல கம்ப்யூட்டரே இல்லாதப்போ இது எப்படி சாத்தியமாச்சு? இதைப் பத்தின ஒரு செம இன்ட்ரஸ்டிங் ஹிஸ்டரி தான் இந்த பதிவு.

​"1898-ல வந்த 'த ஃபோர் டிரபிள்சம் ஹெட்ஸ்' (The Four Troublesome Heads) அப்படிங்கிற பிரெஞ்சு படத்துல ஜார்ஜ் மெலியஸ் ,இவர் ஒரு மேஜிக் மேன்  ஒரு செம வித்தை காட்டியிருப்பாரு.
​அந்தக் காட்சியில என்ன நடக்கும் தெரியுமா?
மெலியஸ் ஸ்கிரீனுக்கு வருவாரு. திடீர்னு தன்னோட தலையைத் தானே கழட்டி பக்கத்துல இருக்கிற மேஜை மேல வைப்பாரு. ஆனா அடுத்த செகண்டே அவரோட கழுத்துல இன்னொரு புதுத் தலை முளைக்கும்! இப்படி வரிசையா மூணு தலையை கழட்டி மேஜை மேல வைப்பாரு. இப்போ மேஜைல மூணு தலை, அவர் கழுத்துல ஒரு தலைன்னு மொத்தம் நாலு தலைகளும் ஒரே நேரத்துல பேசும், சிரிக்கும். கடைசியில எல்லா தலையையும் தட்டி விட்டுட்டு, ஒரிஜினல் தலையைத் தூக்கி வானத்துல வீசுவாரு... அது கரெக்டா வந்து அவர் கழுத்துல ஒட்டிக்கும்!
​இது எப்படி சாத்தியமாச்சு?

இன்னைக்கு இருக்குற கிராபிக்ஸ் எல்லாம் அப்போ கிடையாது. அவர் என்ன பண்ணாருன்னா, மொத்த ஸ்டுடியோவையும் கும்மிருட்டா மாத்திட்டு, பிலிமைத் திரும்பத் திரும்ப ஓடவிட்டு( Multiple Exposure )ஒவ்வொரு தலையையும் தனித்தனியா படம் பிடிச்சாரு.
​அதாவது, இருட்டுல அவர் தலையை மட்டும் படம் பிடிச்சுட்டு, அப்புறம் அந்த பிலிமை ரீவைண்ட் பண்ணி, அதே இடத்துல அவரோட உடம்பை மட்டும் படம் பிடிச்சாரு. திரையில பார்க்கும்போது ரெண்டும் ஒண்ணா சேர்ந்து தலை கழன்று வர்ற மாதிரி ஒரு மேஜிக் உருவாச்சு. 128 வருஷத்துக்கு முன்னாடி இதைப் பார்த்த மக்கள் அப்படியே மிரண்டு போயிட்டாங்க!"

​"இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் தாதாசாகேப் பால்கே தான் இதை முதல்ல கொண்டு வராரு. 1917-ல 'லங்கா தகனம்'னு ஒரு படம். அதுல 'அண்ணா சாலுங்கே'ங்கிற ஒரு நடிகர், ராமனாகவும் நடிச்சாரு... சீதையாகவும் நடிச்சாரு!
​யோசிச்சு பாருங்க, ஒருத்தரே தனக்குத் தானே மாலை போட்டுக்கிற சீன் எல்லாம் அப்போவே இருந்துச்சு. தியேட்டர்ல இதைப் பார்த்த மக்கள் சாமியே நேர்ல வந்துட்டதா நினைச்சு திரையைத் தொட்டு கும்பிட்டாங்கன்னா பார்த்துக்கோங்களேன்!"
​"தமிழ் சினிமாவுல இந்த மேஜிக்கை மாஸா கொண்டு வந்தது பி.யு. சின்னப்பா அவங்கதான். 1940-ல வந்த 'உத்தமபுத்திரன்' . இதுல அவர் ரெண்டு ரோல் பண்ணப்போ, அது ஒரு பெரிய புரட்சியாவே இருந்துச்சு.
​அப்போ இருந்த பெரிய சவால் என்ன தெரியுமா? கேமராவை ஒரு மில்லிமீட்டர் கூட நகர்த்தக்கூடாது. கேமரா ஆடுனா, ரெண்டு சீனும் ஒட்டாது.  நடிகர் ஒரு குறிப்பிட்ட கோட்டைத் தாண்டி வரக்கூடாது. இன்னைக்கு மாதிரி மானிட்டர் எல்லாம் கிடையாது, 'மார்க்' பண்ண இடத்துல கரெக்டா நின்னு, எதிரே ஆளே இல்லாதப்போ அவங்க இருக்கிறதா நினைச்சுப் பேசணும். அது வெறும் நடிப்பு மட்டுமல்ல, அது ஒரு கணிதம்.

​டபுள் ஆக்சன் படங்கள் 
​நடிகர்களுக்கும் கேமராமேன்களுக்கும் ஒரு பெரிய சவால் .
ஒரு கேரக்டர் இன்னொரு கேரக்டருக்குத் தண்ணி குடுக்குற மாதிரி காட்டணும்னா, அந்த டம்ளர் ஒரு மர்மமான கோட்டுக்கு நடுவுல போகும். அந்தப் பக்கம் இருக்குற நடிகரோட கை சரியா அந்த இடத்துல வரணும். ஒரு செகண்ட் மிஸ் ஆனாலும் டம்ளர் காத்துல மிதக்குற மாதிரி ஆகிடும். இந்தச் சவால்களை எல்லாம் தாண்டித்தான் அந்த காலத்துல ஒருத்தர் ரெண்டு பேரா நடிச்சாங்க."
​"அந்த காலத்துல டபுள் ஆக்சன் ஷூட்டிங் நடக்குறப்போ செட்ல மயான அமைதி இருக்கும். ஏன்னா, பிலிமை ரீவைண்ட் பண்ணி மறுபடியும் எடுக்கும்போது, தெரியாம கேமரா பெட்டியைத் திறந்துட்டா கூட பிலிம்ல வெளிச்சம் பட்டு எக்ஸ்போஸ் ஆகிடும். மொத்த நாளோட உழைப்பும் காலி!
​அதனால, 'டபுள் ஆக்சன்' சீன் எடுக்குறாங்கன்னாலே செட்ல எல்லாரும் பயபக்தியோட நிப்பாங்க. 

இன்னைக்கு கிராஃபிக்ஸ்ல எதை வேணா பண்ணலாம். ஆனா எந்த வசதியும் இல்லாதப்போ, வெறும் திறமையையும் நம்பிக்கையையும் வச்சு செஞ்ச அந்த ஆரம்பகால சினிமா தான் இன்னைக்கு நாம பார்க்கிற பிரம்மாண்டங்களுக்கு அஸ்திவாரம்.

இன்னைக்கு இருக்கிற VFX, CGI, AI-னு எல்லாத்தையும் ஓரமா வைங்க. எந்த டெக்னாலஜியும் இல்லாத காலத்துல, ஒரே பிரேம்ல ரெண்டு பேர் வர்றதே பெரிய வித்தையா இருந்தப்போ... ஒருத்தர் வந்து நின்னாரு. அவர் தன்னோட நடிப்பாலே மேஜிக் செஞ்சவர்.
அவர்தான் 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன்!
​நம்ம ஊர்ல இன்னைக்கு 'டபுள் ஆக்சன்' பண்றது சாதாரணமா இருக்கலாம். ஆனா, அந்த காலத்துலயே ரெண்டு கேரக்டருக்கும் நடுவுல நூலளவு கூட வித்தியாசம் மாறாம நடிச்சு மிரட்டுன ஒருத்தரோட சீக்ரெட் என்ன? குறிப்பா 'கௌரவம்' படத்துல பாரிஸ்டர் ரஜினிகாந்தும், கண்ணனும் மோதுறப்போ... நமக்கே ஒரு நிமிஷம் டவுட் வரும், இது நிஜமாவே ஒருத்தர்தானான்னு!

டபுள் ஆக்சன்னா வெறும் டிரஸ் மாத்திட்டு வர்றது இல்ல. அது ஒரு 'சைக்காலஜிக்கல் கேம்'. ஒரு ஆக்டர் ஒரே நேரத்துல ரெண்டு வேற வேற ஆத்மாவா வாழணும். இதுல பெரிய சவால் என்ன தெரியுமா? எதிரே ஆளே இருக்க மாட்டாங்க! ஆனா ஆள் இருக்கிறதா நினைச்சு, அவங்க கண்ணைப் பார்த்து பேசணும்.
​சிவாஜி சார் இதை எப்படி கையாண்டார் தெரியுமா? அதுக்கு பேர்தான் 'முரண்பாடு' .

 ஒருத்தர் வேகமா நடப்பாரு, இன்னொருத்தர் மெதுவா நடப்பாருன்னு சொல்றது ரொம்ப சாதாரண விஷயம். ஆனா, சிவாஜி சார் பண்ணது அது கிடையாது. அவர் பண்ணது 'கதாபாத்திரத்தின் ஆன்மாவை உள்வாங்குதல்' கேரக்டர்.

​​ஒரு ஆக்டர் எப்படி மூச்சு விடுறார்ங்கிறதை வச்சே கேரக்டரை மாத்த முடியும்னு நிரூபிச்சவர் சிவாஜி.
​ரஜினிகாந்த் பேசும்போது, அது ஒரு அதிகாரத் தோரணை இருக்கும்.ஆனா கண்ணன் பேசும்போது, அந்தப் பேச்சில் ஒரு சாந்தம்.இருக்கும். 

இன்னைக்கு எவ்வளவோ 'ரியாக்ஷன் வீடியோ' பார்க்கிறோம். ஆனா, ரியல் 'ரியாக்ஷன் கிங்' சிவாஜிதான்.
இரட்டை வேடத்துல நடிக்கும்போது, ரஜினிகாந்தாக ஒரு வசனத்தைச் பேசிட்டு, அப்புறம் கண்ணனா வந்து அந்த வசனத்ததுக்கு ரியாக்ஷன் கொடுக்கணும். அப்போ எதிரே ஆளே இருக்க மாட்டாங்க. ஆனா, பாரிஸ்டர் ரஜினிகாந்த் எந்த இடத்துல நின்னு அந்த கர்வமான சிரிப்பைச் சிரிச்சிருப்பாரோ, அதை அப்படியே மைண்ட்ல ஏத்தி, அந்தச் சிரிப்புக்கு ஒரு வக்கீலா கண்ணன் எப்படித் துடிப்பாரு அப்படிங்கிற அந்த 'எதிர்வினை' இருக்கு பாருங்க... அங்கதான் சிவாஜி ஒரு ஆக்டரா விஸ்வரூபம் எடுக்குறாரு.

​ரஜினிகாந்த் கேரக்டருக்கு அவரோட மொத்த உடலோட எடையும் அவரோட மார்புப் பகுதியில  இருக்கும். 
அதனாலதான் அவர் அவ்வளவு கம்பீரமா தெரிவாரு.
​ஆனா கண்ணன் கேரக்டருக்கு, அந்த எடையை உடல் முழுதும்
காட்டுவார்.விறைப்பு தன்மை இருக்காது
அதனால அவர் கொஞ்சம் பணிவா தெரிவாரு.
​இப்படி 'பிசிக்கலா'  மட்டும் இல்லாம 'சைக்காலஜிக்கலா'  ஒரு கேரக்டரோட குணத்தை உள்வாங்கி, அதைத் திரையில கொண்டு வர்றதுதான் உண்மையான இரட்டை வேட நடிப்பு. இதைத்தான் சிவாஜி கணேசன் அன்னைக்கே செஞ்சு காட்டிட்டு போயிருக்காரு!"

​பாரிஸ்டர் ரஜினிகாந்த்... மனுஷன் சும்மா 'ஈகோ'வோட உச்சமா நிப்பாரு. அந்த சிகார் பைப் பிடிக்கிற ஸ்டைல், கண்ணாடி வழியா பார்க்கிற அந்தப் பார்வை... 'I am Barrister Rajinikanth'னு சொல்லும்போது தியேட்டரே அதிரும்.
​ஆனா அதே பிரேம்ல கண்ணன் வருவாரு. அவரும் வக்கீல்தான். ஆனா அவர்கிட்ட அந்தப் பணிவு இருக்கும். பெரியப்பா மேல இருக்கிற மரியாதை கண்ணுல தெரியும். அந்த கோர்ட் சீன்ல பாருங்களேன்... ஒரு பக்கம் அனுபவம், இன்னொரு பக்கம் நீதி. ரெண்டு பேருக்கும் மேக்கப் பெருசா வித்தியாசம் இருக்காது, ஆனா அவரோட வாய்ஸ் மாடுலேஷன்லயே ரெண்டு பேரையும் தனித்தனியா பிரிச்சு காட்டியிருப்பார். அதுதான் சிவாஜி பிராண்ட்!"

​"சரி, சிவாஜிக்கு முன்னாடி யாரும் பண்ணலையான்னு கேட்டா... பி.யு. சின்னப்பா மாதிரியான ஜாம்பவான்கள் பண்ணிருக்காங்க. ஆனா அப்போ இருந்த டெக்னாலஜி ரொம்ப கம்மி. கேமராவை ஒரு இடத்துல லாக் பண்ணிடுவாங்க. திரையோட ஒரு பக்கம் ஒருத்தர், இன்னொரு பக்கம் இன்னொருத்தர். நடுவுல ஒரு கோடு இருக்கிற மாதிரி கற்பனை பண்ணிக்கணும். அந்த கோட்டை தாண்டி இவங்க வரமாட்டாங்க,ரொம்ப நாடகத்தனமா இருக்கும். ஆனா சிவாஜி வந்த பிறகுதான், அந்த ரெண்டு கேரக்டரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு பின்னிப் பிணையற 'நேச்சுரல்' நடிப்பு தமிழ் சினிமாவுக்கு கிடைச்சது."

​"இன்னைக்கு இருக்கிற இளைஞர்களுக்கு ஒரு விஷயம் சொன்னா ஆச்சரியமா இருக்கும். அந்த காலத்துல 'மாஸ்கிங்' (Masking) முறையிலதான் இதைப் படம் பிடிப்பாங்க. அதாவது, கேமரா லென்ஸ்ல பாதிப் பக்கத்தை கறுப்புத் துணி போட்டு மூடிடுவாங்க. ஒரு கேரக்டர் நடிச்சு முடிச்சதும், அந்த பிலிமை மறுபடியும் பின்னாடி சுத்தி (Rewind), இப்போ மூடியிருந்த பகுதியைத் திறந்து அடுத்த கேரக்டரை நடிக்க வைப்பாங்க.
​யோசிச்சு பாருங்க... முதல்ல நடிச்சப்போ கை எவ்வளவு தூரம் வந்துச்சு, எப்போ சிரிச்சோம்னு எல்லாத்தையும் மனசுல கணக்கு போட்டு, ரெண்டாவது வாட்டி நடிக்கும்போது கரெக்டா மேட்ச் பண்ணணும். ஒரு செகண்ட் மிஸ் ஆனாலும் மொத்தக் காட்சியும் சொதப்பிடும். அந்த 'ஸ்பேஷியல் அவேர்னஸ்'  சிவாஜி சார்கிட்ட அபாரமா இருந்தது!"
'கௌரவம்' ஒரு கிளாசிக்னா, 'உத்தமபுத்திரன்' (1958) இரட்டை வேட நடிப்புக்கு ஒரு 'பெஞ்ச்மார்க்'. இன்னைக்கு இருக்குற 'வில்லன் vs ஹீரோ' டபுள் ஆக்சன் கதைகளுக்கு எல்லாம் இதுதான் தாத்தா.

​ரசிகர்களுக்குத் தெரிஞ்ச கதையை விட, அந்தப் படத்துல சிவாஜி சார் பண்ண 'யாரும் கவனிக்காத' சில சீக்ரெட் மேஜிக்ஸ் பத்தி பார்க்கலாம்.

இந்திய சினிமாவையே அதிர வச்ச 'உத்தமபுத்திரன்'. இதுல சிவாஜி சார் 'பார்த்திபன்', 'விக்ரமன்'னு ரெண்டு ரோல் பண்ணிருப்பாரு. ஆனா, இதுல பலரும் கவனிக்காத மூணு முக்கியமான 'ஆக்டிங் சீக்ரெட்ஸ்' இருக்கு. அது என்ன தெரியுமா?"

​1. அந்த 'கண்ணிமை' மேஜிக்:
​"வில்லன் விக்ரமனுக்கும், ஹீரோ பார்த்திபனுக்கும் பெரிய மேக்கப் வித்தியாசம் இருக்காது. ஆனா, விக்ரமன் ஸ்கிரீனுக்கு வந்தாலே ஒரு பயம் வரும். அது ஏன்னு யோசிச்சிருக்கீங்களா?
சிவாஜி சார் ஒரு சின்ன விஷயம் பண்ணிருப்பாரு. வில்லன் விக்ரமன் பேசும்போது, அவரோட கண்ணிமைகளை  ரொம்ப கம்மியாத்தான் சிமிட்டுவாரு. ஒரு சைக்கோ அல்லது கொடூரமானவன் மத்தவங்களை உத்துப்பார்ப்பான் இல்லையா? அந்த 'ஸ்டேரிங்' லுக் மூலமா விக்ரமனை மிரட்டலா காட்டியிருப்பாரு. பார்த்திபன் கேரக்டர்ல இயல்பா கண்ணிமைப்பார்.

​2. இடது கை பழக்கம் :
​"இது ஒரு பயங்கரமான டீடைலிங். படத்துல வில்லன் விக்ரமன் ஒரு இடத்துல ஆவேசமா பேசும்போது அல்லது கோபப்படும்போது அவரோட இடது கை விரல்கள் லேசா துடிக்கும் .பொதுவா ரொம்ப கோபக்காரங்க அல்லது மனநிலை கொஞ்சம் பாதிக்கப்பட்டவங்களுக்கு இந்த 'நர்வஸ்னெஸ்' இருக்கும். ஒரு ஆளுமை மிக்க இளவரசன், அதே சமயம் உள்ளுக்குள்ள ஒரு மிருகத்தனமான கோபம் இருக்குங்கிறதை காட்ட அந்த கை விரல் நடுக்கத்தை சிவாஜி சார் பயன்படுத்தியிருப்பாரு. இது அந்த காலத்துல யாரும் யோசிச்சு கூட பார்க்காத ஒரு நுணுக்கம்!"

​3. அந்த 'வெள்ளைக்கோடு' சவால் :
​"இன்னைக்கு இருக்கிறவங்களுக்கு தெரியாத ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா, அந்த காலத்துல கேமராவுல 'ஸ்பிளிட் ஸ்கிரீன்' பண்ணும்போது திரையில நடுவுல ஒரு மெல்லிய கோடு தெரியும். 

ஆனா சிவாஜி என்ன பண்ணாரு தெரியுமா? வில்லன் விக்ரமனா நிக்கும்போது அந்த கோட்டுக்கு ரொம்ப நெருக்கமா வந்து, ஹீரோ பார்த்திபனோட நிழல் மேல கை வைக்கிற மாதிரி நடிப்பாரு. அதாவது, நிஜத்துல அந்த பாத்திரம் அங்க இல்ல, ஆனா அந்த கேரக்டரோட ஸ்பேஸை  ஆக்கிரமிச்சு மிரட்டுவாரு. இது டெக்னீசியன்களையே ஆச்சரியப்பட  வச்ச விஷயம் .

​4. சிரிப்பு - ஒரு ஆயுதம்:
​"உத்தமபுத்திரன்ல விக்ரமனோட சிரிப்பு ரொம்ப ஃபேமஸ். ஆனா கவனிச்சீங்கன்னா தெரியும், விக்ரமன் சிரிக்கும்போது அவரோட மேல் உதடு மட்டும் லேசா ஏறும். அது ஒரு 'ஏளனமான' சிரிப்பு. ஆனா பார்த்திபன் சிரிக்கும்போது ஒரு குழந்தைத் தனமான சிரிப்பு இருக்கும். ஒரே முகத்துல ரெண்டு வேற வேற தசை நார்களை  இயக்கி அந்த வித்தியாசத்தை கொண்டு வந்ததுதான் சிவாஜிங்கிற ஆக்டிங் மெஷின்!"
​"கடைசியா ஒரு போனஸ் நியூஸ். இந்த படத்தோட கிளைமாக்ஸ்ல சில ஷாட்டுகள்லே ரெண்டு சிவாஜியும் வாள் சண்டை போடுவாங்க. அப்போ டூப் போடாத ஷாட்டுகளுக்கு அந்த வேகத்துக்கு தகுந்த மாதிரி சிவாஜி தன் உடல் மொழியை மாத்தி மாத்தி கொடுத்தாரு. இன்னைக்கு இருக்கிற 'மோஷன் கேப்சர்' டெக்னாலஜியை அந்த காலத்துல தன்னோட மூளையிலேயே வச்சு செஞ்சவர் சிவாஜி!"

இன்னைக்கு நாம லேட்டஸ்ட் டெக்னாலஜியைப் பார்த்து மிரண்டு போறோம். ஆனா, ஒரு சின்ன மானிட்டர் கூட இல்லாத அந்த காலத்துல, வெறும் கற்பனைத் திறனையும், அசாத்தியமான உழைப்பையும் மட்டுமே வச்சு 'ஒரே ஆளு... ரெண்டு பேரு'ன்னு நம்ம கண்ணு முன்னாடி வித்தைய காட்டினாரே... அங்க நிக்குறாரு 'நடிகர் திலகம்'!
​அவர் பண்ணது வெறும் 'டபுள் ஆக்சன்' இல்ல... அது ஒரு அதிசயம்! பாரிஸ்டர் ரஜினிகாந்தோட அந்த கர்வமான சிரிப்பும், கண்ணனோட அந்த பணிவான பார்வையும் இன்னைக்கும் நம்ம மைண்ட்ல வந்து போகுதுன்னா, அதுக்குக் காரணம் டெக்னாலஜி இல்ல; அந்த மனுஷனோட ரத்தத்துல ஊறுன நடிப்புதான்.
​அடுத்த முறை நீங்க திரையில ஒரு 'டபுள் ஆக்சன்' படத்தைப் பார்க்கும்போது, அந்த 'ஸ்பிளிட் ஸ்கிரீன்' மேஜிக்குக்கு பின்னாடி - எந்த வசதியும் இல்லாம தன் திறமையால அஸ்திவாரம் போட்ட இந்த முன்னோடிகளை ஒரு நிமிஷம் நினைச்சுப் பாருங்க.
​ஏன்னா... வசதிகள் யாரை வேணாலும் ஹீரோவாக்கும், ஆனா திறமை மட்டும்தான் ஒருத்தரை 'சகாப்தம்' ஆக்கும்!"

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்