ஒரு நடிகர் கோட்-சூட் போட்டா மாஸா இருப்பாரு, ஆனா கிராமத்து கேரக்டர் செட் ஆகாது. ஒருத்தருக்கு கிராமத்து ரோல் செட் ஆகும். ஆனா ஸ்டைலிஷ் ரோல் வராது. ஆனா, 'எந்த ரோல் கொடுத்தாலும், அந்த கேரக்டராவே மாறி, அந்த கேரக்டருக்கான ஆத்மாவை கொடுப்பேன்'னு நிரூபிச்ச ஒரு மகா நடிகன் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் நடிச்ச சில படங்களோட டீடெய்ல் தான் இந்த பதிவு.
அந்தநாள் -1954..
"இந்த லிஸ்ட்ல நாம முதல்ல பார்க்க வேண்டிய படம் 'அந்த நாள்'. தமிழ் சினிமாவுல பாட்டு, ஃபைட்னு இருந்த காலத்துல, பாட்டே இல்லாத ஒரு த்ரில்லர் படம். இதுல சிவாஜி சார் ஒரு ரேடியோ இன்ஜினியர், அதுவும் ஒரு தேச துரோகி . இந்த படத்துல அவரோட நடிப்பை பார்த்தீங்கன்னா எந்த இடத்துலயும் சத்தமா பேசமாட்டாரு, முகத்துல ரியாக்ஷன் ரொம்ப கம்மியா இருக்கும் . ஹாலிவுட் 'Noir' படங்களுக்கு நிகரான ஒரு அண்டர்ப்ளே பெர்ஃபார்மன்ஸ் இது!"
பாகப்பிரிவினை (1959)
"இன்னைக்கு ஷாட் முடிஞ்சதும் மானிட்டர் பார்த்து கரெக்ட் பண்ணிக்கலாம். ஆனா 1959-ல மானிட்டர் கிடையாது. இந்த படத்துல சிவாஜி சாருக்கு ஒரு கை, ஒரு கால் விளங்காத கேரக்டர். படத்தோட ஆரம்பத்துல இருந்து எண்டு வரைக்கும்... டான்ஸ் ஆடுனாலும் சரி, அழுதாலும் சரி அந்த உடல் குறைபாடு அப்படியே மெயின்டெயின் ஆகும். ஒரு பிரேம்ல கூட கை நார்மலா மாறாது. இதுக்கு பேருதான் 'Muscle memory'. எந்த அளவுக்கு ஒரு கேரக்டரா அவர் மாறியிருந்தா இது சாத்தியம்!"
தில்லானா மோகனாம்பாள் (1968) -
சிவாஜி சாருக்கு நாதஸ்வரம் நிஜமா வாசிக்க தெரியாது. ஆனா இந்த படத்துல, நிஜமாவே நாதஸ்வரம் வாசிக்கிற வித்வான்கள் அவரோட விரல் அசைவுகளை பார்த்து மிரண்டு போனாங்க. அந்த டியூனுக்கு ஏத்த மாதிரி விரல்கள் எக்ஸாக்ட்டா மூவ் ஆகும். ஒரு நடிகனோட 'Observation Skill'-க்கு இதவிட சிறந்த உதாரணம் கிடையாது!"
நவராத்திரி (1964) -
"ஒரே படத்துல 9 கேரக்டர். ஆனா இன்னைக்கு இருக்கிற மாதிரி ப்ராஸ்தெடிக் மேக்கப் VFX எல்லாம் கிடையாது. ஒரு கேரக்டரை தவிர மத்ததெல்லாம் நார்மல் மேக்அப்தான்.
அப்புறம் வெறும் உடம்புல போடுற சட்டையை மட்டும் மாத்திட்டு, தன்னோட குரலை , நடக்கிற நடையை, பார்க்கும் பார்வையை மாத்தியே 9 வித்யாசமான மனிதர்களை கண் முன்னாடி கொண்டு வந்திருப்பாரு.
தெய்வமகன் (1969)
"ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவில இருந்து போன முதல் தமிழ் படம். இதுல அப்பா, இரண்டு மகன்கள்னு மூணு ரோல். இதுல முகத்துல தழும்புகளோட இருக்கிற ஒரு கேரக்டர் வரும். அந்த கேரக்டருக்கு இருக்கிற இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் ( கோபம், விரக்தி இதையெல்லாம் தன்னோட உடல்மொழியிலயே அவ்ளோ அழகா காட்டியிருப்பாரு. சைக்கலாஜிகல் ஆக்டிங்க்கு இது ஒரு பெஸ்ட் எக்ஸாம்பிள்."
வியட்நாம் வீடு (1970) -
"இதுல வர்ற 'பிரஸ்டீஜ் பத்மநாபன்' கேரக்டரை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. ஒரு கம்பெனியில பெரிய பதவியில இருக்கிற அதிகாரி, ரிடையர்ட் ஆனதுக்கு அப்பறம் அவரோட ஈகோ எப்படி உடையுது, அவர் மனதளவுல எப்படி பாதிக்கப்படுறாருங்கிறதை அப்படியே ஸ்கிரீன்ல கொண்டு வந்திருப்பாரு. வயசான காலத்துல வர நடுக்கம், பேச்சுல வர தடுமாற்றம்னு டிடெயிலிங் பிச்சு உதறியிருப்பாரு."
கௌரவம் -
"பாரிஸ்டர் ரஜினிகாந்த், மருமகன் கண்ணன் அப்படின்னு ரெண்டு ரோல். அந்த பாரிஸ்டர் பைப் பிடிச்சிட்டு உட்கார்ந்திருக்கப்ப வர்ற 'Aura' வேற லெவல்ல இருக்கும். அதே பிரேம்ல மருமகன் கண்ணன் ரொம்ப பயந்து, தயங்கி நிப்பார்.. ரெண்டு கேரக்டருக்கும் நடுவுல இருக்கிற அந்த 'Contrast'-ஐ கண்கள்ல மட்டுமே காட்டியிருப்பாரு."
புதிய பறவை (1964) -
"இன்னைக்கு நாம 'Swag', 'Style' பத்தியெல்லாம் பேசுறோம். ஆனா 1964-லயே 'புதிய பறவை' படத்துல சிவாஜி சாரோட ஸ்டைலை பார்த்தீங்கன்னா, ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோக்களே தோத்துருவாங்க. அந்த கோட் சூட், அந்த சிகரெட் பிடிக்கும் ஸ்டைல், நடக்குற நடை... இது ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் அந்த கேரக்டருக்கு உள்ள இருக்குற ஒரு குற்ற உணர்ச்சி , ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஃபீலை தன்னோட கண்கள்லயே காட்டியிருப்பாரு. சும்மா ஸ்டைலா மட்டும் வந்துட்டு போற ஹீரோக்கள் மத்தியில, ஸ்டைலோட சேர்த்து சீரியஸ் ஆக்டிங்கும் கொடுத்த மாஸ்டர்பீஸ் இது!"
படிக்காத மேதை (1960) -
"சிவாஜி சார்னாலே சிம்மக் குரல், கர்ஜனைனு நினைச்சிட்டு இருக்கிறவங்களுக்கு இந்த படம் ஒரு பெரிய சர்ப்ரைஸ். ஒரு எந்த விஷயமும் தெரியாத, வெகுளியான, படிக்காத ஒரு அனாதை பையனா (ரங்கன் கேரக்டர்) நடிச்சிருப்பாரு. அந்த நடையில ஒரு தயக்கம் இருக்கும், பேசுறதுல ஒரு நடுக்கம் இருக்கும், அந்த கைக்கட்டி நிக்குறதுல ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். எந்த இடத்துலயும் தன்னோட கம்பீரமான நிஜ குரலோ, உடல் மொழியோ வெளிய வராதபடி, ஒரு குழந்தையை போல அண்டர்ப்ளே செஞ்சிருப்பாரு. க்ளைமேக்ஸ்ல அவர் அழுது நடிக்கும் போது, தியேட்டர்ல எல்லாரையும் அழ வெச்சிருப்பாரு!"
உயர்ந்த மனிதன் (1968) -
"ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரன், ஆனா ரொம்ப அன்பான மனிதன். இந்த கேரக்டர்ல அவரோட 'Class'-ஆன நடிப்பை பார்க்கலாம். குறிப்பா அந்த 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' பாட்டு... அந்த ஒரு பாட்டுல மட்டும், தன்னோட இளமை காலத்துல இருந்து, அந்த வயசான காலம் வரைக்கும், அவர் கடந்து வந்த வாழ்க்கையை வெறும் எக்ஸ்பிரஷன்ஸ் மூலமாவே காட்டியிருப்பாரு. ஒரு உயர்ந்த மனிதன், மனசளவுல உடையும்போது வர்ற அந்த வலியை அவ்ளோ தத்ரூபமா நடிச்சிருப்பாரு."
சவாலே சமாளி (1971) -
"கோட்-சூட், ராஜானு நடிச்ச அதே மனுஷன்தான் இந்த படத்துல ஒரு விவசாயியா, மண்ணுல இறங்கி வேலை செய்ற ஒரு எதார்த்தமான கிராமத்து இளைஞனா நடிச்சிருப்பாரு. ஏர்கலப்பையை பிடிச்சிட்டு அவர் நடக்குற நடையா இருக்கட்டும், அந்த பண்ணையாரை எதிர்த்து நின்னு சவால் விடுற அந்த 'Raw Energy'-ஆ இருக்கட்டும்... இதுல எந்த இடத்துலயும் 'சிவாஜி' தெரியமாட்டார், அந்த 'மாணிக்கம்' கேரக்டர் மட்டும்தான் தெரியும். ரஸ்டிக் ஆக்டிங்க்கு பெஸ்ட் எக்ஸாம்பிள்."
இரட்டை வேடம்
"இன்னைக்கு ஹீரோக்கள் ரெண்டு கேரக்டர்ல நடிச்சா, மேக்கப்ல பெருசா வித்தியாசம் காட்டிடுறாங்க. ஆனா 'உத்தம புத்திரன்', மாதிரி படங்கள்ல இரட்டை வேடத்துல நடிச்சப்போ, எந்த ஒரு பெரிய மேக்கப் உதவியும் இல்லாம, ஒருத்தர் நல்லவர், இன்னொருத்தர் கெட்டவர்/திமிரானவர் அப்படிங்கிறதை தன்னோட பார்வையை வெச்சும், குரலை மாத்தியும் காட்டியிருப்பாரு. ஒரே பிரேம்ல ரெண்டு பேர் நின்னாலும், அவங்களோட 'Aura'-வை வெச்சு யார் எந்த கேரக்டர்னு ஈஸியா கண்டுபிடிக்க முடியும். இரட்டை வேட நடிப்போட 'பைபிள்' சிவாஜி சார்தான்!"
கர்ணன் (1964) -
"மகாபாரதம் படிச்ச யாருக்கா இருந்தாலும், கர்ணன்னு சொன்னதும் ஞாபகம் வர்ற முகம் சிவாஜி சாரோட முகம்தான். வரலாற்றுல கர்ணன் எப்படி இருந்தாருனு யாருக்கும் தெரியாது. ஆனா தன்னோட கம்பீரமான நடிப்பால, அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்து, 'கர்ணன்னா இப்படித்தான் இருந்திருப்பான்'னு நம்மளை நம்ப வெச்சவரு. தர்மம் பண்ணும் போது ஒரு பெருமிதம், தன்னோட பிறப்பை பத்தி குந்தி தேவி சொல்லும் போது ஒரு வலி, போர்க்களத்துல உயிர் போகும் போது ஒரு புன்னகைனு... Micro-expressions-ல மிரட்டியிருப்பாரு. Mythological ஆக்டிங்ல அவரை அடிச்சுக்க ஆளே கிடையாது!"
"முதல் மரியாதை (1985) -
இளையராஜா மியூசிக்ல, பாரதிராஜா டைரக்ஷன்ல சிவாஜி சார் கொஞ்சம் கூட பேசாம, தன்னோட கண்கள்ல மட்டுமே காதலை, வலியை, தனிமையை கடத்தியிருப்பாரு. எந்த வசனமும் இல்லாம, முகத்துல பெரிய ரியாக்ஷனும் இல்லாம (Micro-expressions) ஒரு மாபெரும் நடிகன் செஞ்ச மேஜிக் இந்த படம்."
தேவர் மகன் (1992) -
"பெரிய தேவர்! கமல், நாசர், ரேவதினு ஒரு பெரிய ஆக்டிங் பட்டாளமே நடிச்ச படம். ஆனா சிவாஜி சார் ஒரு நாற்காலியில அமைதியா உக்காந்திருந்தாலே அந்த பிரேம் முழுசும் அவரோட கண்ட்ரோலுக்கு வந்துடும். 'Underplay' பண்ணி, ஒரு சிங்கம் மாதிரி அமைதியா இருந்து ஸ்கோர் பண்ணியிருப்பாரு. 'பெரியவர்'னு சொல்ற அந்த கம்பீரம் எந்த பில்டப்பும் இல்லாம வெறும் பார்வைலியே வெளிப்படும்.
"சிவாஜி கணேசன் அப்படிங்கிறவரு ஒரு கடிகாரம் மாதிரி. காலத்துக்கு ஏத்த மாதிரி தன்னை மாத்திக்கிட்டே இருந்தாரு. 50-கள்ல தியேட்டர் ஆக்டிங் தேவைப்பட்டுச்சு பண்ணாரு, 80-கள்ல சப்டில் ஆக்டிங் தேவைப்பட்டுச்சு. அதையும் பெர்ஃபெக்ட்டா பண்ணாரு. அவர் நடிக்கல, அந்தந்த காலகட்டத்துல வாழ்ந்துட்டு போயிருக்காரு.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக