1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜி பத்மினி படங்களின் EPIC ஹிஸ்டரி

இப்போ இருக்குற 2K கிட்ஸ்  திரையில கெமிஸ்ட்ரின்னா உடனே  -இந்த கால பல காம்போக்களை கொண்டாடுறாங்க.. ஆனா, இதுக்கெல்லாம் அஸ்திவாரம் போட்ட ஒரு 'OG' (Original Gangster) ஜோடி தமிழ் சினிமாவுல இருந்தாங்க. அவங்க தான் 'நடிப்பு அரக்கன்' நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சாரும், 'நாட்டியப் பேரொளி' பத்மினியும் ! சுமார் 40 படங்கள்ல நடிச்சிருக்காங்க. 
அந்த  படங்கள்  தமிழ் சினிமாவுல காலத்துக்கும் அழியாத மாஸ்டர் பீஸ்கள். ஒரு ஜோடி 34 படங்கள் ஒண்ணா நடிச்சாங்க, ஹிட்டாச்சுங்கிறதை தாண்டி, அவங்க தமிழ் சினிமாவுக்கு செஞ்சு வச்ச தரமான சம்பவங்கள் எக்கச்சக்கம். இந்த இரண்டு லெஜெண்ட்களும் ஒண்ணா சேர்ந்தப்போ தியேட்டர்ல எப்படிப்பட்ட மேஜிக் நடந்துச்சு, அவங்க நடிப்புல அப்படி என்னதான் சிறப்புனு தெரிஞ்சுக்கணுமா? 

​இன்னைக்கு நாம 'பான்-இந்தியா', 'ஆஸ்கார்'னு பேசிட்டு இருக்கோம். ஆனா, 1950-களிலேயே தமிழ் சினிமாவின் பெருமையை எல்லை தாண்டி கொண்டு போன பெருமை இந்த ஜோடிக்கு உண்டு. எகிப்துல நடந்த ஆஃப்ரோ-ஆசியன் திரைப்பட விழாவுல சிவாஜி சாருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைச்சுச்சு. 
சிவாஜி பத்மினி தங்களோட கலையை உலக மேடையில கம்பீரமா பதிவு செஞ்ச பெருமை இவங்களையே சேரும்.

 அதுமட்டுமில்லாம, கர்நாடக சங்கீதத்தையும், பரதநாட்டியத்தையும் பாமர மக்களுக்கும் கொண்டு போய் சேர்த்தது இவங்க காம்போ தான். ஒரு நாதஸ்வர வித்வானும், ஒரு டான்சரும் எப்படி இருப்பாங்கனு வாழ்ந்து காட்டினது, தமிழ் பண்பாட்டோட ஒரு காலப்பெட்டகம்! இப்படி அடுத்த லெவலுக்கு தமிழ் சினிமாவை கொண்டு போன இவங்க, ஸ்கிரீன்ல செஞ்ச மாயாஜாலம் சாதாரணமானது இல்லே.
​பத்மினிக்கு சிவாஜி படங்கள் தான் ஒரு பெரிய பிரேக் கொடுத்துச்சான்னு கேட்டா, அடிச்சு சொல்லலாம் "ஆமாம்"னு! ஆரம்ப காலத்துல பத்மினி 'திருவிதாங்கூர் சகோதரிகள்'ங்கிற பேர்ல, அவங்களோட வேற லெவல் டான்ஸ் பெர்ஃபார்மன்ஸ்க்காக மட்டுமே அறியப்பட்டாங்க. ஒரு டான்சரா மட்டுமே இருந்தவங்களை, ஒரு முதிர்ச்சியான, முழுமையான 'ஆக்டிங் மான்ஸ்டரா' மாத்துனது சிவாஜி கூட அவங்க போட்ட காம்போ தான். 

சிவாஜி மாதிரி ஒரு நடிப்பு இமயத்துக்கு முன்னாடி நின்னு நடிக்கிறது சாதாரண விஷயமே கிடையாது, சும்மா அடிச்சு தூக்கிடுவார் மனுஷன். ஆனா, அவருக்கு சரிசமமா நின்னு, பத்மினி  ஸ்கிரீன்ல வித்தைய இறக்கி இருப்பாங்க. சிவாஜி படங்கள் பத்மினியை டான்ஸ் அப்புறம்  வெறும் கமர்ஷியல் ஹீரோயின்ங்கிற வட்டத்தை உடைச்சு, 'நடிப்பு ராட்சசி'னு பேர் வாங்கிக் கொடுத்துச்சு. அப்போ அவங்களோட ஆக்டிங் கெமிஸ்ட்ரி எந்த லெவலுக்கு ஃபயரா இருந்துருக்கும்னு யோசிச்சு பாருங்க... 

​இவங்க ரெண்டு பேரோட ஆக்டிங் எப்படி இருக்கும்னு கேட்டா, "Perfect Give and Take"னு சொல்லலாம். ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்லைனு போட்டிப் போட்டுக்கிட்டு நடிப்பாங்க. சிவாஜி சார் ஒரு சிங்கம் மாதிரி... அவரோட வசன உச்சரிப்பும், உடல் மொழியும் ஸ்கிரீனை அப்படியே ஆக்கிரமிச்சுக்கும். அந்த இடத்துல வேற எந்த ஹீரோயின் இருந்தாலும் காணாம போயிருப்பாங்க. ஆனா பத்மினி , தன்னோட நாட்டியக் கலையால கிடைச்ச அந்த 'மைக்ரோ எக்ஸ்பிரஷன்ஸ்' மூலமா சிவாஜியை அப்படியே பேலன்ஸ் பண்ணுவாங்க. சிவாஜி  வசனமே பேச வேண்டாம், தன்னோட கண்ணாலயே ஆயிரம் எக்ஸ்பிரஷன் கொடுப்பார். அதுக்கு மேட்ச்சா பத்மினியின்   நவரச முகபாவனைகள் ஸ்கிரீன்ல தெறிக்கும். சிவாஜியோட சிம்மக் குரலுக்கு, பத்மினியோட அழகான பாவனைகள் செம்ம மேட்ச்சா இருக்கும். சிவாஜி தனக்கான ஸ்பேஸை பத்மினிக்கு விட்டுக் கொடுப்பார், பத்மினி சிவாஜிக்கான இடத்தை விட்டுத் தருவாங்க. ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் டாமினேட் பண்ணாம, கதையை மட்டும் தூக்கி நிறுத்துற அந்த மேஜிக் யாருக்கும் வராது. வசனமே பேசாம ஒருத்தரை ஒருத்தர் பேலன்ஸ் பண்ண இவங்க, காதலை எப்படி ஸ்கிரீன்ல கடத்துனாங்கனு நெனைக்கறப்போ ஆச்சர்யமா இருக்கு.

​இன்னைக்கு இருக்குற காலகட்டத்துல ரொமான்ஸ்ங்கிறது வேற மாதிரி மாறிடுச்சு. ஆனா, அந்த காலத்துல ஒரு விரல் நுனிகூட படாம, வெறும் பார்வையாலயே காதலை ஸ்கிரீன்ல கடத்துறதுல இவங்க ரெண்டு பேரும் பிஎச்டி முடிச்சிருந்தாங்க. ஒரு கோபம், ஒரு சின்ன ஊடல், ஒரு வெட்கம்... இது எல்லாத்தையும் சிவாஜியும் பத்மினியும் தங்களுடைய கண்கள் மூலமாவே ஆடியன்ஸை உணர வச்சிருவாங்க. தமிழ் சினிமாவுல 'கிளாசிக்கல் ஆக்டிங்' அப்படின்னா என்னனு யாராவது கேட்டா, கண்ணை மூடிக்கிட்டு இந்த ஜோடியோட படங்களை ஒரு ரெஃபரன்ஸா காட்டலாம். அந்த அளவுக்கு நேர்த்தியான ஒரு ஆக்டிங் சிலபஸ் இவங்க! இந்த ஆக்டிங் சிலபஸை வச்சுக்கிட்டு, 1950-களில் இருந்து 70-கள் வரைக்கும் இவங்க தியேட்டர்களை எப்படி தெறிக்கவிட்டாங்கனு அந்த காலவரிசைப்படி ஒரு ரவுண்ட் போலாம் ,வாங்க.

​1950-களின் ஆரம்பம்: 
​பணம் (1952) - 
இவங்க ரெண்டு பேரும் ஜோடி சேர்ந்த முதல் படமே இதுதான். பல சமூக சீர்திருத்தக் கருத்துகளை சொன்ன படம்.
படம் பெரிய லெவல்லே இல்லேன்னாலும் நல்ல பேரை சம்பாதிச்சது.இந்த படம் சுமாரா போக காரணம் அப்ப ரன்னிங்க்லே இருந்த பராசக்தி பயர் தான் காரணம்.

​அன்பு (1953) & கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி (1954):
50-கள்ல இவங்க காம்போல வந்த 'அன்பு' மாதிரியான படங்கள் எல்லாம் அப்போதைய ஆடியன்ஸை தியேட்டர்ல கட்டிப்போட்ட மேஜிக். 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' சிவாஜியோட பெஸ்ட் காமெடி படங்கள்ல ஒன்னு. இதுல பத்மினியோட துடுக்குத்தனமான ஆக்டிங் தியேட்டர்ல அப்ளாஸ் அள்ளுச்சு. இதுவும் ஒரு 100 நாள் ஹிட் படம்.

​எதிர்பாராதது (1954) & இல்லற ஜோதி (1954):
'எதிர்பாராதது' படம் பத்மினிக்கு சிறந்த நடிகைங்கிற பேரைத் தந்த ரொம்ப எமோஷனலான படம். இதுவும் 100 நாட்கள் ஓடி பாக்ஸ் ஆபிஸ்ல சூப்பர் ஹிட். 'இல்லற ஜோதி' படமும் இவங்க வெற்றியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துச்சு. ஆனா, இவங்களோட அடுத்த படம் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வச்சுது... அது என்ன படம் தெரியுமா?

​தூக்குத் தூக்கி (1954) - வெறித்தனமான பிளாக்பஸ்டர்!
சிவாஜி சாருக்கு ஒரு 'மாஸ் ஹீரோ' இமேஜை வாங்கிக் கொடுத்த தரமான சம்பவம் இந்த படம். 100 நாட்கள் ஓடுச்சு! படத்துல வர்ற 8 பாட்டுமே பட்டிதொட்டியெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட். பத்மினி  டான்ஸும், ஸ்கிரீன் பிரசன்ஸும் படத்துக்கு மிகப்பெரிய பலமா அமைஞ்சுச்சு. 

இந்த ஹிட்டுக்கு அப்புறம் இவங்க கமர்ஷியல்ல பண்ணுன மேஜிக் ,
​காவேரி (1955), கோடீஸ்வரன் (1955) & மங்கையர் திலகம் (1955):
'காவேரி', 'கோடீஸ்வரன்' படங்கள்ல இவங்களோட எனர்ஜி லெவல் வேற ரகமா இருந்துச்சு. பெண்களோட தியாகத்தைப் பேசுன 'மங்கையர் திலகம்' 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு பண்ணுச்சு.

​ராஜா ராணி (1956) & அமர தீபம் (1956):
 சமூக அந்தஸ்தை பத்தி பேசுன 'ராஜா ராணி' வெற்றி நடை போட்டுச்சு. 'அமர தீபம்' ஒரு கிளாசிக் லவ் ஸ்டோரி. சிவாஜி-பத்மினி காம்போல வந்த மிகப்பெரிய 100 நாள் சூப்பர்ஹிட் . நார்மல் கேரக்டர்ல நடிச்சவங்க, அடுத்து வேற ஒரு கிளாஸ் சப்ஜெக்ட்லே இறங்கி மாஸ் காட்டுனாங்க!

​புதையல் (1957) & பாக்யவதி (1957):
இந்த படங்களை எல்லாம் எடுத்துப் பார்த்தீங்கன்னா, ஒரு ஹீரோயின் எப்படி ஸ்கிரீன்ல வெயிட்டா நிக்கணும்னு பத்மினி  அப்பவே கிளாஸ் எடுத்திருப்பாங்க.

​உத்தம புத்திரன் (1958) - 
சிவாஜி சார் முதன்முதலா இரட்டை வேடத்துல நடிச்ச மெகா ஹிட் படம் இது. 100 நாட்களுக்கு மேல ஓடி வசூல்ல சக்கைப்போடு போட்டுச்சு. இதுல நல்லவரா வர்ற பார்த்திபனுக்கு ஜோடியா பத்மினி நடிச்சு இருப்பாங்க. இவங்க ரெண்டு பேருக்கும் வர்ற "முல்லை மலர் மேலே" பாட்டு, இன்னைக்கு வரைக்கும் ரொமான்ஸ்ல ஒரு பெஞ்ச்மார்க்.

​சம்பூர்ண ராமாயணம் (1958) & தங்கப்பதுமை (1959):
சிவாஜி பரதனாகவும், பத்மினி சீதையாகவும் நடிச்சு ராமாயணத்தை ஸ்கிரீன்ல கொண்டு வந்தப்போ தியேட்டரே கோவில் மாதிரி மாறிச்சு. 175 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடுச்சு. 'தங்கப்பதுமை' படத்துல கணவனைப் பிரிஞ்சு தவிக்குற ஒரு மனைவியோட வலியை பத்மினி  தன்னோட அசாத்திய நடிப்பால கண்முன்னாடி கொண்டு வந்திருப்பாங்க. இந்த படமும் 100 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி அடைஞ்சது . 

'மரகதம்' (1959) படமும் இவங்க வெற்றிப் பயணத்துல ஒண்ணு.இதுக்கப்புறம் வந்த ஒரு படம், தமிழ் நாடு பூரா இவங்களோட பேரை ஒலிக்க விட்டுச்சு... 
​வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) - 
175 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடுனது மட்டுமில்லாம, சர்வதேச விருதுகளையும் அள்ளிக் குவித்துச்சு இந்த படம்! வெள்ளையம்மாள்ங்கிற கேரக்டர்ல பத்மினி வந்தாலும், சிவாஜி கூட அவங்க வர்ற சீன்களும், "இன்பம் பொங்கும் வெண்ணிலா" பாட்டும் தியேட்டர்ல கூஸ்பம்ப்ஸ் மொமெண்ட்ஸா மாறிச்சு. வரலாற்றை முடிச்சுட்டு, 60-கள்ல இவங்க எந்த மாதிரியான ஒரு ராஜபாட்டைல பயணம் பண்ணாங்க தெரியுமா? 
 'புனர்ஜென்மம்' (1961) படத்துல எல்லாம் எந்த அளவுக்கு எமோஷனலா நடிக்க முடியுமோ, அந்த அளவுக்கு சென்டிமென்ட்ட பிழிஞ்சு எடுத்திருப்பாங்க. குடும்ப சென்டிமென்ட்டை பிழிஞ்சு எடுத்த 'தெய்வப்பிறவி' (1960) 100 நாட்கள் ஓடி ஹிட்டாச்சு. அதே சமயம், புராணக் கதையான 'ஸ்ரீ வள்ளி' (1961), குடும்பப் படங்களான 'செந்தாமரை' (1962), 'நான் வணங்கும் தெய்வம்' (1963)னு எந்த ஜானர் கொடுத்தாலும், அதுல இறங்கி அசால்ட்டா அடிச்சு நொறுக்குனாங்க இந்த மெர்சல் ஜோடி! இந்த அதிரிபுதிரி ஹிட்டுக்கு அப்புறம் வந்த படங்கள், கடவுளுக்கே சவால் விடுற அளவுக்கு இவங்களோட கெமிஸ்ட்ரியை அடுத்த லெவலுக்கு கொண்டு போச்சு... 

​1960-களின் இறுதி: அல்டிமேட் கிளாசிக்ஸ்!
​சரஸ்வதி சபதம் (1966) - தெய்வீகக் கெமிஸ்ட்ரி!
வித்யாபதியா சிவாஜியும், தேவி சரஸ்வதியா பத்மினியும் விஸ்வரூபம் எடுத்த படம். படத்துல இவங்க ரெண்டு பேருக்கும் நேரடியா காட்சிகள் கம்மிதான் என்றாலும், மொத்த கதையும் இவங்களை சுத்தித்தான் நகரும். 100 நாட்கள் ஓடி ஹிட் லிஸ்ட்ல சேர்ந்த படம் இது.
​திருவருட்செல்வர் (1967) - டான்ஸ்ல ஒரு பேட்டில்!
சிவாஜியோட நடிப்புக்கும் நடைக்கும்  அவருக்கு ஈடுகொடுக்கும் நடன மங்கையா பத்மினியும் போட்டி போட்டு நடிச்ச படம். குறிப்பா "மன்னவன் வந்தானடி" பாட்டுல ரெண்டு பேரோட பெர்பார்மென்ஸ்  பேட்டிலைப் பார்த்தா நமக்கே மெய்சிலிர்த்துப் போகும்.

1967 லே ​பேசும் தெய்வம் பாலாடை & இரு மலர்கள் :
'பேசும் தெய்வம்', 'பாலாடை' படத்துல எல்லாம் எமோஷன்ஸை ஸ்கிரீன்ல நேர்த்தியா தெளிச்சு விட்டாங்க. சிவாஜி, பத்மினி, கே.ஆர்.விஜயானு வந்த பயங்கரமான முக்கோண காதல் கதை தான் 'இரு மலர்கள்'. இதுல பத்மினியோட தியாகம் எல்லாரையும் உருக வச்சு, 100 நாட்கள் ஓடி பட்டாசு கிளப்புச்சு. ஆனா, இதுக்கெல்லாம் மேல இந்த ஜோடியின் கரியர்லயே 'தி பெஸ்ட்'னு சொல்ற ஒரு படம் இருக்கு... அது வேற லெவல் ஐட்டம்!

​தில்லானா மோகனாம்பாள் (1968) - தி அல்டிமேட் மாஸ்டர் பீஸ்!
சிவாஜி - பத்மினி ஜோடியோட மகுடம்னே இந்த படத்தை சொல்லலாம்! நாதஸ்வர வித்வான் சிக்கல் சண்முகசுந்தரமா சிவாஜியும், நாட்டியப் பேரொளி மோகனாம்பாளா பத்மினியும் ஸ்கிரீன்ல வாழ்ந்திருப்பாங்க. ஈகோ, காதல், கலை மேல இருக்குற வெறினு எல்லாத்துலயும் இவங்களோட நடிப்பு இன்னைக்கு இருக்குற ஆக்டர்ஸ்களுக்கு ஒரு பாடப்புத்தகம். 100 நாட்கள் ஓடி வரலாற்றுச் சாதனை படைச்சது இந்த படம். இதோடு நிக்காம, 'திருமால் பெருமை' (1968), 'குருதட்சணை' (1969) படங்கள்லயும் இவங்களோட மெச்சூரிட்டியான ஆக்டிங் பலரை ஆச்சரியப்பட வச்சுது. இளமைல இவ்வளவு காதல் பண்ணவங்க, வயசான காலத்துல எப்படி இருப்பாங்கனு காட்டிய படங்கள் தான் அடுத்த மாஸ்டர் பீஸ்!

​1970-கள் & 80-கள்: 
​வியட்நாம் வீடு (1970) - மெச்சூரிட்டியின் உச்சம்!
பிரஸ்டீஜ் பத்மநாபனா சிவாஜியும், அவரை அனுசரிச்சுப் போற அன்பான மனைவி சாவித்திரியா பத்மினியும் நடிச்ச படம். நடுத்தர வயசுல ஒரு ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்க்கு நடுவுல இருக்குற ஆழமான அன்பை இதைவிட அழகா எந்தப் படத்துலயும் காட்ட முடியாது. தியேட்டர்ல 100 நாளைக்கு மேல ஓடி ஹவுஸ்ஃபுல் போர்டுகளை குவிய வச்ச படம் இது.

​'விளையாட்டுப் பிள்ளை' (1970), 'இரு துருவம்' (1971), 'குலமா குணமா' (1971), 'தேனும் பாலும்' (1971)னு வரிசையா படங்கள் வந்துச்சு

. பல வருஷங்கள் கழிச்சு, அந்த பழைய விண்டேஜ் மாஸ் கொஞ்சம் கூட குறையாம தாய்க்கு ஒரு தாலாட்டு  (1986 )படத்துல மறுபடியும் ஸ்கிரீனை ஷேர் பண்ணி ஆடியன்ஸை அலற விட்டாங்க.
 லட்சுமி வந்தாச்சு (1986):
 அதே வருஷம் வந்த 'லட்சுமி வந்தாச்சு' படத்துல, இவங்க ஒண்ணா நடிச்சப்போ தியேட்டர்ல விசில் சத்தம் காதைப் பிளந்துச்சு. இப்படி காலங்கள் மாறினாலும், தலைமுறைகள் கடந்தாலும் இவங்க காம்போக்கு ஒரு எண்டே கிடையாதுனு நிரூபிச்சாங்க!
சிவாஜி கணேசனும் பத்மினியும் வெறும் ஆக்டர்ஸ் கிடையாது; அவங்க தமிழ் சினிமாவோட ரெண்டு கண்கள்! திரையில இவங்க ரெண்டு பேரும் தோன்றுனா, அங்கே வசனங்கள் கூட தேவையில்லை; இவங்களோட கண்களும், உடல் மொழியுமே ஆடியன்ஸ் கிட்ட அத்தனை விஷயங்களையும் பேசிடும். பத்மினி மாதிரி ஒரு 'நாட்டியப் பேரொளி' கிடைச்சதுனால தான், 'தில்லானா மோகனாம்பாள்' மாதிரி ஒரு பிரம்மாண்ட காவியம் முழுமையடைஞ்சுது. அதேபோல, சிவாஜி மாதிரி ஒரு 'நடிப்புப் பல்கலைக்கழகம்' எதிரே இருந்ததால தான், பத்மினிக்குள்ளயும் மறைந்திருந்த ஒரு வெறித்தனமான குணச்சித்திர நடிகை வெளிய வந்தாங்க.
​இந்த 40 திரைப்படங்களும், தமிழ் சினிமா இருக்குற வரைக்கும் இவங்களோட புகழைப் பாடிக்கிட்டே இருக்கும். ஆக மொத்தம் 40 நேரடி தமிழ் படங்கள்... சும்மா இல்லை ..தமிழ் சினிமாவுல இது ஒரு ஈடு இணையற்ற எபிக் ஜர்னி! இப்படி ஒரு இமாலய ஹிஸ்டரியை கிரியேட் பண்ண இந்த மாஸ் ஜோடியை, சினிமா வரலாறு எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஒரு லெஜெண்டரி சாப்டராகவே என்றென்றும் கொண்டாடித் தீர்க்கும்!

செந்தில்வேல் சிவராஜ் 
9087620800

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்