1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜியின் 25 அரச கதை படங்கள்

​சும்மா 'ஆக்ஷன்'னு சொன்ன உடனே டயலாக் பேசிட்டு அப்படியே போறது நடிப்பு கிடையாது. ஆனா, கேமரா முன்னாடி வந்து நின்னா... அந்த காலமே ஒரு நிமிஷம் ஸ்தம்பிச்சு நிக்கணும்! அப்படி இந்திய சினிமாவையே தன்னோட நடிப்பு அதிகாரத்தால மிரள வச்ச ஒரே ஒரு சிம்மக்குரலோன்... 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன்!
இன்னைக்கு இருக்குற கிராபிக்ஸ், VFX, பிரம்மாண்ட செட் எதுவுமே இல்லாத அந்த காலத்துல...  25 அரச கதைகள், வரலாற்றுப் படங்கள்ல நடிச்சு, இன்னைக்கும் ராஜானாலே நம்ம கண்ணு முன்னாடி வந்து நிக்கிறாரே... அது எப்படி சாத்தியமாச்சு?
​அரச காலத்து கதைகள்ல நடிக்கிறது சும்மா சாதாரண விஷயம் இல்ல ! அந்த கனமான கிரீடத்தை தலையில வச்சுக்கிட்டு, பல கிலோ நகைகளைப் போட்டுக்கிட்டு... ஆனா முகத்துல ஒரு துளி கூட சோர்வு இல்லாமே அவர் சிம்மக்குரல்ல கர்ஜனை செஞ்சப்போ தியேட்டரே அதிருச்சு பாத்தீங்களா... அதுதான் சிவாஜி ஸ்டைல்!
​அவரோட அந்த இராஜ நடை, அந்த இராஜ தந்திரப் பார்வை, தமிழ் உச்சரிப்பு... அப்பாப்பா! இன்னைக்கு இருக்குற எந்தப் பெரிய நடிகரா இருந்தாலும், ஒரு வரலாற்றுப் படத்துல நடிக்கணும்னா முதல்ல எடுக்குற ரெஃபரன்ஸ் நம்ம சிவாஜி சாரோட படங்கள் தான்! அவருக்கு அப்புறம் எத்தனையோ பேர் ராஜா வேஷம் போட்டிருக்கலாம்... ஆனா, அரியணையில உட்காரும்போது அந்த 'இராஜ கம்பீரம்' 100% யாருக்கு வரும்னு கேட்டா, கண்ணை மூடிட்டு சொல்லலாம்... அது நம்ம 'நடிகர் திலகம்' ஒருத்தருக்கு மட்டும்தான்!
​சரித்திரத்தையே தன்வசப்படுத்திய அந்த சிம்மக்குரலோனின் 'அரச காவியப் பயணம்.

​1. மனோகரா..
நடிகர் திலகம் சினிமாவுல நடிச்ச முதல் அரச கதை படம் இது .
தமிழ் சினிமா ஹிஸ்டரிலயே ஒரு மாஸ் மைல்கல் படம் இது. கலைஞர் கருணாநிதி எழுதின அந்த அசாத்தியமான வசனங்களை, சிவாஜி சார் நாடக மேடைகள்ல பேசிப் பழகின அதே 'ஹை-பிட்ச்' வாய்ஸ் டோன்ல பேசி மிரட்டியிருப்பாரு. 
இதோட ரியல் ஃபேக்ட் என்னன்னா, இந்த படத்தோட ஹிந்தி வெர்ஷன் தெலுங்கு வெர்சன் 'மனோகர்'-லும் சிவாஜியே நடிச்சாரு!
அந்தக் காலத்திலேயே மூணு லாங்குவேஜ்லயும் வந்த திரைப்படம் இது .இது அந்த காலத்தில வந்த PAN -INDIA  படம் அப்படின்னு சொல்லலாம் .

​2. துளிவிஷம்...
ஏ.எஸ்.ஏ. சாமி டைரக்ஷன்ல 1954-ல உருவான படம். சிவாஜி  ஒரு மாஸ் ஹீரோவா கமர்ஷியலா வளர்ந்துட்டு இருந்த காலத்துல, நெகட்டிவ் ஷேட் (வில்லத்தனம்) கலந்த ஒரு இளவரசன் கேரக்டரை ரொம்ப தைரியமா ஏத்து நடிச்சாரு. ஒரு டாப் ஹீரோ ஆரம்ப காலத்துல இப்படி ரிஸ்க் எடுத்தது அப்போ பெரிய லெவல்ல பேசப்பட்டுச்சு.

​3. தூக்குத் தூக்கி..
தமிழ் திரையுலக வரலாற்றையே மாத்தின மிக முக்கியமான படம்! ஏன்னா, இந்த படத்துலதான் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் (TMS) அவர்கள் முதன்முதலா சிவாஜி சாருக்குப் பின்னணி பாடினாரு.
TMS எல்லா பாட்டையும் பாட, அது சிவாஜியோட வாய்ஸ் பாணிக்கு 100% செட் ஆகி ஒரு ஹிஸ்டரியவே கிரியேட் பண்ணுச்சு.திருவிதாங்கூர் சகோதரிகள் பத்மினி ராகினி லலிதா மூன்று பேரும் நடிச்ச படம். 

​4. காவேரி..
 1955 ஆம் ஆண்டு டி. யோகானந்த் இயக்கின திரைப்படமாகும். இப்படத்தில் சிவாஜி கணேசன் , பத்மினி மற்றும் 
லலிதா நடிச்ச படம்.
 இந்தத் திரைப்படம் விஜய கௌரி என்ற பெயரில் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது 

​5. தெனாலிராமன்
இதுல சிவாஜி சார் விகடகவியான 'தெனாலிராமன்' கேரக்டர்ல வாழ்ந்திருப்பாரு. கிருஷ்ண தேவராயரா என்டி ராமராவ் நடிச்சிருப்பார் .

​6. வணங்காமுடி
இயக்குநர் பி. புல்லையா இயக்கத்துல ஒரு சிற்பியின் கதையா இது ரிலீஸ் ஆச்சு. இதுல சிவாஜி அசாத்தியமான திறமை வாய்ந்த சிற்பி கேரக்டர்ல நடிச்சிருப்பாரு. ஜி. ராமநாதன் மியூசிக்ல இந்த படம் பாக்ஸ் ஆபீஸ்ல ஒரு மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட்டா மாறுச்சு.தமிழ் சினிமாவில் முதன் முதலா 80 அடிக்கு கட் அவுட் வைத்தது இந்த படத்துக்கு தான் 

​7. தங்கமலை ரகசியம்
பி.ஆர். பந்துலு தயாரிச்சு, டைரக்ட் பண்ணின படம். காட்டுல வளர்ற இளவரசன் கேரக்டர்லே சிவாஜி நடித்த படம் .படத்தோட முதல் பாதி  ஒரு டார்ஜான் டைப்  திரைப்படம். 

​8. ராணி லலிதாங்கி
இதுல சிவாஜி கணேசன் மற்றும் பி. பானுமதி... இந்த ரெண்டு நடிப்பு மேதைகளோட நடிப்புப் போட்டி பயங்கரமா இருந்துச்சு. பானுமதி அம்மாவோட கணீரென்ற குரலுக்கு இணையாக சிவாஜி சார் தன் வசன உச்சரிப்பைக் கொடுத்து அசத்தியிருப்பாரு.

​9. அம்பிகாபதி
கவிச்சக்ரவர்த்தி கம்பனின் மகன் அம்பிகாபதியோட வரலாற்றுப் படம். இதோட கிளைமாக்ஸ்ல வர்ற அந்த 'சபதக் காட்சி' (100 பாடல்கள் பாடுற சேலஞ்ச்) தமிழ் சினிமாவோட எவர்கிரீன் கிளாசிக் சீன். டி.எம்.எஸ்ஸோட எனர்ஜியான வாய்ஸும், சிவாஜியின் முகபாவனைகளும் இன்னைக்கும் பார்ப்பவங்களை வியக்க வைக்கும்.

​10. உத்தமபுத்திரன்
தொழில்நுட்ப ரீதியா தமிழ் சினிமாவை நெக்ஸ்ட் லெவலுக்குக் கொண்டு போன படம் .விக்ரமன் பார்த்திபன் அப்படின்னு ரெண்டு பேரை சொன்னா அந்த கால சினிமா ரசிகர்களுக்கு இந்த படத்தை தவிர வேற நினைப்பு வராது .

​11. சம்பூர்ண ராமாயணம்
கே. சோமு டைரக்ட் பண்ணின இந்த படத்துல, சிவாஜி சார் 'பரதன்' கேரக்டர்ல கெஸ்ட் ரோல்  மாதிரி கௌரவ வேடத்துலதான் நடிச்சிருப்பாரு. 

​12. சாரங்கதாரா
சிவாஜி கணேசன் நடித்த ஐம்பதாவது திரைப்படம். இந்த படத்துக்கு பெருமை சேர்க்கிறது அந்த வசந்த முல்லை போலே வந்த பாட்டு .

​13. காத்தவராயன்
ஒரு புராணக் கதையை ரொம்ப சீரியஸா கொண்டு போகாம, சாமான்ய மக்களும் என்ஜாய் பண்ணுற மாதிரி கொஞ்சம் நையாண்டி, ஹியூமரோட சிவாஜி சார் நடிச்சதுதான் இதோட ஹைலைட்.

​14. தங்கப்பதுமை..
ஒரு அரச கதையில வைத்தியரா  சிவாஜி நடிச்ச படம் .ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான் பாட்டு பெரிய லெவல்லே ஹிட்டாச்சு.

​15. வீரபாண்டிய கட்டபொம்மன்
சரித்திரப் படம்னா இப்படித்தான் இருக்கணும்னு உலகத்துக்கே இலக்கணம் எழுதின படம் ! 
சர்வதேச லெவல்ல அவார்டு வாங்குன முதல் இந்திய நடிகர் சிவாஜி தான்றதுதான் இதோட மறுக்க முடியாத ரியல் ஹிஸ்டரி!

​16. குறவஞ்சி
கலைஞர் கருணாநிதியோட தமிழ் வசனங்களை, சிவாஜி சார் தன் பேமஸ் வாய்ஸால தியேட்டர்ல சும்மா அதிர வச்சிருப்பாரு.


​17. ராஜபக்தி
ஒரு நாட்டோட தளபதியா, இராஜ விசுவாசம் மிக்கவரா சிவாஜி சார் நடிச்ச படம். பானுமதி, வைஜெயந்திமாலா, பத்மினி என அன்றைய டாப் ஹீரோயின்கள் எல்லாரும் ஒண்ணா நடிச்ச ஒரு பிரம்மாண்ட வரலாற்றுப் மல்டிஸ்டாரர் படம் இது.

​18. மருதநாட்டு வீரன்
முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் அட்வென்ச்சர் சரித்திரப் படம். இதுல வர்ற பல ஆபத்தான குதிரைச் சவாரி சீன்ஸ் மற்றும் ஸ்டண்டுகளை, சிவாஜி சார் எந்த ஒரு டூப்பும் இல்லாம நிஜமாவே குதிரை ஓட்டி மாஸ் பண்ணியிருப்பாரு.

​19. சித்தூர் ராணி பத்மினி
ராஜபுத்திர மன்னன் ராணா ரத்தன் சிங்காக சிவாஜி சார் வாழ்ந்து காட்டின படம். வைஜெயந்திமாலா பத்மினியா நடிச்சாங்க. வட இந்திய வரலாற்றை சற்றும் தரம் குறையாம தென்னகத்துத் திரையில கொண்டு வந்த படம் இது.

​20. கர்ணன்
பி.ஆர். பந்துலுவோட மெகா பட்ஜெட் காவியம். லட்சக்கணக்குல செலவு பண்ணி ஒரிஜினல் தேர்கள், குதிரைகளை வச்சு ஜெய்பூர் அரண்மனைப் பகுதிகள்ல ரியல் லொகேஷன்ல ஷூட் பண்ணாங்க. என்.டி.ஆர் கிருஷ்ணராகவும், சிவாஜி கர்ணனாகவும் நடிச்ச இந்த காம்போ இந்திய சினிமா வரலாற்றோட ஒரு கோல்டன் பேஜ்.

​21. மகாகவி காளிதாஸ்
சமஸ்கிருதக் கவிஞர் காளிதாசனோட பயோபிக் கதை இது. காளிதாசனோட 'சாகுந்தலம்' நாடகத்தோட கோர் பாயிண்ட்டை அப்படியே தமிழ்ல கொண்டு வந்த படம். இதுல ஒரு முட்டாள் எப்படி மகா கவியா மாறுறான்றதை நவரச நடிப்பால சிவாஜி சார் நிரூபிச்சிருப்பாரு.

​22. -ஹரிச்சந்திரா
வாய்மை தவறாத ஹரிச்சந்திர மகாராஜாவா சிவாஜி  நடிச்ச படம். குறிப்பா அந்த மயானக் காட்சியில வர்ற அவலச் சுவையை சிவாஜி அவரோட ஆக்டிங் ஸ்கில்ஸால உச்சக்கட்டப் புள்ளிக்குக் கொண்டு போயிருப்பாரு.

​23. ராஜ ராஜ சோழன்
தமிழ் சினிமாவோட மிக முக்கியமான மைல்கல்... ஃபர்ஸ்ட் சினிமாஸ்கோப் கலர் படம்! கலை இயக்குநர் கங்காவோட பிரம்மாண்ட செட்டிங்ஸ்ல, தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னனோட கம்பீர தோற்றத்துக்கு சிவாஜி சாரை தவிர யாரையுமே திங்க் பண்ண முடியாதுன்னு ப்ரூவ் பண்ண படம்.

​24. தச்சோளி அம்பு (மலையாளம்)
மலையாள திரையுலகோட முதல் சினிமாஸ்கோப் மூவி! கேரளாவின் பாரம்பரிய 'களரி' சண்டைக் கலையை மையமா வச்ச படம். இதுல  வரலாற்றுப் பாத்திரத்துல சிவாஜி  ஒரு பவர்ஃபுல்லான கௌரவ வேடத்துல நடிச்சு, மாலிவுட்டுக்கு ஒரு புது டெக்னாலஜி பாதையைக் காட்டினாரு.

​25. ராஜரிஷி
கே. சங்கர் இயக்கத்துல, இளையராஜா மியூசிக்ல 1985-ல வந்த புராணப் படம் . இதுல சிவாஜி சார் கௌசிக மன்னனாக ஆரம்பிச்சு, அப்புறம் தன் அசாத்திய தவ வலிமையால 'ராஜரிஷி விஸ்வாமித்திரராக' மாறுற அந்த வெயிட்டான கேரக்டர்ல நடிச்சு மிரட்டியிருப்பாரு!

​26. விஸ்வநாதநாயக்கடு (தெலுங்கு)
மதுரையை ஆண்ட நாயக்க வம்சத்தோட கதையை வச்சு தாசரி நாராயண ராவ் எடுத்த தெலுங்கு படம். இதுல சிவாஜி சார் 'நாகம நாயக்கர்' அப்படிங்கிற செம வெயிட்டான தெலுங்கு வரலாற்றுப் பாத்திரத்துல நடிச்சு, ஆந்திரா ஆடியன்ஸையும் தன் நடிப்பால கட்டிப்போட்டாரு!
 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் நடிச்ச இந்த 26 அரசக் காவியங்களோட லிஸ்ட் இதான்.
​சிம்மாசனத்துல உட்கார்ந்து அவர் வசனம் பேசுனா... நிஜ மாமன்னனே நேர்ல வந்து பேசுற மாதிரி இருக்கும்! தமிழ் சினிமாவுல எத்தனையோ அரச கதைகள் வரலாம், இனிமேயும் வரப்போகலாம்... ஆனா, இராஜ கம்பீரத்துக்கும், அந்த இராஜ நடைக்கும், வசன உச்சரிப்புக்கும் 'ஒன் அண்ட் ஒன்லி கிங்' நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும்தான்! அவரைத் தவிர வேற யாராலயும் இந்த அரியணைக்கு 100% நியாயம் செய்யவே முடியாது.

செந்தில்வேல் சிவராஜ்
9087620800



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்