இடுகைகள்

ஜூலை, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

சிவாஜியின் முதல் 10 வருட சாதனைகள்

சிவாஜி கணேசன் முதல் 100 படங்களில் செய்த சாதனைகள். சிவாஜி கணேசன் நடித்த முதல் படம் பராசக்தி .வெளிவந்த ஆண்டு 1952. 100;வது படமான நவராத்திரி வெளிவந்த வருடம் 1964.  சிவாஜி கணேசன் முதல் 100 படங்களை12 வருடங்களில் நடித்து முடித்தார். தமிழ் சினிமா திரையுலகில் முதல் நூறு படங்களை பன்னிரண்டு வருடங்களில் நடித்து முடித்த முதல் நடிகர் சிவாஜி கணேசன் தான். 1952 ஆம் வருடம் நடிகர் திலகம் நடித்த வெளிவந்த படங்கள் இரண்டு .முதல் படமே வருடக் கடைசி அக்டோபர் மாதத்தில் தான் வெளியானது. மீதம் 98 படங்களை 11 வருடங்களில் நடித்து முடித்தார். வருடத்திற்கு சராசரியாக எட்டு படங்களில் நடித்து சாதனை புரிந்திருக்கிறார் சிவாஜி கணேசன். இந்த நூறு படங்களில் வெள்ளிவிழா ஓடிய திரைப்படங்கள் ; பராசக்தி சம்பூர்ண ராமாயணம் வீரபாண்டிய கட்டபொம்மன் பாகப்பிரிவினை இரும்புத்திரை பாவ மன்னிப்பு  பாசமலர்   100 படங்களில் நடிகர்திலகம் நடித்து வெள்ளி விழா ஓடிய படங்கள் ஏழு.. 100 நாள் ஓடிய திரைப்படங்கள் : திரும்பிப் பார் ,மனோகரா ,கல்யாணம் பண்ணியும்      ,,"பிரம்மச்சாரி ,தூக்குத்தூக்கி ,எதிர்பாராதது, காவேரி ,மங்கையர்...

நான் பெற்ற செல்வம் VS திருவிளையாடல்

திருவிளையாடல் படம் பத்தி பேச ஆரம்பிச்சாலே சிவன் நக்கீரன் தருமி காட்சிகள் தான் எல்லோருடைய நினைவுக்கும் வரும்.எப்படி எடுத்திருக்காங்க. இந்த காட்சியை, அப்பிடீன்னு ஒரு வியப்பு யாருக்கும் வராம போகாது.அந்த காட்சியோட வசனங்களை சொல்லாத ஆளுகளும் இருக்க முடியாது.திருவிளையாடல் படத்துல சிவனாக சிவாஜியும் தருமியாக நாகேசும் அதை ஒரு பகுதியாக செஞ்சிருப்பாங்க.அந்த காட்சியோட  அடுத்த பகுதியா நக்கீரனாக  ஏபி நாகராஜனும் சிவனா சிவாஜியும் செஞ்சு இருப்பாங்க .இந்த காட்சியில் வரும் ஒவ்வொரு வசனமும் தமிழ் மக்களுக்கு  மனசுல பதிஞ்சு இருக்கும். இந்த காட்சி  இப்படி சிறப்பாக அமைஞ்சதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு.இந்த  காட்சி  ஏற்கனவே   நான் பெற்ற செல்வம் படத்துலே காட்சிகளாக எடுத்திருப்பாங்க .இந்த  நக்கீரன் சிவன் தருமி காட்சிகள் எல்லாம் ஏற்கனவே ஒரு படத்துல வந்திருக்கா அப்படிங்கறது பல பேருக்கு தெரியாது. நான் பெற்ற செல்வம் படத்துல இந்தக் காட்சிகளை அப்படியே அமைச்சு இருப்பார் ஏபி நாகராஜன் .அந்தப் படத்துல வர்ற சில வசனங்கள கொஞ்சம் மாத்தி, இன்னும் கொஞ்சம் அற்புதமான வார்த்தைகளை போட்டு த...

சிவாஜியின் பிறப்பு

சிவாஜியை ஏன் அவதரிக்க வைத்தான்  இறைவன்? அதுவும் தமிழகத்தில் .. ஏன் ஏன் ஏன் ? தமிழகம் சித்தர்கள் விளையாடிய பூமி. அதிகமான மகான்கள் அவதரித்த பூமி .. ஏராளமான அடியார்கள் நடமாடிய பூமி .. வீரத்தோடு தியாகத்தையும் கொண்ட மன்னர்கள் ஆண்ட பூமி ... பிற தேசத்து மக்களும் சுதந்திரமாக உலாவிய பூமி ... குன்றாத  இயற்கை வளங்களும், வற்றாத ஜீவ நதிகளும், செல்வத்தைக் கொட்டும் நில தனங்களும் , பொய்க்காத பூ மழையும் , கொண்டது தான் தமிழக பூமி .. நிறைவர  குறைவற்ற அமைந்த தமிழக பூமிக்கு, அதில் வாழும் மக்களுக்கு அதில் ஒரு குறை வைக்கலாமோ? அதற்காகவே படைக்கப்பட்டவன் தான் நெற்றி பொட்டாய் வந்த திலகமான  சிவாஜி ... கடவுளர்கள் எப்படிப்பட்டவர்கள்? ஓவியங்களாய் பார்த்ததுண்டு உணர்வுகளால் தெரிந்தது உண்டு .. சிலைகளாய் கண்டதுண்டு .. சிறுமதியில் பரவசமாய் அறிந்ததுண்டு.. ஓர் உயிர் அசைவாய், கண் பார்க்க ஓர் உருவ அசைவாய் கண் பார்க்க முடியுமா கடவுளின் நிஜத்தை?  என ஏங்காத மனிதர் உண்டோ  ? எப்படித்தான் காண முடியுமோ கடவுளின் சுய ரூபத்தை? சிவனென்ன?   திருமால் என்ன?  முருகனென்ன? எத்தனை கடவுள்கள்? எப்படித...

சிவாஜியின் டிஜிட்டல் திரைப்படங்கள்

படம்
நடிகர் திலகத்தின் டிஜிட்டல் வெளியீட்டு திரைப்படங்கள் .. முதல் வெளியீட்டிலும் மறு வெளியீட்டிலும்... பழைய தமிழ் படங்களை புதிய டிஜிட்டல் முறையில் மெருகேற்றி வெளியிடும் முறை 2012 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது என்று சொல்லலாம். அப்படி டிஜிட்டல் வெளியிட்டில் வெளிவந்த முதல் தமிழ் திரைப்படம் கர்ணன் ஆகும். இந்தப் படம் அதிக லாபத்தை விநியோகஸ்தருக்கு சம்பாதித்து கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியைப் பார்த்து பல தமிழ் படங்கள் டிஜிட்டல் முறையில் மெருகேற்றி வெளிவர தொடங்கின.டிஜிட்டல் படங்களுக்கு அடித்தளமாகவும் முன்னோடியாகவும் அமைந்தது கர்ணன் திரைப்படம் .. கர்ணன் , பாசமலர் , வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜபார்ட் ரங்கதுரை , சிவகாமியின் செல்வன்,  ராஜா,  வியட்நாம் வீடு,  திருவிளையாடல்,  வசந்த மாளிகை,  அவன் தான் மனிதன்,  முதல் மரியாதை  ஆகிய படங்கள் புதிய படங்களை விட நல்ல வசூலை அள்ளிக் கொடுத்தது... கர்ணன்.. கர்ணன் 1964 ஆம் ஆண்டு வெளியான படம் ஆகும். படம் வெளியான சமயத்தில் நான்கு திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்ட படம் கர்ணன். முதன் முதலாக டிஜிட்டல் செய்யப்பட்டு மறு வெளியீடு...

காலம் மாறலாம், சிவாஜியின் கௌரவம் மாறுமா?

படம்
காலம் மாறலாம்  சிவாஜியின் கௌரவம் மாறுமா? எத்தனை காலம் ஆனாலும் எத்தனை நடிப்பு வந்தாலும் அத்தனை அடியும் முடியும் அவர் கொடுத்ததில் தானே? காலம் மாறலாம்  சிவாஜியின் கௌரவம் மாறுமா?  எங்கே என்று நடிப்பை எங்கே என்று தேடதேட அது ஊற்றாய் காட்டுமே  பார்க்க பார்க்க அதை பார்க்க பார்க்க நெஞ்சம் பூவாய் மலருமே  காலம் மாறலாம் சிவாஜியின் கௌரவம் மாறுமா? திலகமெல்லாம் நெற்றியில் இட்ட திலகமெல்லாம் வட்டப் பொட்டாக முகத்தில் வட்டப் பொட்டாக பொலிவாக ஒரு சிறப்பாகுமே  நடிப்புக்கெல்லாம் அவர் தான் திலகமே  அவர் போல் இல்லை எவருமே  காலம் மாறலாம்  சிவாஜியின் கௌரவம் மாறுமா  நடிப்பினிலே  சிவாஜியின் நடிப்பினிலே வேடத்திலே போட்ட வேடத்திலே  நெஞ்சத்திலே மக்கள் நெஞ்சத்திலே  மறக்குமா உயிருள்ளவரை மறக்குமா  காலம் மாறலாம் சிவாஜியின் கௌரவம் மாறுமா?  கொடுத்ததெல்லாம் அவர் கொடுத்ததெல்லாம் அது ஓர் உயர்ந்த வரமே பார்த்தவருக்கு அதை பார்த்தவருக்கு அது ஓர் பிச்சை வரமே எல்லாம் வல்ல கடவுளே அவரில் கலந்தது தெளிவுடனே  காலம் மாறலாம் சிவாஜியின் கௌரவம் மாறுமா?...

நம்ப முடியாத சிவாஜி பட வெளியீடுகள்

படம்
நம்ப முடியாத சிவாஜி பட வெளியீடுகள்.. நடிகர் திலகத்தைப் பற்றி பெரும்பாலானவர்கள் பேசும் போது அவர் கர்ணனாக நடித்தார்,கட்டபொம்மன் ஆக நடித்தார், கப்பலோட்டிய தமிழனாக நடித்தார் என்று சொல்லி விடுவார்கள்.   ஆனால் நடிகர் திலகத்தின் ஒவ்வொரு படங்களும் எப்படிப்பட்டது, ஒரு படத்துக்கும் அடுத்தபடியாக வெளியாகும் படத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் காட்டி நடித்துள்ளார் என்பதை பார்க்கும்போது அது ஆச்சரியமாக மட்டுமல்ல, அதிசயமாகவும் உள்ளது. அது பற்றிய விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். 3.2.56 இல் வெளிவந்தது தெனாலிராமன் திரைப்படம்.  17 .2. 56-ல் வெளியான படம் பெண்ணின் பெருமை .தெனாலிராமன் ஒரு நகைச்சுவை விதூஷகன்.அதே சமயம் ஒரு ராஜதந்திரியும் கூட. நகைச்சுவை கலந்த இந்த தெனாலிராமன் பாத்திரத்தை செய்த நடிகர் திலகத்தின் அடுத்த படத்தைப் பார்த்தால் அது பெரிய பிரமிப்பை உண்டாக்கும் .ஆமாம், நடிகர் திலகம் தெனாலிராமனுக்கு அடுத்து செய்த படம் பெண்ணின் பெருமை. இந்தப் பெண்ணின் பெருமை படத்தில் நடிகர் திலகம் ஏற்ற வேடம் கிட்டத்தட்ட வில்லன் வேடமே.கூட பிறந்த சகோதரனையே துன்புறுத்தும் தம்பியாக நடித்திருப்பார் சிவாஜி கணேசன் ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற