இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

ஓம் லே இருந்து அத்திக்காய் வரை

படம்
சும்மா போகிற போக்கிலே கொடுத்த ட்யூனுக்கு வார்த்தைகளை அடிச்சு விடற வேலையெல்லாம் கண்ணதாசன் கிட்டே கிடையாது. ஒரு சாதாரண சிச்சுவேஷசனுக்கு கூட  அதிகம்  தெரியாத விஷயத்தை வார்த்தைகளா போட்டு காவிய பாட்டுகளா மாத்திருவார். இப்படி இவர் செஞ்ச பாட்டு வித்தைகள் ரொம்ப அதிகம். அந்த மாதிரி வித்தைகளை  சிவாஜி பட படங்கள்லே  இந்த பெரிய வேலைக்காரர் செஞ்ச பாட்டுகளை கொஞ்சம் பாக்கலாம். 'ஓம்' அப்படின்னு ஒரு வார்த்தை . சிவாய மந்திர வார்த்தை. இந்த வார்த்தையை வெச்சு ஒரு சாகசம் பண்ணியிருப்பார் ஒரு பாட்டுலே.அதுவும் என்ன டைப் பாட்டுலேன்னு பாத்தா ஆச்சர்யம்  தாங்காது . இது நமச்சிவாய மந்திரம். இதை படத்துலே பாடறது ஒரு முஸ்லீம் கேரக்டர்.அதுவும் எப்படி வெச்சார் பாருங்க அந்த வார்த்தையை. யாருமே யோசிக்க முடியாத படி. பாட்டு இதுதான். எல்லோரும் கொண்டாடுவோம்னு பாவ மன்னிப்பு பாட்டு. இதுலே எங்கப்பா ஓம் வருதுன்னு கேக்கத் தோணும். கொண்டாடுவோம்னு ஒரு வார்த்தை வருதில்லே.அதுலே கடைசியா அந்த ஓமைச் சேத்து முடிச்சிருப்பார்.இந்த ஒரு வரியை வெச்சு மட்டும் இத சொல்லலே..வந்ததை வரவில் வைப்போம்.வருவதை செலவில் வைப்போம்னு ...

sivajiganesan Manjula films

படம்
மஞ்சுளாதேவி என்ற இயற்பெயரை  "மஞ்சுளா" என்று திரையுலகுக்காக மாற்றி கொண்டவர் நடிகை மஞ்சுளா.  அவரது பள்ளிக் காலத்தில் ஒரு போட்டியில் மஞ்சுளாவின் ஆங்கிலப் புலமை பேச்சாற்றாலை ஒரு முறை திரைப்பட கதாசிரியர் சித்ராலயா கோபு பார்த்துவிட்டு அப்போது அவர் கதை வசனம் எழுதிய சாந்தி நிலையம் திரைப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார்.. திரைப்படங்களில் சிறு பெண்ணாக சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினார். பிரபலமான கதாநாயகியாக ஆன  பின் ,அன்றைய பிரபல கதாநாயகர்கள் பெரும்பாலும் எல்லோருடனும் நடிக்கும் வாய்ப்பு பெற்றார் .. நடிகர் திலகம் சிவாஜியுடன் 11 படங்களில் நடித்திருக்கிறார் மஞ்சுளா. அந்த திரைப்படங்கள்: எங்கள் தங்க ராஜா என் மகன் அவன் தான் மனிதன் மன்னவன் வந்தானடி அன்பே ஆருயிரே டாக்டர் சிவா சத்தியம் உத்தமன் அவன் ஒரு சரித்திரம் நெஞ்சங்கள் .. முதல்குரல்.. இந்த படங்கள் போக நடிகர்திலகத்துடன் மேடை நாடகத்திலும் நடித்திருக்கிறார் நடிகை மஞ்சுளா.  ஸ்டைல் சக்கரவர்த்தியாக விளங்கிய நடிகர் திலகம் நடித்த எங்கள் தங்க ராஜா திரைப்படத்தில் தான் மஞ்சுளா முதல் முதலாக சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். ...

நவராத்திரி

படம்
நடிகர்திலகம் 1952 லே நடிக்க வந்தார்.எத்தனையோ கேரக்டர்கள் பண்ணிட்டாரு.ஆனா அவரோட மனசுக்குள்ளே தணியாத ஆசையா அவர் நெனச்ச மாதிரி ஒரு படம் பண்ண முடியலேங்கற எண்ணமும் ஓடிட்டேதான் இருந்துச்சு. ஒரு வருசம் ரெண்டு வருசம் இல்லே. 12 வருசம்  நெனச்சுட்டு இருந்தார்.அதுக்குண்டான வாய்ப்பே வரலை.சிவாஜியோட பிஸி சுழ்நிலையாலே அப்படி ஒரு கதை ரெடி பண்ணுங்கன்னு சிவாஜியும் சொல்லலே.தானா அமையும்னு காத்திருந்தார்.இப்படி எந்த மாதிரியான படத்துக்கு சிவாஜி காத்திருந்தார்னு சொல்லறதுக்கு முன்னாலே பழைய விஷயம் ஒண்ணை சொல்லணும். சிவாஜி சினிமாக்கு வர்றதுக்கு முன்னாலயே நாடகங்கள்லே நடிச்சுட்டு இருந்த காலங்கள்லே அவர் பாத்த நாடகம் டம்பாச்சாரி. இந்த நாடகத்துலே சாமி அய்யர் என்ற நடிகர் ஒன்பதுக்கும் அதிகமான வேஷங்கள்லே நடிச்சிருந்தார்.ஒரே நாடகத்துலே இவ்வளவு வேஷமான்னு சிவாஜிக்கு ஆச்சர்யம் .அதுவும் மேடை நாடகத்துலயே.சிவாஜி ரொம்பவே இம்ப்ரஸ் ஆயிட்டார் நாடகத்தை பாத்து. அது மனசுக்குள்ளே ஒரு ஆசையா நின்னுடுச்சு. அதுக்கு பின்னாலே சினிமாக்கு வந்து 100 படம் தொடப் போற நேரம். இடையிலே கட்டபொம்மன் படத்துலே எல்லாம்  நடிச்சு உலக அளவுலே சிறந்த ந...

சவாரி பாடல்களில் சிவாஜி

படம்
குதிரை சவாரி சைக்கிள் சவாரி கார் லாரி கப்பல்  ரயில் படகு  சவாரி பாடல் காட்சிகள் அமைஞ்ச சிவாஜி  படங்களை பத்தின விபரங்களை இந்த பதிவுலே பாக்கலாம். சவாரின்னால்லே உற்சாகம்தான் .சிவாஜி விட்டு வைக்காத பாட்டுக் களம் இல்லேன்னு சொல்ற படி எல்லாவிதமான கள பாட்டுகள்லயும் சிவாஜி நடிச்சிருக்கார். ஒரு இசை கருவின்னு எடுத்துகிட்டா மிருதங்கம் நாதஸ்வரம் உடுக்கை மேளம் புல்லாங்குழல் வயலின் கிடார் ஹார்மோனியம் தபேலா டிரம்ஸ் உள்பட இன்னும் நிறைய இசைக் கருவிகளை வெச்சு நடிச்ச நடிகனா சிவாஜி தான் அதிகமா பண்ணியிருக்கார். யானை சவாரி குதிரை சவாரி ஏன் எருமை மேலே உக்காந்தும் நடிச்சிருக்கார் சிவாஜி . ஒரு நடிகன்னு சொன்னா எல்லாத்தையும் கத்துகிட்டுதான் நடிச்சாகணும் இல்லே.அதை கத்துகிட்டுதான் பண்ண முடியும்னு சொன்னா அதுலயே காலம் போயிடும். தன்னோட நடிப்பாலேயே அதை நிஜம்னு நம்ப வைக்கணும் .அதான் நடிப்பே. அதை தான் சிவாஜி செஞ்சார். அந்த வகையிலே இந்த பதிவுலே சிவாஜி செஞ்ச சவாரி பாட்டுக்களை இந்த பதிவுலே பாக்கலாம். குதிரை சவாரி பாட்டுன்னு எடுத்துகிட்டா ,மருத நாட்டு வீரன் படத்துலே வர்ற சமாதானமே தேவை பாட்டிருக்கு. படித்தால் மட...

தங்கப்பதுமை சூட்டிங் ஸ்பாட்

படம்
பழைய படங்களை பார்க்கும்போது அதில் வரும் காட்சிகளை பார்க்கும் போது இந்த காட்சி எங்கே எடுக்கப்பட்டு இருக்கும் எவ்வாறு எடுக்கப்பட்டு இருக்கும் என்ற ஒரு ஆவல் பலருக்கும் உண்டாகும். அப்படி பலரும் நினைக்கும் எண்ணத்தை நடிகர்திலகம் நடித்த ஒரு படத்திலிருந்து சொல்கிறேன். 1959 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் நடிகர் திலகம் பத்மினி நடித்த தங்கப்பதுமை .இந்த படத்தின் படப்பிடிப்பு பாபநாசத்தில் 10 நாட்கள் நடைபெற்றது. படப்பிடிப்பு 1958 ஆம்  ஆண்டு ஜூன் மாதம் 5 ம் தேதி தொடங்கி 10  நாட்கள் ஷூட்டிங் நடத்த முடிவு செய்யப்பட்டது. இப்படத்தில் வைத்தியரின் மகனாக மணிவண்ணன் கேரக்டரில் சிவாஜியும் பெரிய செல்வந்தரின் மகளாக வரும் செல்வி வேடத்தில் பத்மினியும் நடித்தார்கள்.உறையூரை களமாக வைத்து எழுதப்பட்ட கதை . கதாநாயகன் சிவாஜி நாயகி பத்மினி ஆற்றில்  சந்திக்கும்  காட்சியை எடுக்க வேண்டும்.. இந்த காட்சியை எந்த இடத்தில் எடுக்கலாம் என்று டைரக்டர் சாமி கதாசிரியர்அரு.ராமநாதன் , தயாரிப்பாளர் சோமு ஆகியோர் ஆலோசனை செய்து கொண்டிருக்கும் போது ,அங்கே வந்த NSK..மதுரம் தனக்கு தெரிந்த ஒரு இடத்தை சொன்னார்.குற்றா...

சிவாஜி பிராண்டோ

படம்
1960 வருஷம் செப்டம்பர் மாசம் சென்னை வாணி மஹால் விழாவில் நடிகர் திலகம் இப்படி பேசினார்: என்னை உலகிலேயே சிறந்த நடிகர் என்று கூறுவதை நான் விரும்பவில்லை. அமெரிக்காவில் உள்ள மார்லன் பிராண்டோ ஒருவரை தவிர வேறு நாட்டு சிறந்த நடிகர்களை பற்றி யாராவது சொல்கிறார்களா? நமக்கு மார்லன் பிராண்டோ மட்டுமே தெரியும். மற்ற நாட்டு நடிகர்களிலும் மார்லன் பிராண்டோவைப் போல பலர் இருப்பார்கள் அவர்களை எல்லாம் நினைவில் கொள்ளாமல் என்னை மட்டும் 'உலகின் சிறந்த நடிகன்  என்று கூறுவதை என்னால் ஏற்க முடியவில்லை என்று நடிகர் திலகம் பேசினார் . இப்படி நடிகர்திலகம்  பேசியதை அடுத்து பேசும் படம் இதழ் முதல்வர் என்ற தலைப்பில் அவையடக்கம் தன்னடக்கம் இரண்டும் நிரம்பிய நடிகர்திலகம்  நடிப்புலகில் இன்று முதல்வராக இருக்கிறார் அப்படின்னு ஒரு கட்டுரை வெளியிட்டுச்சு. இது 1960 அக்டோபர் இதழ்லே வெளியாச்சு. அந்தக் கட்டுரையில பல காரசாரமான விஷயங்கள் இருந்துச்சு.நடிகர் திலகம் அந்த பட்டத்துக்கு எப்படி பொருத்தமானவர் அப்படிங்குறத அந்த கட்டுரை சொன்னது . மூணு வருசத்துக்கு முன்னாலே  அதாவது 1956 லே ஒரு நாள் பேசும் படம் ஆபீசுக்கு ஒரு லெட...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற