இடுகைகள்

திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

.சிவாஜி நடிப்பின் நுணுக்கங்கள்

படம்
தமிழ் சினிமாவுல நடிப்புக்குன்னே ஒரு யூனிவர்சிட்டி இருந்தா, அது  சிவாஜி கணேசன் தான்! அவர் ஒரு கேரக்டரா வாழ்ந்துட்டுப் போனது இருக்கே... அது உலகத்துல எந்த ஆக்டரும் பண்ணாத ஒரு விஷயம். ​அவர், தனக்குப் பிடிச்ச ஸ்டைலை மட்டும் வெச்சுக்காம, ஒவ்வொரு கதை மாந்தரோட குணம், உணர்வு எல்லாத்துக்கும் ஏத்த மாதிரி, தன்னோட உடம்பு மொழி , குரல்ல, நடை, பாவனைன்னு எல்லாத்தையும் ரொம்ப நுணுக்கமா மாத்தி நடிச்சார். ​அவர் நடிப்புக்கு சாட்சி எதுன்னு கேட்டா... அவர் தன்னோட கை, கால், வாய் அசைவு, டான்ஸ், நடை, சிரிப்பு, மேக்கப்னு எல்லாத்துலயும் காட்டின அக்கறையும், உழைப்பும்தான்! முக்கியமா , உலக அளவுல வேற எந்த நடிகரும், தன்னோட கை, கால்கள்ல இவ்வளவு துல்லியமான வித்தியாசங்களைக் காட்டினதே இல்லை! ​சிவாஜி , ஒரு கேரக்டரோட ஸ்டேட்டஸ், மனநிலை, சிச்சுவேஷன் இதைப் பொறுத்து, தன்னோட உடல் மொழியை எப்படிப் பயன்படுத்தினார்னு விரிவா பார்க்கலாம் வாங்க! ​ பகுதி 1: கை கால்கள்ல அவர் கொடுத்த நடிப்பு மேஜிக்!  இதுலே  கைகளைக் கொண்டு அவர் கொடுத்த நடிப்பை முதல்லே பாக்கலாம். ​ஒரு கேரக்டர் பெரிய அந்தஸ்துல இருக்கா, இல்லையான்னு அவர் கைகளைப் பய...

film news Anandhan

படம்
 வணக்கம்! நம்ம எல்லோருக்குமே நடிகர் திலகம் சிவாஜி கணேசன்னா தெரியும். ஆனா, அவர் கூடவே நிழல் போல இருந்து, தமிழ் சினிமாவோட அத்தனை தகவல்களையும், செய்திகளையும், புகைப்படங்களையும் 50 வருஷத்துக்கும் மேல பாதுகாத்து வெச்சிருந்த ஒரு மகத்தான மனிதர் இருக்கார்... அவரைப் பத்தி எத்தனை பேருக்குத் தெரியும்? ​அவர்தான், தமிழ் திரையுலகின் *நடமாடும் கலைக்களஞ்சியம்'னு போற்றப்பட்ட பிலிம் நியூஸ் ஆனந்தன்! ​ ஆனந்தனுக்கு சினிமாமேல இருந்த காதல், சின்ன வயசுலேயே ஆரம்பிச்சிருச்சு. மத்த பிள்ளைங்க விளையாடப் போகும்போது, இவர் என்ன செஞ்சார் தெரியுமா? ஒரு கேமராவை வாங்கிட்டு, நேரா ஸ்டுடியோக்களுக்குப் போய், படப்பிடிப்புகளைப் படம் பிடிக்க ஆரம்பிச்சார். ​B.Sc. பட்டம் படிச்சு முடிச்சதுக்கு அப்புறமும், இவருக்குப் பொழுதுபோக்குன்னா அது புகைப்படம் எடுக்குறது மட்டும்தான்! ஒருநாள், 1954-ல நியூட்டோன் ஸ்டுடியோவுல 'ராஜா ராணி' படத்தோட ஷூட்டிங் நடக்குது. பலமுறை ஸ்டுடியோவுக்குப் போயிருந்தாலும், அவர் எந்த நடிகர் கிட்டயும் பேசினதே இல்லை. ​அப்படி அவர் தன்னோட கேமராவைத் தூக்கிக்கிட்டுப் போய், முதன்முதலாத் தைரியமாப் பேசி, படம் எடுத்...

விடிவெள்ளி அவுட்டோர்

படம்
1960 ஆம் வருசம் வெளியான சிவாஜி படம் விடிவெள்ளி. இந்த படத்தை ரிலீஸ் பண்ணுன தேதி ஒரு ஆச்சர்யமான விஷயம்.ஏன்னா இந்த படம் வெளிவந்தது வருசத்தோட கடைசி நாள். அதாவது வெளியான தேதி 31.12.1960.வருச கடைசி நாள்லே பெரும்பாலும் எந்த படத்தையும ரிலீஸ் பண்ண மாட்டாங்க. அந்த  ரிலீஸ் தேதியிலயும் ஒரு புதுமை படைச்ச படம் தான் விடிவெள்ளி. ஸ்ரீதர் டைரக்சன் செஞ்ச முதல் சிவாஜி படம் இது. இந்த படத்தோட சூட்டிங் சென்னைலே நடந்திருந்தாலும் படத்தோட  ரெண்டு பாடல்களுக்கான வெளிப்புற காட்சிகள் எல்லாம் பொள்ளாச்சிலே எடுத்திருப்பாங்க. பொள்ளாச்சிலே ஷுட்டிங் எடுக்க என்ன காரணம் .அது பத்தின விபரங்களை இந்த பதிவுலே பாக்கலாம். 1960 கால கட்டத்துலே எல்லாம் சிவாஜி ரொம்ப பிசியா இருந்த காலம். வெளியூர் சூட்டிங் எல்லாம் ரொம்ப கஷ்டம்.ஏன்னா ஒரு நாள்லேயே ரெண்டு மூணு பட சூட்டிங்லே நடிக்க வேண்டிய நிலையிலே சிவாஜி இருந்தாரு.அவுட்டோர் போனா பல படங்கள் சூட்டிங் பாதிப்பு ஆகும்.இந்த ஒரு காரணதுக்காகத்தானே மலைக்கள்ளன் படத்துலே கூட சிவாஜி நடிக்கலே.  இப்படி சிவாஜி பிசியா இருந்த கால கட்டத்துலே விடிவெள்ளி படத்துக்கு மட்டும் எப்படி பொள்ளாச்சி வந்...

1956:57 sivaji films

படம்
1956ல் அமரதீபம் பெண்ணின் பெருமை ராஜா ராணி ரங்கூன் ராதா நல்ல வீடு நான் பெற்ற செல்வம் நானே ராஜா வாழ்விலே ஒரு நாள் தெனாலிராமன் ஆகிய 9 படங்களில் சிவாஜி நடித்தார். அமர தீபம். வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த  அமரதீபம் மிகப்பெரிய வெற்றிப் படம் .இதன் கதை வசனத்தை ஸ்ரீதர் எழுதினார் T.பிரகாஷ்ராவ் டைரக்ட் செய்தார். சிவாஜியுடன் பத்மினியும் சாவித்திரியும் இணைந்து நடித்தனர் .கதை நடிப்பு இசை எல்லாமே சிறப்பாக இருந்ததால் இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடியது அமர தீபத்தை பின்னர் சிவாஜி கணேசன் ஹிந்தியில் அமர்தீப் என்ற பெயரில் சொந்தமாக தயாரித்தார் .அதில் தேவானந்த் பத்மினி வைஜெயந்திமாலா ஆகியோர் நடித்தார்கள் . ஜெமினி கணேசனுடன் முதல் படம் .. பெண்ணின் பெருமையில் சிவாஜியும் ஜெமினி கணேசனும் இணைந்து நடித்தார்கள். இருவரும் சேர்ந்து நடித்த முதல் படம். ஜெமினி கணேசன் அண்ணன் .சிவாஜி தம்பி.  மன நோயாளியாக இருந்து குணமடையும் குணச்சித்திர வேடம் ஜெமினிக்கு. சிவாஜிக்கு வில்லன் வேடம் .சாவித்திரி தான் கதாநாயகி. ஜெமினி கணேசனுக்கு நடிப்பதற்கு நிறைய  வாய்ப்புகள் இருந்தன . சிவாஜி முரட்டு தம்பியாக வில்லன் வேடத்தில் கொடி கட்...

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்

படம்
தொலைக்காட்சியில் சில தினங்களுக்கு முன்பு  சேனலை மாற்றிக் கொண்டே வந்தபோது ஜெயா டிவியில் தெய்வமகன் ஓடிக்கொண்டிருந்தது. ரிமோட்டை அப்படியே நிறுத்தி விட்டேன். அப்போதிருந்தே இதன் காட்சிகள் நெஞ்சை பிசைந்து கொண்டேயிருக்க இந்தபதிவு. சின்ன மகன் விஜய்  அப்பா சிவாஜியிடம் பணம் கேட்டு வரும் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. சிவாஜியின் நடிப்பை தவறாக பேசிக் கொண்டிருப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசி கொள்ளட்டும். ஓவர் ஆக்டிங்கா ,அண்டர் ஆக்டிங்கா ,அப்பர் ஆக்டிங்கா லோயர் ஆக்டிங்கா, மிடில் ஆக்டிங்கா  இன்னும் என்னென்ன இருக்கின்றதோ அப்படி எல்லாம் சொல்லிக் கொள்வோர் சொல்லிக் கொள்ளட்டும். இந்தக் காட்சி பார்த்தும் விமர்சனம் செய்பவன் எவனாவது இருக்கிறான் என்றால் அவன் சினிமா என்னவென்றே தெரியாதவன். சினிமா பார்க்கவே லாயக்கு இல்லாதவன் . கிருஷ்ணா நடித்து தெலுங்கில் எடுக்கப்பட்ட தெய்வமகன் ரீமேக்கின் இதே காட்சியைத் தான் சென்ற வாரம் ஒரு நண்பர் முகநூலில் பதிவிட்டு இருந்தார். தெய்வமகன் படத்தில் இடம்பெற்ற அதே காட்சி தான் தெலுங்கு ரீமேக்கிலும் படம் ஆக்கப்பட்டு இருந்தது.ரசிப்பதற்கு பதில் இகழ்ச்சியை  தந்த காட்சி...

ஆட்டுவித்தால் யாரொருவர்

படம்
அன்பு நண்பர்களே! தமிழ் சினிமா வரலாற்றில், சில பாடல்கள் வெறும் ஒலித் துணுக்குகளாக மட்டும் இருக்கறதில்லை; அவை நம் வாழ்வின் தத்துவப் பேராசிரியர்களாக, துயரத்தின்போது நம் தோள் கொடுக்கும் நண்பர்களாக, காலத்தை வென்ற அரிய பொக்கிஷங்களாக மாறி விடுகிறது. அப்படியான ஒரு அரிய பொக்கிஷம்தான், 1975 ஆம் ஆண்டு வெளியான 'அவன் தான் மனிதன்' திரைப்படத்தில் இடம்பெற்ற "ஆட்டுவித்தால் யார் ஒருவர்" என்ற மகத்தான பாடல். ​  நாலு சிகரம், ஒரே சகாப்தம்!  ​ஒரு பாட்டு...  இவங்க சேந்த பாட்டுன்னா சும்மாவா? அது வெறும் ஸ்கிரீன்ல ஓடுற சீன் இல்லை, நம்ம வாழ்க்கையையே கண்ணாடி மாதிரி காட்டுற ஒரு தத்துவப் பேராசிரியர்! ​1975-ல வந்த 'அவன் தான் மனிதன்' படத்துல, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஒரு பெரிய தியாகம் செஞ்சு, எல்லாரையும் நம்பி, கடைசியில தனக்குன்னு எதுவும் இல்லாம, திக்கற்ற நிலையில் உட்கார்ந்து தன் மனசுல உள்ள வேதனையை கிருஷ்ணன் கிட்ட கொட்டித் தீர்க்குற சீன் தான் இந்த "ஆட்டுவித்தால் யார் ஒருவர்" பாடல்! ​பாட்டுன்னா, சும்மா நாலு வரியைப் பாடிட்டுப் போறது இல்ல. இந்த ஒரு பாட்டுக்குள்ள, தமிழ் ...

சிவாஜி நூற்றாண்டு விழா

படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூற்றாண்டுப் பெருவிழா (2027).. ​இன்னும் இரண்டு ஆண்டுகள்! இன்னும் 730 இரவுகள் விடிந்தால், சிவாஜி கணேசன் என்ற சகாப்தத்தின் நூற்றாண்டுப் பெருவிழா!  ​2027-ல் வரும் அவரது நூற்றாண்டு விழா, வெறும் மலர் தூவி மரியாதை செலுத்தும் சடங்காக மட்டும் இருக்கக் கூடாது. அது ஒரு கலைப் பள்ளியின் தொடக்க நாளாக இருக்க வேண்டும். ​அவர் நடித்த பாத்திரங்களின் ஆழத்தை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அவரது கலைப் பங்களிப்பை உலக அரங்கில் நிலைநிறுத்தும் ஒரு பண்பாட்டுப் புரட்சியாகவும், வெகு விமர்சையான கலைத் திருவிழாவாகவும் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் பேராவல். ​சிவாஜி கலை மையம் (Acting School): அவரது நடிப்பு நுட்பங்கள், வசன உச்சரிப்பு முறைகள், பாத்திர ஆய்வுகள் ஆகியவை பாடமாக கற்றுக் கொடுக்கப்படும் சர்வதேசத் தரத்திலான நடிப்புப் பள்ளி அரசு ஆதரவுடன் நிறுவப்பட வேண்டும். ​4K டிஜிட்டல் மறுசீரமைப்பு: அவரது காலத்தால் அழியாத காவியங்களான 'கர்ணன்', 'வசந்த மாளிகை', 'திருவிளையாடல்' போன்ற பல திரைப்படங்கள் உயர்ந்த 4K தரத்தில் மறுசீரமைக்கப்பட்டு, நூற்றாண்டு விழாவை முன...

சிவாஜி வீட்டு அமைப்பு

படம்
நடிகர்திலகம் சிவாஜியின் அன்னை இல்லம் பற்றிய விபரங்களும் ,அது பற்றிய வரலாறும் பெரும்பாலானவர்களுக்கு தெரியும்.சீரும் சிறப்புமான  வரலாற்றை தாங்கிய அந்த அன்னை இல்லத்தின்  அமைப்பு எப்படி அமைந்துள்ளது என்பது பற்றிய யாருக்கும் தெரியாத தகவல்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம். அதற்கு முன்பு சுருக்கமாக சில விஷயங்கள் :  1952 மே மாதம் 1ஆம் தேதி தனது திருமணத்தை முடித்து கமலா அம்மாளுடன் சங்கலியாண்டபுரம் வீட்டில் சிறிது நாள் வாழ்ந்து ,நடிப்புத் தொழிலுக்காக   மதராஸ் வந்தார். சிவாஜி அவர்கள் மனைவியுடன் கோடம்பாக்கம் யுனைடெட் குடியிருப்பு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினார் முதன்முதலாக. பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்த  உடன் ராயப்பேட்டையில்  சிவாஜி பிலிம்ஸ் அலுவலகம் இருக்கும் வீட்டில் குடியேறினார். சிவாஜி கணேசன் மூத்தமகள் சாந்தி இந்த வீட்டில் தான் பிறந்தார் . அடுத்து இரண்டு வருடங்களில் பெசன்ட் சாலையின் பின்புறம் இருக்கும் சண்முகம் முதலி தெருவில் குடியேறினார். சிவாஜி அவர்கள் அந்த வீட்டை கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அவர்களிடம் இருந்து வாங்கினார். அதற்குப் பின்பு சென்னை மாநகர...

சிவாஜியின் பிரண்ட்ஷிப்

படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நட்பு  வட்டம் ரொம்ப பெரியது . தமிழ்நாட்டில் சிவாஜிக்கு நண்பர்கள் இல்லாத ஊரே கிடையாது. எல்லா ஊர்களிலும் நிறைய பிரபலங்கள் , விஐபிகள் சிவாஜி கணேசனுடன் நட்பு வைத்துக் கொண்டிருந்தார்கள் . அதனால நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நட்பு வட்டத்தை தமிழ்நாடு அளவில் பேச வேண்டும் என்றால் அது ஒரு நீண்ட பட்டியலாக இருக்கும் . இந்திய அளவில் சிவாஜியுடன் நெருக்கமாக இருந்த நண்பர்களைப் பற்றி இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம். சிவாஜி கணேசனும் இந்தி நடிகர் தேவானந்தும்..  தமிழில் வெற்றியடைந்த அமரதீபம் திரைப்படம் ஹிந்தியில் அமர்தீப்' என சிவாஜி புரொடக்சன்  தயாரித்தது.  அந்த படத்தின் நாயகன் நடிகர் தேவானந்த் .தொழில் ரீதியாக ஆரம்பித்த பழக்கம் இறுதி வரை மாறாத நட்பாக மாறியது. சிவாஜி கணேசனும்  லதா மங்கேஸ்கரும்..  அமர்தீப் படத்தில் பாடல் பாட வந்தவர்கள்   லதா மங்கேஷ்கர் மற்றும் அவருடைய சகோதரி ஆஷா போஸ்லே. இந்த படத்தின் மூலம்  இருவரும் சிவாஜி கணேசனுக்கு அறிமுகம் ஆனார்கள். இறுதிவரை சிவாஜி நட்பு வட்டத்தில் மிகப் பிரபலமானவர்களாக லதா மங்கேஷ்கர் குடும்பம் இரு...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற