இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜி வாங்குன முதல் பரிசு

படம்
வெளியில ராஜா வேசங்களா போட்டு நடிச்சிட்டு இருந்தாலும் அவங்களோட நெஜ வாழ்க்கையிலே  உள்ள போய் பார்த்தா தான் அவங்களோட வறுமையும் சோகமும் தெரியும்.Mr.ராதா கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை , வருமானத்தையெல்லாம் தான் நடத்திட்டு வந்த சரஸ்வதி கானசபா நாடக கம்பெனியிலே இழந்துட்டார்.MR.ராதாகிட்டே தனக்குன்னு எந்த தனிப்பட்ட சம்பளம் வாங்காம நடிச்சிட்டு வந்தார் சிவாஜி.சிவாஜிக்கு நடிக்கறதுக்கு வாய்ப்பு வேணும் .அதுதான் எல்லா நாடகத்துலேயும் சிவாஜியை இருக்க வெச்சது. ராதா நாடக கம்பெனி நொடிஞ்சு போயிட்டதாலே ,சிவாஜி கேரளாவிலே நாடகம் நடத்திட்டு வந்த கிருஷ்ணப்பிள்ளை நாடக கம்பெனியில சேந்தார். கேரளாவுலே நடிச்ச நாடகத்துலே எல்லாம் பொம்பளை வேஷத்துலே நடிக்கற வாய்ப்புத்தான் சிவாஜிக்கு கிடைச்சது.ஒரே ஒரு இடம் நம்மாரா அப்படிங்கற இடத்துலேதான் ஆண் வேஷத்துலே  நடிக்கறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. அந்த நாடகத்துலேயும் ராஜ பார்ட் வேஷம் எல்லாம் இல்லே .அது ஒரு திருடன் வேஷம்.ராஜபார்ட்டா நடிச்ச நடிகர்களே கொடுக்காத நடிப்பை அந்த திருடன் வேஷத்துலே சிவாஜி பிரமாதப்படுத்துனாரு. தோள்களையெல்லாம் நல்லா முறுக்கி காட்டி ,கண்ணுலே காட்டுன மிரட்டலான...

தெய்வமகன் ஓப்பனிங் சீன்

படம்
எனக்கு புடிச்ச ஓபனிங் சீன் தெய்வமகன்  ஓபனிங் சீன்.கதாநாயகனோட ஓபனிங்சீனை பல விதமா பல படத்துலே வித்தியாசமா காமிச்சிருக்காங்க.ஆனா தெய்வமகன்லே வர்ற , கதாநாயகனை காமிக்கிற ஓபனிங் சீன் மத்த எல்லா படத்துலேயும் இருந்து ரொம்ப டிபரெண்டான ஒண்ணு. படம் ஆரம்பிச்சு 25 ஷாட்டுலேயும் கதா நாயகன் இருப்பார்.ஆனா அந்த 25 வது ஷாட்டுலேதான் முகத்தையே காட்டுவாங்க.இப்படி ஒரு காட்சி எந்த தமிழ் படத்துலேயும் இருந்திருக்க வாய்ப்பில்லே.. ஷாட் பை ஷாட்டா அதை பாக்கலாம். படம் ஆரம்பிச்சதும் பெரிய பில்டிங்கை காட்டுவாங்க.ரெண்டு ஷாட்டா பிரிச்சு கீழே இருந்து மேலேயும், சைட் வைட்டாவும் அதாவது  நீள அகலமாகவும் அத காட்டுவாங்க. இதுக்கு அடுத்த ஷாட்டுலே இருந்து தெய்வமகன் சங்கர் Introduction. காட்சி 1 ஷாட்1 முதல் காட்சி முதல்ஷாட். ஆபீஸ் ரூமை காமிப்பாங்க. நடிகர்திலகம் இடது கையை தூக்கி டைம் பார்ப்பார்.அதே இடது கை.இப்ப ரைட் சைடிலே கட் ஷாட்டா காமிப்பாங்க.5 செகண்ட்க்குள்ளே இந்த ரெண்டு  ஷாட்டையும் காமிச்சுருவாங்க.இந்த ஷாட்டுலே எந்த டயலாக்கும் இருக்காது. 2 வது ஷாட்: கதவு தட்டற சத்தம்.ஸ்டெனோ கதவை திறந்து உள்ள வர்ற ஷாட்டு.இப்ப சிவா...

சிவாஜி பத்மினியின் 100 நாள் திரைப்படங்கள்

படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பத்மினி ஜோடியாக நடித்து 100 நாள் ஓடிய திரைப்படங்களைப் பற்றிய விவரங்களை இந்த பதிவில்  பார்க்கலாம். சிவாஜி கணேசன் பத்மினி சேர்ந்து நடித்த  திரைப்படங்கள். பணம் அன்பு இல்லறஜோதி கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி தூக்கு தூக்கி எதிர்பாராதது  காவேரி கோடீஸ்வரன் மங்கையர் திலகம் ராஜா ராணி  அமர தீபம் புதையல்  பாக்கியவதி உத்தம புத்திரன்  தங்கப்பதுமை மரகதம் தெய்வப்பிறவி புனர்ஜென்மம்  ஸ்ரீவள்ளி  செந்தாமரை  நான் வணங்கும் தெய்வம் பேசும் தெய்வம் பாலாடை  திருவருட்செல்வர் இருமலர்கள் திருமால் பெருமை தில்லானா மோகனாம்பாள் விளையாட்டு பிள்ளை வியட்நாம் வீடு இரு துருவம் குலமா குணமா தேனும்  பாலும் தாய்க்கு ஒரு தாலாட்டு  லட்சுமி வந்தாச்சு.  என்று கிட்டத்தட்ட 35 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்கள். மேலே சொன்ன திரைப்படங்களில்  13/4/1954ல் வெளிவந்த கல்யாணம் பண்ணியும் பிரம்மச்மசாரி 100 நாள் ஓடி வெற்றி கண்ட திரைப்படம் ஆகும் .இது பந்துலு தயாரித்த திரைப்படம் ஆகும் .இந்தப் படத்தை டைரக்ட் செய்தவர்  பா.நீலகண்டன் .சிவாஜி நடித்த ...

இந்த இயக்குனர்களுக்கு புகழ் பெற்றுத்தந்த படங்கள்

படம்
கிருஷ்ணன் பஞ்சு ,பீம்சிங் , L.V.பிரசாத் ,பந்துலு , T.பிரகாஷ்ராவ் ,A.P.நாகராஜன், AC திருலோசந்தர் ,P.மாதவன், ஸ்ரீதர், CV.ராஜேந்திரன், தாதாமிராசி, வியட்நாம் வீடு சுந்தரம் ,K.S.பிரகாஷ்ராவ்.. K.விஜயன், பாரதிராஜா ஆகிய இந்த டைரக்டர்கள் சிவாஜியை வைத்து பல படங்கள் இயக்கி இருந்தாலும் அந்தப் படங்களில் கோபுர கலசம் போல மின்னிய ஓரே ஒரு படத்தை இதில் பார்க்கலாம். நடிகர் திலகத்தை இயக்கிய முதல் இயக்குனரான கிருஷ்ணன் பஞ்சு பல சிவாஜி படங்களை இயக்கி இருந்தாலும் நன்றி மறவாத சிவாஜியின் மகத்தான படமாய் பராசக்தியை சொல்லலாம்.கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய உயர்ந்தமனிதன் இல்லையா தெய்வப்பிறவி இல்லையா என பல இருந்தாலும் திரையுலகை திக்கு முக்காட வைத்த பராசக்தியை சொல்லலாம்.நாணயத்தின் இரு பக்கம் போலே குணசேரன் கேரக்டர்.ஒரு புறம் பைத்தியக்கார வேஷம் மறுபுறம் சமூக கொடுமைகளை சாடும் இளைஞன் என சிவாஜி இரண்டாக குணசேசரனுக்கு சாவா உயிரை கொடுத்த படம்.A சென்டரில் அடித்த ஹிட் B,C சென்டரிலும் புயலை கிளப்பிய படமாயிற்றே.சிவாஜியின் குரலை கேட்கவே தியேட்டர்கள் நிரம்பி வழிந்த படமாயிற்றே . கடைசி  வரை மாறாத இரட்டையர்களான கிருஷ்ணன் பஞ்சு தமிழ் சின...

சிவாஜியுடன் நடிகைகள் நடித்த முதல் படங்கள்

படம்
 சிவாஜியுடன் நடிகைகள்  நடித்த முதல் பட விபரங்கள்: பண்டரிபாய்.சிவாஜியுடன் நடித்த முதல் படமே சிவாஜியின் முதல் படமான பராசக்தி.இந்த படம் 250 நாட்கள் ஓடிய திரைப்படமாகும். பத்மினி.சிவாஜியுடன் நடித்த முதல் படம் பணம்.இந்த படத்தை டைரக்ட் செய்தவர் N.S.கிருஷ்ணன். நடிகை வசந்தா சிவாஜியுடன் நடித்த முதல்படம் பூங்கோதை. இதில் நாகேஸ்வரராவும் சிவாஜியுடன் நடித்திருப்பார். நடிகை கிரிஜா நடித்த முதல் படம் திரும்பிப்பார்.தமிழ் சினிமாவில் டிரைலர் காட்டப்பட்ட முதல் திரைப்படம் என்ற சிறப்பு பெற்றது.  நடிகை மைனாவதி  சிவாஜியுடன் நடித்த முதல் படம் கண்கள் .இவர் நடிகை பண்டரிபாயின் சகோதரி ஆவார். நடிகை சாவித்திரி சிவாஜியுடன் நடித்த முதல் படம் பெம்புடு கொடுகு என்ற  தெலுங்கு திரைப்படம் ஆகும் .இந்தப் படத்தின் இயக்குனர் எல் வி பிரசாத். நடிகை T.R.ராஜகுமாரி சிவாஜியுடன் நடித்த முதல் படம் மனோகரா.மூன்று மொழிகளில் வெளியான படம் இது. நடிகை மாதுரி தேவி சிவாஜியுடன் நடித்த முதல் திரைப்படம் மனிதனும் மிருகமும்.சிவாஜி வக்கீல் வேடத்தில் தோன்றிய முதல்  படம் . நடிகை பி எஸ் சரோஜா சிவாஜியின் நடித்த முதல் திரைப்படம...

சிவாஜியின் சவால் திரைப்படங்கள்

படம்
திரைப்படங்களில் நடிகர்கள் சவால் விட்டு நடிக்கும் திரைப்படங்கள் சுவாராஸ்யமானவை.சவாலில் கதாநாயகன் தான் பெரும்பாலும் ஜெயிப்பார் என்பது தமிழ் சினிமாக்களில் கண்கூடு.இருந்தாலும் எப்படி ஜெயிப்பார் என்பதை பார்ப்பதில் ஒரு ஆவல் உண்டு.விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. நடிகர்திலகம் சவால் விட்டு நடித்த திரைப்படங்களை இதில் ஒரு கண்ணோட்டமாக பார்க்கலாம்.எந்த படத்தை முதலில் சொல்வது? திரைப்பட பெயரிலேயே சவாலை வைத்திருக்கும் சவாலே சமாளி படத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். சவாலே சமாளி.. எலெக்ஷன் தர்பார்தான் இதில் ஹைலைட். கிராமசபை தலைவருக்கு போட்டியிடுவதில் ஆரம்பிக்கும் வேடிக்கை.சிவாஜி தோற்றால் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று பகவதி தரப்பில் சொல்லப்பட ,பதிலுக்கு சிவாஜி கேட்கும் கேள்விதான் சவாலே சமாளி படத்தின் ஆணிவேர்.நாகேஷின் கைங்கர்யத்தால் , ஜெயலலிதாவை சிவாஜிக்கு திருமணம் செய்து தரவேண்டும் என்ற சவால். சவாலுக்கு உடன்படாத T.K.பகவதியை நாகேஷ் ப்ரெயின்வாஸ் செய்ய , பகவதியை அரைமனதுடன் சம்மதிக்க வைக்கிறது. சவாலின் ரிசல்ட் என்ன? அதுதான் பகவதியின் தலையில் இடி.இந்த சவாலை மறக்க முடியுமா? ஜெயலலிதாவி...

பத்மினிக்கு சிவாஜி கொடுத்த பரிசு

படம்
சிவாஜி பத்மினி  சிவாஜி நடிக்கிறதுலே ராஜா பத்மினி ஆடறதுலே ராணி. இவங்க நடிச்ச ஒருபடப்பெயர் கூட ராஜாராணி. ஜோடிப் பொருத்தத்துலே  மட்டுமில்லே இவங்களோட தனித் திறமைக்கு  கூட இணை யாருமில்லே. அதனாலேதான், ஜோடிப்பொருத்தத்துலே இவங்களுக்கு இணை யாருமில்லேன்னு சொல்வாங்க. பத்மினி தன்னோட திருமணத்துக்கு முன்னாலே கடைசியா நடிச்ச படமும் சிவாஜியோட நடிச்ச செந்தாமரை  படம்தான். கேரள சகோதரி நடிகைகள்ன்னு சொல்ற லலிதா பத்மினி ராகினி மூணு பேரும் ஒரே ஒரு ஹீரோவோட ஜோடியா நடிச்சிருக்காங்க அப்படின்னு சொன்னா அது சிவாஜிதான். ராகினிக்கு கல்யாணம் நடந்தப்போ சிவாஜி காலுல அடிபட்டு எழுந்திருச்சி நடக்க முடியாத நிலைமையிலே இருந்தார்.அந்த நிலையிலும் ரெண்டு பேர் சிவாஜியை தூக்கிட்டு வந்த நிலையிலே சிவாஜி ராகினியோட கல்யயாணத்துக்கு வந்து கலந்துகிட்டார். கல்யாணத்துக்கு பின்னாலே சில படங்களில் நடிச்சு இனி சினிமா வேண்டாம்னு நடிக்காம இருந்த பத்மினி அதுக்கு பின்னாலே நடிக்க ஆரம்பிச்சதுக்கு காரணம் தில்லானா மோகனாம்பாள்.இந்த பட கதையை பத்மினி கிட்டசொன்ன A.P.நாகராஜன் சிவாஜி சிக்கலார்னா மோகனாம்பாள் பத்மினிதான்.நீங்க நடிக்கலேன்னா இ...

சிவாஜிகணேசன் கே ஆர் விஜயா

படம்
என்னங்க? என்னங்க இதெல்லாம்? இப்படி மௌனமா இருந்தே எல்லாத்தையும் செஞ்சு முடிச்சிட்டீங்களேன்னு தங்கப்பதக்கத்துலே கே ஆர் விஜயா கதறுன நடிப்பு ,சிவாஜி கே ஆர் விஜயான்னு நெனைக்கறப்போ நெஞ்சுல படமா ஓடும்.அதுக்கு காரணம் விஜயாவோட அந்த உணர்ச்சிகரமான நடிப்புத்தான்.அது நடிப்பா கூட தெரியாது.நிஜமா தெரியும். அது தான் கே ஆர் விஜயா. பத்மினி தேவிகா வாணிஸ்ரீ இன்னும் பல பேர் ரொம்ப சிவாஜிக்கு பொருத்தம்னு சொல்லற மாதிரி படங்கள் அமைஞ்சிருக்கு.ரொம்ப ஆதர்ஷணமான புருஷ தம்பதிகள் ஜோடின்னு சொல்லறப்போ சிவாஜி கே ஆர் விஜயா ஜோடிக்கு இணையா வேற யாரையும் சொல்ல முடியாது. கை கொடுத்த தெய்வம் ...  கே ஆர் விஜயா சிவாஜியோட சேந்து நடிச்ச முதல் படம்.ஆனா சிவாஜிக்கு ஜோடியில்லே. பஞ்சாபி பெண்ணா நடிச்சிருப்பாங்க  கேஆர் விஜயா .வட நாட்டு  உடையிலே வர்ற கே ஆர் விஜயாவுக்கு சிவாஜி  தமிழ் பொண்ணு மாதிரி எப்படி இருக்கணும்னு சொல்லித் தர்ற மாதிரி காட்சி வரும்.இந்த காட்சியிலே நடிச்ச கே ஆர் விஜயா அந்த அனுபவத்தை பத்தி சொல்லியிருக்காங்க. நான் பெண்ணா இருந்தாலும் புடவை கட்டி நடிக்கற மாதிரி காட்சியிலே எப்படி நடிக்கணும்னு சிவாஜிதான் செஞ்சு...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற