இடுகைகள்

திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

படம்
கடல்புறா - இளைய பல்லவனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! ஒரு சுவையான பார்வை ​சாண்டில்யனின் புகழ்பெற்ற சரித்திர நாவலான  கடல் புறாவின் நாயகன் இளைய பல்லவன் (கருணாகரப் பல்லவன்) கதாபாத்திரத்திற்கு, நடிப்புக்கே இலக்கணம் வகுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தால் எப்படியிருக்கும்? இந்தக் கற்பனைக்கே ஒரு தனிச் சுவை இருக்கிறது. அந்த அற்புதக் கூட்டணியைப் பற்றி ஒரு சுவையான பதிவாக பார்க்கலாம். ​  நடிப்புச் சக்கரவர்த்திக்கு ஏற்ற களம்! ​"கடல்புறா" நாவல், சாகசம், காதல், ராஜதந்திரம், கடற்போர் எனப் பல அம்சங்கள் நிறைந்த பிரம்மாண்டமான படைப்பு. இளம் படைத்தலைவனாகவும், கடற்பயணம் மேற்கொண்டு பல சவால்களைச் சந்திப்பவனாகவும், இரண்டு பெண்களின் காதலுக்குரியவனாகவும் இளைய பல்லவன் விளங்குகிறான்.  கருணாகரப் பல்லவன், பின்னாளைய குலோத்துங்க சோழனின் தோழன் அநபாயனுக்குத் துணை நிற்கும் இளைய பல்லவன் கதாபாத்திரத்தை சிவாஜியின் நடிப்புப் பரிமாணங்கள் சரித்திரத்தை சாதனையாக்கி இருக்கும்.  வீர சிவாஜியாக, கட்டபொம்மனாக, கர்ணனாக என அவர் ஏற்று நடித்த பாத்திரங்கள் இன்றும் அழியாப் புகழ் பெற்றவை.  ​ கடற்பயணமும் ...

பொன்னொன்று கண்டேன்

படம்
இன்னைக்கு நாம் பார்க்கப் போகும் பாட்டு வெறும் டியூன் மட்டுமல்ல, அது ஒரு கால இயந்திரம் (டைம் மெஷின்). ​தமிழ் இசை பல ராகங்களைக் கடந்து வந்திருக்கிறது. ஆனால், சில பாடல்கள் மட்டும் இருக்கும். அது காலம், தலைமுறை என எல்லையையும் தாண்டி, நம் மனசுக்குள்ளே ஒரு தங்கக் கோவில் கட்டிவிடும். அப்படி காலத்தால் அழிக்க முடியாத இரண்டு ஜாம்பவான்கள், ஒன்று சேர்ந்து, ஒரு பெண்ணின் அழகையும், நண்பர்கள் போல் பழகிய இரண்டு சகோதரர்களின் ஆழமான நட்பையும், உச்சகட்ட தத்துவத்தையும் பேசிய ஒரு பாட்டுதான் 1962-ல் வந்த "படித்தால் மட்டும் போதுமா?" திரைப்படத்தில் இடம்பெற்ற "பொன் ஒன்று கண்டேன்". இந்த இனிமையான பாடலின் ராகம் பொதுவாக பிருந்தாவன சாரங்கா என்று அறியப்படுகிறது. இது தமிழ் இசையின் இரண்டு மாபெரும் பாடகர்கள் இணைந்து பாடிய, நண்பர்களின் உரையாடல் போன்ற ஒரு சிறப்பு மிக்கப் பாடலாகும். ​டி.எம்.எஸ் குரல்: கம்பீரமாகவும், ஆழமாகவும் இருக்கும். இது சிவாஜி கணேசனின் பாத்திரத்திற்குச் சரியாகப் பொருந்தும். ​பி.பி. ஸ்ரீனிவாஸ் குரல்: தண்ணீர் போல மென்மையாகவும், இனிமையாகவும், கனிவுடனும் இருக்கும். இது கே. பாலாஜியின் அமை...

சிவாஜி கணேசன் ராணி எலிசபெத்

படம்
நடிகர் திலகத்துக்கு  ராஜ மரியாதை: ராணி எலிசபெத் உடனான சிவாஜி கணேசனின் சந்திப்பு!  ​நடிகர்திலகம் சிவாஜி கணேசன் தமிழ் திரையுலகில் மட்டுமல்ல, உலகெங்கிலும் பரந்த செல்வாக்கைப் பெற்ற ஒரே ஒரு தனித்துவமான கலைஞராவார். அவரது புகழும், நாகரீகமான அணுகுமுறையும், தேசப்பற்றும் எல்லைகளைத் தாண்டி ஒலித்தது. இதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணமாக, 1961 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் ஆகியோர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, அவர்களைச் சந்திக்கும் அரிய வாய்ப்பு இங்கே இந்தியாவில் சிவாஜி கணேசனுக்கு மட்டுமே கிடைத்தது. ​இந்தச் சந்திப்பு எப்படி நிகழ்ந்தது? சிவாஜி கணேசன் எப்படி அந்த அரிய VIP பட்டியலில் இடம்பிடித்தார்? பார்ப்போம். ​ இங்கிலாந்து தூதரகத்தில் இருந்து அழைப்பு: ​1961 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இங்கிலாந்தின் ஹை கமிஷனர் 'டேனியல் டே' என்பவரிடம் இருந்து சிவாஜி கணேசனின் இல்லமான 'அன்னை இல்லத்திற்கு' ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் சிவாஜியின் தம்பி சண்முகத்தை உடனடியாக வந்து தன்னைச் சந்திக்குமாறு அழைத்தார். ​சரியாகப் பகல் 12 மண...

ஜெனரல் சக்கரவர்த்தி

படம்
ஹேய் மக்களே! எப்படி இருக்கீங்க? ​இன்னைக்கு நாம பார்க்கப் போறது... நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சாரோட ஒன் ஆஃப் தி மோஸ்ட் எமோஷனல் அண்ட் கௌரவமான திரைப்படம்... 'ஜெனரல் சக்கரவர்த்தி' (1978)! இந்தப் படத்துக்கு  ஜெனரல் சக்கரவர்த்தி அப்படின்னு ஏன் தலைப்பு வச்சாங்கன்னு  தெரியுமா நண்பர்களே " "ஜெனரல்" ங்கறது இராணுவத்திலே பெரிய பதவியைக் குறிக்கும். கதைப்படி ஹீரோ ஒரு ராணுவஅதிகாரி . "சக்கரவர்த்தி"ங்கறது சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்பவரை  குறிக்கும்.  சிவாஜி நடிப்புலே சக்கரவர்த்தி.அதனாலே  கதைக்கு  பொருந்தற மாதிரியும் ,நடிகர்திலகத்துக்கும் கௌரவம் செய்யற மாதிரியும் இருக்கணும் அப்படிங்கறதுக்காக  இத்திரைப்படத்தோட  தலைப்பை  ஜெனரல் சக்கரவர்த்தின்னு வெச்சாங்க.  ஒரு வலிமையான மற்றும் சக்திவாஞ்ச கதாபாத்திரத்தைக் குறிக்கவே இப்படி தலைப்பு.  தலைப்பு: கௌரவம் VS குடும்ப ரகசியம்! ​நம்ம சிவாஜி சாரோட ஒரு சில படங்கள்ல, அவருடைய கம்பீரம் வேற லெவல்ல இருக்கும். அந்த லிஸ்ட்ல கண்டிப்பா இந்தப் படத்துக்கு ஒரு இடம் இருக்கு! ஜெனரல் சக்கரவர்த்தியா அவர் போட்ட  கெட்டப்பும், ...

மனோகரா

படம்
1954 ஆம் வருசம் சிவாஜிகணேசன் நடிச்சு வெளிவந்த படம் மனோகரா. சிவாஜி நடிக்க வந்து ரெண்டாவது வருசம் வெளியான படம் இது. இந்த பட வசனம் எவ்வளவு பிரபலமாச்சுதுன்னு எல்லாருக்கும் தெரியும். சிவாஜி சினிமாலே நடிச்ச முதல் சரித்திர கற்பனை படம் இது. தமிழ்லே வசனம் பேசி நடிச்சது ஒரு சிறப்புன்னா அதை விட ஒரு ஆச்சர்ய சாதனையா இன்னொரு விஷயமும் இருக்கு. இது அதிகமா யாருக்கும் தெரியாத விஷயம். மனோகரா படத்தோட டைரக்டர் L.V.பிரசாத்.இந்த படத்தை இவர் தமிழ் தெலுங்கு இந்தின்னு மூணு மொழிலே படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணுனார்.அதனாலே இந்த படத்தை 1954 லிலேயே வெளியான பான் இந்தியா படம்னு சொல்லலாம். மனோகரா படத்துலே தர்பார் வசன காட்சி தமிழ் சினிமாலே ஒரு புயல் போலே அமைஞ்ச காட்சி.சிவாஜியை சங்கிலியாலே கட்டி இழுத்து அரச சபைக்கு இழுத்து வர்ற காட்சி இருக்கும்.  படத்துலே ரொம்ப முக்கியமான காட்சி இது. இந்த காட்சிக்கான படப்பிடிப்பை ஷூட்டிங் பண்ண பிரசாத்தும் யூனிட்டும் தயாரா இருக்காங்க. இந்த காட்சிலே சிவாஜி மட்டும் இல்லாமே மன்னர் புருசோத்தமரா  நடிச்ச சதாசிவராவ் , TR.ராஜகுமாரி ,அமைச்சர் சத்யசீலன் கேரக்டர்  , ஜாவர்சீதாராமன் ,SSR க...

sivajiganesan and AS.பிரகாசம்

படம்
1978 ஆம் வருசம் .. அந்தமான் காதலி படத்தை எடுக்க யூனிட் எல்லாத்தையும் அழைச்சுக்கிட்டு  முக்தா சீனிவாசன் அந்தமான் தீவுக்கு போனார். நடிகர் திலகம் சிவாஜி மனைவி கமலாம்மாவை கூட கூட்டிட்டு போனார். அவங்க பிரயாணம் செஞ்ச கப்பலோட பேரு ஹர்ஷவர்த்தனா. ஒரு பெரிய நட்சத்திர ஓட்டல் கடலில் நீந்தி போற மாதிரி அந்தக் கப்பலோட அமைப்பு இருந்துச்சி. அந்தப் படத்தோட வசனகர்த்தா பேராசிரியர் ஏஎஸ் பிரகாசம். கப்பல் போயிட்டு இருக்கு. சிவாஜி மேல் தளத்துலே இருந்து கடலை ரசிச்சு பார்த்துட்டு இருக்கிறார். சிவாஜி கூடவே பிரகாசமும் இருக்கிறார். அப்ப சிவாஜி சொன்னார். 'அந்தமானுக்கு தியாகிகள் கைதிகளாக போனாங்க. இந்த திரைப்படக் குழு காதலிக்கப் போகுது '. அந்தமானுக்கு போன ரொம்ப தியாகிகள் நாடு திரும்பாமலே அங்கேயே இறந்து போன பல உருக்கமான நினைவுகளை சிவாஜி அவர் கிட்ட அப்போ பகிர்ந்துகிட்டார் . அந்தமான் காதலி படத்துக்கு சூட்டிங்குக்காக சிவாஜி அந்தமான் வர்றார் அப்படிங்கிற செய்தி அந்தமான் தமிழர்கள் கிட்ட பரவியிருந்துச்சு.அந்தமான் துறைமுகம் போர்ட் பிளேயர் போய் சேந்தது கப்பல். அந்தமான் தீவுகள்லே இருந்த ஏராளமான தமிழ்மக்கள் திரண்டு வந்து...

சிவாஜியின் நடைகள்

படம்
மண்ணைத் தொட்டு வணங்கிச் செல்லும் ராஜநடை! ​சினிமாவில் ஒரு நடிகர், ஒரு கதாபாத்திரம் என்றால், அதில் உணர்வு இருக்கும்; வசனம் இருக்கும்; நடிப்பு இருக்கும். ஆனால், தான் நடந்து வரும் நடையிலேயே அத்தனை உணர்வுகளையும், அத்தனை அர்த்தங்களையும் பொதிந்து வைத்தவர் என்றால், அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவரால் மட்டுமே சாத்தியமானது! ​ வேறெந்த நடிகரின் நடையையும் இத்தனை உன்னிப்பாக, இத்தனை வியப்புடன் நாம் பார்த்திருக்க மாட்டோம். மற்றவர்கள் நடிப்பை மட்டும் காட்டினார்கள்; ஆனால் சிவாஜி, நடிப்பைத் தாண்டி, வெறும் தன் கால்களின் அசைவாலேயே ரசிகர்களின் இதயங்களை அதிரச் செய்தவர். ​அத்தனை நடைகளும் ஒருவருக்கே சொந்தம்! ​சிவாஜியின் நடையைப் பற்றிப் பேசத் தொடங்கினால், அது முடிவே இல்லாத ஒரு பயணமாக நீளும். ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஒரு தனி நடையை அவர் கையாண்ட விதம், நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ​கந்தன் கருணையில் வீரபாகுத் தேவன் வரும் நடையை இன்றுவரை நம்மால் மறக்க முடியாது. அந்த கம்பீரமும், நடையில் அவர் காட்டும் வேகமும், "எப்படா இந்தக் காட்சி வரும்?" என்று ரசிகர்களை ஏங்க வை...

சிவாஜி கணேசன் மனோரமா

படம்
இவங்க கூட நடிக்கறப்போ ஜாக்கிரதையா இருக்கணும். இப்படி நடிகர்திலகம் சொன்னது நடிகைகள்லே ரெண்டு பேர்.ஒருத்தர் பானுமதி. இன்னொருத்தர் மனோரமா. மனோரமாவை சிவாஜி 'மனோ'ன்னு கூப்பிடுவார்.  சிவாஜி வீட்டு எதிர் வீதிலே பக்கந்தான் மனோரமா வீடும் இருந்துச்சு. சிவாஜியை மனோரமா முதன்முதலா சந்திச்சது எப்போன்னா ... 1954 ஆம் வருசம் சிவாஜி எதிர்பாராதது படத்துலே நடிச்சுட்டு இருந்தார்.மனோரமா அப்போ வைரம் நாடக சபா நாடகத்துலே நடிச்சுட்டு இருந்தார்.அப்போ நடந்த ஒரு  நாடகத்துக்கு தலை தாங்குனவர் சிவாஜி.இந்த நாடகம் திண்டிவனத்துலே நடந்துட்டு இருந்துச்சு. மனோரமா அந்த நாடகத்துலேயே ' டபுள் ஆக்ட்'பண்ணினார்.அந்த காலகட்டத்துலே அஞ்சலிதேவி பெரிய ஹீரோயினா இருந்தார்.அவங்களை உதாரணமா வெச்சு ,அஞ்சலிதேவி மாதிரி நடிச்சாங்கன்னு  பாராட்டுனார் சிவாஜி. மனோரமாவுக்கு ரொம்ப சந்தோசம்.மனோரமா சிவாஜியை   முதன்முதலா சந்திச்சது இந்த நேரத்துலேதான். சிவாஜியோட மனோரமா நடிச்ச முதல் படம்னா ஜீவபூமிதான்.ஆனா அந்த படம் பாதிலே நின்னு போச்சு.அந்த படத்துலே வொர்க் பண்ணியிருந்தார் A.P.நாகராஜன். அந்த நேரத்துலேயே சிவாஜி பாவை விளக்கு படத்துலய...

சிவாஜியின் இந்த ரீமேக் படங்கள்

படம்
எந்த இந்தி படங்கள் நடிகர்திலகம்  நடிக்க தமிழில் ரீமேக்செய்யப்பட்டது என்கிறஇதுவரை யாரும் பதிவிடாத விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். 1.முதலில் தாகேஜ் என்ற இந்திப்படம்.இதில் நடித்தவர்கபிரிதிவி ராஜ்கபூர் ,ஜெயஸ்ரீ ,கரண் தவான் ,லலிதா பவார்.இந்த படம் 1950 ல் வெளியான படம்.தமிழில் இது பொம்மை கல்யாணம் என்ற பெயரில் நடிகர்திலகம் நடிக்க உருவாக்கப்பட்டது. படத்தின் டைட்டில் கூட இந்தி படத்தில் வருவது போலவே ,அதாவது கொலு பொம்மைகள் வரிசையாக வருவது போலேவே தமிழிலும் இடம் பெற்றது. வரதட்சணை கொடுமையை மையமாக வைத்து  உருவான இப்படத்தில் நடிகர்திலகத்துடன் ஜமுனா மைனாவதி நாகையா ரங்காராவ் சாந்தகுமாரியும் நடித்தார்கள். இது தெலுங்கிலும் உருவான திரைப்படம்.படப்பெயர் பொம்மளபெள்ளி. 2.1952 ல் வெளியான இந்தி படம் தாக். திலீப்குமார் லலிதாபவார் நிம்மி ஆகியோர் நடித்த படம் இது .தமிழில் இது புனர்ஜென்மம் என்ற பெயரில் தயாரானது.புனர்ஜென்மம் படத்தில் முதல் காட்சியிலேயே சிவாஜி குடித்து விட்டு குப்பை கூளங்களில் படுத்து கிடப்பது போல காட்சி இருக்கும் ஆனால் இந்தியில் அப்படி தொடங்காது.சிவாஜி பத்மினி காண்ணாம்பா நடித்த நடித்தார்கள...

97 bday

படம்
சிவாஜியோட நடையழகை பாத்து யாரு தான் மயங்கலே.300 படம் நடிச்சாரு. அவரோட நடை ஸ்டைலை இதுக்கு மேலே எப்படி சொல்லறது.ஒரு ஆராய்ச்சியாளர் சொன்னது இது.ரெண்டு காலுலே 300  நடையை காட்டுனவர்னு சிவாஜி நடையை சொன்னார். கோல்ப் விளையாட்டெல்லாம் சிவாஜிக்கு விளையாண்டு பழக்கமா இருக்கு. ?கோல்ப் விளையாடறவங்களே அப்படி ஒரு ஷாட் பிரசண்டேசன் கொடுப்பாங்களான்னு தெரியலே. கௌரவம் படத்துலே பாருங்க.கோல்ப் ஸ்டிக்கை தூக்கி விசிறி அடிப்பார் பாருங்க. அந்த ஷாட்டுலே அப்படி ஒரு ஸ்டைல். ஆனா படத்துலே இது இருபது செகண்ட் கூட வராத காட்சி. ஏழு  சிவாஜியை ஒரே பிரேமுலே காட்டணும் நவராத்திரி க்ளைமேக்ஸ் காட்சிலே .படம் முழுதும் நடிச்சது வேற.ஒவ்வொரு கேரக்டருக்கும் வேற வேற நடை பாடி லாங்குவேஜ்.ஆனா மொத்தப்படத்தையும் முடிச்ச பின்னாலே அந்த க்ளைமேக்ஸ் காட்சி எடுத்தாகணும்.ஒவ்வொரு கேரக்டரா டிரஸ் மேக்கப் மாத்தி மாத்தி வந்து நடிச்சாகணும்.அந்த காட்சிலே ஒவ்வொரு வேஷமும் நடந்து வர்றப்போ படத்துலே முதல்லே பண்ணுன கேரக்டருக்கு என்ன நடை காட்டியிருப்பாரோ ,என்ன பாடி லாங்குவேஜ் காட்டி செஞ்சிருப்பாரோ அதை அப்படியே மாறாமே அந்த நாலஞ்சு செகண்ட் வர்ற காட்சிக்க...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற