இடுகைகள்

ஆகஸ்ட், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

பெண் வேசம் போட்ட சிவாஜி

படம்
அந்தக்கால பட உலகத்துலே வில்லாதி வில்லன்களாகவும் ,பிரபல கதாநாயகர்களாகவும் காமெடி மேதைகளாகவும்  விளங்குன பழைய நாடக நடிகர்களில் நூற்றுக்கு 99 பேர் அவங்களோட நாடக நாட்கள்லே  'அயன் ஸ்திரீ பார்ட் ' வேஷம் போட்டவங்க தான் .இந்த அயன் ஸ்திரீ பார்ட்ங்கற வார்த்தை இந்த கால இளைய சமுதாயத்துக்கு புதுசா தெரியலாம். நாடகத்துலே பெண் வேஷம் போட்டு நடிக்கற ஆண் நடிகர்களைத்தான் இப்படி சொல்வாங்க. அந்தகாலத்துலே நாடகத்துலே நடிக்க பெண் நடிகைகள் கிடைக்கறது கஷ்டம் .அதனாலே ஆண் நடிகர்களே பெண் வேஷத்தை பொட்டு நடிச்சாங்க. இப்படி நடிச்சவங்களைத்தான் ',ஸ்திரீ அயன் பார்ட்டு'ன்னு சொல்வாங்க. சினிமா உலகத்துலே பெரிய நடிப்பு மேதையான நடிகர்திலகம் சிவாஜி  கூட அயன் ஸ்திரீ பார்ட் போட்டவர்தான்.சினிமா பீல்டுக்கு வந்து பல வருஷங்கள் ஆன பின்னாலயும் ,அயன் ஸ்தீரி பார்ட் வேஷம் அதிகமா போட்டு நடிச்சதாலே என்னவோ அவரோட அங்க அசைவுகள்லே பெண்மையின் சாயல் கலந்து இருந்துச்சு.இது ஒரு அலாதியான கவர்ச்சியை கொடுக்கற மாதிரி இருக்கும். பெரிய உச்சத்துக்கு போன கதாநாயகர்கள்லே அதிகமா பெண் வேஷம் போட்ட நாடக நடிகர் சிவாஜிதான். சிவாஜி நாடகங்கள்லே பெண் ...

பாலும் பழமும்

படம்
1961 ஆம் வருசம். ஒரு  வருசத்துலே எவ்வளவு வெரைட்டியா படங்களை கொடுத்திருக்கார் சிவாஜி .சிவாஜிங்கறதாலே அது ஆச்சர்யப்பட வெச்சிருக்காது. ஏன்னா அதான் சிவாஜி. மூணு பா வரிசை படங்கள் இந்த வருசத்துலே.பாவமன்னிப்பு பாசமலர் பாலும் பழமும். மூணுமே வேற வேற ரூட்டுலே போகற படங்கள். இதே வருசத்துலே கப்பலோட்டிய தமிழன் வேற. இந்த மாதிரி ஒரு படம் ஒரு நடிகன் பண்றானா அந்த நடிகன் ஒரு வருசம் இழுத்துடுவான் .14 கெட்டப்புலே நடிச்ச மருத நாட்டு வீரன் .அது ஒரு களம்.இந்த படங்களுக்கு சம்பந்தமே இல்லாமே புனர் ஜென்மம் .அப்படி ஒரு குடிகார வேஷம். மொதல்லே அந்த கேரக்டர்லே நடிக்கறதுக்கே கதாநாயகர்கள் யோசிப்பாங்க. இன்னொரு டைப்புலே எல்லாம் உனக்காக. நெனச்சு பாக்க முடியாத பட வரிசை. மறுபடி மறுபடி சொல்றது இதுதான். சிவாஜிங்கறதாலே சாத்தியமாச்சு. எந்த ஒரு விஷயத்தையும் சிறப்பா செஞ்சா ,இனி ஒருத்தன் பொறந்துதான் வர வேணும்னு சொல்வாங்க.சிவாஜியை பொறுத்த வரை அவரை அப்படி சொல்ல முடியாது . அவரோட சரி. பாலும் பழமும் படத்தை பேர் வெக்காமத்தான் பீம்சிங் எடுத்துட்டு இருந்தார். கடைசியா தான் பாலும் பழமும் டைட்டில் வெச்சாங்க. பாலும் பழமும் படத்துலே டாக்டர...

சிவாஜி பாடாத பாட்டுகள்

படம்
பத்மினி,கே ஆர்விஜயா , சரோஜாதேவி,தேவிகா , ஜெயலலிதா, லட்சுமி இந்த ஆறு பேரும் பாடி நடிக்க சிவாஜி பாடாமே நடிச்ச   ஆறு பாட்டுக்கள் . சிங்கத்துக்கு எதுக்கு பாட்டு. வந்து நின்னாலே பத்தாதா? ஒரு ஷாட் போதுமே .தன்னோட போர்ஷனோட கெத்தை காட்டிருவாரே. அப்படி பல பாட்டுக இருக்கே. அப்படி அமைஞ்ச 6 பாட்டுக்களை பாக்கலாம். முதல்லே பத்மினி பாட்டு. பத்மினிக்கு சோலோவா ரொம்ப பாட்டுக இல்லே.ஆனா இந்த ஒரு பாட்டு போதும்.மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன.சிக்கலாருக்கு இந்த படத்துலே பாட்டே இல்லேங்கறது ஒரு விஷயம்.ஆனாலும் எல்லா பாட்டுலயும் வருவார். சிக்கலார் ஒரு கொஞ்சம் ஆணவம் பிடிச்ச குழந்தை. மோகனா ஆட்டம் இருக்கு பாக்க வாங்கோன்னு சொன்னது ஒரு மரியாதை.தன்னோட  நாதஸ்வரம் இருக்குதே அதை விட என்ன பெரிய ஆட்டம். அதுலே ஒரு ஈகோ. வெடிச்சத்ததுக்கு நீயாடுன்னு ஒரு காரணத்தை சொல்லிருவார்.சிக்கலார் கோஷ்டிக்கு மோகனா டான்ஸை பாக்கறதுக்கு ஆசை.சிக்கலார் தடை போட்டுருவார்.  படுக்கைலே புரண்டு படுத்த சிக்கலார் திரும்பி பாத்தா ஒருத்தரையும் காணோம். அவங்களை தேடற சாக்குலே மோகனா ஆடற இடத்துக்கு வந்துருவார். எப்படிடா முகத்தை காட்டறது....

இந்தப் பாட்டுக்கு வயசு 73

படம்
இந்த பதிவுலே நாம பார்க்க போறது ஒரு பாட்டு. சினிமா பாட்டு .73 வயசாச்சு இந்த பாட்டுக்கு. ஒரு சமத்துவத்தை பேசற பாடல். இது பாட்டு அப்படிங்கறத தாண்டி ஓர்  சமூக சிந்தனையா நம்மை பாக்க வெச்ச பாட்டு. ஒரு சமூக சிந்தனையையே பாட்டாக்கிய பெருமை இதை எழுதினவருக்கு இருக்கு. அவர்தான் உடுமலை நாராயண கவி .இவர் எழுதுன இந்த பாட்டு என்னன்னு சொல்றதுக்கு முன்னாடி இவர் பத்தின ஒரு விஷயத்தை நாம தெரிஞ்சுக்கணும். புகழ் உச்சியில இருந்தபோதும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த உடுமலை நாராயணகவியார்,(23.05.1981)ல் மரணம் அடைஞ்சார்..  அவர் இறக்கறதுக்கு முன்னாலே தான் இறந்த பின்னாலே என்ன செய்யணும்னு ஒரு ஆவணமா  எழுதி வெச்சிருந்தார்.அந்த ஆவணத்துலே ,  ‘‘செத்த பிணத்தை வைத்துக் கொண்டு, இனிமேல் சாகும் பிணங்கள் கூத்தடித்துக் கொண்டிருப்பது அறியாமை; இந்த அறியாமையானது பணத்தின் அளவிலே விரிவடையுது, குறையுது. என்னைப் பொறுத்தமட்டில் இந்த அறியாமை வேண்டாம். உடலைவிட்டு உயிர் பிரிஞ்சு போனா அப்பவே காலத்தை வீணாக்காமல் குழியைத் தோண்டிப் புதைப்பதோ அல்லது எரிப்பதோ இந்த இரண்டில் ஒன்றைச் செய்திடுங்கள்! வேறு எந்தவகையான சடங்குகளும் தேவையில்...

சிவாஜி பத்மினி 100 நாள் படங்கள்

படம்
நடிப்புக்கே திலகம் சிவாஜிகணேசன்  நாட்டியத்துக்கே ராணி பத்மினி  ரெண்டு பேரும் தமிழ் சினிமாவோட ஆல் டைம் கிரேட்டஸ்ட் டபுள் ரிங்ஸ். பத்மினி ஒரு DANCE QUEEN   சிவாஜி ஒரு  ACTING KING.. இவங்க இளமையாக ஜோடி சேந்த பணம் படமாகட்டும்,ராஜா ராணி கதையான உத்தமபுத்திரன் ஆகட்டும்,வயாசான பிரெஸ்டீஜ் பத்மநாபருக்கு ஜோடியான வியட்நாம் வீடாகட்டும் ..எல்லாமே MADE FOR EACH OTHER தான். நடிகர்திலகம் நடிச்ச படங்கள்லே கிட்டத்தட்ட 40 படத்துலே நடிச்சிருக்கார் பத்மினி. 32 படங்கள்லே ஜோடியா நடிச்சிருக்கார். சிவாஜி பத்மினி நடிச்சு 100 நாள் ஓடுன படங்கள் விபரம் இது. சிவாஜி பத்மினி சேந்து  நடிச்ச ரெண்டாவது படம் அன்பு.சிவாஜியோட அண்ணியா TR.ராஜகுமாரி நடிச்ச படம்.100 நாள் ஓடுன திரைப்படம் இது. படம் வந்த தேதி..24.7.1953 வேலை இல்லா திண்டாட்டத்தை சொல்ல நோ வேகன்சி போர்டை  விற்றே பணம் சம்பாதிப்பதாக காட்டப்படும் ஒரு புதுமையான பாடல் இடம் பெற்ற படம் இது. பந்துலு எடுத்த காமெடி படம் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி. சிவாஜி TR.ராமச்சந்திரன் பத்மினி நடித்த  படம்.திரும்பிப்பார் அந்தநாள் படங்களில் Anto her...

கௌரவம் செய்திகள்

படம்
"கண்ணா நீயும் நானுமா? வியட்நாம் வீடு சுந்தரத்தின் ‘கெளரவம்’ படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் ‘கண்ணா நீயும் நானுமா’ என்ற பாடலைப் பாட வந்த போது. படத்தின் கதை, அந்தப் பாடலைப் பாடப் போகும் கதாபாத்திரத்தின் குண நலன்கள் மற்றும் மனோ பாவம், ஆகியவற்றைப் பற்றி நன்கு கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தக் கதாபாத்திரமாகவே தம்மையும் மாற்றிக் கொண்டு,இன்னும் சொல்லப் போனால் கூடு விட்டுக் கூடு பாய்வது போல அந்தக் கதாபாத்திரத்தின் உடலில் புகுந்து கொண்டு உணர்வு பூர்வமாகப் பாடிக் கொடுத்தார் டி.எம்.எஸ். அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக படப் பிடிப்புத் தளத்துக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் பாடலைப் போட்டுக் காட்டினார்கள். ‘இன்னும் ஒரு தடவை போடுங்கள் இன்னும் ஒரு தடவை’ என்று பல தடவை திரும்பத் திரும்ப அந்தப் பாடலை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே இருந்தார் சிவாஜி.இது அங்கிருந்த பலருக்கும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது!காரணம், பொதுவாக சிவாஜி ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்கு முன்பு ஒரு தடவை அல்லது மிஞ்சிப் போனால் இரண்டு தடவை தான் அந்தப் பாடலின் ஒலி நாடாவை ஒலிக்க விடச் சொல்லிக் கேட்பது வழக்கம். ஆனால்...

கண்ணன் பாட்டை காதல் பாட்டா மாற்றிய கண்ணதாசன்

படம்
பாலும் பழமும் படத்துக்காக ஒரு பாட்டு பதிவு பண்ண வேண்டிய நேரம். கண்ணதாசன் எழுத வேண்டிய பாட்டு அது. கண்ணதாசன் பாட்டு எழுத வர்றார். அந்தப் பாட்டுக்கான சிச்சுவேஷன் பீம்சிங் சொல்றாரு. காதலிச்சு கல்யாணம் செய்த முதல் மனைவி விபத்துலே இறந்து போய் விடுவார்.அவள் இறந்ததா நெனச்சு சோகமா வாழ்வார் ஒரு புற்றுநோய் டாக்டர். அவரை வளர்த்து ஆளாக்கினவங்களுக்கு  செலுத்தற நன்றிக்கடனா விருப்பம் இல்லாம இரண்டாவது கல்யாணம் பண்ணிக்குவார்.அவளோட ஏற்பட்ட வாக்குவாதத்தால் விபத்து ஏற்பட்டு கண் பார்வையை இழந்து விடுவார் . சந்தர்ப்பவசமாக முதல் மனைவியே அவரை கவனிச்சுக்க நர்ஸாக வருவார்.  உடல் நலமில்லாத அவரை வாக்கிங் கூட்டிட்டு போவார் முதல் மனைவியான நர்ஸ்.  அவர் மனம் மாற்றம் ஏற்பட அந்த நர்ஸ் பேச  அதற்கு மறுப்பு தெரிவித்து கணவர் பாடும் பாடல். இதுதான் சிச்சுவேஷன்னு சொல்லிப் பாட்டெழுத சொன்னாங்க கவிஞர் கண்ணதாசனை.  பல்லவிக்காக மெல்லிசை மன்னரும் மூன்று ட்யூன்கள் போட்டு காண்பித்தார். அதில் ஒன்று பிடித்துப் போக, பல்லவிக்காக வரிகளை யோசித்துக் கொண்டிருந்த கண்ணதாசன், திடீர்னு ஒரு யோசனை.. தன் உதவியாளர் பஞ்சு அருணாசல...

மிருதங்க சக்கரவர்த்தி படம் வெளியாகும் முன்பு நடந்த சம்பவங்கள்

படம்
மிருதங்க சக்கரவர்த்தி படத்துலே சுதீந்திரம் சுப்பையா பிள்ளையா வருவார் சிவாஜி.மிருதங்கம் வாசிக்கறதுலே சக்கரவர்த்தின்னு பேரெடுத்தவர்.அவருக்கும் சொக்கநாத பாகவதருக்கும் ஒரு கருத்து மோதல் ஏற்படும்.சபா கமிட்டியை சேந்தவங்ளை தூண்டிவிட்டு சுப்பையா பிள்ளை மேலே ஒரு பிரச்சினையை சபாகாரங்க கொண்டு வருவாங்க.தன்மானத்தை விட்டுக் கொடுக்காத வித்வான் சுப்பையா.பிரச்சினையோட முடிவா...  தான் இனி மிருதங்கமே வாசிக்க மாட்டேன்னனு சபதம் போட்டுருவார் சுப்பையா. இது படத்தோட மெயின் தீம்.  இது படத்துக்காக எழுதுன கற்பனை கதை அல்ல. நிஜமாகவே நடந்த விஷயம் தான். பாலக்காட்டு மணி அய்யர் பெரிய மிருதங்க வித்வான். பாடற வித்வான்களை விட அவருக்கு பேரும் புகழும் அதிகம்.இந்த ஒரு விஷயம்தான் பாடற வித்வான்களுக்கு பெரிய பொறாமையை கொண்டு வந்துச்சு.சின்ன சின்ன மனஸ்தாபங்கள் பெரிய கருத்து வேற்றுமையை கொண்டு வந்துருச்சு. பாடற வித்வான்களுக்கும் மணி அய்யருக்கும் கருத்து மோதல் வந்தது. எல்லாரும் மணி அய்யர் வாசிப்புலே நாங்க பாடமாட்டோம் ,அவரை ஒதுக்கி வைக்கிறோம்னு சொல்லிட்டாங்க. கோபமான மணி அய்யர் ,நீங்க என்னைய்யா என்னை  ஒதுக்கி ...

சிவாஜி நடித்த கௌரவ வேட திரைப்படங்கள்

படம்
கௌரவ வேஷங்களுக்கே கௌரவம் கொடுத்தவர் சிவாஜி. ஒரு முழுப் படத்துலே நடிச்சு பேர் வாங்குறதை ஒரு சின்ன கௌரவம் வேஷம் நடிச்சு பேர் வாங்க முடியும்னு நிரூபிச்சவர் சிவாஜி. தமிழ் சினிமாவை பெரும்பாலும் வியாபார நோக்கத்தோடதான் எடுக்கறாங்க. சரி பணம் போட்டு படம் எடுக்கறவங்க அதுலே பணம் சம்பாதிக்கறது சரிதான்.மக்களுக்காக பொழுது போக்கா இருந்தாலும் அது கூட சில நல்ல விஷயங்களையும் சேத்து படம் எடுத்தா நல்லா இருக்குமே. சிவாஜி படங்கள் எல்லாம்  இந்த அடிப்படையிலே தான் எடுத்தாங்க. காசுக்கு காசு நல்ல பொழுது போக்கு அதுகூட நல்ல விஷயங்கள் கிடைச்சுதே. ரெண்டு மணி நேரம் மூணுமணி நேரம் நடிச்சு பேர் வாங்கறத ஒரு பத்து நிமிசம் பதினைஞ்சு நிமிஷம் கெஸ்ட் ரோல் செஞ்சு கூட நல்ல பேரை வாங்க முடியும்.  நடிகர்திலகம் சிவாஜி 19 படங்கள்லே கௌரவ நடிகரா நடிச்சிருக்கார்.சிவாஜி கௌரவ வேஷத்துலே நடிச்ச முதல் படம் மர்மவீரன். 3.8.1956 லே வெளியான திரைப்படம் இது. அடுத்து பந்துலு டைரக்சன் செஞ்ச ஸ்கூல் மாஸ்டர் கன்னட படத்தில கௌரவ நடிகரா நடிச்சார்.இந்த படம் வெளிவந்த தேதி 31.1.1958. இந்தப் பட ஒளிப்பதிவாளர் டபிள்யூ.ஆர். சுப்பா ராவ் . இந்த படத்துலே ...

இலங்கையில் ஆறு முறை வெளியான வசந்த மாளிகை

படம்
ஒரு ரசிகனுக்கு அதீதமான ரசனையை சர்வ சாதாரணமாக நடிகர்திலகம் செய்து உச்சமாக பார்க்க வைத்த படம். விநியோகஸ்தர்களுக்கு ஜாக்பாட்டாக பணப் பெட்டியை நிரப்பிய படம். தயாரிப்பாளருக்கு ஒரு பக்கம் பணத்தையும் இன்னொரு பக்கம் புகழையும் கொடுத்துக் கொண்டே இருக்கும் படம். ஒரு படம் தயாரிச்சா இப்படி தயாரிக்கணும்.காசுக்கு காசு .புகழுக்கு புகழ்.ஒரு தியேட்டருக்கு படப் பெட்டியை அனுப்பி வெச்சா பெட்டி நிறைய பணத்தோட வர்ற படம். வசந்த மாளிகை. முதல் ரிலீசுலேயே வெள்ளிவிழா ரன்னிங்கா போச்சு.பிலிம் தேய தேய காசு பாத்தார் ராமா நாயுடு. ஊர்லே போஸ்டர் ஒட்டுனா போதும் .எங்கிருந்துதான் தியேட்டருக்கு கூட்டம் வருமோ ? எப்போ போட்டாலும் தியேட்டர் சும்மா கலகலன்னு இருக்கும்.இந்த பட வசனத்தை பேசறதுக்கே தியேட்டர்லே ஆளுக இருப்பாங்க. முதல் வெளியீட்டுலே தமிழ்நாட்டுலே 12 தியேட்டர்லே 100 நாள் ஓடுச்சு. சென்னைலே சாந்தி கிரவுண் புவனேஸ்வரி மூணு தியேட்டர்லயும் 271 காட்சிகள் தொடர்ந்து ஹவுஸ்புல் ஆன படம்.கிரவுண் புவனேஷ்வரி தியேட்டர்கள்லே 140 நாள் ஓடுச்சு. சாந்திலே 175 நாள். மதுரைலே 200 நாள்.இங்க தமிழ்நாட்டுலே இப்படின்னா இலங்கைலே இன்னும் பட்டையை கிளப்பி...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற