இடுகைகள்

அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜி திறந்து வைத்த சிலைகள்

படம்
நடிச்சமா சம்பாதிச்சமா போனமானு இருந்தா அவன் ஒரு சாதாரண மனுசன்.நாம சம்பாதிச்சத வீணா செலவழிக்காமே ஊருக்கு நம்மாலே ஆனதை செய்யலாம்னு நெனக்கறது உத்தம மனுசன்.இந்த வகையிலே நடிகர்திலகம் ஒரு உத்தம  மனுசனாவும் இருந்திருக்கார். தமிழ்நாட்டுலே ஏதாவது ஒரு ஊர்லே ஏதாவது ஒரு வகையிலே சிவாஜிகணேசன் ஒரு உதவி ..நன்கொடை ...இருக்கு. பள்ளிக்குகூடம் , மருத்துவமனைக்கு உதவி செஞ்சதோட மட்டுமில்லாமே நிறைய ஊர்களில் அதை திறந்தும் வெச்சிருக்கார்.இது பத்தி நெறைய பேருக்கு தெரியவே இல்லே. காரணம்என்னான்னா அதைப்பத்தி பெரிசா விளம்பரப்படுத்திக்காதது ஒண்ணு.அந்த விஷயம் தெரிஞ்ச பல பேரும் அவரோட நடிப்பை பத்தி பேசுறதிலேயே இருந்தாங்க. இந்த காலத்துலே பேஸ்புக் ,வாட்ஸ் அப் , Youtube மாதிரி நிறைய வலைதளங்கள் இருக்கறதாலே அது பத்தி தெரிஞ்சவங்க அந்த போட்டோ எடுத்து பப்ளிஷ் பண்றதாலே கொஞ்சம் தெரிஞ்சுக்க முடிஞ்சது.நடிகர்திலகத்தோட ஏதாவது ஒருஉதவி ஒவ்வொரு ஊர்லயும் நடந்திருக்குது. சென்னையிலே பனகல் மார்க்கெட் எல்லாருக்கும் தெரிஞ்ச இடம்.பெரிய மார்க்கெட்.தினமும் ஆயிரக்கணக்குலே மக்கள் வந்துட்டு போற இடம்.1972 லே இந்த மார்க்கெட்டுக்கு அடிக்கல் நாட்டுனவ...

Sivajiganesan. TMS songs

படம்
என்னா? TMS ஸ்டுடியோவுக்குள்ளே அங்கயும் இங்கயும் ஓடிட்டு இருக்காரு.ஒண்ணு பாடணும் .. இல்லேன்னா ரிகர்சல் பார்க்கணும்.இது வேற விதமா இருக்கே?  ஒண்ணும் புரியலையே? இப்படித்தான் பாக்கற எல்லாரையும் யோசிக்க வெச்சிருக்கும் ,அந்த பாட்டு ரெக்கார்ட்டிங்கை பாத்திருந்தா. என்ன தான் விஷயம்.உயர்ந்த மனிதன் படத்துலே வர்ற அந்த நாள் ஞாபகம் பாட்டுக்காகத்தான் TMS இப்படி பண்ணிட்டிருக்கார். பாடத்தானே செய்யணும்.இதென்ன புதுசா.அது அப்படியில்லே..இது சாதாரண பாட்டா இருந்தா பரவாயில்லே.அதுவும் சிவாஜிக்கு பாடற பாட்டாச்சே. பாட்டு ஆரம்பிக்கறப்போ சிவாஜி ஓடி வந்து மூச்சிறைக்க நின்னு,அந்த மூச்சு சத்தத்தோட பாட்டு ஆரம்பிக்கும்.அந்த மூச்சிறைப்பை நிஜமா கொண்டு வரத்தான் TMS இப்படி பண்ணிட்டு இருக்கார். அடடா! என்ன அர்ப்பணிப்பய்யா இது.இதனாலேதானே எல்லாம்  அவங்க கூட்டு பாட்டுங்க நம்மளை அந்த வாங்கு வாங்குது. ரெக்கார்டிங் தியேட்டர்லே TMS அதிர வெச்சா ,தியேட்டர் பிரசன்ஸ்லே சிவாஜி கிழிச்சுடுவார் இல்லே.நெஞ்செல்லாம் தகதிமி தகதிமி ஆடுதுன்னா சும்மாவா? பக்தி எல்லாம் தோத்துடனும்.அந்த அளவுக்கு அர்ப்பணிப்பு. பாட்டை பாக்கையிலேயே மனசுக்குள்ளே...

Raman ethanai ramanadi

படம்
சிவாஜியோட கர்ணன் படம் வந்த பின்னாலே பழைய படங்களுக்கு ஒரு வாழ்வு வந்துச்சு.ஏன்னா ரொம்ப புது படங்களுக்கே வழி இல்லாத நிலையிலே பழைய படங்கள் வெளியாகுதுன்னா அது பெரிய விஷயம்.தூசி தட்டி ,உருக்குலைஞ்சு போன பழைய பட பெட்டிகளை தேடி தேடி எடுக்கறதுக்கு ரொம்ப பேர்   முயற்சி எடுத்துக்கிட்டாங்க.நிறைய பழைய படங்கள் எல்லாம் மறுபடி ரிலிசாகறதுக்கு கர்ணன் பட வெளியீடும், அது ஓடுன ஓட்டமும் ,செஞ்ச வசூலும் முக்கிய காரணமா இருந்துச்சு. நடிகர்திலகத்தோட பல படங்களே மறு வெளியீட்டுலே வெளியாகியிருக்கு. 100 நாள் ஓடறது குதிரை கொம்பா இருக்கற  இந்த காலத்துலே ,இதுலயும் பல நடிகர்திலகம் படங்கள் 100 நாள் ஓடி சாதனை செஞ்சிருக்கு. வசந்த மாளிகை, ராஜபார்ட் ரங்கதுரை, சிவகாமியின் செல்வன் ,முதல்மரியாதை படங்கள் 100 நாள் ஓடி திரைப்பட துறைக்கு பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துச்சுன்னு சொல்லலாம். இப்ப இந்த வரிசையிலே ராமன் எத்தனை ராமனடி படமும் டிஜிட்டலில் தயாராகி இருக்கு.இந்த படத்தை ரிலீஸ் செய்யறதுக்கான வேலைகள் நடந்துட்டு இருக்கு. எத்தனையோ சூப்பர் ஹிட்டான கலர் படங்கள் இருக்கறப்போ ராமன் எத்தனை ராமனடி படத்தை டிஜிட்டல் செய்யக் காரணமென்...

கௌரவம் vs மனிதனும் தெய்வமாகலாம்

படம்
நடிகர்திலகத்தின்  இந்த இரண்டு படங்களும் ரெண்டு டைரக்ஷன்லே டிராவல் பண்ற கதையமைப்பை கொண்ட படங்கள். இந்த ரெண்டு படங்களிலும் நடிகர்திலகத்துக்கு இரட்டை வேடங்கள் .இரட்டை வேடங்களில் ஒரு சிவாஜி கேரக்டர் நாத்திகத்தை பேசும்.இன்னொரு சிவாஜி .அதற்கு எதிரானது. இரட்டை வேடங்களில் ஒரு சிவாஜிக்கு மழு மழு ஷேவ் செய்யப்பட்ட முகம்.மீசையில்லாமல்.பளிச் பளிச் முகம். கௌரவம் படத்துலே அப்பா சிவாஜி கேரக்டர் கடவுளை கிண்டல் செய்யும் கேரக்டர். இதற்கு நேர் மாறா மனிதனும் தெய்வமாகலாம் படத்தில் தம்பி சிவாஜி கேரக்டர். இந்த இரண்டு படங்களை பற்றி இதில் பேசினாலும்,நடிப்பை பொறுத்த வரையில் கௌரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்ம ராட்சதன்.மிரட்டோ மிரட்டென்று மிரட்டியிருப்பார்.வாய்ப்பு சிவாஜியிடம் இருந்தே வராத போது மற்றவர்கள் நோ...சான்ஸ்... இந்த கேஸில் ஜெயிக்கப் போறது பாரிஸ்டர் ரஜினிகாந்ந்ந்தா...இல்லை மிஸ்டர் கண்ணனா என்று அவரே சவாலுக்கு ஜூனியரை அழைத்த நடிப்பாயிற்றே....ஆதலால் நடிப்பவர்கள்  எல்லாம் பார்க்க மட்டுமே முயற்சி செய்தல் நல்லது.. மனிதனும் தெய்வமாகலாம் படத்தில் கோயில் குருக்கள்  குமரய்யாவாக சிவாஜி.இரட்டை...

மலைக்கள்ளன்

படம்
நடிகர்திலகம் சிவாஜிகணேசனை பொறுத்தவரை தான் நடிக்கணும்னா ஒரு நல்ல கதை இருக்கணும்.சம்பளம் எல்லாம் மத்தபடிதான்.படத்தோட கதை நல்லா இருந்தா வாங்கற சம்பளத்தை கூட அட்ஜஸ்ட் பண்ணிக்குவார். எந்த நல்ல கதையும் சிவாஜிகிட்டே சொன்னா அது சினிமாவா மாறிடும்.யாரு படம் தயாரிக்க வந்தாலும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுவார்.இந்த மாதிரி குணம் கொண்ட சிவாஜி கணேசன் ஒரு நல்ல கதை வந்தும் அதுலே நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுச்சு.அந்த கதையிலே நடிச்சா தன்னோட பேரும் புகழும் இன்னும் அதிகமாகும் , படமும் நல்லா  வசூல் செய்யும்னு அவருக்கு தெரியும்.இந்த விஷயம் எல்லாம் தெரிஞ்சிருந்தும் சிவாஜி அந்த படத்துலே நடிக்க முடியலே.அதே சமயம் சிவாஜியேஅந்த கதையிலே இந்த பிரபல ஹீரோவை போட்டு படம் எடுங்க அப்பிடின்னு சொல்லியிருக்கார்.ஒரு நல்ல கதை வந்தும் அவராலே ஏன் அந்த படத்துலே நடிக்க முடியாம  போச்சு,அது என்ன படம் எதனாலேஅப்படிங்கற விவரங்களை இந்த வீடியோவுலே பார்க்கலாம். சிவாஜி சார் 1952 லே பராசக்தி படத்துலே நடிச்ச பிறகு பயங்கர பிஸி ஸெட்யூலிலே நடிச்சுகிட்டு இருந்தார்.வரிசையிலே 4,5 வருஷத்துக்கு நிறைய படங்களில் நடிக்க கமிட் ஆயிருந்தார்.எல...

சிவாஜி பாட்டு

படம்
நடிகர்திலகம் குழந்தையை பாட்டுப்பாடி தாலாட்ட வெக்கறமாதிரி பல பாடல்கள் இருக்கு.அந்த ஒவ்வொரு பாட்டுமே ஒவ்வொரு விதமா வேற வேற நடிப்புல நடிச்சிருப்பார். நடிகர்திலகத்தோட எத்தனையோ தாலாட்டுப் பாட்டுக இருந்தாலும் இந்த வீடியோவுலே சொல்லப் போற இந்த ரெண்டு பாட்டுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.ரெண்டுமே ஒரே சிச்சுவேசனுக்காக பாடற மாதிரி பாட்டுகள் தான்.ஆனா படங்க வெளி வந்த காலகட்டமும் சிவாஜியோட நடிப்பும் ஒண்ணுக்கொண்ணு வித்தியாசமா இருக்கும்.அந்த ரெண்டு பாட்டுகள் என்னென்ன ?  என்னென்ன படங்கள் ?அப்படிங்கறதை இந்த பதிவுலே பாக்கலாம். நடிகர்திலகம் நடிச்சு 1968 லே வெளியான படம் கலாட்டா கல்யாணம்.இதுலே சிவாஜி ஜெயலலிதா நாகேஷ் மற்றும் ஏராளமான நடிகர் நடிகைகள் நடிச்சிருப்பாங்க. இந்த படத்துலே சிவாஜியும் நாகேசும் , அழுகின்ற குழந்தையை  தாலாட்டு பாடி தூங்க வெக்கற மாதிரி பாட்டு. வழக்கமா தான் பெத்த குழந்தையை தான் தாலாட்டு பாடற மாதிரி பாட்டுகள் தமிழ்சினிமாவுலே இருக்கும்.ஆனா இதுலே சிவாஜி வேற ஒரு குழந்தைக்காக தாலாட்டு பாடற மாதிரியான கதையமைப்பு. வில்லனை மிரட்டறதுக்காக நாகேஷ் அவனோட குழந்தையை தூக்கிட்டு வந்துடுவார்.அந்த குழந்த...

சிவாஜியின் 288 படங்கள்

படம்
1.பராசக்தி -வசனமும்  நடிப்பும் புதியஎழுச்சியில்                                    2.பணம் -செல்வந்தனுக்குத்தான் சேரும்                                     3.பரதேசி  (தெலுங்கு)  - ஆனால் கயவனல்ல                    4.பூங்கோதை - பூவும் மணமும்                             5.திரும்பிப்பார்  -நிழலை அல்ல                           6.அன்பு - தாயிடம் தானே                         7.கண்கள் - பேசுமே                          8.பெம்புடு கொடுகு (தெலுங்கு)    9.மனிதனும்மிருகம...

இந்தப் பாட்டை ஏன் தூக்க நினைச்சாங்க?

படம்
சிவாஜியோட சிறப்பான நடிப்பை பத்தி பேசுறப்போ ரொம்ப பேரோட சாய்ஸ்ல இந்தப் படம் கண்டிப்பா இருக்கும். உலக அளவுலே எல்லா படங்களுக்கும் ஒரு நடிப்பு போட்டி வச்சா இந்த படத்தை அனுப்பி வைக்கலலாம்கறதுலே யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. சிவாஜி இந்த படத்தில் நடிச்ச  நடிப்புக்கு இணையா மட்டுமல்ல அதுக்கு அடுத்ததாகவும் வேற எந்த படத்தையும் சொல்ல முடியாது அப்படிங்கிற லெவல்ல அமைஞ்ச  படம் தெய்வமகன். ரொம்ப ரொம்ப அற்புதமான கதை அமைப்பை கொண்ட படம் அப்படின்னு சொல்ல  முடியா  விட்டாலும் நடிப்பை பொறுத்த அளவுக்கு இந்த படம் நடிப்புல ஒரு மைல் நாட்டுன படம் அப்படின்னு இந்த படத்தை சொல்லலாம். ஒவ்வொரு காட்சி மட்டுமல்ல ஒவ்வொரு ஷாட்டுலேயும் சிவாஜி நடிப்பில் பின்னி எடுத்து இருப்பார். அப்படிப்பட்ட படம் தான் சிவாஜி மூன்று வேஷத்தில  நடிச்ச  தெய்வமகன். இந்த படம் நேரடியான தமிழ் கதையும் கிடையாது. வங்காளத்தில் வெளியான உல்கா படத்தோட தழுவல் தான் இந்த தெய்வமகன்.  இந்த படத்தோட பாடல்கள் ரொம்ப சிறப்பா அமைஞ்சது. கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா, காதல் மலர் கூட்டம் ஒன்று, தெய்வமே தெய்வமே கண்ட...

ஒரே கதை படங்கள் வேற

படம்
நடிகர்திலகம் நடிச்ச சில படங்களோட காட்சிகள் வேற வேறயா இருந்தாலும் கதையமைப்பை பாத்தா கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்திருக்கு. இதுக்கு உதாரணமா பல படங்களை சொல்லலாம். அந்தமான் காதலி படத்துலே சுஜாதாவை காதலிப்பார்.சுஜாதா கர்ப்பமா இருக்கற சமயத்துலே சிவாஜி அவரை விட்டுட்டு போற சூழ்நிலை அமைஞ்சுரும்.பல வருஷம் கழிச்சு சுஜாதாவை பாக்க வருவார்.சுஜாதாவுக்கு ஒரு மகன்.அவர் அப்பாவை வெறுக்கற மனநிலையிலே இருப்பார்.சிவாஜிதான் தன்னோட அப்பா அப்டிங்கறதை கடைசியிலே தெரிஞ்சுக்குவார்.இது சுருக்கமான கதை. இதே கதையமைப்பிலே வசந்தத்தில் ஒரு நாள் படமும் இருக்கு.இதுலே ஸ்ரீப்ரியாவை காதலிப்பார்.ஸ்ரீபிரியாவை விட்டுட்டு போயிடுவார்.பல வருஷம் கழிச்சு ஸ்ரீப்ரியாவை தேடி வருவார்.ஸ்ரீப்ரியாவோட மகளை பார்ப்பார்.அந்த ரோலும் ஸ்ரீபிரியாதான்.தன்னோட மகள் கிட்டே ,தான்தான் அப்பான்னு சிவாஜி சொல்ல முடியாத சூழ்நிலையிலே ஸ்ரீபிரியாவோட நடத்தை இருக்கும் . கடைசியிலே சிவாஜிதான் தன்னோட அப்பா அப்படின்னு ஸ்ரீபிரியா தெரிஞ்சுக்கற மாதிரி கதையமைப்பு இருக்கும் இந்த படத்துலே. அந்தமான் காதலியிலே மகன்.வசந்தத்தில் ஓர் நாள் படத்துலே மகள். ரெண்டு படமும் எடுக்கப்பட்டத...

காக்கி உடுப்பில் சிவாஜி

படம்
1நவராத்திரி 3.11.1964 2.தங்கசுரங்கம் CID 28.3.69 3.ராஜா 26.1.72... 4.தங்கப்பதக்கம் 1.6.74 5.என்மகன்21.8.74 6.வைர நெஞ்சம்CID 2.11.75 7.திரிசூலம்27.1.79 8.ரிஷிமூலம் 26.1.80 9.ரத்தபாசம்14.6.80 10.சங்கிலி14.4.82 11.தீர்ப்பு  21.5.82 12.தியாகி 3.9.82 13.வெள்ளைரோஜா 4.11.83 14.திருப்பம் 14.1.84 15.நீதியின் நிழல் 13.4.85 16.விடுதலை11.4.86 17.புதியவானம்.10.12.88 சிவாஜி போலீஸ் வேஷத்துலே தமிழ்லே நடிச்ச படங்கள் 17.இதுலே 100 நாள் ஓடுன படங்கள் 10. இதுலே வெள்ளிவிழா ஓடுன படங்கள் மூணு.தங்கப்பதக்கம் , திரிசூலம்,தீர்ப்பு இரண்டு படத்துலே CIDயா நடிச்சிருப்பார்.தங்கச்சுரங்கம்,வைரநெஞ்சம். சிவாஜி போலீஸ் டிரஸ் போட்டுட்டு நடிச்ச படங்கள் 14. போலீஸ் வேஷமா ..தன்னை  விட யாருமில்லேன்னு சொல்ல வெச்சவர் நடிகர்திலகம்.ஆனா இந்த போலீஸ் வேசத்தை தன்னோட 100 வது படமான நவராத்திரியிலேதான்  முதன்முறையா செஞ்சார் சிவாஜிங்கறது ஆச்சர்யம்.நவராத்திரியிலே கூட பத்து வேஷத்துலே ஒரு வேஷமா தான் செஞ்சிருப்பார்.அதுலே கூட கடைசி ஒரே ஒரு சீனுலே மட்டும்தான் போலீஸ் டிரஸ்ஸோட வருவார் . சிவாஜி நடிச்ச தங்கப்பதக்கம் படம்தான் போலீஸ் வேஷங்கள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற