இடுகைகள்

ஏப்ரல், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

இளையராஜா TMS

படம்
நல்லாத்தானே போய்ட்டு இருந்துச்சு .அதுக்குள்ளே என்ன ஆச்சுன்னு ஒரு காமெடி வசனம் பிரபலம்தான்.இதே வசனத்தை ஒரு சீரியஸ் விஷயத்துக்கும் சொல்லும் படி இருக்குது.இளையராஜா TMS பிரச்சினை தான் அது. சிவாஜி நடிக்க வந்த மூணாவது வருஷமே TMS  சிவாஜிக்குத்தான்னு செட்டாயிடுச்சு. தூக்கு தூக்கி படம் மாத்துன விஷயம் அது.அதுலே இருந்து TMS சோட ராஜ்ஜியம் தான்.  வேற பாடகர்கள் எவ்வளவு நல்லா சிவாஜிக்கு பாடினாலும் TMS ஐ கம்பேர் பண்ணி குறை சொல்லாமே இருக்கவே மாட்டாங்க. 54 லே இருந்து TMS எல்லா இசையமைப்பாளர்களோட இசையமைப்புலே பாடியிருக்கார். 1976 லே இளையராஜா என்ட்ரி ஆகிறார். இளையராஜா இசையிலும் TMS சோட ராஜாங்கம் நடந்துகிட்டுதான் இருந்துச்சு. 1977 லேயே அதாவது இளையராஜா இசையமைக்க வந்த அடுத்த வருஷமே சிவாஜி நடிச்ச தீபம் படத்துக்கு இசையமைக்க வாய்ப்பு வந்துச்சு.  சிவாஜியோட படங்களுக்கு வரிசையா இசையமைச்சு வந்தவர் MS.விஸ்வநாதன்.தீபம் படத்துக்கு முன்னாலே பாத்தா நாற்பது ஐம்பது படங்களுக்கு வரிசையா இசையமைச்சிருக்கார். விஸ்வநாதன்.நாலஞ்சு படங்கள் மட்டுமே கே வி மகாதேவன் மற்ற சில பேர் இசையமைச்சு இருக்காங்க.மத்தபடி விஸ்வநாதன் த...

சிவாஜி லதாமங்கேஷ்கர்

படம்
இந்தியாவுலேயே சினிமா நடிப்புலே மிக உயர்ந்த இடத்துலே இருக்கற ஒரு நடிகரும் இந்தியாவிலேயே மிக உயர்ந்த பெண் பாடகியும் எந்த வித ரத்த பந்த சம்பந்தமும் இல்லாமே சிறந்த அண்ணன் தங்கையா இருந்த உறவை சொல்ல வர்றப்போ சிவாஜி லதா மங்கேஷ்கர் உறவுதான் எல்லாருக்கும் தெரியும். இவங்களோட  பிரெண்ட்ஷிப் ஆரம்பிச்சதே ஒரு சினிமா மாதிரியான இன்ட்ரெஸ்டிங் விஷயம்தான். சிவாஜி சொந்தமா உருவாக்குன  சினிமா பட கம்பெனி சிவாஜி புரொடொக்சன்ஸ்..தமிழ்லே பெரிய வெற்றி அடைஞ்ச அமரதீபம் படத்தை இந்திலே சிவாஜி புரொடொக்சன்ஸ்  தயாரிச்சது.1958 ஆம் வருஷம் அமரதீபம் 'அமர்தீப்'பேருலே ரிலீசாச்சு. தேவானந்த்,வைஜெயந்திமாலா  பத்மினி ராகினி பிரான் நடிச்சாங்க.இந்திலே திரைக்கதை அமைச்சு டைரக்சன் பண்ணியவர் T.பிரகாஷ் ராவ். இந்த படத்துலே பாட்டுகளை பாடுனவங்க லதா மங்கேஷ்கர் ,ஆஷாபோன்ஸ்லே சிவாஜி சொந்தமா தயாரிச்ச இந்த படத்துலே லதாமங்கேஷ்கர் பாடியிருந்தாலும் சிவாஜிக்கும் லதா மங்கேஷ்கருக்கும் எந்த சந்திப்பும் நடக்கலே.ரெண்டு பேரும் நேரிடையா பாத்ததும் இல்லே. இந்த படம் வெளியாகி மூணு வருஷம் கழிச்சு சிவாஜியோட பாவ மன்னிப்பு வெளியாகி சென்னையிலே ஓடிட...

பத்மினியா கே ஆர் விஜயாவா?

படம்
நடிகர்திலகம் சிவாஜிக்கு ஜோடியா 60 நடிகைகள் நடிச்சிருக்காங்க.இதுலே யார் பெஸ்ட் சாய்ஸ்னு ரசிகர்கிட்டே கேட்டா ஒவ்வொருத்தர் ரசனையும்  ஒவ்வொரு விதமா இருக்கும். யார் பெஸ்ட்னு சொல்லறத விட எல்லாருக்குமே பெஸ்ட்டா சிவாஜி படங்கள் இருக்கு அப்படிங்கறதுதான் உண்மை. சரி கடைசியா ஒரு பில்டர் பண்ணினா நிறைய ரசிகர்களோட சாய்ஸ் இந்த வகையிலே அதிகமா இருக்கு. வடக்கிருந்து பாத்தா வாணிஸ்ரீ தெக்க இருந்து பாத்தா தேவிகா மேற்கே இருந்து பார்த்தா பத்மினி  கிழக்கே இருந்து பாத்தா கே ஆர் விஜயான்னு ரிசல்ட் வருது. சூரியன் உதிக்கறதும் மறையறதும் கிழக்கும் மேற்குந்தானே . அந்த டைரக்சன்லே நிக்கறது கே ஆர் விஜயா பத்மினி . இதுலே யார் ரொம்ப பொருத்தம் ..எத்தனை படங்கள் .எத்தனை ஹிட் .. இப்ப ஒரு அலசல் .. கே ஆர் விஜயாவா ? அவங்க சிரிச்சே பேரை தட்டிட்டு போயிடுவாங்களேன்னு ஒரு பேர் இருக்கு. பத்மினியோட டான்சை யாராலும் ஆட முடியாதுங்கறது நிச்சயம். புன்னகை அரசியா ? நாட்டியப் பேரொளியா ? நடிகர்திலகத்துடன் பத்மினி நடிச்ச படங்கள் 41.கே ஆர் விஜயா  நடிச்ச படங்கள் 43. சிவாஜிக்கு ஜோடியா பத்மினி நடிச்ச படங்கள் 33.,கே ஆர் விஜயா ஜோடியா நடிச்ச...

ராமாராவுக்கு மேக்கப் போட்ட சிவாஜி

படம்
நடிகர்திலகத்தை பத்தி தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கு.சினிமா ஸ்கிரீன்லே நடிகர்களோட  நடிப்பை மட்டும் தான் நாம பாக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு.நடிகர்களா இருந்தாலும் தனிப்பட்ட முறையிலே பல திறமைகள் நெறஞ்ச பல நடிகர்கள் இருக்காங்க.நடிகர்திலகம்னா மாபெரும் நடிகர்னு சொல்லிட்டு போயிருவாங்க. வெறும் நடிகரா வந்து போகாமே சினிமா சம்பந்தப்பட்ட பல விஷயங்களையும் தெரிஞ்சு வெச்சவர் நடிகர்திலகம். சிவாஜி நல்ல ஒரு மேக்கப்மேன்  அப்படிங்கறது பல பேருக்கு தெரியாது .சிவாஜிக்கு மேக்கப்போட மேக்கப்மேன் இருந்தாலும் முக்கியமான மேக்கப் ,நகாசு வேலை மேக்கப்பெல்லாம் சிவாஜி பெர்பெக்டா தனக்குத்தானே போட்டுக்குவார். மேக்கப் கலையிலே நல்ல விஷய ஞானம் வெச்சிருந்த சிவாஜி ,வேற ஒரு பிரபல நடிகருக்கு மேக்கப் போட்டுருக்கார்ங்கற விஷயம் எல்லாம் நடந்திருக்கு. சிவாஜி யாருக்கு மேக்கப் போட்டார் ,எப்ப நடந்தது அப்படிங்கறத மேற் கொண்டு பாக்கலாம் இந்த சம்பவம் நடந்தது 1975 லே.சென்னையிலே வாகினி ஸ்டியோவுலே தெலுங்கு சூப்பர்ஸ்டார் ராமாராவோட சூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. அதே வாகினி ஸ்டியோவுலே சிவாஜிக்கும் சூட்டிங் இருந்துச்சு. சிவாஜியும் ராமார...

சிவாஜி கல்யாணம்

படம்
நடிகர்கள் பெரும்பாலும் அவங்க சினிமா பீல்டுக்கு வந்து ஒரு நல்ல  நிலைமை ஏற்பட்ட பின்னாலேதான் கல்யாணம் செஞ்சுக்குவாங்க. மத்த தொழிலுக்கும் சினிமா தொழிலுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கு.எந்த அளவுக்கு பேரும் புகழும் கிடைக்குமோ அந்தளவுக்கு சொல்லடியும் வரும் . கூத்தாடின்னு கேவலமா நடிகர்களை பேசுன, நடத்துன காலம் அது.நாடகம் சினிமாவை  ரசிச்சு மக்கள்  பாத்தாலும் அவங்களை விலக்கியே பாத்தது சமூகம். சினிமா நாடக நடிகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு தேடுனா ,கூத்தாடிக்கெல்லாம் பொண்ணு தர முடியாதுன்னு சொல்லிருவாங்க. சிவாஜி பராசக்தி படத்துலே நடிச்சுட்டு இருக்கறப்பவே வேற ரெண்டு மூணு படத்துலே நடிக்க வாய்ப்பு வந்துருச்சு. பராசக்தி படம் எடுக்க எடுக்கவே   படத்தை பத்துன தகவல்கள் வெளிய வர ஆரம்பிச்சுச்சு. வெளியீட்டு நாள் நெருங்க நெருங்க எதிர்பார்ப்பும் அதிகமாயிட்டே போச்சு. ஒவ்வொரு நாளும் புது புது செய்திகள் வந்து பரபரப்பை பண்ணுச்சு.ஒரு பெரிய எதிர்பார்ப்போட கலையுலகமே அதை பாக்க காத்திருந்துச்சு. ஊரே இப்படி எதிர்பார்ப்போட இருக்குது. சிவாஜியோட அம்மா ராஜாமணிஅம்மாவுக்கு ஒரு பக்கம் பயத்தை கொடுக்குது. ஒ...

சிவாஜி மகனாக நாகேஷ்

படம்
ஒரு பிரபலமான காமெடி நடிகர் யாராச்சும் ரொம்ப பிரபலமான  கதாநாயகன் யாருக்காவது மகனா நடிச்சிருக்காரா . அந்த காலத்துலே டணால் தங்கவேலு சந்திரபாபு சுருளிராஜன் நாகேஷ்லே இருந்து இந்த கால கவுண்டமணி வடிவேலு வரைக்கும் இப்படி இந்த காம்பிநேசன்லே ஏதாவது படம் வந்திருக்கா. நம்ம புத்திக்கு தெரியலே. காமெடி நடிகர் கதாநாயகனுக்கு பிரெண்டா ரொம்ப படங்கள்லே நடிச்சிருப்பார்.சில படங்கள்லே அண்ணனா தம்பியா கூட நடிச்சிருக்கலாம்.ஒரு பெரிய மாஸ் ஹீரோவுக்கு மகனா நடிச்ச படங்களை சொல்லணும்னா ரொம்ப யோசிக்க வைக்குது. இந்த வகையிலே நாகேஷ்ங்கற பேமஸ் காமெடி ஏக்டர் சிவாஜிங்கற இமயத்துக்கு மகனா கூட நடிச்சிருக்கார். பெரும்பாலான படங்கள்லே காமெடியே ஒரு தனி டிராக்குலே தான் இருக்கும். சீரியசா போற படம் ...  சோகமான படமா இருந்தா ஒரு காமெடி டிராக்கை வெச்சு படத்தை போரடிக்காமே பாக்க  வெச்சுருவாங்க. அதனாலே ரிலேசன்ஷிப் உறவுலே காமெடி நடிகர்களோட பங்கு பெரும்பாலும் இருக்காது. நாகேஷை எடுத்துக்கலாம். நாகேஷ் சிவாஜிக்கு பிரெண்டா ரொம்ப படத்துலே நடிச்சிருக்கார். தனி கேரக்டரா ரொம்ப படங்கள்லே நடிச்சிருக்கார். சவடால் வைத்தின்னு தில்லானா மோகனா...

சிவாஜி கே ஆர் விஜயா சாதனைகள்

படம்
சிரிச்சே அரசிங்கற பேரு வாங்குன நடிகை கே ஆர் விஜயாதான். தான் அறிமுகமான முதல் படத்துலேயே டைட்டில் ரோல்லே நடிச்சவங்க இவங்க. அந்த படம் கற்பகம். நடிகர்திலகம் சிவாஜி கே ஆர் விஜயா சேந்து நடிச்ச படங்கள் 37.ஜோடியா சேந்து நடிச்ச படங்கள் 32. சிவாஜி கே ஆர் விஜயா நடிச்ச படங்கள்லே என்னென்ன சிறப்புகள் : 1. சிவாஜியோட 3 வெள்ளிவிழா 20 நூறு நாள் படத்துலே நடிச்ச ஒரே நடிகை கே ஆர் விஜயா 2.தமிழ் சினிமாலே நடிக நடிகைகளுக்கு மேக்கப் இல்லாமே எடுத்த படம்னு நெஞ்சிருக்கும் வரை படத்தை சொல்வாங்க. இதுலே நடிச்சவரும் கே ஆர் விஜயா. 3.K.பாலசந்தர் சிவாஜியை வெச்சு டைரக்சன் பண்ணுன ஒரே படமான எதிரொலி பட கதாநாயகி கேஆர் விஜயாதான். 4.போலீஸ் படத்துக்கே ஒரு முன்னுதாரணமா அமைஞ்ச படம் தங்க பதக்கம்.இந்த பட கதாநாயகியும் கே ஆர் விஜயாதான். 5.சிவாஜி வக்கீலா நடிச்ச படங்கள் எதிரொலி சிம்ம சொப்பனம் ,பாடகரா நடிச்ச தவப்புதல்வன் ,போலீசா நடிச்ச தங்கபதக்கம் , திருடனா நடிச்ச திருடன் மிருதங்க வித்வானா நடிச்ச மிருதங்க சக்கரவர்த்தி,சினிமா டைரக்டரா நடிச்ச சாதனை ,லாரி டிரைவரா நடிச்ச கிரகப்பிரவேசம் ..இப்படி பல வகையான வேஷங்கள் அமைஞ்ச சிவாஜி படங்கள்லே நடிச்...

தம்பி -என் தம்பி

படம்
தம்பி என் தம்பி ஆன கதை : முதலில் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த என் தம்பி படத்தின் பெயரை தம்பி என்ற பெயரிலே எடுக்க தயாரிப்பாளர் கே. பாலாஜி மற்றும் இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர் அவர்கள் முடிவு செய்திருந்தனர்.  அதற்கு ஒரே காரணம் அதற்கு முந்தைய கே. பாலாஜி அவர்கள் தயாரித்த திரைப்படம் பெயரான தங்கை தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதே. படத்தை பார்த்த ரசிகர்கள் சிவாஜி கணேசன் வழக்கமான சென்டிமென்ட் திரைப்பட பாணியில் பாசம், பரிவு, அன்பு என்பதை தாண்டி அசாத்தியமான ஸ்டைல் மேனரிசத்தில் மனுசன் அந்த படத்தில் நடிச்சு பட்டையை கிளப்பியதை பார்த்து மீண்டும் மீண்டும் ரசிகர்கள் சிவாஜி கணேசன் ஸ்டைல் நடிப்பையும், சண்டை காட்சியையும், காஞ்சனாவிடம் பேசி கொண்டு ஆக்ரோசமாக எறியும் மெழுகுவர்த்தியில் கையை விடுவது,  ஒரு சட்டத்திற்கு புறம்பான தடை செய்யப்பட்ட சீட்டு கட்டு விளையாடும் விளையாட்டிலும் நேர்மையை கடைபிடிக்கும் ஸ்டைலும், தொங்கு விளக்கில் சிவாஜி கணேசன் தொங்கி கொண்டு எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் போன்ற தத்ரூபமான காட்சிகளை  எதிரணி ரசிகர்கள்  கூட தங்கை படத்தை பார்க்க சிவாஜி கணேசன்...

நீல வானம்

படம்
சிவாஜி தியேட்டரான சாந்தி திரையரங்க ஸ்கிரீனை காண்பித்து அந்த ஸ்கிரீனில் டைட்டில் ஓடுவதாக காட்டப்பட்ட திரைப்படம் நீலவானம் அந்த டைட்டில் வரும்முன்பு சிவாஜியின் புதிய பறவை பாடலான சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து பாடல் ஒலிக்கும். சாந்தி திரையரங்கில் டிக்கட் கிழிக்கும் தியேட்டர் ஊழியராக சிவாஜி நடித்திருப்பார். நீச்சல் குளத்திலேயே முழுப்பாடலும் எடுக்கப்பட்ட நடிகர்திலகத்தின் திரைப்படமும் நீலவானம் ஆகும்.இது படத்தின் முதல் பாடல். சாந்தி தியேட்டருக்கு தேவிகாவுடன் படம பார்க்க வருவார் சிவாஜி. அப்போது தியேட்டரில் ஒலித்து கொண்டிருக்கும் பாடல் பார்த்த ஞாபகம் இல்லையோ   ... மிக வித்தியாசமான நடன அசைவுகளுடன் அழகாக எடுத்த பாடல் ஓ லிட்டில் பிளவர் .. 1965 ல் வெளிவந்த சிவாஜியின்  எல்லா( 5 )படங்களிலும் தேவிகா நடித்திருப்பார். பழனி அன்புக்கரங்கள் சாந்தி...திருவிளையாடல் .. நீலவானம் தேவிகாவுக்கு மிக நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. நீலவானம் உச்ச நிலையில் கடைசி ஜோடிப்படமானது ஆச்சர்யமாக இருக்கிறது. நீண்ட வருடம் கழித்து சத்யம் படத்தில் ஜோடியாக நடித்திருப்பார். ராஜஸ்ரீயை லவ் பண்ணும் போது, ஒரு ஹேர் ஸ்டைலும்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற