இடுகைகள்

திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

3 வது முறை 100 நாள் ஓடிய வசந்தமாளிகை

படம்
2023 ஆம் ஆண்டில் திருப்பூர் மணீஸ் திரையரங்கில் முதல் மரியாதை 100 நாள் ஓடியதை அடுத்து  மறு வெளியீடு  கண்ட வசந்த மாளிகை திரைப்படமும் 100 நாள் ஓடி சாதனை படைத்தது .. இது பற்றிய சிறப்பு தகவல்கள் இந்த பதிவில்.. ஒரு படம் தயாரிப்பதிலேயே மிகுந்த சிரமங்கள்  இருக்கும் இந்த காலகட்டத்தில் படத்தை வெளியிடுவது என்பதில் அதைவிட சிரமங்கள் உள்ளது . பிரபல முன்னணி ஹீரோக்களின் படங்களைத் தவிர மற்ற படங்கள் நல்ல படங்களாக இருந்தாலும் ஓடுவது என்பது பெரிய சவாலாகவே இருக்கின்றது இந்த காலத்தில். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு பழைய திரைப்படம்அதுவும்  50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு பழைய திரைப்படம் வெளியாவது பெரிய சவாலான விஷயம் தான். இது போன்ற சூழ்நிலையில் அந்தப் படம் 100 நாள் ஓடியது என்பது மிகப்பெரிய விஷயமாகும். இப்படிப்பட்ட ஒரு சாதனையை தான் வசந்த மாளிகை திரைப்படம் செய்துள்ளது. அதுவும் மூன்றாவது முறையாக வெளியீடு செய்யப்பட்டு அதுவும் தமிழகத்தின் ஒரு சாதாரண திரையரங்கில் 100 நாள் ஓடியது என்பதை என்னவென்று சொல்வது. மேற்கூறிய இந்த விவரிப்புகளுக்கு எல்லாம் ஒரே ஒரு பெயர் தான் இந்த சாதனையை செய்ய வைத்தது என்...

மசாலா படத்துக்கு நடிகர்திலகம் என்ற பெயரை வைப்பதா?

படம்
நடிகர் திலகம். இது என்ன சாதாரண பெயரா? ஒரு பெயர் தான் .ஆனால் ஓராயிரம் முகங்களை தன்னுள் அடக்கிய பெயர் . தமிழ் சினிமாவுக்கு தங்க ராஜ கிரீடமாக அமைந்த பெயர். ஆங்கிலேயர்களை ஐரோப்பியனை இன்னும் பிற அயலானை வியக்க வைத்த பெயர். உலகத் தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை எல்லோராலும் போற்றப்பட்ட பெயர். இப்படிப்பட்ட ஒரு பெயரை ஒரு மசாலா படத்துக்கு சூட்டலாமா.?  மலையாளத்தில் தயாரித்து கொண்டிருக்கும் ஒரு மசாலா படத்துக்கு நடிகர் திலகம் என்ற பெயரை வைத்திருக்கிறார்கள்  அதுவும் ஒரு நகைச்சுவை படத்துக்கு நடிகர் திலகம் என்ற பெயரை சூட்டி இருக்கிறார்கள். அது இங்கு அல்ல கேரளத்தில். மலையாள திரைப்படம் ஒன்றுக்கு நடிகர் திலகம் என்ற பெயரை சூட்டி இருக்கிறார்கள். அரசியலுக்கு வர விரும்பும் ஒரு கதாநாயகனை பற்றி சுற்றிச்சூழலும் கதையாக இந்த படம்  தயாரிக்கப்பட்டுள்ளது .அரசியல் என்றாலே பல ஏமாற்றுத் தனமான வேடங்களை போட வேண்டியது வரும். அதனாலேயே இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதை நாம் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. நடிகர் திலகம் என்ற பெயரை  எந்தப் படமாக இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணமே எல்லா...

சாந்தி தியேட்டரில் சிவாஜி படங்களை மட்டும் தான் ஓட்டுவார்களா ?

படம்
சென்னை சாந்தி திரையரங்கமா  ?சிவாஜி படங்களை தான் ஓட்டுவார்கள் என்று ஆரம்பத்தில் இருந்து ஒரு தரப்பில் இருந்து தவறான பரப்புரைகள் வந்து கொண்டே இருக்கின்றன.  இப்போதும் கூட அந்த பரப்புரைகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன . ஆனால் உண்மை என்ன என்பதை சொல்லத்தான் இந்த பதிவு. சாந்தி தியேட்டர் 1961ம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி முதல் அமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. தியேட்டர் திறக்கப்பட்டு இரண்டு மாதம் கடந்து தான் சிவாஜி படமே திரையிடப்பட்டது . இத்திரையரங்கில்  1961 மார்ச் மாதம் 16 ஆம் தேதி திரையிடப்பட்ட திரைப்படம்,  ஏ. பீம்சிங் இயக்கத்தில், சிவாஜி கணேசன் நடித்து வெளியான பாவ மன்னிப்பு ஆகும்.ஆக முதலில் திரையிடப்பட்ட படம் கூட சிவாஜி படம் இல்லை . சிவாஜி புரொடொக்சன்சின் முதல் தயாரிப்பு ,பெருமைமிகு மற்றும் கலர் தயாரிப்பு படம் புதிய பறவை. V.C. சண்முகம் மிகவும் சிரத்தை எடுத்து தயாரித்துக் கொண்டிருந்த படம் புதிய பறவை. அப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை கூட சாந்தி தியேட்டரில் திரையிடாமல் வேறு தியேட்டரில் தான் திரையிட்டார்கள்.  காரணம் அப்போது நன்றாக ஓடிக் கொண்டிருந்த ராஜ்கபூர் நடித்த...

சிவாஜியின் படங்களில் துப்பாக்கி காட்சிகள்

படம்
ஒரு டைரக்டர் கதை சொல்றாரு ஹீரோகிட்ட..  ஓபன் பண்ணுனா கொஞ்சம் சீன் பரபரப்பா இருக்கும். என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு ஜனங்களுக்கு புரிய கூடாது. கொலை  கொள்ளை தீவிரவாதம்னு  சீனு கொஞ்சம் ஓடும்.  அந்த டயத்துலதான் ஹீரோ என்ட்ரி கொடுக்கிறார். கொஞ்சம் லைட்டான வெளிச்சத்தில் கொஞ்சம் டார்க்கா ஹீரோ துப்பாக்கிய புடிச்சுட்டு வர்றார். அப்போ அங்க நிறைய அடி ஆளுங்க. ஹீரோ என்ட்ரிய ஸ்லோ மோஷன்ல வச்சுக்கலாம். ட்ரிக்கரை அழுத்தறாரு ஹீரோ. புல்லட் பாஞ்சு வருது. சடார்ன்னு ஒரு அடியாளு தலை சிதறி விழுகிறான். அப்ப ஆரம்பிக்குது ஹீரோவோட வேட்டை. அந்த சின்ன சைஸ் துப்பாக்கில இருந்து தோட்டா பாஞ்சி பாஞ்சி வருது .அடியாட்கள் அங்க போய் இங்க போய் விழறாங்க .ஸ்கிரீன் பூரா ரத்தம் தெளிக்குது. ஹீரோவுக்கு ஒண்ணும் ஆகாது. எல்லா அடியாளுகளும் விழுந்த பின்னால துப்பாக்கில  இருந்து வர்ற புகைய வாயால ஊதுவாரு ஹீரோ !இதுதான் சார் ஹீரோ என்ட்ரி. படத்தில் இது மாதிரி ரொம்ப சீனு இருக்கு சார். இது போன்ற காட்சி அமைப்புகள் ஒரு படத்திலோ இரண்டு படத்திலோ அல்ல.பெரும்பான்மையான ஹீரோயிச படங்கள் அனைத்தும் இப்படித்தான். அந்த  துப்பாக்...

இதை விடவா பெரிய விருது ?

படம்
சிவாஜிக்கு சரியான விருது பாரத பூமியில்  கிடைக்கவில்லை என்று நினைக்கிறீர்களா? என்னுடைய படத்தை ஏன் போஸ்டரில் அடித்துள்ளனர் என்று சிவாஜியின் திருநாவுக்கரசர் உருவத்தை பார்த்து காஞ்சிப் பெரியவர் சொன்னாரே? அதை விடவா பெரிய விருது? சிவாஜியின் நடையை பார்க்க அவரை காக்க வைத்து பின் சிவாஜி நடந்து வருவதை பார்த்து ரசித்து ,உங்கள் நடையழகை பார்க்கவே நான்  உங்களை நடந்து வரச் சொன்னேன் என்று விளக்கம் சொன்னாரே புட்டபர்த்தி சாய்பாபா? அதை விடவா பெரிய விருது?  "என் தந்தையை நேரில் பார்த்தது போல இருந்தது!" என அய்யா.வ.உ.சிதம்பரனாரின்  மகன் சொன்னாரே? அதை விடவா பெரியவிருது ?  "என் தந்தையின் காலில் விழக்கூட இடம் காலம் பார்ப்பேன். ஆனால் அவரை எங்கு கண்டாலும் காலில் விழுந்து வணங்குவேன்!" என தன் தந்தையின் மேல் அன்பும் மரியாதையும் வைத்துள்ள ஒரு சிவாஜி ரசிகன்சொன்னது இது.. இதைவிடவா பெரிய விருது!  சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் "பத்மநாபா! போய் விட்டாயா?" என  ஒரு முதியவர் உருகி சத்தமிட்டாரே? அதை விடவா பெரிய விருது?  இந்திய பிரதமருக்கு அடுத்ததாக நீங்கள் தான் இந்த நயாகரா நகருக்கு மேயர்? எ...

சிவாஜியின் டாக்டர் வேடங்கள்

படம்
சினிமாவில் டாக்டர் வேடம் செய்த நடிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.துண்டு துக்கடா காட்சிகளில்  இருந்து அதிகம்  நாலைந்து காட்சிகள் மட்டுமே வந்து போகும் காட்சிகளாக படங்களில் டாக்டர் வேடங்கள் செய்திருப்பார்கள். ஸ்டார் அந்தஸ்து பெற்ற பெரும்பாலான எல்லா பெரிய நடிகர்களும் டாக்டர் வேடத்தை செய்திருப்பார்கள். நடிகர் திலகம் ஒரு வேடத்தை செய்து விட்டால் அதற்குப் பிறகு அந்த வேடத்தில் சிறப்பாக செய்தவர்கள் யார் என்று நாம் தேட வேண்டிய அவசியம் இருக்காது. நடிகர் திலகம் திரையில் மருத்துவராக தோன்றி நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் காலத்தால் அழியாதவை. 1) பாலும் பழமும் 2) நவராத்திரி 3) நிறைகுடம் 4) அண்ணன் ஒரு கோயில் 5) Dr . சிவா 6) மனிதரில் மாணிக்கம் 7) நல்லதொரு குடும்பம் 8) கீழ் வானம் சிவக்கும் 9) தாம்பத்தியம் இந்த டாக்டர்  வேடத்தை அதிக அளவு செய்த கதாநாயகன் என்ற வரிசையிலும் நடிகர்திலகமே முதலில் இருக்கிறார் . நடிகர் திலகம் பல திரைப்படங்களில் வேறு சில நடிகர்களும் நடித்த டாக்டர் வேடங்களும் நல்ல பெயர் வாங்கித் தந்தவை. உதாரணத்துக்கு சில .. தெய்வமகன் படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் உயர்ந்த மனிதன் படத்த...

சிவாஜின்னா யாரப்பா?

படம்
இதுவரைக்கும் வந்த ஹீரோக்கள்ல நடிப்புல யாருப்பா டாப் ஹீரோ ? சிவாஜிதான்ப்பா!  தமிழ்நாட்டுல யாருப்பா டாப்? சிவாஜிதான்ப்பா இந்தியாவிலே?  அதுவும் சிவாஜிதான்ப்பா!உலகத்துல .. அதுவும்  சிவாஜிதான்ப்பா .. சூட்டிங் ஸ்பாட்டுக்கு கரெக்ட் டையத்துக்கு  வர்ற நடிகன்  யாரப்பா? சிவாஜிதானப்பா... பெரிய வசனங்களாக இருந்தாலும் அதை தங்கு தடை இல்லாம பேசறதல  யாருப்பா டாப்பு?  சிவாஜிதானப்பா... அதிகமா வேஷம் போட்டு நடிச்ச ஒரு நடிகரை சொல்லுப்பா?  சிவாஜி தவிர வேற யாரப்பா! .. தமிழ் வந்து ஒரு மாநில மொழி, அப்படி தமிழ்ல வெளியான ஒரு படம் வெளிநாட்டு விருது வாங்கியிருக்கா?  இது 1959லயே சிவாஜி செஞ்சுட்டாருப்பா... விருது வாங்குற படமா இருந்தா கமர்சியலா ஓடி இருக்காதேப்பா?  அந்தப் படம்  கொட்டற மழை மாதிரி வசூல் செய்த படமப்பா! .. சிவாஜி நடிப்ப புடிச்ச பல பெரிய நடிகர்கள் இருந்தா  பேர சொல்லுப்பா? நடிக்கிற எல்லா நடிகர்களும் சிவாஜியோட நடிப்பதாப்பா நடிக்கிறாங்க. சிவாஜி படம் ஒரே மாதிரியா ,இல்லே,  பல மாதிரியாப்பா?  ஒரே படத்துல பல மாதிரிப்பா! சிவாஜி நடிச்ச நடிப்புல எதுப்...

ஒரே சமயத்தில் ஓடிய சிவாஜியின் 20 படங்கள்

படம்
ஞான ஒளி வெகுஜன மக்களுக்கு ஒரு சிலிர்ப்பூட்டும்  படைப்பு ஞான ஒளி என்றால் அது நிஜம்தான். இந்தப் படம் விளைவித்த தாக்கம் மிகவும் அதிகமானது. ஞான ஒளி படம் வெளிவந்த ஆண்டு 1972. . ஞானஒளி  வெளிவந்த சமயத்தில் சென்னையில் சிவாஜியின் படங்கள் ஒரு மகத்தான சாதனை செய்தது.அந்த சாதனை ஒரு சாதாரணமான சாதனை கிடையாது.  ஞான ஒளி 1972 ஆம் ஆண்டு சென்னையில் நான்கு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.அந்தத் திரையரங்குகள் பிளாசா பிராட்வே சயானி கமலா . அந்தக் காலத்தில் ஒரு நடிகரின் ஒரு படம் ஒரு திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும்போது சில சமயங்களில் அந்த நடிகரின் அதற்கு முன் வெளியான பழைய திரைப்படங்கள் இரண்டு அல்லது மூன்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும். மிகவும் பிரபலமான நடிகர் என்றால் நான்கு அல்லது ஐந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்.இது அந்த காலத்தில் வழக்கமான ஒன்றுதான்.  எல்லா நடிகர்களுக்கும் எப்போதாவது நிகழும் ஒரு விஷயம் தான். ஆனால் நடிகர் திலகத்தின் ஞான ஒளி திரைப்படம் வெளிவந்த அந்த 1972 ஆம் காலகட்டத்தில் ஒரே சமயத்தில் சென்னை நகரில் மட்டும் 20 திரையரங்குகளில் நடிகர் திலகத்தின் 20 திரைப்படங்கள...

சிவாஜியின் குதிரை சவாரிகள்

படம்
குதிரை சவாரியிலும் மன்னர் நடிகர்திலகம் .. நடிகர்திலகம் நடிப்பில் மட்டுமல்ல வேறு பல சிறப்பான கலைகளையும் தெரிந்து வைத்திருந்தார். ஆடல் கலைகள் ,பாடல் பாடுவது என்று அந்த கலைகளையும் தெரிந்து வைத்திருந்தார். அது போக குதிரை சவாரி செய்வதிலும் நிகரற்றவராக இருந்தார். 70 வயதுகளில் அவர் அமெரிக்கா சென்ற போது நீல நிற ஜீன்ஸ் பேண்ட் டி-ஷர்ட் ,கௌபாய் கேட் அணிந்து குதிரையில் அமர்ந்தபடி அவர் போஸ் கொடுத்தார். அந்தப் புகைப்படம் கூட இணையத்தில் வைரலானது. குதிரையில் அமர்ந்து அவர் போஸ் கொடுத்த அந்தப் புகைப்படம் எல்லோராலும் ரசிக்கப்பட்டது. திரைப்படங்களில் குதிரையில் அமர்ந்து அவர் நடித்த காட்சிகள், குதிரைசவாரி செய்து கொண்டே  பாடும் காட்சிகள், ஆக்சன் காட்சிகள், குதிரை சவாரி காட்சிகள் என்னென்ன  படத்தில் இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம். உத்தமபுத்திரன் திரைப்படத்தில் நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.அந்த இரட்டை வேடத்திலும் அவர் குதிரை சவாரி செய்வது போல காட்சிகள் இருக்கும். படத்தின் இறுதி கட்ட காட்சியில் ரதத்தில் செல்லும் விக்கிரமனை புயல் வேகத்தில் துரத்துவார் பார்த்திபன். இது ஒரு அட்டகாசமான...

71 வயதிலும் சபரிமலைக்கு சென்ற சிவாஜி

படம்
71 வயதிலும் சபரிமலைக்கு சென்று வந்த சிவாஜி... நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 1999 ஆம் வருடம் சபரிமலை சென்றார். அப்போது தன் மனைவி கமலா அம்மாவையும் சபரிமலைக்கு அழைத்துச் சென்றார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கமலா அம்மாவோடு சபரிமலைக்கு சென்றது அதுதான் முதலும் கடைசியுமான நிகழ்ச்சியாகும். சிவாஜி அவர்கள் அதற்கு  முன்பு 1987 ஆம் வருடம் தான் சபரிமலைக்கு சென்று இருந்தார்.கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து 1999 ஆம் வருடம் தான் சபரிமலைக்கு சென்றார். சிவாஜி அவர்கள் சபரிமலைக்கு சென்றது 20 தடவைகளுக்கு மேல் இருக்கும். இதற்கு முன்பு பல தடவை சபரிமலை சென்ற போது நம்பியார் தலைமையில் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று இருக்கிறார். 1999 ஆம் வருடம் அவர் சபரிமலைக்கு சென்ற போது அவருடன் அவரது மனைவி கமலம்மாள் மகன் நடிகர் பிரபு தம்பி மகன் கிரி தங்கை மகன் குமார் பேரன் ஆகியோரும் சென்றார்கள். அன்னை இல்லத்திலேயே விசேஷ பூஜை நடத்தி இருமுடி கட்டும் நிகழ்ச்சி முடிந்ததும் மாலையில் சிவாஜி கணேசனும் அவரது மனைவி கமலாமாலும் மகன் பிரபுவும்  மற்றவர்களும் ரயில் மூலம் சபரிமலை புறப்பட்டு சென்றார்கள். கோட்டயத்தில் இறங்கி அ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற