இடுகைகள்

திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

மாதம் 2 படமாக 40 முறை ரிலிசான சிவாஜி படங்கள்

படம்
ஒரே மாதத்தில் நடிகர் திலகம் இரண்டு  படங்களை வெளியிட்ட சாதனைகள் . இந்த சாதனையை 40 முறை நிகழ்த்தியுள்ளார் நடிகர் திலகம். தான் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்து கடைசிவரை இந்த சாதனைகளை இடை விடாமல் செய்துள்ளார் நடிகர் திலகம். திரை உலகில் அபூர்வமான அதிசயமான இந்த சாதனைகளின் விபரம்.    1.. 1953 ஆம் ஆண்டு .. ஜூலை மாதம்..  நடிகர் திலகம் நடித்த இரண்டு படங்கள் வெளியானது. முதன் முதலாக 10.7.53 ல்  திரும்பிப்பார் திரைப்படமும் , 24.7.53 ல் அன்பு திரைப்படமும் வெளியானது . 2... இதே ஆண்டு  நவம்பர் மாதம்  .. நடிகர் திலகம் நடித்து இரண்டு படங்கள் வெளியானது. 5.11.53 ல் கண்கள் திரைப்படமும், 12.11.53 ல் 'பெம்புடு கொடுகு' தெலுங்கு திரைப்படமும் வெளியானது . 53 ஆம் வருடம் இச்சாதனை இரண்டு முறை நிகழ்த்தப்பட்டது  3... 1954 ஆம் ஆண்டு.. 9.4. 54 இல் இல்லற ஜோதி திரைப்படம், 13.4.54ல் அந்த நாள் திரைப்படம், 13.4.54 ல் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என இந்த மாதத்தில் மூன்று படங்கள் வெளியானது. அந்த நாள், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படங்கள் ஒரே நாளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கத...

முதல் நாள் ரிசல்ட் அப்செட் ஆக்கிருச்சு!

படம்
1985 ஆம் வருஷம் .. வருட தொடக்கத்திலேயே K.பாலாஜி நல்ல ஆரம்பத்தைதான் தொடங்கி வைத்தார்.கர்னல் ஜான் ஆபிரஹாம் கேரக்டரை செய்வதற்கு என்று பிறந்த ஒரே நடிகர்.பந்தம்  கௌரவத்தை கொடுத்து 100 நாளும் ஓடி நல்ல பெயருடன் வாழ்ந்தது.அடுத்து... சிவாஜியின்  250 வது படம் நாம் இருவர் வந்தது.ரொம்ப எதிர்பார்த்த படம்.AVM தயாரிப்பு.பிரபு நடிக்கிறார்.ரசிகர்களையே திருப்தி செய்யவில்லை அந்த படம் என்பதுதான் உண்மை.ஆனால் இதற்கு அடுத்ததாக அதிகம் எதிர்பார்க்காத படிக்காத பண்ணையார் ரசிகர்களுக்கு நல்ல ரசிப்பை கொடுத்தது.பெரிய ஹிட் என்று சொல்ல முடியாது. அடுத்து மறுபடியும் சிவாஜி பிரபு கூட்டணியில் நீதியின் நிழல் நேர்மை என தொடர்ந்து  வெளியாயின.இரண்டும்  எதிர்பார்க்கப்பட்ட படங்கள்.இதில் நீதியின் நிழல் சிவாஜிபுரொடொக்சன் தயாரிப்பு.பெரிய ஹிட் ஆகாமல் ஆவரேஜ் என்ற அளவில் போய் விட்டது. இந்த நிலையில்  , நடிகர்திலகத்தின் அடுத்த படம் என்ன ? 1985 ஆம் வருடம் வந்த எல்லாப் படங்களுக்கும் பட பூஜை விளம்பரம்,படம் தொடங்கப்பட்ட செய்திகள்  நாளிதழில் வெளியானது. ஒவ்வொரு சிவாஜி படமும் ரிலீசாகும் போது அடுத்த படம் என்ன என்பது...

சிவாஜியின் காஸ்ட்யூம்ஸ்

படம்
கௌரவம் படத்துலே பாரிஸ்டர் ரஜினிகாந்த் வேஷத்துக்கு சிவாஜி படம் பூராவூம் புல்ஹேன்ட் சர்ட்தான் போட்டிருப்பாரு.அந்த முழுக்கை சட்டன் பட்டனை லாக் செய்யாமா போட்டிருப்பாரு.படத்துலே ஒரு காட்சியிலே டைம் பாக்கறதுக்காக கீழ்க்கையிலிலே இருந்து சட்டையை மேலே உருவுவார் பாருங்க. அதை கூட எவ்வளவு ஸ்டைலிசா பண்ணியிருப்பாரு. இது ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் படத்துலே அவர் பண்ணுத பாக்க ரொம்ப அழகாயிருக்கும்.இதைப் பாத்து ரொம்ப  பேர் பாலோவும் பண்ணியிருக்காங்க. அதே  மாதிரி புதிய பறவை படத்துலே வெள்ளை கலர் பேன்ட் சட்டை போட்டுகிட்டு ,சட்டை ரொம்ப மெல்லிசா ,டிரான்ஸ்பரண்டா இருக்கும்.,சட்டைய இன்பண்ணி மேல்பட்டன் போடாம அவர் நடிச்சதும்  ரொம்ப பேருக்கு பேஷனா இருந்துருக்கு. நீதி படத்துலே ஒரே டிரஸ்தான் போட்டு நடிச்சிருப்பாரு. எங்களது பூமி பாட்டுக்கு மட்டும்  வெள்ளை சட்டை பேன்ட்லே வருவாரு.நீதி படத்துலே கர்சீப்பை தலையிலே கட்டி நடிச்சதும் ஒரு ஸ்டைலா இருக்கும். பராசக்தி படத்துலே கூட பைத்தியக்கார வேஷத்துக்கு மாறுனதுக்கு அப்புறம் ,அந்த தொப்பியை போட்ட பின்னாலே அவரோட ஸ்டைலும் மாறிப் போயிரும். தெய்வமகன் படத்துலே ஆரம்...

சிவாஜியின் சம்பவங்கள்

படம்
இது முதல் படமா ? தமிழ் திரை மண் அதிர்ந்த சம்பவம். 1952... வசனமா ? நடிப்பா ? யாரிந்த வி.சி.கணேசன். கணேசனுக்கு முன் இருந்த பட்டம் சொல்லியது.. அவர் சிவாஜி என்று... திரையுலகில் இனி அவர் தவிர்க்க முடியாத நடிகர் மட்டுமல்ல,யாராலும் தடை செய்ய முடியாத நடிகர் என்று ஓர் நாளில் முடிவானவர்... பராசக்திக்கு பின்பு வந்த பணம்.இதில்தான் அறிமுக நடிகர் போலே நடிப்பு.பராசக்தியில் 100 படம் நடித்ததை போல் நடிப்பு.ஆனால்  அதற்கு அடுத்த வெளியான பணம் படத்தில் அவ்வளவு ஆள் மாறாட்டம்.நம்பவே முடியவில்லையே ..அறிமுக படத்தில் புயலாக வந்த நடிகனா இவன் ? தமிழ்திரை கலையிலே புரட்சி நடிப்பை கொடுத்து தமிழ் மண்ணை கிடு கிடுக்க வைத்து  ராஜ அரியாசனத்தில் அமர்ந்து விட்டான் கணேசன் .அவரை சமுதாய பாபியாக,வில்லனாக நடிக்க வைத்தால் திரையுலகம் ஏற்குமா ?அதற்கு முன் கணேசன் நடிக்க ஒத்துக் கொள்வாரா ?இரண்டும் நடந்தது திரும்பிப்பார் படத்தில். சமூக படங்களுக்குத்தான் கணேசன் சரிப்படுவான் என்றும் பேசப்பட்டது.பிரசாத் எடுத்த மனோகரா அதை உடைத்தது.செந்தமிழும்  நாப்பழக்கம் என்றாலும் ,கணேசனுக்கு அது ஓர் பிறவி வரம். பாட்டில்லாத படத்தை யார் பார்...

என் தம்பி - கே ஆர் விஜயாவின் ஆக்சன் சம்பவம்

படம்
 என் தம்பி படத்தின் உருவாக்கம் ... கே. பாலாஜி தயாரித்த முதல் திரைப்படம் அண்ணாவின் ஆசை .தாதா மிராசிஇயக்கிய அந்த திரைப்படம் சுமாராகவே வெற்றி கண்டது.  அந்த படத்துக்கு கே. ஆர். விஜயா கணவர் திரு வேலாயுதம் நாயர் பைனான்ஸ் செய்தார்.  அந்த படத்தால்  நஷ்டம் ஏற்பட்ட செய்தியை பாலாஜி செல்வம் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போது நடிகர் திலகம்  ,கே.ஆர் .விஜயாவிடம் கூற , நான் கால்ஷீட் தருகிறேன் ,என்னை வைத்து படம் எடு, அந்த கஷ்டமும் முதல் படத்தில் ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளும் சரியாகும் என்று நடிகர்திலகம் கூற அப்போது பாலாஜி சந்தோசம் அடைந்தார்.  சிவாஜிகணேசன்- கே.ஆர்.விஜயா நடித்து கொண்டிருந்த செல்வம் படத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து சுஜாதாவின் தங்கை படத்திற்கான விளம்பரத்தை வெளியிட்டார்.   சிவாஜி கணேசனின் ஆஸ்தான திரைப்பட வசனகர்த்தாவான ஆரூர் தாஸ் கதை வசனம் எழுத, பாடல்கள் கவியரசர் கண்ணதாசன், இசை எம். எஸ். விஸ்வநாதன், ஒளிப்பதிவு முத்துசாமி, என அறிவிப்பு ஆகியது.  படத்தின் இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர் ஆக இருந்தால் மட்டுமே நான் இந்த படத்திற்கு மு...

சிவாஜி படங்களை காப்பியடித்த தமிழ் படங்கள்

படம்
தமிழ் சினிமாவுல நடிகர் திலகம் நடிச்ச படங்களை காப்பி அடிச்சு பல படங்கள் வந்திருக்கு. அதுல முக்கியமான சில படங்களை இந்த பதிவுலே நாம பாக்கலாம். 1958 ல் வந்த சிவாஜி படம் சபாஷ் மீனா. இதுல சிவாஜியோடு சந்திரபாபு நடிச்சிருப்பார் .இந்த படத்துல சிவாஜி பணக்கார இளைஞனா இருப்பார். சிவாஜியோட நண்பரா சந்திரபாபு நடிச்சிருப்பார். இந்த கதையை அப்படியே உல்டாவாக்கி கார்த்திக் கவுண்டமணி நடிச்சு 1996 லே உள்ளத்தை அள்ளித்தா அப்படிங்கற படம் வந்துச்சு . இந்தப் படத்துல கார்த்திக் பணக்கார இளைஞனா நடிச்சிருப்பார்.இந்தப் படத்தோட காட்சி அமைப்புகள் பெரும்பாலும் சபாஷ் மீனா படத்தை மையமாக வைச்சு எடுத்து இருப்பாங்க . 1963 வது வருஷம் வெளிவந்த சிவாஜி படம் நான் வணங்கும் தெய்வம்.  இந்த படத்துல விஞ்ஞானியா வர்ற நாகையா தான் கண்டுபிடிச்ச வித்தியாசமான மருந்தை சிவாஜி உடம்புக்குள்ளே செலுத்துவார்.அந்த மருந்தோட வீரியத்தாலே சிவாஜி விகாரமா  மாறி மிருக குணத்துக்கு மாறிடுவார்.இந்த ஒரு கருவை வைச்சு  பிரபு நடிச்சு 1989 லே ஒரு படம் வந்துச்சு.அந்தப் படத்துல இறந்து போன ஒரு மனிதனுக்கு செலுத்தற மருந்து அவனை உயிர் பிழைக்க  வெச்சு ம...

சிவாஜி படங்களில் இரட்டை வேடங்களில் நடித்தவர்கள்

படம்
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களில் இரட்டை வேடம் செய்தவர்கள் யார் யார் ? அவை என்னென்ன திரைப்படங்கள் என்று இதில் பார்க்கலாம். முதலில் சந்திரபாபு. சந்திரபாபு இரட்டை வேடத்தில் நடித்த சிவாஜி படம் சபாஷ் மீனா.3.10.1958 ல் வெளியான படம் இது.சிவாஜியை விட சம்பளம் அதிகம் வேண்டும் என்று சந்திரபாபு நிபந்தனை விதித்த படம் .தயாரிப்பாளர் பந்துலு சிவாஜியிடம் சந்திரபாபு கேட்டதைச் சொல்ல சிவாஜியும் ,அவன் கேட்ட சம்பளத்தை கொடுத்து விடுங்கள் என்று சொல்லிவிட்டார்.சபாஷ்மீனா காமெடி காட்சிகளை  பல திரைப்படங்கள் நகலெடுத்து உருவாகியுள்ளன.சந்திரபாபு அப்பாவி இளைஞன் ,மெட்ராஸ் பாஷை பேசம் கை ரிக்ஷா இழுக்கும் தொழிலாளி என இரு வேடங்களில் சிவாஜியுடன் இந்த படத்தில் நடித்துள்ளார்.அப்பாவி சந்திரபாபுவுக்கு ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி என்பது குறிப்பிடத்தக்கது.சபாஷ் மீனா சூப்பராக ஓடி நல்ல வசூல் செய்து 100 ஓடிய வெற்றி திரைப்படம் ஆகும். பார்த்தால் பசி தீரும். கமலஹாசன். சிவாஜியின் 75 வது படம்.ஏவி.எம் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். A.C.திருலோகச...

சிவாஜி வாங்குன முதல் பரிசு

படம்
வெளியில ராஜா வேசங்களா போட்டு நடிச்சிட்டு இருந்தாலும் அவங்களோட நெஜ வாழ்க்கையிலே  உள்ள போய் பார்த்தா தான் அவங்களோட வறுமையும் சோகமும் தெரியும்.Mr.ராதா கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை , வருமானத்தையெல்லாம் தான் நடத்திட்டு வந்த சரஸ்வதி கானசபா நாடக கம்பெனியிலே இழந்துட்டார்.MR.ராதாகிட்டே தனக்குன்னு எந்த தனிப்பட்ட சம்பளம் வாங்காம நடிச்சிட்டு வந்தார் சிவாஜி.சிவாஜிக்கு நடிக்கறதுக்கு வாய்ப்பு வேணும் .அதுதான் எல்லா நாடகத்துலேயும் சிவாஜியை இருக்க வெச்சது. ராதா நாடக கம்பெனி நொடிஞ்சு போயிட்டதாலே ,சிவாஜி கேரளாவிலே நாடகம் நடத்திட்டு வந்த கிருஷ்ணப்பிள்ளை நாடக கம்பெனியில சேந்தார். கேரளாவுலே நடிச்ச நாடகத்துலே எல்லாம் பொம்பளை வேஷத்துலே நடிக்கற வாய்ப்புத்தான் சிவாஜிக்கு கிடைச்சது.ஒரே ஒரு இடம் நம்மாரா அப்படிங்கற இடத்துலேதான் ஆண் வேஷத்துலே  நடிக்கறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. அந்த நாடகத்துலேயும் ராஜ பார்ட் வேஷம் எல்லாம் இல்லே .அது ஒரு திருடன் வேஷம்.ராஜபார்ட்டா நடிச்ச நடிகர்களே கொடுக்காத நடிப்பை அந்த திருடன் வேஷத்துலே சிவாஜி பிரமாதப்படுத்துனாரு. தோள்களையெல்லாம் நல்லா முறுக்கி காட்டி ,கண்ணுலே காட்டுன மிரட்டலான...

தெய்வமகன் ஓப்பனிங் சீன்

படம்
எனக்கு புடிச்ச ஓபனிங் சீன் தெய்வமகன்  ஓபனிங் சீன்.கதாநாயகனோட ஓபனிங்சீனை பல விதமா பல படத்துலே வித்தியாசமா காமிச்சிருக்காங்க.ஆனா தெய்வமகன்லே வர்ற , கதாநாயகனை காமிக்கிற ஓபனிங் சீன் மத்த எல்லா படத்துலேயும் இருந்து ரொம்ப டிபரெண்டான ஒண்ணு. படம் ஆரம்பிச்சு 25 ஷாட்டுலேயும் கதா நாயகன் இருப்பார்.ஆனா அந்த 25 வது ஷாட்டுலேதான் முகத்தையே காட்டுவாங்க.இப்படி ஒரு காட்சி எந்த தமிழ் படத்துலேயும் இருந்திருக்க வாய்ப்பில்லே.. ஷாட் பை ஷாட்டா அதை பாக்கலாம். படம் ஆரம்பிச்சதும் பெரிய பில்டிங்கை காட்டுவாங்க.ரெண்டு ஷாட்டா பிரிச்சு கீழே இருந்து மேலேயும், சைட் வைட்டாவும் அதாவது  நீள அகலமாகவும் அத காட்டுவாங்க. இதுக்கு அடுத்த ஷாட்டுலே இருந்து தெய்வமகன் சங்கர் Introduction. காட்சி 1 ஷாட்1 முதல் காட்சி முதல்ஷாட். ஆபீஸ் ரூமை காமிப்பாங்க. நடிகர்திலகம் இடது கையை தூக்கி டைம் பார்ப்பார்.அதே இடது கை.இப்ப ரைட் சைடிலே கட் ஷாட்டா காமிப்பாங்க.5 செகண்ட்க்குள்ளே இந்த ரெண்டு  ஷாட்டையும் காமிச்சுருவாங்க.இந்த ஷாட்டுலே எந்த டயலாக்கும் இருக்காது. 2 வது ஷாட்: கதவு தட்டற சத்தம்.ஸ்டெனோ கதவை திறந்து உள்ள வர்ற ஷாட்டு.இப்ப சிவா...

சிவாஜி பத்மினியின் 100 நாள் திரைப்படங்கள்

படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பத்மினி ஜோடியாக நடித்து 100 நாள் ஓடிய திரைப்படங்களைப் பற்றிய விவரங்களை இந்த பதிவில்  பார்க்கலாம். சிவாஜி கணேசன் பத்மினி சேர்ந்து நடித்த  திரைப்படங்கள். பணம் அன்பு இல்லறஜோதி கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி தூக்கு தூக்கி எதிர்பாராதது  காவேரி கோடீஸ்வரன் மங்கையர் திலகம் ராஜா ராணி  அமர தீபம் புதையல்  பாக்கியவதி உத்தம புத்திரன்  தங்கப்பதுமை மரகதம் தெய்வப்பிறவி புனர்ஜென்மம்  ஸ்ரீவள்ளி  செந்தாமரை  நான் வணங்கும் தெய்வம் பேசும் தெய்வம் பாலாடை  திருவருட்செல்வர் இருமலர்கள் திருமால் பெருமை தில்லானா மோகனாம்பாள் விளையாட்டு பிள்ளை வியட்நாம் வீடு இரு துருவம் குலமா குணமா தேனும்  பாலும் தாய்க்கு ஒரு தாலாட்டு  லட்சுமி வந்தாச்சு.  என்று கிட்டத்தட்ட 35 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்கள். மேலே சொன்ன திரைப்படங்களில்  13/4/1954ல் வெளிவந்த கல்யாணம் பண்ணியும் பிரம்மச்மசாரி 100 நாள் ஓடி வெற்றி கண்ட திரைப்படம் ஆகும் .இது பந்துலு தயாரித்த திரைப்படம் ஆகும் .இந்தப் படத்தை டைரக்ட் செய்தவர்  பா.நீலகண்டன் .சிவாஜி நடித்த ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற