இடுகைகள்

திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

தங்கப்பதக்கம் சூப்பர் காட்சி

படம்
போலீஸ் ஸ்டோரி படம்னு எந்த படம் வந்தாலும் SP.சௌத்ரியை நினைச்சுப் பாக்காம இருக்க முடியாது.தங்கபதக்கம் ரொம்ப ஆளுமை செஞ்சிட்டு இருக்கற படம்.எந்த சீன் வந்தாலும் அந்த சீனை சிவாஜி  தன் பக்கம் திருப்ப வெச்ச படம்.ஒவ்வொரு சீனை மட்டுமல்ல ஒவ்வொரு ஷாட்டையும் உச்சமா காட்டுன படம்.இந்த பதிவுலே ஓரு சீனை எப்படி க்ரியேட் பண்ணி இருக்காங்க அப்படிங்கறதை பாக்கலாம்.இது ஒரு ரெண்டரை நிமிஷ காட்சி.பெரிய ஆக்ஷனோ ,திருப்பமோ , சஸ்பென்சோ இல்லாத ஒரு சாதாரண காட்சி தான். இந்த ஒரு சாதாரண காட்சியை கூட நடிகர்திலகம் எப்படி கொண்டு போயிருக்கார்னு பாக்கணும். சிவாஜி ஸ்ரீகாந்த் சம்பந்தப்பட்ட காட்சி இது.தனிக்குடித்தனம் போறதா ஸ்ரீகாந்த் சிவாஜிகிட்டே பேசற காட்சி. ரெண்டரை நிமிஷ காட்சி .மொத்தம் 12 ஷாட்டுகள்.இந்த காட்சிய ஒரே பிரேம்லே  ரெண்டு பேரும் ரெண்டு மூணு ஷாட்டுலே பேசி முடிக்கற மாதிரி எடுத்திருக்கலாம்.ரொம்ப ஸிம்பிளான சீன்தான் இது. சிவாஜி ஸ்ரீகாந்த் பேசறத அவங்க சைட்லே இருந்து காமிக்கற மாதிரி எடுத்திருப்பாங்க. இந்த காட்சி ஆரம்பிக்கறது எப்போன்னா பிரமீளா சிவாஜிகிட்டே ,மாமா , சக்கரைக்கு காபி போதுமான்னு  கேட்டுட்டு ,சிவாஜி...

கலாட்டா கல்யாணம்

படம்
சென்னை அண்ணா நகரில் அமைந்திருக்கும் உலக வர்த்த மைய கட்டிடம் மிகவும் புகழ் வாய்ந்தது.ஏராளமான சினிமா படத்தின் படப்பிடிப்புகள் இங்கு படம் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தின் உச்சியில் நின்று பார்த்தால் சென்னை நகரையே கழுகுப் பார்வையில் பார்த்து விடலாம்.வளையம் வளையமாக சுற்றி மேலே ஏறுவது போன்ற கட்டமைப்புடன் ,வித்தியாசமாக மேலை நாட்டு பாணியில் உருவாக்கப்பட்ட கட்டிடம் இது. பல சிறப்புகள் கொண்ட இந்த கட்டிடத்தில் முதன்முதலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது ஒரு சிவாஜி படம்தான். என்னபடம் என்ன காட்சியை அங்கு எடுத்தார்கள் என்பதை சொல்லும் முன்பு ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். தமிழக அரசு நிதி திரட்டிக் கொடுப்பதற்காக சினிமா கலைஞர்கள் எல்லாம் இணைந்து ஆறு ஊர்களில் நட்சத்திர இரவு நடத்தினார்கள். இது சிவாஜி ஸ்ரீதர் தலைமையில் நடத்தப்பட்டது.இந்த நட்சத்திர இரவில் ஒரு காமெடி நாடகமும் நடத்தினார்கள்.அவசரம் அவசரமாக சித்ராலயா கோபு எழுதிய நாடகம் இது. சிவாஜியுடன் நிறைய நடிக நடிகையர் நடித்த நாடகம் இது.இந்த நாடகத்துக்கு  அதிக வரவேற்பு கிடைத்தது. இதை சினிமாவாக எடுத்தால் என்ன என்று ஒரு ஐடியா சிவாஜிக்கு பிறக்க,சினிமாவாகவும்...

நடிகை சுஜாதா

படம்
விஜயலட்சுமி என்ற இந்த பெண் தமிழ் சினிமாவின் ஒரு சிறந்த நடிகை என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள்.தமிழ் தவிர தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்தவர். விஜயலட்சுமி என்ற நடிகையா ?இந்த பெயரை சொன்னால் யாருக்கும் தெரியாததுதான். சினிமாவில் இவர் பெயர் சுஜாதா. அவள் ஒரு தொடர்கதை சுஜாதாதான். இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் சுஜாதா. சுஜாதாவின் தந்தை கேரளாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்று பேராசிரியராக பணி புரிந்த போது இலங்கையில் பிறந்தவர் சுஜாதா.  தந்தையின் பணி முடிந்ததும் கேரளாவில் வளர்ந்தார். 1971 ல் தபஷ்விணி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் சுஜாதா. 1971 ல் எர்ணாகுளம் ஜங்சன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது k.பாலசந்தரின் கண்ணில் பட்டார்.1974 ல்  அவள் ஒரு தொடர்கதை மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார் சுஜாதா. அதன் பிறகு வரிசையாக படங்களில் நடித்து புகழ் பெற்றார்.70 80 களில் முண்ணனி நடிகையாக இருந்த போது ஜெயகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இரு குழந்தைகளும் பிறந்தன. திருமணம் முடிந்து சில காலம் ஆனதும் இவருடைய வாழ்க்கையில் என்ன பிரச்சினை வந்தது என்று யா...

1980 -.R.K.நகர் தேர்தல் வெற்றி

படம்
சென்னையின் ஆர் கே நகர் தொகுதி திராவிட கட்சிகளின் கோட்டை ஆகும். திராவிட கட்சிகளின் கோட்டையாக இருந்த ஆர் கே நகரை தனது ரசிகர் மன்ற தலைவரை நிறுத்தி வெற்றி பெறச் செய்து வரலாற்று வெற்றியை பதியச் செய்தவர் சிவாஜி.எப்படி வந்தது இந்த வெற்றி?  இந்தப் பதிவில் இது பற்றிய செய்திகளை நாம் விரிவாக பார்க்கலாம்  1980  தமிழக தேர்தலில் திமுக- காங்கிரஸ்  கூட்டணி அமைத்து போட்டியிட்டது.பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்கள் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதை விரும்பவில்லை. காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதையே பலர் விரும்பினார்கள். அப்படி தனித்து போட்டியிட்டால் இனி வரும் அடுத்த தேர்களிலாவது கட்சியை பலப்படுத்த முடியும் என்ற எண்ணமே காங்கிரஸ் தொண்டர்களிடம் இருந்தது. அந்த எண்ணம்தான் சிவாஜியிடமும் சிவாஜி ஆதரவு தலைவர்களின் மனதிலும் இருந்தது. காமராஜர்  மறைவுக்கு பின்பு, அந்த ஒரு நேரமே காங்கிரசுக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது.அதை காங்கிரஸ் தலைமை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. அதை சரியாக பயன்படுத்தி இருந்தால் காங்கிரஸ் தனித்த பலத்துடன் வளர்ச்சிஅடைய வாய்ப்பு கிடைத்திருக்கும். கழக கட்சிகளின் தோளில் உட்...

3 இன்டஸ்ட்ரி ஹிட் படங்கள்

படம்
தமிழ் சினிமா கேரியர்லே சிவாஜியோட மூணு படங்களோட கதை உருவாக்கம் சாதனைகள் ஒரு வரலாற்று பதிவுகள்ன்னு சொல்லலாம்.வசந்தமாளிகை பட்டிக்காடா பட்டணமா தங்கப்பதக்கம் படங்கள்தான் அது.மூணு படங்களுமே வெள்ளிவிழா ஓடுன படங்கள்.மூணு படங்களுமே ஒரே நேர்க்கோட்டுலே போற கதை அமைப்பை கொண்ட படங்கள்.எந்த விதமான திடீர் திருப்பங்களோ சஸ்பென்சோ த்ரில்லர்ரோ கிடையாது. டைட்டில் ஆரம்பிச்சா கடைசிலே  வணக்கம் போடற வரைக்கும் எந்திரிச்சு போக வைக்காது.சிவாஜியோட சாம்ராஜ்யம் மூணு படத்துலே கொடி கட்டி பறக்கும். வாணிஸ்ரீக்கு வசந்த மாளிகைன்னா, ஜெயலலிதாவுக்கு பட்டிக்காடா பட்டணமான்னா, கே ஆர் விஜயாவுக்கு தங்கப்பதக்கம். அந்த படம் வேற .இந்த படம் வேற .அடுத்த படம் அது வேற மாதிரி. வசந்த மாளிமை காதல் சப்ஜெக்ட்.. பட்டிக்காடா பட்டணமாவிலே தமிழ் கலாச்சாரம்.. தங்கப்பதக்கம் ஒரு காவல் துறை அதிகாரியோட நேர்மை கடமையை சொன்ன படம். மூணு படங்களும் மூணு டிராக். ரயில் மாதிரி ஜிவ்வுன்னு திரைக்கதை போற படங்கள் . வசந்தமாளிகைலே நீங்க குடிக்ககூடாதுன்னு காதலி சொல்வாங்க. பட்டிக்காடா பட்டணமா படத்துலே நான் அப்படித்தான் இருப்பேன்னு சொல்ற கதாநாயகி. தங்கபதக்கத்துலே எ...

சிவாஜி- சோ

படம்
பெற்றால் தான் பிள்ளையான்னு ஒரு நாடகம்.1962 லே நடந்துச்சு. நாடகத்துக்கு நல்ல வரவேற்பு .அந்த நாடகத்தை சினிமாவா எடுத்தார் பீம்சிங்.வழக்கப்படி பீம்சிங் பா வரிசை டைட்டிலா பார் மகளே பார்னு வெச்சார்.அந்த நாடகத்துலே நடிச்சார் சோ.மெட்ராஸ் பாஷையை இயல்பா பேசி நடிச்சிருப்பார்.சினிமாவா எடுத்தப்போ சோவையே நடிக்க வெச்சுடுங்கன்னு சொல்லிட்டார் சிவாஜி. அப்படி சினிமாவுக்குள்ளே வந்தவர் தான் சோ. பார் மகளே பார் படம்  சோவுக்கு நல்ல பேர் வாங்கி கொடுத்துச்சு. மகாகவி காளிதாஸ் பச்சைவிளக்கு படங்கள்லே சோவை நடிக்க வெக்க சிவாஜி சிபாரிசு பண்ணுனார்.ஆனா சோ அந்த படங்கள்லே நடிக்கலே. பார் மகளே பார்னு ஒரு படம் போதும்னு முடிவெடுத்துட்டார். ரசிகர்களுக்கு இந்த படத்தோட தான் நடிக்கறதுக்கு விடுதலை கொடுத்துடலாம்னு முடிவு எடுத்திருந்தார் அப்போ.வீணை பாலசந்தர் தான் மறுபடியும் சோவை சினிமாலே நடிக்க வெச்சார் . அதுக்கு பின்னாலே சிவாஜியோட நிறைய படங்கள்லே நடிச்சார் சோ. இதுக்கு பின்னாலே நடிச்ச ஒரு சிவாஜி படத்துலே சோவுக்கு ஒரு குறிப்பிட்ட காட்சிலே சீரியஸா நடிக்கற மாதிரி காட்சி .சோவுக்கு சீரியஸா நடிப்பு வரலே. சிவாஜியும் சோவுக்கு பல தடவை ச...

திருலோகசந்தர் சிவாஜி

படம்
இயக்குனர் திருலோகசந்தர் நடிகர் திலகம் சிவாஜியை வச்சு 20 படங்களை டைரக்ஷன் பண்ணி இருக்கார். தெய்வமகன் உள்பட பல பெரிய மாஸ்டர்பீஸ் படங்களை டைரக்சன் செஞ்சவர் இவர்.தமிழ் சினிமாலே லெஜஜெண்ட் ரைடக்டரா இருந்தவர் திருலோகசந்தர் .இந்த திருலோக சந்தர் யார் ?அவர் பாலாஜியுடன் கூட்டு சேர்ந்தது எப்படி? நடிகர் திலகத்துடன் இணைந்தது எப்படி ?என்பதை பற்றி இந்த பதிவுலே நாம் பார்க்கலாம். 1950 ஆவது வருஷம் ஜனவரி மாசம் ஆறடி உயரத்துக்கு மேலான இருபது வயது உடைய  இளைஞர் ஒருத்தர்  'குமாரி' என்ற படத்தை யாரிச்சு டைரக்ஷன் பண்ணிட்டு இருந்த  பத்மநாப ஐயர்கிட்டே மூன்றாவது உதவியாளராக வந்து சேர்ந்தார் . ரொம்ப துறு துறுப்பும் நேர்மையும் கொண்ட அந்த இளைஞரோட கேரக்டர் எல்லாருக்கும் பிடிச்சது. 1960 வது வருஷம் டிசம்பர் மாசம் ஏவிஎம் நிறுவனத்தினோட சார்பு நிறுவனமான முருகன் பிரதர்ஸ் பட நிறுவனத்துகிட்டே ரெண்டு கதையை சொன்னார் . முதல் கதை வரலாற்று கதை .. இரண்டாவது கதை சமூக பின்னணி  கொண்ட கதையாகவும் இருந்துச்சு. அந்த ரெண்டு கதைகளும் முருகன் பிரதர்சுக்கு ரொம்ப பிடிச்சது.சமூகப் பின்னணி கொண்ட கதையை விலைக்கு வாங்கி பீம்ஸிங் டைர...

என் தம்பி -என்ன ஸ்பெசல்?

படம்
k.பாலாஜி சிவாஜியை வெச்சு எடுத்த முதல் படம் தங்கை. இதுக்கு அடுத்ததா சிவாஜியை வெச்சு எடுத்த படம் என்தம்பி . 1968 லே வந்துச்சு. கதைக்காக எதை செலக்சன் பண்றதுன்னு பாலாஜி முடிவு செஞ்சப்போ அவருக்கு கை கொடுத்தது ஒரு தெலுங்கு படம்.நாகேஸ்வரராவ் ஜெயலலிதா நடிச்சு தெலுங்குலே ஹிட்டான ஆஸ்திபரலு தான். இந்த படத்தை எடுக்கச் சொல்லி ஜடியா கொடுத்தவர் ஜாவர் சீதாராமன். இந்த படம் ஒரு குடும்பக்கதையா இருந்தாலும் சில ஆக்ஷன் காட்சிகளும் படத்துலே இருந்துச்சு. ஆரம்பத்துலே அரச கதையிலே சிவாஜி நடிச்ச்சிட்டு இருந்தப்போ வாள்சண்டை போட்டு நடிச்சிருந்தார்.கொஞ்சம் கேப் ஆயிடுச்சு.இந்த படத்துக்காக மறுபடியும் வாள் சண்டையிலே சிவாஜி நடிச்சார்.பல வருஷம் தூங்கிட்டு இருந்த வாளை சிவாஜி மறுபடியும் இந்த படத்துக்காக எடுத்தப்போ அது வேற ஒரு அட்ராக்சன்லே அட்ரா சக்கைன்னு சொல்ல வெச்சது. பேன்ட் சட்டை போட்ட கையிலே ஒரு வாள்.சிவாஜி கொடுத்த போஸை பாத்தப்போ ரசிகர்களை குதியாட்டம் போட வெச்சது. நின்ன போசுக்கே இப்படின்னா ரீலா ஓடுனத பாத்தப்போ வேற லெவலா இருந்துச்சு. வாள் சண்டை மட்டும்தானா அசர வெச்சது? அதை விட சாட்டையை வெச்சே கலக்கியெடுத்தார் சிவாஜி....

sivaji mgr film

படம்
நடிகர்திலகம் சிவாஜியும் எம்ஜிஆரும் நடித்த படம் கூண்டுக்கிளி.இந்த படம் 1954 ஆம் ஆண்டு வெளி வந்தது. இரு தரப்பு ரசிகர்களால் நடந்த சண்டை சச்சரவுகளால் மேற்கொண்டு இருவரும் இணைந்து நடிக்காமல் போனது.சரியான கதை அமைப்பு ,அதற்கான முயற்சிகள், வாய்ப்பும்.. அதற்கு பின்பு அமையாமல் போனதும் ஒரு காரணம்.இருந்தாலும் நடிகர்திலகமும் எம்ஜிஆரும் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பும் சில ரசிகர்களிடம் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டே நெடுங்காலமாக இருந்து வந்தது. நடிகர்திலகம் நடிக்க வந்து இரண்டே வருடங்களில் கூண்டுக்கிளி படம் வந்து அதோடு அந்த இருவர் கூட்டணி நடைபெறாமல் போய் விட்டது.இது நடந்து கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்து  அதற்கு ஒரு வாய்ப்பு வந்தது.அதற்கான முயற்சியை மேற்கொண்டவர் தயாரிப்பாளர் K.பாலாஜி.இருவரையும் வைத்து பாலாஜி செய்ய நினைத்த படம் என்ன? அதற்கு பின் என்னநடந்தது? 1975 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வெளியானஇந்தி  படம் ஷோலே.தர்மேந்திரா அமிதாப்பச்சன் சஞ்சீவ்குமார் ஹேமாமாலினி ஜெயாபாதுரி  அம்ஜத்கான் ஆகியோர் முக்கிய  வேடங்களில் நடித்த திரைப்படம் இது. ஷோலே இந்தி த...

சாந்தியில் வெளியான 82 சிவாஜி படங்கள்

படம்
நடிகர்திலகம் சிவாஜியின் சொந்த திரையரங்கான சென்னை சாந்தியில் வெளியான சிவாஜி படங்கள் 82.அந்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம். அதற்கு முன்பு சாந்தி திரையரங்கை பற்றிய ஒரு பிளாஸ்பேக். சாந்தி தியேட்டர் 1961 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதை கட்டியவர் ராஜராஜ சோழன் தயாரிப்பாளரான ஜி.உமாபதி.இவருடன் இணைந்து சிவகங்கை ராஜா சண்முகராஜாவும் இதை கட்டினார்கள். சாந்தி தியேட்டருக்கு முதலில் வைக்கப்பட இருந்த பெயர் மனசாட்சி. பின்பு சாந்தி என பெயர் சூட்டப்பட்டது.உமாபதி அவர்களின் மகள் பெயரும் சாந்திதான்.சாந்தி தியேட்டரை திறந்து வைத்தவர் முதல்வர் காமராஜர்.சாந்தி தியேட்டரின் பங்குகளை சிவாஜி விலைக்கு வாங்கி தன் பெயரில் மாற்றம் செய்தார்.தமிழகத்தின் முதல் AC தியேட்டர் சாந்திதான். சாந்தி தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் படம் தூய உள்ளம். சிவாஜியின் ஆலோசனை படி  தியேட்டரின் உள்ளே,  திரையுலகிற்குப் பெருமை சேர்த்த பிரபலங்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன.  அணிவகுத்து நிற்கும் இந்த புகைப்படங்களையும் ஒரு சினிமாவுக்குரிய ஆர்வத்துடன் நின்று ரசிகர்கள் பார்ப்பார்கள். தனது சக போட்டியாளரான எம்.ஜி.ஆரின...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற