இடுகைகள்

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

நடிப்பின்எழுச்சியும் வசன புரட்சியும்

படம்
எழுச்சியும், வசனப் புரட்சியும்.... இவ்வளவு பெரிய வசனமா? என்னாலே முடியுமா? நான் என்ன சிவாஜியா? இப்படி ஒரு நடிகர் கேட்டாராம். நடிகர்திலகம்.. அது கொட்டும் மாமழையப்பா! இடையில் தங்காது. நேரே பூமியை நனைக்கும். 'மாப்ள மாதிரி இருக்கேன்னா'  மூணே சின்னவார்த்தை.பலே பாண்டியாவில் ராதாவிடம் சொல்லும் அழகே தனி.உடம்பை கூனி நாணி அந்த அங்க அசைவுக்குத் தகுந்த மாதிரி அந்த உச்சரிப்பு வரும். பெரிய பெரிய வசனங்களை எல்லாம் சொல்ல வேண்டியதில்லை.ஒத்த வார்த்தை பேசினாலும் அழுத்தந் திருத்தமாக இருக்கும். இங்க பாருங்க சார்! இங்க நின்னு இதைப் பேசறீங்க! அப்பிடியே நடந்து கொஞ்சம் லெப்ட்ல திரும்பி இதை பேசறீங்க! பின்ன முன்னுக்கு வந்து குளோசப்ல உத்துப் பாத்து இதைப் பேசுங்க! நீங்க தூரத்துல நிக்கறீங்க பாருங்க! அங்க தா நாலு பக்க டயலாக் இருக்கு! குளோசப்ல ரெண்டே வரிதான். சூட்டிங் நடக்கையிலே அந்த பிரபல நடிகர் நாலு பக்க டயலாக்குக்கு அவசர அவசரமா பேசிட்டு, குளோசப் ஷாட்டுக்கு மட்டும் பத்து டேக் வாங்கினாராம்.அந்த நாலுபக்க டயலாக்குக்கு சரியான பாவனையும் இல்லே.எல்லாம் வாயசைப்புத்தான்.எல்லாம் டப்பிங்ல பாத்துக்கலாம்னு கிளம்பிட்டாராம்...

50 வருடங்களாக

படம்
50 வருடங்களாக சிவாஜியின் நடிப்பை மாய்ந்து மாய்ந்து ரசித்தான் சிவாஜி ரசிகன். யோசிக்க எங்கே நேரம்? படையாய் வந்தன 300 படங்கள் . பார்க்கிறான் .. பார்க்கிறான். பார்த்துக்  கொண்டே தான் இருந்தான்.. சிவாஜி ரசிகன். சலிக்கவே இல்லை.. அவர் 300 படங்கள் தந்தார். ரசிகனோ  ஒரு படத்தையே 300 தடவை பார்க்கிறான். சிவாஜியின் நடிப்பு..நடிப்பு.. அதைத்தாண்டி அவன் கவனம் எதிலும் இல்லை. கலையைப் பொறுத்த வரை அது ஒன்றே அவனுக்கு.. ..சட்டென அந்த .. 2001 ஜுலை 21 உடைந்து போனது. அன்று அன்னைஇல்லத்தில் கூடிய கூட்டத்தை பார்த்து  அவனே திகைத்துத்தான் போனான் .. அப்போதிருந்து தான் அவனே யோசிக்கிறான். சிவாஜி செய்தவைகளை நினைத்து நினைத்து மாய்கிறான். சிவாஜியின் நடிப்பை விட அந்த மாமனிதனின் சுயம் அவனை கண்ணீரால் நனைக்கின்றது. அடடே! சிவாஜியின் அந்த பக்கத்தையே நினைக்காமல் போய்விட்டோமே! அதன் பின்,  சிவாஜியின் பண்புகளும்,கொடைகளும்தான் அவன் கண் முன் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. அவர் மரணத்துக்கு பின் தான் ஏராளமான செய்திகள் அவனுக்கு ஒவ்வொன்றாய் தெரியவருகின்றது. அந்த ஊரில் பள்ளிகட்ட பணம் தந்தார் அந்த ஊரில் மருத்துவமனை கட்ட உத...

பாட்டுப் புத்தகங்களும் பழைய வரலாறு

படம்
Lபாட்டு புத்தகங்களும் ,பழைய வரலாறும்... பத்து பைசா கொடுத்து பாட்டு புத்தகத்தை வாங்கும் போதே அந்த பாடல்கள் இனி எனக்கே சொந்தம் என்பது போன்ற பரவசம் கிடைக்கும்.ஆளில்லா இடம் தேடி பாட்டு புத்தகத்தை  விரித்து ஒவ்வொரு பாடலாய் வாய்விட்டு உரக்க பாடி சந்தோசம் கொள்ளும் மனம்.இதெல்லாம் 1970 களில்.நடிகர்திலகத்தின் பாட்டு புத்தகங்களை தவிர வேறெந்த பாட்டுப் புத்தகங்களின் மீதும்  என் விரல் ஸ்பரிசங்கள் பட்டதேயில்லை.ஒன்று முடித்தவுடன் அடுத்த புத்தகத்தை வாங்குவதும் படிப்பதும் தொடரும்.பெரும்பாலும் விடுமுறை நாட்களில்தான். நண்பர் குழாமில் அடிக்கடி போட்டிகள் கூட நடக்கும்.நான் பாடுவது போலே முழுவதுமாய் உன்னால் பிசகாமல் பாட முடியுமா? என்று மார்தட்டி சவால் விடுவார்கள் எல்லோரும்.பெரிய பாகவதர்கள் போலும் நினைத்துக் கொள்வார்கள் தங்களை. பின்னாட்களில் இதையெல்லாம் நினைத்து பார்க்கையில் எவனுக்குமே பாடவே வரவில்லையே! அப்படி இருந்தும் எப்படி சவடால் விட்டு பாட்டுப் பாடினோம்? அதுவே சிறப்பென எந்த நினைப்பில் பாடித் திரிந்தோம்! இது ஒரு புறம் இருக்கட்டும். அடுத்து ,சேர்ந்த பல புத்தகங்களை ஊசியால் கோர்த்து ஒன்றாக இணைத்து மேல...

சிலிர்க்க வைக்கும் சிம்மக்குரலோனின் பாடல்கள்

படம்
சிலிர்க்க வைக்கும் சிம்மக்குரலோனின் சில பாடல்கள் .. பாவாடை தாவணியில் பார்த்த உருவமா? என்று பெண் பெருமையை பேசுவதாகத்தான் பாடல் அமைந்திருக்கும்.அந்த பாடலில் அவர் வேட்டி கட்டி நடந்து வருவதை திரையில் பார்த்தவர்களுக்கு பாவாடை தாவணி மறைந்து வேட்டி கட்டிய நடிகர்திலகத்தின்  அழகு தான் கண் முன் நிற்கும்.எதை மையப்படுத்தி காட்சிகளை நகர்த்திக் கொண்டு போனாலும் அதை தன்னை நோக்கி ஈர்த்து விடும் ஆற்றல் பெற்றவர் நடிகர்திலகம்.அது இயல்பாகவே அமையப் பெறுவது தான் அவரின் ஒரு சிறப்பு என்றால் மிகையில்லை. இது பற்றி சில விஷயங்களை நாம் நடிகர்கள், நடிகைகள் பேட்டிகள், கட்டுரைகள் மூலம்  கேள்விப்பட்டிருக்கலாம். நடிகர்திலகம் ஊக்குவித்து தாங்கள்  நடித்தோம், எங்களின் சிறப்பளிப்புக்கு அதுவும் முக்கிய காரணம் என்று பலர் சொல்லி கேட்டிருக்கலாம். ஆனால் இது போன்ற விஷயங்களையே அவருக்கு எதிராக திருப்பும் கையாலாகதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இந்தக்  காட்சியில் அவரை மிஞ்சி விட்டார் என்றெல்லாம் சில அரைவேக்காட்டு  விவாதங்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு   தெரியும்  தாங்கள் வாலியின் முன் நிற்கிற...

எல்லா நேரமும் சிவாஜிதான்

படம்
என் ஒரு நாள்.. ஒரு தமிழனின் வாழ்வில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் எப்படி எல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவரின் படங்களை அவரின் நடிப்பை ரசித்து ருசித்து பழக்கப்பட்ட ஒரு ரசிகனின் வாழ்வு இப்படித்தான் இருக்கின்றது ... காலை 6 மணி.. விழிக்கின்றேன்.காலைக் கடன் கழித்து நடைப்பயிற்சி.நடையில் வேகமெடுத்த தருணம், நினைவினில்  உயர்ந்த மனிதன் வந்து உட்கார்ந்து விடுகிறார்.அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே பாடலில் நடப்பாரே! அந்த நடையை நினைத்து என் பாதங்கள் நகர்கின்றன. 7 மணி.. தேநீர் நேரம்.. காலையில் ஒரு டீ.மாலையில் ஒரு டீ.இது வீட்டில்.அந்த டீக்கே அரைமணி பொறுக்க வேண்டும்.அவர் அந்தப் படத்தில் 20 கப் டீ குடிப்பாரே. டீ..டீ..டீ.. டீ குடிக்கும் போதெல்லாம் பைலட் வந்து நிற்பார்.டீ வந்து ,குடிக்கும் போது அவர் படங்களில் டீ குடிக்கும் ஸ்டைலில் மனம் லயிக்கும். 8 மணி .. நாளிதழ் வாசிப்பு. சமுக குற்றங்கள் இல்லாத செய்தியைத்தான் பார்க்க முடிகிறதா? ஏதேனும் பார்க்கையில், 'Advovate Rangapashyam appointed as high court judge '.. கௌரவத்தில் செய்தி படிப்பாரே! அந்த வாசிப்பு நெஞ்சில் அமரும்.அதற்கு பின் செய்தி வாசிப்பு மனம்...

யானை பாஷை தெரிந்த சிவாஜி

படம்
சிவாஜியை மிகச்சிறந்த நடிகராக மட்டுமே இன்னமும் இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது . அவர் மிகச்சிறந்த ஆச்சரியங்களை  புதைத்து வைத்திருக்கிற ஒரு அற்புத மனிதர் .அவருடன் பல வருடங்களாக பழகிக் கொண்டிருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் 50 வருடங்களுக்கு மேலாக ரசிகர்களாக இருந்து கொண்டிருப்பவர்களுக்கும் கூட அவரைப் பற்றிய நிறைய விஷயங்கள் தெரிவதில்லை.அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் இந்த பதிவில் கூறப்போகும் விஷயம். சரஸ்வதி சபதம் படத்தில் உச்சகட்ட காட்சி. புலவராக நடித்திருக்கும் சிவாஜியை யானை இடறி கொல்ல வேண்டும் என்று  அரச தண்டனை விதிக்கப்படும். இந்த காட்சியில் ஒரு மேடையில் நடிகர் திலகத்தை சங்கிலியால் பிணைத்து வைத்திருப்பார்கள் .யானை  பல அடி தூரம் நடந்து வந்து காலை தூக்கி தலையை நசுக்குவதாக பட காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.இந்த காட்சியை படமாக்கும்போது டம்மியை வைத்து படமாக்கிவிடலாம் என்று இயக்குனர் உள்பட  பட யூனிட்டும் சிவாஜியிடம் சொன்னது.ஆனால் காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று நடிகர் திலகம் அதை மறுத்துவிட்டார்.நானே அதில் நடிக்கிறேன் என்று உறுதி கூறி விட்டார்...

நடிப்பை விடுங்கள் - சிவாஜி -அதற்கும் மேலே

படம்
நடிப்பை விடுங்கள்.அது எல்லோராலும் புகழ்ந்து தள்ளியாயிற்று.குன்று போல் உயர்ந்த புகழின்  பாதி அவர் குணம் சார்ந்தே நிரம்பியது.அவர் காட்டிய நடிப்பு கலையை வைத்தே அவர் அடைந்த உயரம் ஒரு நாட்டிலேயே முதல் மனிதர் என்ற கௌரவத்தை கொடுத்தது. அதன் உயரம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.பூமி சாகும் வரை இது நிலைக்கும். தான் மீது வீசப்பட்ட எதிர்மறை கருத்துக்களையெல்லாம் புன்சிரிப்புடன் பதில் சொல்லாமலே அஹிம்சை பாதையில் அதை ஏற்று கடைசி வரை பயணித்துக் கொண்டிருந்தவர். உழைப்பில் பெரும்பகுதியை கலைக்கு அர்ப்பணித்தாரென்றார் என்றால் அதில் கிடைத்த பொருளாதார பயனின் பெரும்பகுதியை நாட்டிற்கு யோசிக்காமல் கொடுத்தார்.  சிவாஜியை எதிர்த்துப் பேசினால் திரையுலகில் நிலைக்க முடியாதோ? என்ற  என்ற சூழ்நிலையை எல்லாம் அவர் உருவாக்கவில்லை.மாறாக சக கலைஞர்களெல்லாம் , பெரும்பான்மையாக உச்சத்தில் இருந்தவர்கள் கொண்டு அனைவரும் மதிக்கும் படியாகவே வாழ்ந்தார். அறிமுகம் செய்தவரைத் தவிர ஏனையோருக்கு கடன்படா விட்டாலும், எல்லோருக்கும் தன்னால் முடிந்ததை செய்து கொண்டேதானிருந்தார். நாடு சம்பந்தப்பட்ட எந்த நல்லவைகளுக்கும், திட்டங்களு...

தமிழ் சினிமாவின் பொற்காலம்

படம்
1000 கோடி என்ன?  5000கோடி என்ன ?எத்தனையோ  கோடிகளில் எந்த சரித்திர படமானாலும் இனி எடுக்கலாம்.ஆனால் 100 வருடங்கள் ஆனாலும் ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன்தான் முதலில்  பேசப்படுவான். அண்ணன் தங்கை பாசப் பிணைப்பை  ஆன்ட்ராட்ய்டு காலத்தில் என்ன? அடுத்த நூற்றாண்டில் தேடினாலும் பாசமலர் தான்  முதலில் வரும். உனக்கேன் அக்கறை? என்று ஆயிரம் பேனா முனைகள் சமுக சாடல்களை எழுதியிருந்தாலும் ,இனி எழுதினாலும் அதைப் பேசிய குணசேகரன் கதாபாத்திரம் தான் மின்னலாய் தெரியும். ஒரு படத்தின் 90 வேடங்களாயினும், அதை ஒருவரே ஏற்று செய்தாலும், ஒன்பது வேட  நவராத்திரி நடிப்புக்கு  ஈடு செய்ய எவராலும் முடியாது. அடுத்த நூற்றாண்டு அதி நவீன கணிணியும் , தெய்வமகனை  ஆராய்ச்சி செய்தால் , அது கூட " ERROR " என்று தான் காட்டும். இப்போது பிறக்கும் ஒரு குழந்தை அதன் 100 வது வயதில் தேசபக்தி காவியங்களை சொல்ல விரும்பினால் அப்போதும் நடிகர்திலகத்தின் படங்களைத்தான் அது  சொல்ல வேண்டியது வரும். எந்த வரிசையில் படங்கள் வந்தாலும் ஓர் வரிசையில் வந்த நடிகர்திலகத்தின்  "பா " படங்கள்  சொல்லிய பண...

சிம்மத்திற்கு ஒரு குரல் சிவாஜிக்கு நூறு குரல்

படம்
சிம்மத்திற்கு ஒரு குரல் சிவாஜிக்கு நூறு குரல்... அவர் குரலில் எப்போதும் கம்பீரம் மிளிரும்.ஒவ்வொரு கால கட்டமாக  அந்தக் குரலில் என்னவெல்லாம் மாற்றங்கள் உருவாகின. நாடக வேஷங்களும் அதற்கேற்ற குரல்களையும் சிறு வயதில் இருந்தே தீவிரமாக செய்து வரும்  நிலையில் திரைப்படங்களில் நடிக்கும் போது ஆரம்பத்தில் தடுமாற்றங்கள் வரலாம்.அதையெல்லாம் கவனமாக விலக்கி வெற்றிகள் என்ன? பெரும் அதிசயமாகவே மாற்றிக் காட்டியவரின் நிகழ்வுகளில் இருந்து ..... பராசக்தியில் இளமையும் இல்லாத முதிர்வும் இல்லாத குரல்.அடுத்து வந்த  மனோகரா, அந்தநாள், தூக்குதூக்கியில் கொஞ்சம் இளமை கூடியது போல் குரல்கள்.உத்த புத்திரன் வரை இது தொடர்ந்தன.பதிபக்தியில் உடல்வாகில்  சிறிது மாற்றம்.சிறிது பூசியது போன்று உடலமைப்பு.குரலிலும் சிறிது மாற்றம். இந்த வகையிலே நான் சொல்லும் ரகசியம் வரை அமைந்திருந்தன.ஆனால் அடுத்தபடத்திற்குள் என்ன மாயம் செய்தாரோ? வீரபாண்டிய கட்ட பொம்மனில் இருந்து சிம்மக்குரல் புறப்பட்டு விட்டது.ஆச்சர்யம் போல் பதிபக்தியில் அவருடைய உடலமைப்பும் கட்டபொம்மனில் அவருடைய உடலமைப்பும் வித்தியாசம் காட்டியது. அடுத்து பாகப்பிரிவ...

சிவாஜியின் மணிவிழா 1988

படம்
நடிகர்திலகத்தின் மணிவிழா... விசேஷ பூஜை.. சென்னை அக்டோபர் 3 1987 இல் சென்னையில் சிவாஜி மணி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நடிகர் திலகம் என்று கலையுலகமும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும்  போற்றும் சிவாஜிக்கு அறுபதாவது  பிறந்தநாள். அதிகாலை 5 மணிக்கு எழுந்து குளித்து சிவாஜி சந்தன நிறத்தில் பட்டு வேஷ்டியும் பட்டு சட்டையும் அணிந்தார் .பின்னர் தகப்பனார் சின்னையா மன்றாயர் ராஜாமணி அம்மாள் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கினார் .ஏழு முப்பத்தி ஐந்து மணிக்கு வீட்டுக்கு வெளியே உள்ள விநாயகர் கோவிலுக்கு சிவாஜியும் மனைவி கமலாம்மாளும் மேளதாளத்துடன் அழைத்துச் செல்லப்பட்டார்கள் .அங்கு பூரண கும்ப மரியாதையுடன் சிவாஜியை வரவேற்றார்கள் விசேஷ பூஜை நடந்தது. பிறந்தநாள் கேக் .. அதைத் தொடர்ந்து சிவாஜி வீட்டுக்கு வந்து பிறந்தநாள் கேக் வெட்டினார் முதல் துண்டு மனைவி கமலா அம்மாளுக்கு ஊட்டினார். அடுத்து தளபதி சண்முகம் ராஜசேகர் ஆகியோருக்கும் கேக் ஊட்டினார். பிறந்த நாளையொட்டி சிவாஜி வீட்டு வாசலில் அலங்காரப் பந்தல் போடப்பட்டு இருந்தது .காங்கிரஸ் கொடிகள், கம்பங்கள்  ஏராளமாக கட்டப்பட்டு இருந்தது. வீட்டிற்கு வெளியே...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்