இடுகைகள்

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

ஒரே பேமிலி..5 போலீஸ்...

படம்
இன்னைக்கு நாம பேசப்போற மேட்டர் சாதாரணமானது இல்ல... இது ஒரு 'லெஜண்டரி ரெக்கார்ட்'. ​சினிமாவுல வாரிசுகள் வர்றது புதுசு இல்ல, ஆனா வந்த அத்தனை பேரும் 'சிங்கத்தோட கால்தடத்தை' அப்படியே ஃபாலோ பண்றதுதான் இங்கே ஆச்சரியமே! உலக சினிமா வரலாற்றை எடுத்துப் பாருங்க... ஹாலிவுட்ல இருந்து கோலிவுட் வரைக்கும் எத்தனையோ பெரிய ஃபேமிலிஸ் இருக்கு. ஆனா, ஒரே குடும்பத்துல இருந்து மூணு தலைமுறை, அஞ்சு பேரு, 'போலீஸ்' அப்படிங்கிற அந்த ஒரு கெத்தான ரோலை செஞ்சு காட்டியிருக்காங்கன்னா... அது  'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் அவரோட குடும்பம் மட்டும்தான்! ​மத்தவங்களுக்கு எல்லாம் இது ஒரு கேரக்டரா இருக்கலாம்... ஆனா இந்த குடும்பத்துக்கு அது ஒரு பரம்பரை ரத்தம்! 'தங்கப்பதக்கம்' சௌத்ரில ஆரம்பிச்சு, இன்னைக்கு 'லெனின் பாண்டியன்' தர்ஷன் ராம்குமார் வரைக்கும்... அந்த போலீஸ் யூனிஃபார்முக்கே ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்திருக்காங்க. ​"போலீஸ் யூனிஃபார்ம் இவங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு நச்சுனு செட் ஆகுது?" ​"என்னதான் ஊர்ல ஆயிரம் பேர் காக்கி சட்டை போட்டு நடிச்சாலும், இந்த சிவாஜி...

டபுள் ஆக்சன் ரகசியங்கள்

படம்
 ஒரே ஆளு... ஆனா ரெண்டு பேரு! சிவாஜி கணேசனின் Double Action மேஜிக்!  இன்னைக்கு நாம சூர்யாவோட '24' படத்தையோ இல்ல கமலஹாசனோட 'தசாவதாரம்' படத்தையோ பார்த்துட்டு, 'என்னடா டெக்னாலஜி இது!'ன்னு வியந்து போறோம். ஆனா, இந்த 'ஒரே ஆளு ரெண்டு பேரு' மேஜிக் எப்படி ஆரம்பிச்சது? அதுக்கும் முன்னாடி, அந்த காலத்துல கம்ப்யூட்டரே இல்லாதப்போ இது எப்படி சாத்தியமாச்சு? இதைப் பத்தின ஒரு செம இன்ட்ரஸ்டிங் ஹிஸ்டரி தான் இந்த பதிவு. ​"1898-ல வந்த 'த ஃபோர் டிரபிள்சம் ஹெட்ஸ்' (The Four Troublesome Heads) அப்படிங்கிற பிரெஞ்சு படத்துல ஜார்ஜ் மெலியஸ் ,இவர் ஒரு மேஜிக் மேன்  ஒரு செம வித்தை காட்டியிருப்பாரு. ​அந்தக் காட்சியில என்ன நடக்கும் தெரியுமா? மெலியஸ் ஸ்கிரீனுக்கு வருவாரு. திடீர்னு தன்னோட தலையைத் தானே கழட்டி பக்கத்துல இருக்கிற மேஜை மேல வைப்பாரு. ஆனா அடுத்த செகண்டே அவரோட கழுத்துல இன்னொரு புதுத் தலை முளைக்கும்! இப்படி வரிசையா மூணு தலையை கழட்டி மேஜை மேல வைப்பாரு. இப்போ மேஜைல மூணு தலை, அவர் கழுத்துல ஒரு தலைன்னு மொத்தம் நாலு தலைகளும் ஒரே நேரத்துல பேசும், சிரிக்கும். கடைசியில எல்லா த...

சிவாஜி கே ஆர் விஜயாவின் 33 பட கதை தொகுப்பு

படம்
​திரையுலகின் 'சிம்மக் குரலோன்' ஒரு பக்கம், பார்ப்பவர் நெஞ்சை அள்ளும் 'புன்னகை அரசி' மறுபக்கம்! இவர்கள் இருவரும் திரையில் தோன்றினால், அது வெறும் நடிப்பு அல்ல; ஒரு வாழ்வியல் பாடம். சிவாஜி கணேசன் எனும் நடிப்புக் கடலில், கே.ஆர். விஜயா எனும் மென்மையான அலைகள் மோதியபோது பிறந்தவைதான் இந்த முப்பத்தி மூன்று காவியங்கள்! ​சில படங்களில் அவர்கள் 'இரு மலர்களாக' மணம் வீசினார்கள்; சிலவற்றில் 'தங்கப் பதக்கமாக' நேர்மை பேசினார்கள். 'திருவருட்செல்வராக' ஆன்மீகத்தில் திளைத்தாலும் சரி, 'திருடன் ' என்று அதிரடி காட்டினாலும் சரி, இவர்களது ஜோடிப் பொருத்தம் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். ​பாசத்திற்காகத் தியாகம் செய்யும் அண்ணனாக, நீதிக்காகப் போராடும் அதிகாரியாக, காதலுக்காக ஏங்கும் காதலனாக என சிவாஜி விஸ்வரூபம் எடுக்க... அவருக்கு இணையாகத் தனது அமைதியான, ஆழமான நடிப்பால் அணை கட்டி நின்றவர் கே.ஆர். விஜயா. ​காலத்தின் சுவடுகளில் அழியாத அந்த 33  'கற்பனைச் சித்திரங்களின்' கதை சுருக்க அணிவகுப்பை இப்போது பார்க்கலாம். ​செல்வம்:  ​ஜாதகப்படி க...

தவப்புதல்வன்

படம்
சிவாஜி கணேசன் நடித்த நூற்றுக்கணக்கான  பாத்திரங்களில், ஒரு உடல் குறைபாட்டைத் தனது அசாத்திய நடிப்புத் திறமையால் கலையாக மாற்றிக் காட்டிய ஆகச்சிறந்த காவியம் 'தவப்புதல்வன்'. ​​இப்படத்தில் நிர்மல் என்ற கதாபாத்திரத்தில் சிவாஜி ஏற்றிருந்த அந்த 'மாலைக்கண் நோய்'என்பது அவருக்கு வெறும் உடல் உபாதை மட்டும் அல்ல; அது ஒரு கலைஞனின் நிம்மதியைச் சிதைக்கும் கொடூரம். ​பகல் வெளிச்சத்தில் சிங்கமென உலவும் அந்தப் பார்வை, மாலை 6 மணி நெருங்கும் வேளையில் மெல்ல மெல்ல மங்குவதைப் பார்க்கும்போது, ரசிகர்களின் நெஞ்சு படபடக்கத் தொடங்கும். சூரியன் மறைய மறைய, அவரது முகத்தில் தோன்றும் அந்தச் சிறு நடுக்கம் மெல்ல மெல்ல ஒரு பெரும் புயலாக மாறும். ​சிவாஜி கணேசன் இந்தப் படத்தில் காட்டிய நடிப்பு நுணுக்கங்கள் சாதாரணமானவை அல்ல. தான் ஒரு பார்வையற்றவன் என்பதை மற்றவர்கள் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக அவர் காட்டும் அந்த 'கம்பீரமான நடிப்பு' இருக்கிறதே, அதுதான் நடிப்பின் உச்சம். பார்வை போன பிறகு அவர் தடுமாறும் ஒவ்வொரு அடியும் ஒரு கவிதை. சுவர்கள் எங்கே இருக்கின்றன, கதவு எங்கே இருக்கிறது என்று தெரியாமல், ஒரு ...

படையப்பா

படம்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளரும் புலவர் பெருமானே படையப்பாவின் கோவை மாநகரா வெளியீட்டில் நீ செய்தது தான் சாதனை என்று சொல்லி பதிவு பொட்டு பணம் பார்க்கிறாயே அதுவும் சத்தியத் தலைவனின் உத்தம புத்திரர்கள் இன்றும் அவரது புகழ் பரப்ப தான் அன்றாடம் பண்ணிட்டு மணி நேரம் உழைத்து சம்பாதித்த காசில் தங்கள் வீட்டுக்கு தெரியாமல் நான்கு மணி நேர காசை சேர்த்து வைத்து அள்ளும் பகலும் பாடுபட்டு அன்றைய சூப்பர் ஸ்டார் நட்சத்திரங்கள் கமல் ரஜினி மற்றும் ஏனைய புது வரவுகள் அனைவருக்கும் அடிகொடுக்கும் பறக்கும் படை மட்டுமே எழுபத்தி ஐந்தில் ஆரம்பமாகி படிப்படியாக தலைமையும் நிர்வாகமும் மாறி மாறி வந்தாலும் அனைத்தும் தனது உழைப்பில் வீட்டுக்குத் தெரியாமல் சேர்த்து வைத்த காசில் அவரது புகழ் அன்று முதல் இன்று வரை உழைத்து சேமித்த காசில் செலவு செய்து அவரது புகழை உலகெங்கும் கொண்டு செல்கிறோம் அதற்க்கும் தனியாக காசு செலவழித்து  ஆனால் இவர் என்ன செலவு செய்தார் பொதுவில் தலைவரது புகழ் பரப்ப என்று இன்று வரை நான் கண்டதில்லை இவர் செய்ததும் இல்லை இப்படி இருக்க இவரது அண்ணன் அவரும் பொள்ளாச்சியில் செய்கிறார் அவருக்கு நாங்களும் எங்களால் முட...

மாடர்ன் டெக்னாலஜி சிவாஜி படங்கள்

படம்
"நடிகர் திலகமும்.. நவீன தொழில்நுட்பமும்!" ​ இதுலே  நாம பார்க்கப்போறது ஒரு சாதாரண நடிகரை பத்தி இல்ல... இந்திய சினிமாவோட 'தொழில்நுட்பப் புரட்சி'யை தன் தோள் மேல சுமந்த ஒரு சகாப்தத்தை பத்தி. அவர்தான்  நடிகர் திலகம் சிவாஜி கணேசன். 1952-ல ஆரம்பிச்சு 90-களோட இறுதி வரைக்கும்,  டெக்னாலஜி விஷயங்கள் சிவாஜி படங்கள்லே எப்படி யூஸ் பண்ணுணாங்க அப்படிங்கறத பத்திதான். டெக்னாலஜி வளர வளர அவர் எப்படி தன்னை மாத்திக்கிட்டார்னு விரிவா பார்ப்போம்! ​முதல்ல 1952-ல 'பராசக்தி' வந்தப்போ இருந்த டெக்னாலஜி ரொம்ப கம்மி. அப்போல்லாம் இப்ப இருக்கிற மாதிரி குட்டி மைக் கிடையாது. பெரிய மைக்ரோபோன் தான். அதுவும் தூரத்துல தான் இருக்கும். ​சிவாஜி  என்ன பண்ணுவார் தெரியுமா? அந்த மைக்ரோபோன் எவ்வளவு தூரத்துல இருக்கு, நாம எவ்வளவு சத்தமா பேசினா அது ரெக்கார்ட் ஆகும்னு ஒரு கால்குலேஷன் வச்சிருந்தாரு. 'பராசக்தி' கோர்ட் சீன்ல அவர் பேசுற அந்த வேகம், அந்த மாடுலேஷன்... அப்போ இருந்த சவுண்ட் இன்ஜினியர்களுக்கே ஒரு பெரிய ஆச்சரியம். எடிட்டிங் கத்தரிக்கோலுக்கு வேலையே வைக்காம, ஒரே டேக்ல பேசி அந்த காலத்து 'டைரக்ட...

சிவாஜி பட தலைப்புகளால் ஒரு கதை

படம்
அத்தியாயம் 1: உயர்ந்தமனிதன் உதித்த உன்னத இல்லம்: ​அந்தக் கிராமத்தில் "விடிவெள்ளி" முளைக்கும் முன்பே "உயர்ந்த மனிதன்" கணேசன் தன் பணிகளைத் தொடங்கிவிடுவார். அவர் அந்த ஊரின் "கௌரவம்" மிக்க பெரியவர்; ஒரு "தெய்வ மகன்" என்று அனைவராலும் போற்றப்பட்டவர். அவர் வாழ்ந்த இல்லம் ஒரு "வசந்த மாளிகை". அங்கே உறவுகளுக்கு இடையே "பச்சை விளக்கு" எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும். கணேசன்  மெத்த படித்திருந்தாலும் "படித்தால் மட்டும் போதுமா? "என்ற எண்ணம்  கொண்ட "நிறைகுடம்" அவர்.  ஒழுக்கமே உயர்வு என வாழ்ந்த  "உத்தம புத்திரன்"ஆன  ​அவருக்கு "முத்துக்கள் முன்று" போலே மூன்று மகன்கள். மூத்தவன் " ராஜராஜ சோழன்" போன்ற நிர்வாகத்திறன் கொண்டவன், இரண்டாவது மகன் "வீரபாண்டிய கட்டபொம்மன்" போன்ற வீரம் கொண்டவன், இளையவன் "பாசமலர்" போன்ற பாசம் கொண்டவன். அவர்களுக்கு ஒரு தங்கை, அவள் அந்த வீட்டின் "வெள்ளை ரோஜா". அவளுக்கு ஒரு "லட்சுமி கல்யாணம் "போல்  செய்து பார்க்க வேண்டும் என்பது கணேசனி...

12 மாதத்தில் 13 படங்கள் சாதனை

படம்
​"அனைவருக்கும் வணக்கம்! இன்னைக்கு நாம ஒரு மனுஷனோட உழைப்பை பத்தி பேசப் போறதில்ல, ஒரு 'சகாப்தத்தோட' வேகத்தை பத்தி பேசப் போறோம். ​சினிமாவுல ஒரு நடிகருக்கு 54 வயசு ஆயிட்டாலே, 'போதும்ப்பா.. இனிமே குணச்சித்திர வேடத்துல நடிக்கலாம்'னு ஒதுங்கிடுவாங்க. ஆனா, 1982-ல நம்ம 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் செஞ்சது இருக்கே... அது வெறும் சாதனை இல்ல, உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வச்ச ஒரு இமாலய மிராக்கிள்! ​அந்த வருஷம் அவருக்கு வயசு 54. ஆனா ரிலீஸான படங்களோட எண்ணிக்கை பதிமூணு! யோசிச்சுப் பாருங்க, ஒரு மாசத்துக்கு ஒரு படம்னு கணக்கு வெச்சா கூட, வருஷத்துக்கு 12 மாசம்தான் இருக்கு. ஆனா தலைவன் 13 படத்தை ரிலீஸ் பண்ணிக் காட்டினாரு. ஒவ்வொரு படத்துலயும் அந்த மனுஷன் காட்டுன எனர்ஜி இருக்கே, அது இன்னைக்கு இருக்குற இளவட்டங்களுக்குக் கூட வராது! ​உலகத்துல எத்தனையோ ஆஸ்கர் அவார்டு வாங்குன ஹாலிவுட் நடிகர்கள் இருக்காங்க. ஆனா, 54 வயசுல, 13 படத்துல ஹீரோவா நடிச்சு, அத்தனையும் ஹிட் குடுத்த ஒரு நடிகனை நீங்க உலகத்துல வேற எங்கேயாவது பார்க்க முடியுமா? சான்ஸே இல்ல! அந்த ஒரு வருஷம் சிவாஜி சார் ஓடுன ஓட்டம்...

நீதி

படம்
நீ "தீ "... வழக்கமான  சட்டத்தை மாற்றிய கதை.கதையின் மூலமும் அதுவே. எத்தனை திரைப்படங்கள் குற்றத்தையும், தண்டனையையும் வைத்து வெளியாகியுள்ளதோ தெரியாது. ஆனால் முதலிடம் மாறாது "நீதிக்கு". ஒரு தீர்ப்பின் பலன் உண்மையாய் எது செய்யப்பட வேண்டுமோ அதை சொன்னதுக்காக நீதியை போற்ற வேண்டும்.இன்றைய நிலையில் வைத்துச் சொன்னால் 130 கோடி மக்களுக்கான சரியான நீதி,படத்தில் சொல்லப்பட்ட கருத்து. பல சரித்திர படங்களை விட இதுவே பெரும் சரித்திரம். அடித்தட்டு மக்களுக்கான நீதி என்று வைத்துக் கொண்டாலே, அந்த வருடத்தையே( 1972 ) நீதிக்காக கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்.ஏன் கமர்ஷியல்?  எதையும் ஐனரஞ்சகமாகவே சொன்னால் தான் தமிழன் பார்க்கிறான். முதல் காட்சியிலேயே ஹீரோ ஒரு ஏழை விவசாயியை லாரி ஓட்டி கொன்று விடுகிறார்.தெரியாமல் தான்.சட்டப்படி பல ஆண்டுகள் தண்டனை தானே! இப்படித்தானே தொடரும்.ஆனால் , இதையே சற்று மாற்றி இக் கதையை ஹுரோவிடம் இயக்குனர் சொல்ல வருகிறார் என்று வைத்ததுக் கொள்ளுங்கள்.ஹீரோ ..நீங்கள் அந்த பாதிக்கப்பட்ட விவசாயியின் குடும்பத்தை கவனித்து கொள்ள வேண்டும்,இது தான் கதை சார், என்று பெரிய ஹுரோக்களிடம் கதை...

அண்ணன் ஒரு கோவில்

படம்
அண்ணன் ஒரு கோயில்.. ஏற்கெனவே இது போன்ற மையக் கருவில் பல படங்கள் வந்திருந்தாலும் இது ஸ்பெஷலான திரைப்படம். ஒரு த்திரில்லர் மிக்ஸிங்கில் அட்டகாசப் படுத்தப்பட்ட திரைக்கதை.பல வித்தியாச காட்சியமைப்புகளில் நம்மை அசத்திய படம். நம் கண்களை திரையில் பதிக்க வைத்து விலக்க முடியாதபடி ஈர்க்க வைத்த ஒளிக்காட்சிகள்.அண்ணன் தங்கை பாசத்தை பேமிலி டிராமாவாகவே எந்தவித திருப்பங்களும் இன்றி  இதற்கு முன் எழுதப்பட்ட திரைக்கதைகளில் முரண்பட்டு இதுவே படு வித்தியாசம்.ஆல் கிளாஷை ரசிக்க வைக்கும் விதத்தில் இதன் பட காட்சிகள் அமைந்திருக்கும். வெள்ளிவிழாவை தொட்டிருக்க வேண்டியது.சிவாஜி படங்களே  அதற்கு  பிரேக் ஆகி விட்டது.இது  வழக்கமான ஒன்றுதான்.இந்த வழக்கமும் இவருக்கு மட்டுமே. முதல்நாள் முதல்ஷோ பார்த்தவர்களுக்கு நிறையவே பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கும் இதன் ஆரம்ப காட்சிகள்.நவீன தொழில்நுட்ப காமிராக்கள் உபகரணங்கள் இன்றியே அன்று படம் எடுத்திருப்பதை இன்று  பார்த்தாலும் அந்த சிரத்தையை யோசிக்கவே வைக்கிறது. தொடக்கத்தில் ஓடிக் கொண்டே வரும் நடிகர்திலகம் திடீரென்று நின்று திரும்பி லுக் விடுவார்.அத்தனை...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்