இடுகைகள்

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜியின் பாசிடிவ் பாடல்கள்

படம்
சிவாஜியின் பாசிடிவ் சாங்ஸ். பாட்ட கேட்டா அது மனதுக்குள்ள போயி அந்த டயத்துல ரசிச்சு முடிக்கிறதோட முடிஞ்சிரக்கூடாது .அது காலமெல்லாம் வரணும் நம்ம மனச மாத்தணும். நல்ல விஷயத்தை சொல்லணும்.சிவாஜியோட இந்த பாடல்களை கேட்டால் அது நாம சாகுற வரைக்கும் வரும்.அதுதான் பாசிடிவ் சாங்ஸ். பச்சை விளக்கு படத்துல வர்ற அந்த ஒளிமயமான எதிர்காலத்தை பாட்டை கேளுங்க. இந்த பாட்டோட பெருமையை பத்தி சிவாஜி ரசிகர் யாரு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்கள் ஒரு தன்னம்பிக்கை ஒரு பாட்ட உதாரணமாக சொல்ல ஆரம்பிச்சாங்கன்னா இந்த பாட்ட தான் முதல்ல உதாரணமா சொல்லுவார்கள்.இந்த பாட்டுல ஒரே ஒரு விஷயம் மட்டும் சுத்தி சுத்தி வராது பலவகப்பட்ட விஷயத்தையும் இந்த பாட்டுல நம்ம பார்க்கலாம். பாட்டோட ஆரம்பம் எதிர்காலத்தை பத்தி பாடுற மாதிரி வரும். அப்புறம் ஒரு வீட்டுக்கு பெருமை சேர்க்கிற அந்த பெண் குலத்தோட பெருமையா பேசுற மாதிரி வரும்.  கூடவே இந்தியாவோட மதச்சார்பின்மை ,இந்தியாவோட மக்கள் பலம் எல்லாத்தையும் சேர்த்து எழுதி இருப்பார் கண்ணதாசன். வெறும் பாட்டா கேட்டுட்டு கடந்துட்டு போயிட முடியாது இந்த பாடலை கேட்டா. நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை எ...

சிவாஜி நாகேஷ் நடித்த திரைப்படங்கள்

படம்
சிவாஜி நாகேஷ் நடித்த திரைப்படங்கள் ... அவர் ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல. ஒரு நல்ல குணசித்திர நடிகரும் கூட. சிறந்த நடனக்காரர் கூட. நாகேஷ் என்றதும் சட்டென வந்து செல்பவர் தருமி. இது அவரே அடிக்கடி சொல்லும் பாத்திரம்.ஆனால் படத்தில் நாகேஷ் வந்து சென்றது கொஞ்ச நேரமே. அந்த கொஞ்ச நேரம் வந்து இருந்தாலும் அவருடைய வரலாற்றில் இது முதன்மையான பாத்திரம் . ஏராளமான படங்களில் நாகேஷ் நடித்திருந்தாலும் நாகேஷ் நடித்த நல்ல வேடங்கள் என்றால் இந்தப் படங்களை தான் முதலில் சொல்ல வேண்டியுள்ளது. தில்லானாவின் சவடால் வைத்தி, சவாலே சமாளி சின்னப்பண்ணை, நவராத்திரி பூசாரி, தியாகத்தில் அந்த முஸ்லிம் வேடம், இப்படி நடிப்புக்காக நாகேஷ் நடித்த சிவாஜி படங்கள் அதிகம். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 65 படங்களில் நாகேஷ் நடித்துள்ளார். அந்தப் படங்கள் பின்வருமாறு ; நடிகர் திலகத்துடன் நாகேஷ் இணைந்த திரைப் படங்கள் 1. நான் வணங்கும் தெய்வம் 2. குங்குமம் 3. ரத்த திலகம் 4. அன்னை இல்லம் 5. பச்சை விளக்கு 6. புதிய பறவை 7. முரடன் முத்து 8. நவராத்திரி 9. பழநி 10.அன்புக்கரங்கள் 11.சாந்தி 12.திருவிளையாடல் 13.நீலவானம் 14.மோட்டார் சு...

நடிகர் திலகம் வெறும் நடிகர் மட்டும்தான்?

படம்
நடிகர்திலகம் வெறும் நடிகர் மட்டும்தானா?  சிவாஜி என்று பேச்சு ஆரம்பித்தாலே அது நடிப்பை பத்தி பேசுவதாகத்தான் எல்லா பேச்சும் இருக்கிறது.நடிகர்திலகத்தின் படங்கள் செய்த தாக்கம்தான் அது. அவரது படங்கள் பற்றி பேசும் அதே நேரத்தில், அந்த படங்கள் எல்லாம் எப்படி அமைந்தது, அவையெல்லாம் அவரது வாழ்க்கையிலும் எப்படி இணைந்திருந்தது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இப்போது வரும் ஸ்டார் வேல்யூ படங்கள் எல்லாம் எப்படி வருகின்றன. ஒவ்வொரு படங்களும் 100 கோடியில் தயாரிப்பு, 200 கோடியில் தயாரிப்பு என்றெல்லாம் பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள்.ஆனால் எல்லாம் அடி தடி குத்து கொலை வெட்டு படங்கள்தான்.கடந்த சில ஆண்டுகளில் எத்தனை படங்களை சிறந்ததாக கொள்ள முடியும்? தமிழ் கலையுலகுக்கு பெருமை தரும் படி எந்த தயாரிப்பும் இல்லை.இதில் கதா நாயகனுக்கு வேறு 40 கோடி 50 கோடி சம்பளம் என்று பெருமைகள்? இதெல்லாம் தான் கதாநாயகர்களுக்கு பெருமையா என்றால் அப்படி மாறி விட்டது திரையுலகம்! என்ன செய்ய! பெரும்பாலோர் சமூகத்தில் வைத்திருக்கும் மதிப்பும், நாட்டுப்பற்றும் சொல்ல வேண்டியதில்லை.அவர்களின் பணப் பெட்டி நிறைந்தால் சரி என்றுதான் இருக்கி...

.சிவாஜி சிங்கமடா!

படம்
தமிழருக்கென்று ஒரு குணம் உண்டு.. (தலைப்பு இதுவல்ல இக் கட்டுரைக்கு)   பிறந்த வீடும் ,புகுந்த வீடும் இணைந்தது, என்று சிவாஜி கணேசன் கடற்கரைக் கூட்டத்திலே பேசினார் .இந்திரா காந்தியும், கருணாநிதியும் இணைந்து பேசிய கூட்டத்தில் சிவாஜிகணேசன் பேசிய பேச்சு இந்த நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது .ஆனால் எதிர்முகாம்  வட்டாரத்தில்,  அதை ஜீரணிக்க முடியாமல் சிலர் சிவாஜி மீது பாய்ந்து இருக்கிறார்கள் .சென்ற மாதம் வரை சிவாஜியை பற்றி ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருந்த எதிர்முகாம் ஏடுகள் இப்போது விஷத்தை கக்க ஆரம்பித்து இருக்கின்றன. "திரைஉலகம் " ஏட்டிலேயே மகா கேவலமாக சிவாஜியை தாக்கியிருக்கிறார்கள் . புகுந்த வீடு போகப் போற அண்ணே !சிவாஜி கண்ணே ! சில புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே !.. என்ற தலைப்பில் எழுதி சிவாஜி பிளாக் போட்டு அதன் கீழே ஆணா? பெண்ணா? என்று கேட்டிருக்கிறார்கள். புகுந்த வீட்டுக்குப் போகிறவர்கள் பெண்கள் தானே !சிவாஜி புகுந்த வீடு பற்றி பேசியதால் ஆணா ,பெண்ணா ?என்று கேட்டிருக்கிறார்கள். சிவாஜி பற்றி யாருக்கும் சந்தேகம் கிடையாது .அவர் ஆண்மகன் தான் என்பதற்கு சாட்சியாக நான்கு குழந்த...

புகழை கர்வமாக்கிக் கொள்ளாத சிவாஜி

படம்
சிவாஜியின் படங்கள்  தேன்கூடு  போலே அதிலும் தேனெடுத்தால் தேனீக்கள்  கொட்டாத  கூடு நாகரீகம் வளரும் போது கலாச்சார  சீர்கேடுகளும் உண்டாவது தான்.அதிலிலிருந்து மக்களை நல்வழிப்படுத்தவே கலைகள் தோற்றுவிக்கப்பட்டன. கலாச்சாரம்,பண்பாடு, கடமைகள் போன்றவை நல்வழிகள் சொல்லி மக்களை  பண்படுத்தவே கலைகள் பிறந்தன. கலைகளை பரப்ப நல்ல படைப்பாளிகள் இதிலிருந்தே  வந்திருக்க வேண்டும். அவர்களின் கலை அம்சம்  ஈர்க்கப்பட்டதால் மக்கள் அவர்களை கலைஞர்களாக மதித்து போற்றப்பட்டனர்.நல்ல கலைஞனின் வேலை சமூகத்திற்கு பயன்படும் கலைகளை பரப்புவது தான்.இப்படி தோன்றிய கலைகள் தான் இன்று எப்படி மாறியுள்ளது! இன்று நாகரீகம் எவ்வளவோ வளர்ந்திருக்கலாம்.அந்தளவு நல்ல கலைகள் உருவாக்கப்படுகிறதா? இங்கே தான் நடிகர்திலகத்தின் படங்களை நாம் சொல்ல வேண்டியுள்ளது. சமுகத்தை பண்படுத்தும் படங்களாகவே அவர் படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். நல்ல கலைஞனாக அவர் செய்ததை செய்துவிட்டார்.அதை பின்பற்றுவது மக்களின் கையில். கலைகள் வளர எதை எடுத்துச் சொல்வது? சமூகத்தில் நடந்த நல்ல நிகழ்வுகள் ,எழுதப்பட்ட காவியங்கள், சிறந்த மனிதர்களி...

சிவாஜியின் நடிப்பு என்னும் ஆயுதம்

படம்
நடிப்பாயுதம்.... கண்ணில் நீர் பெருக   நடிகர்திலகம் திரையில் நிற்கும் நிலை பார்த்து  பெண்டிர் விட்ட கண்ணீர்த்துளிகளே கலையுலகில் அதிகமிருக்கும். எல்லோரும் போகும் வழி  நடிகர்திலகம் போனபின் அது யாரும் போக முடியாத தனிப்பாதை சிறப்பை அடைந்து விடும் தண்ணீர் தனல் போல் எரியும் செந்தனலும் நீர் போல் குளிரும் .. என்பது எப்படியோ  அதுபோல் சிங்கம் போல் கர்ஜிக்கும் குரலை மறு நிமிடமே சிறுமான் போல் பேசும் பாவனைக்கு தொனியை மாற்றும் திறமையை கொண்டிருப்பவர் நடிகர்திலகம். கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா  நடிப்பெல்லாம் நடிகர்திலகம் நடிக்கும் நடிப்பை போலாகுமா? சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்ததும் , அதன்பின் கலைகள் தோன்றியதும்,  அதன்பின் தொடர்ச்சியாய் நடிப்புக்கலை தோன்றியதும் , அதன்பின் சிவாஜி நடிக்க தொடங்கியதும், அதன்பின் நடிப்பென்றால்  நடிகர்திலகமே என்று தொடர்வுகள் முற்றுப் பெற்று  முடிந்து போனது. பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினைக் கண்டான் எல்லாப் படைப்புக்கும் மூலம் உண்டென்றால், எதனை கண்டார் நடிகர்திலகம்? நடிப்பதில் புதுமையை படைத்தார்? காவலுக்கு ...

சிவாஜி கொடுத்த சமுக செம்மை படங்கள்

படம்
நல்ல திரைப்படங்கள் சமூகத்தில் நல்ல பண்பை வளர்க்குமா? மனிதரின் குண நலன்களை மேம்படுத்துமா? கண்டிப்பாக. பொழுதுபோக்காக இருந்தாலும் திரைகலையின் முக்கிய நோக்கமே அதுவே. அந்த வகையில் நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை பார்ப்போம். முதலில் தன்னிலையில் இதன் தாக்கத்தை நினைத்துப் பார்க்கலாம்.தன்னிலை என்றால் தனி மனித ஒழுக்கம் பண்பு நேர்மை கடமை முதலியன முக்கியமாக எடுத்துக் கொள்ளலாம்.நடிகர்திலகம் திரைப்படங்கள் பெரும்பாலும் மற்றும் அவர் செய்த பாத்திரங்களை நினைத்து பாருங்கள்.வியட்நாம் வீடு ,தங்கப்பதக்கம் .. இன்னும் உண்டு .இவற்றில் கடமையுணர்வை பிரதிபலித்தார்.இப் பாத்திரங்கள் தமிழரிடத்தில் பெரும் தாக்கத்தை செய்தவையே! எத்தனை பெரிய மனிதர்கள் தங்களின் கடமையுணர்வுக்கு இவர்களை முன்னுதாரணமாக சொல்லியுள்ளனர்.சமூக பரவல் என்ற வார்த்தை இப்போது அதிகமாக சொல்லப்படுகிறது.அந்த சமூக பரவல்தான் இவர் கேரக்டர்களின் மூலமாக சமூகத்தை செம்மைப்படுத்தியது எனலாம்.அந்த கேரக்டர்கள் மனதில் ஆழமாக ஊடுருவி தாங்களும் இது போல் இந்த கேரக்டர்கள் போல் நாமும் பேரெடுக்க வேண்டும் என்ற எண்ணத்...

ஆண்டாண்டுதோறும் வெஞ்சினமாய் ....

படம்
ஜூலை 21.. அந்தநாள் ... ஆண்டாண்டு தோறும் வெஞ்சினமாய் நெஞ்சிலோர் அக்கினியாய்  எரியுதய்யா! இந்தநாள் நீ படைத்ததெல்லாம் வரிசையாய்  வந்து போகுதய்யா! நீ  கொடுத்தது நடிப்பா இல்லை நெருப்பா?  பழஞ்சோறு தின்று களித்த மனிதருக்கு அறுஞ்சுவையில் விருந்தளித்த  கலை காமதேனுவே!  பூமியை தோண்டினால் தான்  பொக்கிஷங்கள் ஆனால்  எமக்கோ  உம் நினைவுகளே  பொக்கிஷங்கள்!  நீ  ஊதித்தள்ளிய நடிப்புச் சூறாவளியில் ஓடி மறைந்தது  எத்தனை அபத்தங்கள் கர்ஜனையில் மிரண்டது  எத்தனை நெஞ்சங்கள் உன்  தொண்டைக்கு மட்டும் ஆண்டவன் ராஜபேரிகை வைத்து படைத்தானா? உன் குரலோசைக்கு பின்தானே வசனங்கள் எல்லாம் தங்கமுலாம் பூசியது  உனக்கெழுத பேனாக்கள் வார்த்தைப் பஞ்சங்களால் தடுமாறியது அஷ்டமா சித்திகளில்  பிரகாமியமும் ஒன்று.. உன் நடிப்பால்  அதை நாங்களும் கண்டோமே!  முன்னால் சொல்லப்பட்ட நடிப்பிலக்கணம் உன் வருகைக்கு பின் தானே புதுப்பிக்கப்பட்டது!  அவ்விலக்கணம் உன்னோடு இனி எதுவுமில்லை  என்று முற்றுமாகி விட்டதே!  விக்கிரமாதித்தனுக்கோ இரண்டாயிரம் ஆண்ட...

சிவாஜி கணேசன் கே ஆர் விஜயா இணைந்து நடித்த படங்கள்

படம்
தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ என அன்போடு அழைக்கப்படும் கே. ஆர். விஜயா அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் தன்னுடைய கலைப் பயணத்தைத் தொடர்ந்த இவர், சுமார் 450–க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.   நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் சினிமா ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ எனப் புகழப்பட்ட கே. ஆர். விஜயா அவர்கள் நடிகர்திலகத்தோடு இணைந்து நடித்த படங்களையும் அப் படங்களின் சாதனைகளையும் இதில் பார்க்கலாம். நடிகர்திலகத்துடன் சேர்ந்து நடித்த படங்கள். கை கொடுத்த தெய்வம்,சரஸ்வதி சபதம்,செல்வம்  கந்தன் கருணை நெஞ்சிருக்கும் வரை தங்கை பாலாடை திருவருட் செல்வர் இரு மலர்கள் ஊட்டி வரை உறவு திருமால் பெருமை திருடன் எதிரொலி ராமன்  எத்தனை ராமனடி சொர்க்கம் தவப்புதல்வன் பாரதவிலாஸ் தங்கப்பதக்கம்  கிரகப் பிரவேசம் நாம் பிறந்த மண் ஜெனரல் சக்கரவர்த்தி தச்சோளி அம்பு  ஜஸ்டிஸ் கோபிநாத் திரிசூலம் நான் வாழ வைப்பே...

பால்குடியிலேயே கலந்த சிவாஜி

படம்
ஆத்தா பால் குடிச்சு  வளந்த காலத்துல  அத்தோட  சிவாஜி நடிப்பையும்  ருசிச்சு வளந்த உடம்பய்யா  பத்து வயசு அப்போ.. மாறி மாறி மழை பேஞ்சு  ஊரெல்லாம் ஊறிக் கெடந்ததய்யா அதெல்லாம் பெரிசில்லே தரைக் கொட்டாயிலே  ஆறு மணிக்கு போட்டுருவானே "பதிபக்தி " அது எப்போ ஆவும்னு அலைஞ்சய்யாதா அப்போ மனசு அத அன்னைக்கு பாத்தாத்தா  மறுநா வயித்துல சோறிறங்கும் கோலிகுண்டு விளையாண்ட காலம் பெட்டெல்லாம் வெச்சு அடிப்போம் சிவாஜி பிச்சருக்காகவே நான் கோலியெடுப்பேன் குறி கோலி அடிச்சா பத்து பிச்சரு ஒருத்தன் வெச்சிருந்தான் பைக்ல வர்ற சிவாஜி பிச்சரு மூணு மாசமா கேட்டேன் அவந் தரலே ஒருநா கேட்டான் இந்த கோலில நீ ஜெயிச்சா உனக்குத்தா இது தோத்துபுட்டே ஐநூறு பிச்சரு  நீ தரனும்ட்டான் கை உதறுனாலும் வெறி அடங்கலேய்யா அன்னைக்கு அடிச்சேனய்யா குறிகோலிய  தெறிச்சுதய்யா கண்ணாடி கோலி அன்னைக்கே  ஐநூறு பிச்சர சும்மா கேட்டாலும் குடுத்திருப்பேனய்யா  பதினோரு வயசு கொட்டாயிலே அன்னைக்கு  'புதையல் 'படம் நம்மூருக்கு அது புதுசு அஞ்சு மணிக்கே போயும் அத்தினி கூட்டம் டிக்கட் கிடச்ச பாடில்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்