இடுகைகள்

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

பொள்ளாச்சியும் சிவாஜியும்

படம்
சிவாஜியும் பொள்ளாச்சியும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பொள்ளாச்சிக்கும் உறவு முறை ஆரம்பத்தில் அது நட்பு முறையாகவும் ,அதுவே பின் உறவு முறையாகவும் ஆனது. எத்தனையோ வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்த மனுஷன், தமிழ்நாட்டுல அவருடைய காலடி படாத இடமே இல்லை, இந்தியாவோட எல்லா முக்கிய பிரபல நகரங்களுக்கும் போயிட்டு வந்தவர் நடிகர்திலகம்.இப்படி சிவாஜி பற்றின உண்மைகள் இருந்தாலும் சிவாஜிக்கு ரொம்ப பிடிச்ச இடம் உலகத்திலேயே சேர்த்து மடை தான் .சிவாஜி எங்க போனாலும் நடிகர் திலகம் பிரமிப்பா எல்லோரும் பார்க்கிறார்கள். பொள்ளாச்சிக்கு போனா எளிமையான மனுசனா இயல்பா இருக்கிற ஒரு சந்தோசத்தை அங்க அங்க கிடைக்குதுன்னு ரொம்ப பீல் பண்ணினாரு. 90களுக்கு பின்னால் தான் பொள்ளாச்சிக்கு அடிக்கடி சிவாஜி வந்துட்டு போயிட்டு இருந்தார்.  சிவாஜி பொள்ளாச்சி வந்தார்னா கோயம்புத்தூர் ஐஏபி ஸ்டுடியோவில் இருந்து கார் அனுப்புவாங்க .கோயமுத்தூரில் இருந்து  வேட்டைக்காரன் புதூர் வரைக்கும் கார்ல போவாரு.அவர் அடிக்கடி கார்ல போறத பாத்தவங்க எல்லாரும் சொல்லுவாங்க .அப்போ தலையில ஒரு துண்டை கட்டிட்டு சாதாரணமா கார்ல ஒக்காந்து போவார் என்று சொல்லுவாங்க....

ஒப்பீடற்ற சிவாஜி படங்கள்

படம்
நடிப்பு ,வேடங்கள், திரைப்படங்கள் ஒரு கலைஞனால் உருவாக்கப்படும் போது அது சமூகத்திற்க்கு என்ன பயன் அளிக்கும் ,அளிக்கப்படவேண்டும் ,என்பதுதான் முக்கியம்.அதிக நாட்கள் ஓடியது ,சாதனை செய்தது  என்பதை  சில படங்களை வைத்து சமூகத்திற்கு உபயோகமான பயன் தந்த, தந்து கொண்டிருக்கக்கூடிய படங்களுடன் ஒப்பிடக்கூடாது.தமிழில் ஏராளமான ஓடிய படங்களை பார்த்தோமானால் அது வெறும் குப்பைகளாக உள்ளது.ஒரு படத்திற்கு முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு வியாபாரமும் ,லாபமும் கண்டிப்பாக அவசியம், தேவையும்  தான். இந்த வரைமுறைகளில் உருவானவை தான் நடிகர்திலகத்தின் திரைப்படங்கள்.நடிகர்திலகத்தின் படங்களை வைத்தே சில விஷயங்களை பார்க்கலாம். உத்தமபுத்திரன் தெய்வமகன் சரஸ்வதி சபதம் தில்லானா மோகனாம்பாள் கௌரவம் .உதாரணத்திற்காக இந்த சில படங்கள்.தெய்வமகன் தில்லானா மோகனாம்பாள் படங்களின் பேச்சு வரும் போதெல்லாம் இந்த படங்களுக்கு இணையான படங்களை யாரும் சொல்ல முடியாது.வெள்ளிவிழா , வருடக்கணக்கில் ஓடிய படங்கள் தமிழில் நிறைய உண்டு.அந்த படங்கள் எல்லாம் இந்த படத்திற்கு இணையாகுமா ?இதில்  சிவாஜி ரசிகர்களின் கருத்துகளை ...

சிவாஜி -எதச் சொல்ல எத விட....

படம்
உச்சி பூரா உள்ளம் பூரா குளிச்சியா இருக்குதய்யா உன் நடிப்ப பாக்கையிலே வெச்ச பார்வைய  வெலக்கிடத்தான் தோணலய்யா உன் முகத்த பாக்கையிலே! நீ  பேசினாக்க நடந்தாக்க அத பாத்தாக்க நெஞ்சுக்குள்ளே ரத்தமா பாயுதய்யா  உன்ன பத்தி பேசத்தா உதடெல்லாம் துடிக்குதய்யா கொஞ்சமா செஞ்சீரு நீரெல்லாம் கொள்ளாம கொள்ளாம நெஞ்செல்லாம் திணறுதய்யா உன்னை மட்டுந்தா பாக்க வெச்சே அத கொள்கையா மாத்த வெச்சே! கற்பூரமா பத்திக்குது கண்ணெல்லாம் சொக்குது காலமெல்லாம் கூட வந்து கவலையெல்லாம் மறக்க வெச்சே எத பேச எப்படிப் பேச எடுத்துச் சொன்னா அம்புட்டு எழுத்தும் பத்தாதே! ரெண்டாயிரம் வருச சோழன ரெண்டு மணியிலே மறக்க வெச்சயே நூறு பேரு பாரதத்துல  ஒத்தையாளு கர்ணனைத்தா மனசுல நிக்க வெச்சேயே பாஞ்சால சிங்கத்த பாருங்கன்னு பாருக்கெல்லம் புரிய வெச்சயே  சிவனே என் சிவனேன்னு கையெடுத்து கும்பிட்டாக்க உன் முகத்தை நிலைக்க வெச்சயே  நீ வந்து என்பது வருஷமாச்சு எல்லாமே உன்னாலே மாறிப் போச்சு  ஓயாம உழச்சு ஓடா தேஞ்சேம்பாங்க ஆனா ஓயாம உழச்சு மலையா  வளந்தவனே மலையா வளந்தாலும்-அத பெரிசா நெனக்கலியே  அந்த குணத்துலே  உன்ன ம...

மக்களை பெற்ற மகராசி -செங்கோடனின் கொங்குத்தமிழ்

படம்
புதிய பதிவு.. மக்களை பெற்ற மகராசி... பேச்சுத் தமிழில் கொங்கு பாஷைக்கு தனி மரியாதை உண்டு.மற்ற வட்டார பாஷைகளை காட்டிலும் கொங்கு பாஷையில் மரியாதை அதிகம் கொட்டும்.தமிழ் திரைப்படங்களில் வட்டார பாஷைகளை முழுதும் காட்டிய படங்கள் விரல் எண்ணிக்கையில்தான்.கொங்கு பாஷையை சிலகாட்சிகள் தான் சில படங்கள் காட்டியிருந்தன.முழுவதும் காட்டிய படமாகவும், முத்தாய்ப்பான படமாகவும் மக்களைப் பெற்ற மகராசியை  சொல்லலாம். செந்தமிழ் வசனங்கள் , வீர வசனங்கள்  கர்ஜனை புரிந்த வசனங்கள், அடுக்கு மொழி வசனங்களில் மிரட்டிய நடிகர்திலகம் கொங்கு பாஷையையும் விட்டு வைக்கவில்லை.செந்தமிழ் வசனங்களையே பேசி வரும் எவருக்கும் வட்டார பாஷை சறுக்கவே செய்யும்.அந்த சறுக்கலில் விழாமலும், ஜெயித்தும் காட்டியவர் நடிகர்திலகம்.மக்களைப் பெற்ற மகராசி கொங்கு மண்ணுக்கு பெருமை சேர்த்த படம். செங்கோடன் என்ற பாத்திரத்தில் நடிகர்திலகம்.இந்த பாத்திரத்தின் தன்மையை கொண்ட இளைஞர்களை  இன்றும் கொங்கு மண்டல விவசாயம் செய்வோரிடம் காணலாம். அதிகம் படிக்காத, மூர்க்கத்தனமான வீரம்,  உறவுகளிடம் தோழமை, நேர்மையான உழைப்பு கலந்த குணங்களை கொண்டது தான் இப் பாத்த...

தமிழ் சினிமாவின் பொற்காலம்

படம்
தமிழ் சினிமாவின் பொற்காலம்... 1000 கோடி என்ன?  5000கோடி என்ன ?எத்தனையோ  கோடிகளில் எந்த சரித்திர படமானாலும் இனி எடுக்கலாம்.ஆனால் 100 வருடங்கள் ஆனாலும் ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன்தான் முதலில்  பேசப்படுவான். அண்ணன் தங்கை பாசப் பிணைப்பை  ஆன்ட்ராட்ய்டு காலத்தில் என்ன? அடுத்த நூற்றாண்டில் தேடினாலும் பாசமலர் தான்  முதலில் வரும். உனக்கேன் அக்கறை? என்று ஆயிரம் பேனா முனைகள் சமுக சாடல்களை எழுதியிருந்தாலும் ,இனி எழுதினாலும் அதைப் பேசிய குணசேகரன் கதாபாத்திரம் தான் மின்னலாய் தெரியும். ஒரு படத்தின் 90 வேடங்களாயினும், அதை ஒருவரே ஏற்று செய்தாலும், ஒன்பது வேட  நவராத்திரி நடிப்புக்கு  ஈடு செய்ய எவராலும் முடியாது. அடுத்த நூற்றாண்டு அதி நவீன கணிணியும் , தெய்வமகனை  ஆராய்ச்சி செய்தால் , அது கூட " ERROR " என்று தான் காட்டும். இப்போது பிறக்கும் ஒரு குழந்தை அதன் 100 வது வயதில் தேசபக்தி காவியங்களை சொல்ல விரும்பினால் அப்போதும் நடிகர்திலகத்தின் படங்களைத்தான் அது  சொல்ல வேண்டியது வரும். எந்த வரிசையில் படங்கள் வந்தாலும் ஓர் வரிசையில் வந்த நடிகர்திலகத்தின்  "பா " வரிசை...

சிவாஜி சொந்த முடியுடன் நடித்த படங்கள்

படம்
உடலுக்கு உச்சம் தலை. தலைக்கு உச்சம் கேசம். அழகான அடர்த்தியான கேசம் கொண்டவர் நடிகர்திலகம். இறுதிவரை உதிராத நடிப்பு கொண்ட நடிகர் திலகத்துக்கு கடைசி வரை உதிராத முடியும் கூட. பாத்திரங்களுக்கு வித்தியாசமான ஒப்பனைகள் வேண்டும் என்பதற்காக அவர் நிறைய படங்களில் விக் அணிந்து நடித்தார்.நடிகர் திலகம்  'விக் 'அணியாமல் சொந்த முடியுடன் நடித்த சில திரைப்படங்களை பார்க்கும் போது  இவ்வளவு அழகான தலைக் கேசத்தை கொண்ட நடிகர்திலகம்  இவர் இப்படியே நடித்திருக்கலாமே பல படங்களில் என்ற ஆசை பெரும்பாலான ரசிகர்களுக்கு இருந்தது. விக் வைத்து நடிக்கும் பழக்கம் அதிகமாக 1970 களுக்குப் பின் தான் அதிகம் இருந்தது.அதற்கு முந்தைய கால கட்டங்களில் விக் வைத்து நடித்திருந்தாலும் நடிகர்திலகம் அதற்கேற்ற வித்தியாசமான கதா பாத்திரங்கள், புராண சரித்திர படங்களுக்குத் தான் வேறுபாடு தெரிய வேண்டும் என்பதற்கு உபயோகப்படுத்தினார். நடிகர் திலகம் ' விக் ' அணியாமல் தன் சொந்த முடியுடன் நடித்த திரைப்படங்கள் : நடிகர்திலகம் தான் நடித்த முதல் படத்திலேயே தன் ஒரிஜினல் முடியுடன் தான் நடித்தார்.அது படத்திற்கும் நன்றாக பொருந்தி விட்டது. அதற்...

தாய் திரைப்பட விமர்சனம்

படம்
 தாய் கதைச்சுருக்கம்  மேஜர் சுந்தராஜன் சூதாடி +குடிகாரர்.மனைவி வரலட்சுமி.கணவனின் குடிப்பழக்கம் எந்த  மனைவிக்கு பிடிக்கும்?   குடிப்பழக்கத்தை நிறுத்த கண்டிப்புடன் சத்தியம் வாங்குகிறார். அவர் அப்போது நிறைமாத கர்ப்பிணி. மீண்டும்  சூதாட்டம் ஆடி,  பிரச்சினை ஆக,  போலீஸ் தேட, மனைவி கண்டிக்க, ஆத்திரம் மேஜருக்கு... மனைவியை அடிக்க, இறந்து விட்டதாக பயந்து, சகோதரியிடம் அடைக்கலம்  ஆகிறார்  மேஜர். சிங்கப்பூரில் ... இறக்காத வரட்சுமி  இட்லி கடை நடத்தி  மகனையும், மகளையும் வளர்த்து ஆளாக்குகிறார். அவருக்கு ஆதரவு கொடுப்பவர் வி.கே.ராமசாமி. மகனாக நடிகர்திலகம். மகளாக குமாரி பத்மினி. தவறைக் கண்டால் தட்டிக்கேட்கும் சுபாவம்,  நேர்மையை எதிர்பார்ப்பதும், தாய்மையை போற்றுவதும் கொண்ட காரெக்டர் ஆனந்தன் (நடிகர்திலகம்) . பொழுது போக்குக்காக தாயம் விளையாடும் பழக்கம் உண்டு. சிங்கப்பூரில் இருந்து பெரும் பணக்காரராக மெட்ராஸ் வரும் மேஜர், தன் கடைசி காலத்தை நல்ல கிராமத்தில் கழிக்க விரும்பி வாடிப்பட்டி கிராமத்திற்கு வருகிறார்.ஊருக்கு நல்லது செய்ய விரும்பும் அவரிடம்...

சிவாஜியின் வெள்ளிவிழா படங்கள்

படம்
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்த வெள்ளிவிழா திரைப்படங்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த மொத்த நேரடி தமிழ் படங்கள் 288. 1952 ல் நடிக்க தொடங்கி 47 வருடங்களாக திரையுலகில் நடித்துக் கொண்டிருந்தார். 1988 வரை 36 வருடங்களாக ஓய்வில்லாமல் படங்களை நடித்து வெளியிட்டுக் கொண்டிருந்தார் நடிகர் திலகம்.  இந்த 36 வருடங்களில் நடிகர் திலகத்தின் பட சராசரியை எடுத்துக் கொண்டோமானால் வருடத்திற்கு எட்டு படங்கள் கணக்காகின்றது. ஆக 45 நாட்களுக்கு ஒரு படம் வெளியானது என்று கணக்காகின்றது . ஒரு படம் வெள்ளி விழா ஓட வேண்டும் என்றால் 175. நாட்கள் ஓடி இருக்க வேண்டும் . 175 நாட்கள் என்று கணக்கு வரும் போது கிட்டத்தட்ட நான்கு படங்கள் சிவாஜி படங்கள் வெளியாகி இருக்கும் .இப்படி வெளியானால் அது 100 நாள் ஓடுவதற்கே பெரும் தடையாக அல்லவா  இருக்கும் . இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நடிகர் திலகத்தின் படங்கள் வெள்ளிவிழா ஓடி வெற்றி வாகை சூடிய பட பட்டியலை  காணலாம் . 1.நடிகர் திலகத்தின் முதல் படமான பராசக்தியே நடிகர் திலகத்தின் வெள்ளி விழா பட்டியலில் முதலாவதாக இடம்பெற்றுள்ளது . இலங்கை மைலன் திரையரங்கில் 266 நாட்கள் ஓடி வெள...

வெளிநாட்டில் எடுக்கப்பட்ட சிவாஜி படங்கள்

படம்
சினிமாவுக்காக சிவாஜி சென்ற வெளிநாடுகள் ... இப்போதெல்லாம் பல தமிழ் படங்கள் வெளிநாடுகளில் தான் படமாக்கப்பட்டு வருகின்றன. அப்படி இல்லையெனில் ஒரு பாடலுக்கு டூயட் பாடவாவது வெளிநாட்டிற்கு சென்று விடுகிறார்கள். உண்மையாகவே படத்திற்கு அந்த வெளிநாட்டு காட்சிகள் தேவையா அல்லது படப்பிடிப்பை சாக்காக வைத்து ஊர் சுற்றி பார்க்கிறார்களா என்று தெரியவில்லை. சரி அதெல்லாம் இருக்கட்டும் தமிழ் சினிமாவில் வெளிநாடுகளில் சென்று படப்பிடிப்பு நடத்தும் கலாச்சாரம் எப்போது தோன்றியது என்று தெரியுமா? முதன் முதலில் எந்த தமிழ் படத்தை வெளிநாட்டில் சென்று படமாக்கினார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அந்த தகவலை தான் நாம் இதில் பார்க்க போகிறோம். அதன்படி இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1969ஆம் ஆண்டு வெளியான சிவந்த மண் என்ற தமிழ் படம் தான் முதன் முதலில் வெளிநாட்டில் படமாக்கப்பட்டது.இந்த படத்தில் சில காட்சிகளுக்காக யூரோப், ஈபிள் டவர் மற்றும் ஆல்ப்ஸ் மலைஆகிய இடங்களுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். இந்த படம் கிட்டத்தட்ட 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இடம்பெற்ற வெளிநாட்...

சிவாஜியின் பாசிடிவ் பாடல்கள்

படம்
சிவாஜியின் பாசிடிவ் சாங்ஸ். பாட்ட கேட்டா அது மனதுக்குள்ள போயி அந்த டயத்துல ரசிச்சு முடிக்கிறதோட முடிஞ்சிரக்கூடாது .அது காலமெல்லாம் வரணும் நம்ம மனச மாத்தணும். நல்ல விஷயத்தை சொல்லணும்.சிவாஜியோட இந்த பாடல்களை கேட்டால் அது நாம சாகுற வரைக்கும் வரும்.அதுதான் பாசிடிவ் சாங்ஸ். பச்சை விளக்கு படத்துல வர்ற அந்த ஒளிமயமான எதிர்காலத்தை பாட்டை கேளுங்க. இந்த பாட்டோட பெருமையை பத்தி சிவாஜி ரசிகர் யாரு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்கள் ஒரு தன்னம்பிக்கை ஒரு பாட்ட உதாரணமாக சொல்ல ஆரம்பிச்சாங்கன்னா இந்த பாட்ட தான் முதல்ல உதாரணமா சொல்லுவார்கள்.இந்த பாட்டுல ஒரே ஒரு விஷயம் மட்டும் சுத்தி சுத்தி வராது பலவகப்பட்ட விஷயத்தையும் இந்த பாட்டுல நம்ம பார்க்கலாம். பாட்டோட ஆரம்பம் எதிர்காலத்தை பத்தி பாடுற மாதிரி வரும். அப்புறம் ஒரு வீட்டுக்கு பெருமை சேர்க்கிற அந்த பெண் குலத்தோட பெருமையா பேசுற மாதிரி வரும்.  கூடவே இந்தியாவோட மதச்சார்பின்மை ,இந்தியாவோட மக்கள் பலம் எல்லாத்தையும் சேர்த்து எழுதி இருப்பார் கண்ணதாசன். வெறும் பாட்டா கேட்டுட்டு கடந்துட்டு போயிட முடியாது இந்த பாடலை கேட்டா. நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை எ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்