இடுகைகள்

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜி அண்ணன் வி.சி.தங்கவேல் அவர்கள் பற்றிய தகவல்கள்

படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அண்ணன் வி. சி. தங்கவேல் அவர்கள் பற்றியான தகவல்கள்  :- நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூன்றாவது அண்ணனான வி. சி. தங்கவேல் அவர்கள் நாகப்பட்டிணத்தில் அவரது தந்தை சின்னையா மன்றாயர் ரயில்வே பணிமனையில் வேலை செய்து கொண்டிருந்த போது விழுப்புரத்தில் பிறந்தார்.   சின்னையா மன்றாயர் ஆரம்பகாலத்தில் ரயில்வேயில் கேங்க் மேனாக இருந்த போது அதாவது ரயில்வே தண்டவாளம் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு வேலையில் இருந்த போது முதலில் சீர்காழியில் பணிபுரிந்து வந்தார் அங்கு அவர்களின் முதல் மகனான திருஞானசம்பந்தமூர்த்தி பிறந்தார்.  அவருக்கு திருஞானசம்பந்தமூர்த்தி என்று பெயரிடுவதற்கு காரணம் 63 நாயன்மார்களில் முதன்மையான குழந்தை பாலகனான திருஞானசம்பந்தமூர்த்தியின் பிறந்த ஊரான சீர்காழி ஸ்தலம் என்பதால் அப்பெயர் இடப்பட்டது.  அதன் பிறகு சீர்காழி அடுத்த சிதம்பரத்தில் பணியிடை மாற்றம் சின்னையா மன்றாயருக்கு ஏற்பட்டதால் அங்கு பிரசிதி பெற்ற நடராஜர் திருபெயரில் ஆதி கருவறை பெயரான கனகசபைநாதர் என்பதை இரண்டாவது மகனுக்கு  கனகசபைநாதன் என்று பெயரிட்டார்.  அதன் பிறகு இரண்டு பிள்ள...

ஜீவபூமி

படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த சாண்டில்யனின் ஜீவ பூமி ... நடிகர் திலகம் சிவாஜி கணேசன் & சரோஜாதேவி மற்றும் v.k.ராமசாமி, டி. எஸ். பாலையா, எம். ஆர். ராதா, T.k.பகவதி ,நாகேஷ் ஆகிய அன்றைய முன்னணி நடிகர்கள் நடித்து வெளிவராத சரித்திர திரைப்படம். கிட்டத்தட்ட இந்த திரைப்படம் அதற்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த வடநாட்டு  ராஜா கதைகளான தங்கமலை ரகசியம், ராஜ பக்தி, மருதநாட்டு வீரன், சித்தூர் ராணி பத்மினி போன்ற திரைப்படங்களின் கதை சாயலில் தான் இந்த திரைப்படமும்.  வடநாட்டு ராஜ வம்சத்தில் ஒன்றான ராஜ புத்திர வம்சத்தை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படமானது சாண்டில்யன் எழுதிய ஜீவ பூமி புதினத்தையும் மேலும் இரண்டு புதினங்களின் கலவையாக  இயக்குனர் சோமு அவர்கள் சிவாஜி கணேசன் மற்றும் சரோஜாதேவிவை வைத்து இயக்கினார்.  இந்த திரைப்படம் 1962 முதல் வெகு நாட்கள் தயாரிப்பில் இருந்து 1965ல் வெளி வருவதாக இருந்தது.படத்தின் காட்சிகள் எல்லாம் வடநாடுகளிலே படமாக்கப்பட்டது.  அந்த சமயத்தில் சிவாஜி கணேசன் கர்ணன், புதிய பறவை போன்ற பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்...

சிவாஜி நடித்த தெலுங்கு திரைப்படங்கள்

படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த தெலுங்கு திரைப்படங்கள் : 1.சிவாஜி கணேசன் நடித்த முதல் தெலுங்கு திரைப்படம் பரதேசி. இந்த திரைப்படம் வெளிவந்த ஆண்டு 14. 1. 1953 . நடிகை அஞ்சலி தேவி தயாரித்த திரைப்படம் இது.சிவாஜியுடன் நாகேஸ்வரராவும் நடித்திருந்தார் .இந்தப் படத்தை இயக்கியவர் எல் வி பிரசாத் நடிகர் திலகத்துக்கு ஜோடி வசந்தா.  2.நடிகர் திலகத்தின் அடுத்த தெலுங்கு திரைப்படம் பெம்புடு கொடுகு.இந்தத் திரைப்படம் வெளிவந்த ஆண்டு 11.11.1953  . சிவாஜிகணேசனுடன் சாவித்திரி நடித்த முதல்  திரைப்படம் இது.இந்தப் படத்தின் இயக்குனர்  எல் வி பிரசாத். ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு சிவாஜி நடித்து வந்த பெற்ற மனம் படத்தின் கதை தான் இது.இந்தப் படத்தில் நடிக்க சிவாஜி கணேசனை ஒப்பந்தம் செய்தால்தான் தெலுங்கில் தயாரிக்க அனுமதிப்பேன் என்று P.A.பெருமாள் அவர்கள் தயாரிப்பாளரிடம் நிபந்தனை விதித்தார்.  3.அடுத்து நடிகர் திலகம் நடித்து தெலுங்கில் வெளியான படம் மனோகரா.இப்படம் வெளிவந்த  தேதி 3.6.1954.இந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் கிரிஜா. இயக்கம் எல் வி பிரசாத். இந்தப் படத்தின் தெலுங்கு வசனங்க...

சிவாஜி படங்களில் திருஷ்டி பரிகாரங்களாய் அமைந்த பாடல்கள்

படம்
சிவாஜி படங்களில் திருஷ்டி பரிகாரங்களாய் அமைந்த பாடல்கள் .. ரோடு நல்லா இருக்கும் .வண்டிகளில் சீரான வேகத்தில் போய்க் கொண்டிருப்போம்.ஒரு  அலுங்கலில்லை .குலுங்கல் இல்லை.அப்படி போய்க் கொண்டிருக்கும் வண்டி ஸ்பீடு  பிரேக்கர் வந்தால் சடாரென தடுமாறுமே ,அதே போல்தான் நன்றாக போய்க் கொண்டிருக்கும் திரைப்படத்தில் தேவையில்லாமல் ஒரு பாடல் வந்து அந்த திரைப்படத்தை நாம் ரசித்துக் கொண்டிருக்கும் போது நம்மை வெறுப்பேற்றும். பெரும்பாலும் சிவாஜி படங்களில் தேவையில்லாத ,சம்பந்தம் இல்லாத பாடல்கள் இருக்காது. சில படங்களில் பாடல்கள் ரசிக்க வைத்தாலும் அந்தப் படத்துக்கு அது தேவையில்லாத பாடலாக கூட இருக்கும்.  அப்படி நடிகர் திலகத்தின் சில படங்களில் தேவையில்லாமலும், சில படங்களில் திருஷ்டி பரிகாரங்களாகவும் அமைந்த பாடல்கள் என்னவென்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம். வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தையும் சாகசத்தையும்   நடிகர் திலகம் தன் நடிப்பால் நமக்கு காட்டிக்கொண்டிருக்கிறார்  படம் முழுவதும்.வைத்த கண் வாங்காமல் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து  ரசித்து நாம் பார்த்துக் கொண்டிருக்க...

பின்னியெடுத்த பளார் காட்சிகள்

படம்
சிவாஜி அடிப்பது போன்ற காட்சிகளில்  நடிக்கும் போது உடன் நடிப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் .சிவாஜியிடம் பாவ்லா நடிப்பெல்லாம் இருக்காது .இது போன்ற காட்சிகளை எடுப்பதற்கு முன்பே சிவாஜி உடன் நடிப்பவர்களிடம் அந்தக் காட்சிகள் எப்படி நடிக்க வேண்டும், நான் அடிக்கும்போது நீங்கள் எவ்வாறு விலகிக் கொள்ள வேண்டும் என்று விபரமாகவே சொல்லிவிட்டே அந்தக் காட்சியில் நடிக்க தொடங்குவார். படத்தில் சிவாஜி அடிப்பதை பார்த்தால் உண்மையாகவே அடித்து விட்டாரோ என்று நினைக்க தோன்றும். அந்த காலத்தில் நடிகர் திலகத்துடன் நடித்த நடிகர் நடிகர்கள் எல்லாம் திறமையானவர்களாக இருந்ததால் இதுபோன்ற படத்தில் இடம் பெற்ற காட்சிகள் தத்ருபமாக அமைந்து இருக்கும்.என்னதான் உஷாராக இருந்தாலும் அதையும் மீறி சில சமயங்களில் அடிகள் நிஜமாகவே உடம்பின் மீது விழுந்துவிட்ட பல சம்பவங்களும் இருந்துள்ளன. அப்படி நடைபெற்ற சம்பவங்களில் மூன்று சம்பவங்கள் மிக முக்கியமானவை. இந்த மூன்று சம்பவங்களில் மூன்று முக்கிய பிரபல கதாநாயகிகள் இருக்கிறார்கள். அவர்கள் பத்மினி சாவித்திரி சரோஜாதேவி. இந்த மூன்று சம்பவங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.  த...

அதிர வைத்த கோர்ட் காட்சிகள்

படம்
நடிகர் திலகம் திரைப்படங்களில் கோர்ட் காட்சிகள். கோர்ட் காட்சிகள் என்று பலரால் சொல்லப்படும் போது சிவாஜி கணேசன் முதலில் நடித்த பராசக்தி படத்தை சொல்வார்கள். நீதிமன்றம் பல விசித்திரம் நிறைந்த வழக்குகளை சந்தித்து இருக்கிறது என்று ஆரம்பித்து ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்று நடிகர் திலகம் பராசக்தியில் முழங்கிய போது  அந்தப் படமும் ஓடித் தள்ளியது. சிவாஜியின் அந்த பராசக்தி கோர்ட் சீன்களை வைத்து மழைக்காலங்களில் வைரலாக பரவும் அந்த மழை சம்பந்தப்பட்ட கோர்ட் காட்சிகள் கூட வைரலாக பரவுவதில் இருந்து அதன் தாக்கத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம். பராசக்தியில் அந்த கோர்ட் காட்சியில்  சிவாஜி பேசிக் கொண்டிருக்கும்போது இடையே எழுந்து ஒரு குமாஸ்தா கேள்வி கேட்க,  கை நீட்டும் போது உனக்கேன் அக்கறை என்று பதில் சொல்லும் பாணி எல்லோரையும் கவர்ந்தது. ஒரு சிறு மழை தூரலாக ஆரம்பிக்கும் அந்த வசனம் சிவாஜி பேசி முடிக்கும் போது பெரும் புயலாக முடிந்திருக்கும் . யாரால் மறக்க முடியும் இந்த கோர்ட் காட்சியை. அடுத்து எல்லோராலும் ரசிக்கப்படும் அந்த கௌரவம் கோர்ட் காட்சிகள். எல்லா வக்கீல் வேடங்களுக்கும் கா...

அந்த காலத்திலேயே அசத்திய சிவாஜியின் மேக்கப்புகள்

படம்
அந்த காலத்திலேயே அசத்திய சிவாஜியின் மேக்கப் கலைகள். ஒரே மாதிரி முக தோற்றத்தில் நடிப்பை தருவது ரசிகனுக்கு ஒரு நடிகன் செய்யும் கைம்மாறு அல்ல.இன்றைய கால கட்டங்களில் எந்த நடிகனும் எப்படி வேண்டுமானாலும் தன்னை மாற்றிக் கொள்ளலாம்.அந்த அளவுக்கு மேக்கப் கலைகளும் தொழில் நுட்பங்களும் வளர்ந்துள்ளன.நடிகர்திலகம் இருந்த காலகட்டத்தில் முக தோற்றதை மாற்றும் மேக்கப் , மற்றும் வித்தியாசமான முக தோற்ற மேக்கப் போடுவது என்பது மிகவும் கடினமான ஒன்று.இதற்கு காரணம் ,இது போன்ற மேக்கப்பிற்காக பல வீரியம் கொண்ட ரசாயன கலைவைகள் மற்றும் பசை ஆகியவை பயன்படுத்தபட்டதுதான்.இந்த வகை மேக்கப் எல்லா ஒப்பனையாளர்களும் செய்யவும் முடியாது.அதற்கென்று சிலரே இருந்தார்கள்.மேக்கப் போடுவதை காட்டிலும் அதை கலைப்பது மிகவும் கடினமான ஒன்றாகவும் இருந்தது. முகத்தோல் கிழியும் ,வலி கொடுக்கும் ,நேரமாகும் என்பதெல்லாம் இந்த மேக்கப் கலையில் இருந்த சிரமங்கள். அதனால்தான் பெரிய நடிகர்களே  பெரும்பாலும் இந்த வகை மேக்கப் போடுவதை விரும்புவதில்லை. எதற்கு வீணான ரிஸ்க் என்று வித்தியாசமான முகத்தோற்றமா, மாறுவேடமா ... ஒட்டு தாடியை, இல்லை முகத்தில் ஒரு சிறு கரு...

சிவாஜியுட நடித்த கதாநாயகிகளுக்கு எத்தனை படங்கள் 100 நாள் ஓடியது

படம்
சிவாஜியுடன் ஜோடியாக  நடித்த கதாநாயகிகளின் திரைப்படங்களில்  100 நாள் ஓடிய  பட விபரங்களை இந்த பதிவில்  பார்க்கலாம்.சிவாஜியுடன்  கதாநாயகிகளாக நடித்த திரைப்படங்கள் மட்டும் இந்த பதிவில்  குறிப்பிடுகிறேன். சிவாஜியுடன் நடித்த முதல் கதாநாயகி பண்டரிபாய் . இவருடன் இணைந்து நடித்த பரராசக்தியான முதல்படமே 280 நாட்கள் ஓடியது.இதைத் தொடர்ந்து சிவாஜியுடன் பண்டரிபாய் நடித்த அன்னையின் ஆணை,தெய்வமகன், கௌரவம் ஆகிய நான்கு படங்கள் 100 நாள் ஓடிய திரைப்படங்கள் ஆகும். சிவாஜி கிரிஜா நடித்த இரண்டு படங்களில் மனோகரா  100 நாள் திரைப்படம் ஆகும். சிவாஜி பத்மினி நடித்த 100 நாள் படங்கள்:கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி தூக்குத்தூக்கி எதிர்பாராதது அமரதீபம் புதையல் உத்தமபுத்திரன் தங்கப்பதுமை தெய்வப்பிறவி இரு மலர்கள் தில்லானா மோகனாம்பாள் வியட்நாம் வீடு குலமா குணமா  ஆகிய 12 படங்கள் 100 நாள் ஓடிய திரைப்படங்கள் ஆகும். சிவாஜி ஜி வரலட்சுமி நடித்த நான் பெற்ற செல்வம் 100 நாள் ஓடிய திரைப்படம். சிவாஜி ஜமுனா நடித்த தெனாலிராமன் தங்க மலை ரகசியம் ஆகிய 2 படங்கள் 100 நாள் திரைப்படங்கள் . சிவாஜி எம் என்...

சிவாஜி படங்களின் சாட்டையடி காட்சிகள்

படம்
சிவாஜி கணேசன் சாட்டையடி காட்சியில் நடித்தமிகவும் கடினமான காட்சிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்  . 1) காத்தவராயன் படத்தில் சிவாஜி கணேசன் மகாராணி ஆரியமாலாவான சாவித்திரியை காதலிப்பதை மன்னர் ஈ. வி. சகாதேவன் அறிந்து கொண்டு காத்தவராயனான சிவாஜி கணேசனுக்கு ராஜ தண்டனை கொடுக்கும் விதமாக படத்தின் இறுதி காட்சியில் யானையின் பின் பக்கம் சிவாஜி கணேசனை யானை சங்கிலியால் பிணைக்கப்பட்டு சாட்டையால் அடித்து கொலை களத்திற்கு கொண்டு செல்வதை போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்தகாட்சியில் சி. எஸ். ஜெயராமன் பாடிய  'விதியா சதியா 'பாடல் இடம் பெற்றிருக்கும். இந்த பாடல் காட்சியில் சிவாஜி கணேசன் மேல் விழும் சட்டையடிகளை நாம் படத்தில் பார்க்கும்போது சாட்டையடிகள் உண்மையிலேயே அவர் உடம்பில் விழுந்து விட்டதா என்பது போல காட்சியில் சாட்டையடிகள் அனலடிக்கும் விதமாக எடுத்திருப்பார்கள்.ஆம் உண்மைதான்.இந்தகாட்சியில் சிவாஜியின் மேல் 12 சாட்டையடிகள் விழும்.இதில்  உண்மையாகவே 4/5 சாட்டையடிகள் அவர் உடலை பதம் பார்த்து விட்டது.முதுகில் விழுந்த அடிகள் எல்லாம் சிவாஜிக்கு மிகுந்த வலியை கொடுத்தன.அதையும் பொருட்படுத்தாது சி...

சிவாஜியின் 64 வகை முக பாவங்கள்

படம்
சிவாஜியின் 64 வகை முக பாவனைகள்  ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!இத்தகைய அரிய திறமை வாய்ந்த நடிகர் நடிகர்திலகம் மட்டுமே!  மனிதனின் முக உணர்ச்சி பாவங்கள் என்பது 8 வகை தான். அவை.. 1சிரிப்பு  2அழுகை 3பயம்  4மகிழ்ச்சி  5கோபம்  6வீரம்  இகழ்ச்சி  8வியப்பு .. இந்த எட்டு வகை பாவங்களை மெய்ப்பாடுகள் என்பார்கள். இப்படி எட்டு வகை பாவங்கள் தானே உள்ளது.பின் எப்படி 64 வகை பாவங்கள் என்ற கேள்வி பலருக்கும் வரலாம். அது பற்றிய விளக்கத்தை காண்போம். சிவாஜி  சிரித்துக் கொண்டே அழுவார்.அழுதுகொண்டே சிரிப்பார் பல படங்களில்.கண்ணதாசனே பாவமன்னிப்பு படத்தில் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் என்று பாடல் எழுதியிருப்பார். இதில் சிரிப்பும் அழுகையும் கலந்துள்ளது. இப்படித்தான் இந்த எட்டுவகை பாவங்களில் இன்னொரு பாவமும் கலந்து வெளிப்படுத்துவது. சிரிப்புடன் அழுகை  சிரிப்புடன் கோபம்  சிரிப்புடன் வியப்பு  ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்