இடுகைகள்

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

வெள்ளிவிழா கண்ட சிவாஜி படங்ளின் பார்முலா

படம்
இந்தப் பதிவில் சொல்லப்படும் சிவாஜியின் வெள்ளி விழா படங்களில் ஓர் ஒற்றுமை உள்ளது. அது ' பிரிவு ' என்பதை மையமாக வைத்து அமைந்த திரைப்படங்கள். அவை என்னென்ன படங்கள் என்னென்ன வகையில் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.  சிவாஜியின் மூன்று வெள்ளி விழா படங்களில் நடித்த நடிகை K.R.விஜயா. தங்கப்பதக்கம் ,திரிசூலம், நீதிபதி.தங்கபதக்கம் படத்தில் சில காலம் மகனை பிரிந்து இருப்பார் சிவாஜி.திரிசூலம் படத்தில் மனைவி மகனை பிரிந்து இருப்பார் சிவாஜி.நீதிபதி படத்திலும் காதலி சுஜாதா ,மகன் பிரபுவை பிரிந்து இருப்பார் சிவாஜி.இந்த மூன்று படத்திலும் உள்ள ஒற்றுமை இது.தங்கபதக்கம் வெளியான போது அதுவரை வெளியான வசூல் சாதனைகளை முறியடித்தது.திரிசூலம் வெளியான போது அதற்கு  முன் வெளியான அத்தனை படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது. இந்த மூன்று படங்களிலும் மனைவியோ அல்லது மகனோ பிரிந்திருக்கும் காட்சி அமைப்புகள் இடம் பெற்று இருக்கும்  பாவமன்னிப்பு. 177 நாட்கள் ஓடி வெள்ளிவிழா சாதனை செய்த படம் பாவ மன்னிப்பு. இந்தப் படத்தில் சிவாஜி ,அப்பா  எம் .ஆர். ராதா ,அம்மா எம் வி ராஜம்மா, தம்பி ஜெமினி கணேசன் ஆகியோரை சிறுவயதிலேயே...

சிவாஜிக்கு மகளாக நடித்த நடிகைகள்

படம்
நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு மகளாக நடித்த நடிகைகள் பற்றிய விவரங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம் . முதல் தேதி. 12 3 1955 இல் வெளியான படம் இது. சிவாஜி முதன்முதலாக வயதான தோற்றத்தில் நடித்த படம் இது.சிவாஜியின் 21வது திரைப்படம் இதுவாகும்.இந்தப் படத்தில் சிவாஜிக்கு மகளாக பேபி உமா என்பவர் நடித்திருந்தார். சிவாஜிக்கு மகளாக முதன் முதலில் நடித்த நடிகை என்று இவரை சொல்லலாம். 12 7 63 ல் வெளியான படம் பார் மகளே பார். இந்தப் படத்தில் சிவாஜியின் மகள்களாக விஜயகுமாரி புஷ்பலதா இருவரும் நடித்திருந்தார்கள்.  தனக்குப் பிறந்த இரு மகள்களில் ஒரு மகள் தனக்கு பிறந்தவர் இல்லை என்ற பிரச்சனை எழுவதும் அதற்குப் பின் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதையாகும். மோட்டார் சுந்தரம் பிள்ளை. 13 குழந்தைகளுக்கு தந்தையாக நடித்தார் சிவாஜி கணேசன் . ஜெயலலிதாவும் காஞ்சனாவும் அந்த 13 குழந்தைகளில் இரு மகள்களாக நடித்திருந்தார்கள்.  திருமால் பெருமை படத்தில்   பெரியாழ்வார் என்ற பாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகர் திலகம்.  கே ஆர் விஜயாவின் வளர்ப்பு தந்தையாக சிவாஜி நடித்திருப்பார். சிறு வயது மகளாக குட்டிபத்மினி நடித...

ஒவ்வொரு காலகட்டத்திலும் சிவாஜியின் முக உடல் தோற்றங்கள்

படம்
ஒவ்வொரு காலகட்டத்திலும் வித விதமாக வடிவெடுத்த சிவாஜி கணேசனின் முக தோற்றம் மற்றும் உடற் தோற்றங்கள் : முதலில் 1952ல் வெளியான பராசக்தி திரைப்படத்தில் இருந்து 1956ல் சிவாஜி கணேசன் நடித்து வெளியான அனைத்து திரைப்படத்திலும் ஒரே மாதிரியாகவும் ஆனால் அதற்கு இடையே 1954ல் சிவாஜி கணேசன் லேசான திடகாத்திரமான உடற் தோற்றத்தில் கொஞ்சம் பூசினாற் போல் தோற்றத்தில் நடித்தார்.  அதன் பின் 1957 முதல் 1960 வரையிலான அனைத்து திரைப்படங்களிலும் சிவாஜி கணேசன் முக தோற்றமும், உடல் தோற்றமும் இன்னும் சற்று மாறி இருந்தது. ரசிக மக்களை தனது நடிப்பின் முக பாவத்தாலும், உடல் மொழியாலும் (பாடி லாங்வேஜ்)லும் வெளுத்து வாங்கியிருப்பார். அதன் பிறகு 1961 முதல் 1966 வரையிலான காலகட்டத்தில் சிவாஜி கணேசன் ஒரு அழகான உடற்தோற்றத்தில் அமூல் பேபி என்று சொல்லமாக நமது குழந்தைகளை அழைப்பது போன்றான குண்டான உடற்தோற்றத்தில் சிவாஜி கணேசன் நடித்து அசத்தியிருப்பார். இன்னும் தெளிவாக சொல்ல போனால் அந்த காலகட்டத்தில் ரத்ததிலகம், புதிய பறவை, கர்ணன், ஆண்டவன் கட்டளை, பச்சை விளக்கு படங்களில் கொஞ்சும் முக தோற்றத்திலும் உடற் தோற்றாலும் நடித்திருப்பார்....

சிவாஜியை வைத்து படம் தயாரித்த நடிகர் நடிகைகள் இயக்குனர் இசையமைப்பாளர்

படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து படம் தயாரித்த நடிகர் நடிகையர்கள் இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர்கள் .. ஸ்ரீதருக்கு ஓர் அமரதீபம்.... ஸ்ரீதர் திரைப்பட இயக்குனர் ஆவதற்கு முன்பு திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதிக் கொண்டிருந்த காலம்.கதை வசனம் எழுதிக் கொண்டிருந்த ஸ்ரீதருக்கு சிவாஜியை  வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று ஆசை வந்தது.கையிலோ காசு இல்லை. அந்த சமயத்தில் அவர் எழுதி வைத்திருந்த ஒரு கதையை சிவாஜிக்கு சொன்னார். அந்தக் கதையை சிவாஜிக்குசொன்ன ஸ்ரீதர்  உங்களை வைத்து நான் இந்த படத்தை எடுக்க  வேண்டும் என்று தன் ஆசையை சொன்னார். ஆனால் உங்களுக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்கு கூட என்னிடம் பணம் இல்லை என்று சிவாஜியிடம் கூறினார். நீங்கள் சம்மதம் கொடுத்தால் நீங்கள் நடிப்பதாக ஒரு விளம்பரம் பத்திரிக்கையில் செய்து விடுகிறேன். விநியோகஸ்தர்கள் தரும் பணத்தை வைத்து படத்தை முடித்து விடுகிறேன் என்று சிவாஜியிடம் கூறினார் .சிவாஜியும் அவருக்கும் ஒரு வாழ்வளிக்கலாமே என்று தன் சம்மதத்தை கூறிவிட்டார்.  அப்படி சிவாஜி அட்வான்ஸ் எதுவும் வாங்காமல் ஸ்ரீதர் தயாரிக்க சம்மதம் கொடுத்த படம் அமரதீபம். ஸ்ரீதர...

சிவாஜியின் ரிலீஸ் ஆகாத படங்கள்

படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து பாதியுடன் நின்று போன படங்கள் மற்றும் வெளிவராத படங்களை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். ஏழு ஜென்மங்கள்.. ஏழு ஜென்மங்கள் என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கும் திட்டம் ஆரம்பமானது. இந்தப் படத்தின் கதாசிரியர் ஏ எஸ் பிரகாசம்.இயக்குனராக திருநாகசந்தர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல் ஜென்மத்தில் காதலர்களாக இருந்து தம்பதிகளாக மாறி ஏழு ஜென்மத்திலும் வெவ்வேறு இடங்களில் பிறந்து இணைவது தான் கதை .இதில் சிவாஜிக்கு ஒவ்வொரு ஜென்மத்திலும் ஒவ்வொரு ஒப்பனை. ஏ எஸ் பிரகாசம் கூறிய இந்த கதை சிவாஜிக்கும் மிகவும் பிடித்திருந்தது .நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். எம் எஸ் விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்றும் இந்த படத்திற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டது . பூஜை போடப்பட்டு பட வேலைகளும் ஆரம்பிக்க தொடங்கிவிட்டன. இதன் தயாரிப்பாளருக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வராததால் படம் அதோடு நின்று போனது. ஏழு ஜென்மங்கள் ஏழு விதமான ஒப்பனைகள் என்று விதவிதமாக நடிக்கலாமே என்று இருந்த சிவாஜிக்கு இந்தப் படம் நின்று போனதில் ஒரு வருத்தம். சாவித்திரி தயாரித்து நடித்த பிராப்தம் படத்தின் ...

3 வது முறை 100 நாள் ஓடிய வசந்தமாளிகை

படம்
2023 ஆம் ஆண்டில் திருப்பூர் மணீஸ் திரையரங்கில் முதல் மரியாதை 100 நாள் ஓடியதை அடுத்து  மறு வெளியீடு  கண்ட வசந்த மாளிகை திரைப்படமும் 100 நாள் ஓடி சாதனை படைத்தது .. இது பற்றிய சிறப்பு தகவல்கள் இந்த பதிவில்.. ஒரு படம் தயாரிப்பதிலேயே மிகுந்த சிரமங்கள்  இருக்கும் இந்த காலகட்டத்தில் படத்தை வெளியிடுவது என்பதில் அதைவிட சிரமங்கள் உள்ளது . பிரபல முன்னணி ஹீரோக்களின் படங்களைத் தவிர மற்ற படங்கள் நல்ல படங்களாக இருந்தாலும் ஓடுவது என்பது பெரிய சவாலாகவே இருக்கின்றது இந்த காலத்தில். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு பழைய திரைப்படம்அதுவும்  50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு பழைய திரைப்படம் வெளியாவது பெரிய சவாலான விஷயம் தான். இது போன்ற சூழ்நிலையில் அந்தப் படம் 100 நாள் ஓடியது என்பது மிகப்பெரிய விஷயமாகும். இப்படிப்பட்ட ஒரு சாதனையை தான் வசந்த மாளிகை திரைப்படம் செய்துள்ளது. அதுவும் மூன்றாவது முறையாக வெளியீடு செய்யப்பட்டு அதுவும் தமிழகத்தின் ஒரு சாதாரண திரையரங்கில் 100 நாள் ஓடியது என்பதை என்னவென்று சொல்வது. மேற்கூறிய இந்த விவரிப்புகளுக்கு எல்லாம் ஒரே ஒரு பெயர் தான் இந்த சாதனையை செய்ய வைத்தது என்...

மசாலா படத்துக்கு நடிகர்திலகம் என்ற பெயரை வைப்பதா?

படம்
நடிகர் திலகம். இது என்ன சாதாரண பெயரா? ஒரு பெயர் தான் .ஆனால் ஓராயிரம் முகங்களை தன்னுள் அடக்கிய பெயர் . தமிழ் சினிமாவுக்கு தங்க ராஜ கிரீடமாக அமைந்த பெயர். ஆங்கிலேயர்களை ஐரோப்பியனை இன்னும் பிற அயலானை வியக்க வைத்த பெயர். உலகத் தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை எல்லோராலும் போற்றப்பட்ட பெயர். இப்படிப்பட்ட ஒரு பெயரை ஒரு மசாலா படத்துக்கு சூட்டலாமா.?  மலையாளத்தில் தயாரித்து கொண்டிருக்கும் ஒரு மசாலா படத்துக்கு நடிகர் திலகம் என்ற பெயரை வைத்திருக்கிறார்கள்  அதுவும் ஒரு நகைச்சுவை படத்துக்கு நடிகர் திலகம் என்ற பெயரை சூட்டி இருக்கிறார்கள். அது இங்கு அல்ல கேரளத்தில். மலையாள திரைப்படம் ஒன்றுக்கு நடிகர் திலகம் என்ற பெயரை சூட்டி இருக்கிறார்கள். அரசியலுக்கு வர விரும்பும் ஒரு கதாநாயகனை பற்றி சுற்றிச்சூழலும் கதையாக இந்த படம்  தயாரிக்கப்பட்டுள்ளது .அரசியல் என்றாலே பல ஏமாற்றுத் தனமான வேடங்களை போட வேண்டியது வரும். அதனாலேயே இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதை நாம் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. நடிகர் திலகம் என்ற பெயரை  எந்தப் படமாக இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணமே எல்லா...

சாந்தி தியேட்டரில் சிவாஜி படங்களை மட்டும் தான் ஓட்டுவார்களா ?

படம்
சென்னை சாந்தி திரையரங்கமா  ?சிவாஜி படங்களை தான் ஓட்டுவார்கள் என்று ஆரம்பத்தில் இருந்து ஒரு தரப்பில் இருந்து தவறான பரப்புரைகள் வந்து கொண்டே இருக்கின்றன.  இப்போதும் கூட அந்த பரப்புரைகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன . ஆனால் உண்மை என்ன என்பதை சொல்லத்தான் இந்த பதிவு. சாந்தி தியேட்டர் 1961ம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி முதல் அமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. தியேட்டர் திறக்கப்பட்டு இரண்டு மாதம் கடந்து தான் சிவாஜி படமே திரையிடப்பட்டது . இத்திரையரங்கில்  1961 மார்ச் மாதம் 16 ஆம் தேதி திரையிடப்பட்ட திரைப்படம்,  ஏ. பீம்சிங் இயக்கத்தில், சிவாஜி கணேசன் நடித்து வெளியான பாவ மன்னிப்பு ஆகும்.ஆக முதலில் திரையிடப்பட்ட படம் கூட சிவாஜி படம் இல்லை . சிவாஜி புரொடொக்சன்சின் முதல் தயாரிப்பு ,பெருமைமிகு மற்றும் கலர் தயாரிப்பு படம் புதிய பறவை. V.C. சண்முகம் மிகவும் சிரத்தை எடுத்து தயாரித்துக் கொண்டிருந்த படம் புதிய பறவை. அப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை கூட சாந்தி தியேட்டரில் திரையிடாமல் வேறு தியேட்டரில் தான் திரையிட்டார்கள்.  காரணம் அப்போது நன்றாக ஓடிக் கொண்டிருந்த ராஜ்கபூர் நடித்த...

சிவாஜியின் படங்களில் துப்பாக்கி காட்சிகள்

படம்
ஒரு டைரக்டர் கதை சொல்றாரு ஹீரோகிட்ட..  ஓபன் பண்ணுனா கொஞ்சம் சீன் பரபரப்பா இருக்கும். என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு ஜனங்களுக்கு புரிய கூடாது. கொலை  கொள்ளை தீவிரவாதம்னு  சீனு கொஞ்சம் ஓடும்.  அந்த டயத்துலதான் ஹீரோ என்ட்ரி கொடுக்கிறார். கொஞ்சம் லைட்டான வெளிச்சத்தில் கொஞ்சம் டார்க்கா ஹீரோ துப்பாக்கிய புடிச்சுட்டு வர்றார். அப்போ அங்க நிறைய அடி ஆளுங்க. ஹீரோ என்ட்ரிய ஸ்லோ மோஷன்ல வச்சுக்கலாம். ட்ரிக்கரை அழுத்தறாரு ஹீரோ. புல்லட் பாஞ்சு வருது. சடார்ன்னு ஒரு அடியாளு தலை சிதறி விழுகிறான். அப்ப ஆரம்பிக்குது ஹீரோவோட வேட்டை. அந்த சின்ன சைஸ் துப்பாக்கில இருந்து தோட்டா பாஞ்சி பாஞ்சி வருது .அடியாட்கள் அங்க போய் இங்க போய் விழறாங்க .ஸ்கிரீன் பூரா ரத்தம் தெளிக்குது. ஹீரோவுக்கு ஒண்ணும் ஆகாது. எல்லா அடியாளுகளும் விழுந்த பின்னால துப்பாக்கில  இருந்து வர்ற புகைய வாயால ஊதுவாரு ஹீரோ !இதுதான் சார் ஹீரோ என்ட்ரி. படத்தில் இது மாதிரி ரொம்ப சீனு இருக்கு சார். இது போன்ற காட்சி அமைப்புகள் ஒரு படத்திலோ இரண்டு படத்திலோ அல்ல.பெரும்பான்மையான ஹீரோயிச படங்கள் அனைத்தும் இப்படித்தான். அந்த  துப்பாக்...

இதை விடவா பெரிய விருது ?

படம்
சிவாஜிக்கு சரியான விருது பாரத பூமியில்  கிடைக்கவில்லை என்று நினைக்கிறீர்களா? என்னுடைய படத்தை ஏன் போஸ்டரில் அடித்துள்ளனர் என்று சிவாஜியின் திருநாவுக்கரசர் உருவத்தை பார்த்து காஞ்சிப் பெரியவர் சொன்னாரே? அதை விடவா பெரிய விருது? சிவாஜியின் நடையை பார்க்க அவரை காக்க வைத்து பின் சிவாஜி நடந்து வருவதை பார்த்து ரசித்து ,உங்கள் நடையழகை பார்க்கவே நான்  உங்களை நடந்து வரச் சொன்னேன் என்று விளக்கம் சொன்னாரே புட்டபர்த்தி சாய்பாபா? அதை விடவா பெரிய விருது?  "என் தந்தையை நேரில் பார்த்தது போல இருந்தது!" என அய்யா.வ.உ.சிதம்பரனாரின்  மகன் சொன்னாரே? அதை விடவா பெரியவிருது ?  "என் தந்தையின் காலில் விழக்கூட இடம் காலம் பார்ப்பேன். ஆனால் அவரை எங்கு கண்டாலும் காலில் விழுந்து வணங்குவேன்!" என தன் தந்தையின் மேல் அன்பும் மரியாதையும் வைத்துள்ள ஒரு சிவாஜி ரசிகன்சொன்னது இது.. இதைவிடவா பெரிய விருது!  சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் "பத்மநாபா! போய் விட்டாயா?" என  ஒரு முதியவர் உருகி சத்தமிட்டாரே? அதை விடவா பெரிய விருது?  இந்திய பிரதமருக்கு அடுத்ததாக நீங்கள் தான் இந்த நயாகரா நகருக்கு மேயர்? எ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்