இடுகைகள்

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

நீதி

படம்
நீதி திரைப்படத்தில ஒரு பிரபலமான பாடல் இருக்கும்.நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் பாட்டு . இந்த பாட்டுக்கு மியூசிக் கம்போசிங் வேலை நடந்தப்போ  ஒரு சுவாராஸ்யமான சம்பவம் நடந்திருக்கு. இந்த பாட்டுக்கு  போட்ட மெட்டு கவிஞருக்கு பிடிக்கலே போலிருக்கு.விசு வேற மெட்டு போடுன்னு கவிஞர் சொன்னார்.ஆனா பக்கத்துலே இருந்த டைரக்டர் தயாரிப்பாளருக்கு அந்த மெட்டு புடிச்சிருச்சசி.அதனாலேஅந்த மெட்டை வெண்டாம்னு சொல்ல  விருப்பமில்லை.அதனாலே அந்த மெட்டுக்கே கவிஞரை பாட்டெழுத வெச்சிடணும்னு குறிக்கோளா இருந்தாங்க இதனால அதே மெட்டுக்கு பாட்டு எழுத வேண்டிய கட்டாயம் வந்துச்சு கண்ணதாசனுக்கு.,  எம்.எஸ்.விஸ்வநாதன் கிட்டே நீதான் மெட்டு போட்டுட்டு அதுக்கு  டம்மி வார்த்தைகளை போட்டு கொடுப்பியே.இதுக்கும் அப்படி ஏதாவது வார்த்தை வச்சிருக்கியான்னு கேட்டார்.. அப்போ எம்.எஸ்.வி ‘’இன்று முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம், இன்று ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்’’ ன்னு  பாடியுள்ளார். இதை கேட்டு ஆச்சரியப்பட்ட கண்ணதாசன் சூப்பர்ன்னு சொல்லி  தன்னோட  பாக்கெட்டில  கையை...

காமராஜர் பிறந்த நாள் விழா

படம்
ஜவஹர்லால் நேரு இறந்த பின்பு பிரதமர் பதவிக்கு யாரை தேர்ந்தெடுக்கலாம் என்பதில் பல போட்டிகளும் சிக்கல்களும் இருந்தன. இது ஒரு சிக்கலான நேரம்.யாரை பிரதமராக தேர்ந்தெடுத்தாலும் பிரச்சினைகள் வரும்.எல்லோரும் குழம்பி நன்ற நேரம் அது.அடுத்த பிரதமர் யார் என்ற போட்டியை உருவாக்கி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த பல சக்திகள் முயன்று கொண்டிருந்தன. காமராஜர் டெல்லி போனார்.சில விவேகமான செயல்களை செய்தார்.லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக  தேர்ந்தெடுத்தார் காமராஜர்.கேள்வி கேட்டவர்களுக்கு சரியான பதிலை காமராஜர் சொன்னபோது யாராலும் எதுவும் பேச முடியவில்லை.இது சிலவரிகளில் சாதாரணமாக சொல்லப்பட்டாலும் இது எவ்வளவு பெரிய அரசியல் சாதனை என்பது அன்றைய அரசியலை அறிந்தவர்களுக்கு தெரியும்.அப்படிப்பட்ட அரசியல் சுழ்நிலை இந்தியாவில் இருந்த சமயம் அது.கிங் மேக்கர் என்று காமராஜரை போற்ற காரணமே அதுதான்.உலகமே காமராஜரை உற்றுப் பார்த்து வியந்து போனது. இந்த சமயத்தில்தான் காமராஜர் பிறந்தநாள் வந்தது. கிங்மேக்கராக அரிய சாதனை செய்து தமிழகம் திரும்பும் காமராஜரின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட தமிழக காங்கிரஸ் முடிவு செய்தது. சிவாஜியுடன்...

new year songs

படம்
புது வருஷம் ஆரம்பமாச்சுன்னா  தொலைக்காட்சியிலயும் ரேடியோவிலேயும் பல புதுச வருஷ பாட்டுக ஒலிபரப்புனாலும் குறிப்பா ரெண்டு பாட்டுகதான் ரொம்ப ரொம்ப பேமசா இருக்குது.இதுலே ஆச்சர்யம் என்னான்னா இந்த ரெண்டு பட பாட்டுகளுமே 1982 ஆம் வருஷம் ரிலீஸ் ஆன பாட்டுகள் தான்.இது செல்போன் காலம்.அன்னைக்கு மட்டும் ரிங்டோனா இந்த பாட்டுகளை ரொம்ப பேர் வெச்சிருப்பாங்க.புது வருஷம் அன்னைக்கு நடக்கற பார்ட்டி ,இசைக்கச்சேரி , புத்தாண்டு கொண்டாங்கள்லே இந்த ரெண்டு பாட்டுகளும் அதிகமா ஒலி பரப்பாகும். இந்த ரெண்டு பாட்டுகள்லே ஒரு பாட்டு நல்லோர்கள் வாழ்வை காக்க நமக்காக நம்மை காக்க பாட்டு.இது சிவாஜி நடிச்ச படம் 1982 ஏப்ரல் 14 லே வெளியான படம். இன்னொன்னு Happy new year ன்னு ஆரம்பிக்கற இளமை இளமை இதோ இதோ ,சகல கலா வல்லவன் பட பாட்டு.இந்த படம் 1982 ஆகஸ்டு 14 லே வெளியான படம். நல்லோர்கள் வாழ்வை காக்க பாட்டு MS.விஸ்வநாதன் இசையமைச்சது.சகலகலா வல்லவன் இளையராஜா இசையமைச்சது  4 மாச இடைவெளியிலே வெளியான படங்கள் இது.எந்த ஒரு விஷயத்துலேயும் ஏதோ ஒரு டாப் விஷயம் இருக்குமில்லே.அது மாதிரி இந்த ரெண்டு பாட்டுலே எது டாப் அப்படிங்கறத சொல்லியாகணும்...

சிவாஜி நடிப்பும் -விமர்சனங்களும்

படம்
கௌரவம் படத்துலே வக்கீலா நீங்க நடிச்சிருக்கீங்க,இது ஒருசட்டத்துறை சம்பந்தப்பட்ட படம்னு சாதாரணமாத்தான் நெனச்சு நாங்க பாத்தோம்.ஆனா வக்கீல் வேஷத்துலே அந்த நடிப்புலே இவ்வளவு நுணுக்கம் இருக்கான்னு படம் பாத்த பின்னாலே ஆடிப்போயிட்டோம் ஐயா.எந்த ஒரு படத்துக்கும் க்ளைமேக்ஸ்தான் படம் டிராவல் பண்ற விஷயத்தை சொல்ல வேண்டிய கட்டம்.அதனாலே அதுலே நடிக்கற ஹுரோ படம் பூரா நடிச்சதை அந்த க்ளைமேக்ஸ்லே நிறுத்தியாகணும்.படத்தோட ஒவ்வொரு காட்சியா நடிச்சிட்டு வர்றப்போ அந்த க்ளைமேக்ஸ் காட்சிலே நிக்கறதுக்கு ஒரு பலம் கிடைச்சுடும்.நீங்க என்னடான்னா முதல் நாள் ஷுட்டிங்க்லேயே க்ளைமேக்ஸ் காட்சியிலே நடிச்சீங்களாம்.படத்தை பாத்தா அப்படி தெரியலையே எங்களுக்கு. கௌரவம்னு எந்த அர்த்தத்துலே படம் எடுத்தவங்க  டைட்டில் வெச்சாங்களோ.ஆனா   நடிப்புக்கு கௌரவம் கொடுத்துட்டீங்க. தங்கபதக்கத்துலே மனைவி கேஆர் விஜயா இறந்ததும் போலீஸ் ஸ்டேசன்லே இருந்து வீட்டுக்கு வருவீங்க.என்னதான் பெரிய போலீஸ் ஆபீசரா இருந்தாலும் மனைவி உடலை பாத்ததும் கதறி துடிப்பீங்கன்னுதான் நாங்க பாத்துட்டு இருந்தோம்.அமைதியா லக்ஸ்மி , நான் வந்து ரொம்ப நேரமாச்சுன்னு சொல...

வசந்தமாளிகை பாட்டில் நீக்கப்பட்ட வரிகள்

படம்
வசந்த மாளிகை படத்தில் இடம்பெற்ற குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால் பாட்டுக்காக கண்ணதாசன் அந்த பாட்டோட பல்லவி தவிர சரணம் மட்டும் எட்டு எழுதினார் கண்ணதாசன்.ஆனா பாட்டுலே நாம கேட்டது மூணு சரணம்தான். பொதுவா சினிமா பாட்டுகன்னா நாலு அஞ்சு நிமிஷம் கொஞ்சம் பெரிசுன்னா ஆறு நிமிஷத்துலே பாட்டை முடிக்கறதுதான் வழக்கம்.அந்த எட்டு சரணத்தையும் பாட்டுலே வெச்சா பாட்டு ரொம்ப நீளமா போயிடும்.படத்துலே இந்த பாட்டு நாலு நிமிஷம் வரும். ரொம்ப முக்கியமான சரணங்களை மட்டும் வெச்சா பாட்டை கேக்கறவங்களுக்கும் சுவாராஸ்யமா இருக்கும்.போரும் அடிக்காது.இந்த எட்டு சரணத்துலே ரொம்ப முக்கியமான மூணு சரணத்தை மட்டும் பாட்டுலே வெச்சிருப்பாங்க. அதை செலக்சன் பண்ண KV.மகாதேவன் ரொம்ப மெனக்கெட்டிருக்கிறார். பாட்டோட எல்லா சரணங்களையும் நீங்க பாத்தாலே தெரிஞ்சுக்குவீங்க. அந்த மத்த சரணங்கள் என்னென்ன அப்படிங்கறதை நாம பாக்கலாம். அதுக்கு முன்னாலே வசந்தமாளிகை சூட்டிங் நடந்த சில விஷயங்களை பாக்கலாம். படத்தோட அந்த வசந்தமாளிகை செட் போடற வேலைகள் எல்லாம் நடந்துட்டு இருக்குது. படத்தோட பல முக்கால்வாசி காட்சிகள் எல்லாம் சூட்டிங் பண்ணி முடிச்சாச்சு.இனி  படத்...

sivajiganesan sarojadevi movies

படம்
எந்த ஒரு கதாநாயகியும் சிவாஜியோட நடிச்சுட்டா அவங்களோட கேரியர்லே அவங்களுக்கு ஒரு தனி அந்தஸ்து வந்துடும்.இதுக்கு உதாரணமா மஞ்சுளா ஜெயலலிதா வாணிஸ்ரீ தேவிகான்னு பல பேரைச் சொல்லலாம்.மத்த படங்கள்லே கிடைக்காத பேரும் புகழும் அவங்களுக்கு கிடைச்சிருக்கு.விதி விலக்கா அமைஞ்ச சில நடிகைகளை தவிர அதிகமான  நடிகைகள் நடிப்பை கத்துக்கற விஷயம்  சிவாஜிபடங்கள் மூலமா அவங்களுக்கு கிடைக்குது. இதுலே சரோஜாதேவியும் ஒருத்தர். இவா் ராதாதேவிங்கற இயற்பெயரை சினிமாவுக்காக  சரோஜாதேவின்னு  மாத்திக்கிட்டு ஹொன்னப்ப பாகவதர் தயாரிச்ச  'மகாகவி காளிதாஸ்' ங்கற கன்னடப்படத்தில  (1955) லே கதாநாயகியாக அறிமுகமானார்.  சிவாஜி படத்துலே சரோஜாதேவி முதன்முதலா நடிச்சது தங்கமலை ரகசியம் படத்துலேதான். இந்த படம் மந்திர தந்திரம் மாயாஜாலம் அமைஞ்ச படம்.இது 1957 லே வெளியான படம்.இதுலே சில காட்சி ஒரு பாட்டுக்கு மட்டும் சரோஜாதேவி நடிச்சிருப்பாங்க.சிவாஜிக்கு ஜோடி கிடையாது.தமிழ் சினிமாலே சரோஜாதேவி பாப்புலர் ஆகாத காலகட்டம் இது. இதுக்கு அடுத்த வருஷம் வெளியான சபாஷ்மீனா படத்துலே ஒரு கதா நாயகியா நடிச்சிருந்தாங்க. இதுலே சந்திரப...

என்தமிழ் என் மக்கள்

படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எத்தனையோ வேஷம் போட்டு இருக்கார். எல்லோரும் ஏன் இப்படி சொல்றாங்க அப்படின்னா ,சிவாஜி அதிகமான வேஷங்களை யாரும் செய்யாத அளவுக்கு சினிமாவுல செஞ்சிருக்கார் அப்படிங்கறதுக்காக சொல்லப்படுகிற ஒரு சிறப்பு வாய்ந்த விஷயம். டாக்டர் வக்கீல் தொழிலாளி பணக்காரன் ஏழை முரடன் மூடன் இப்படி இந்த வேஷங்கள் மட்டும் இல்லாம சரித்திர நாயகர்கள் புராண புருஷர்கள் கடவுள் வேஷம்னு நிறைய பண்ணியிருக்கிறார். இந்த மாதிரி பல வேஷங்களை செஞ்ச நடிகர் திலகம் நிஜமா தானிருந்த ஒரு நிலையை சினிமாலே வேஷமா செஞ்சிருக்கார்.ஆனா இதுல என்ன ஸ்பெஷல் என்னான்னா நிஜத்துலேயும் சரி சினிமால போட்ட வேஷத்துலயும் சரி, அவர் நடிக்கல அப்படிங்கிறது தான் உண்மை. என்னது சிவாஜி சினிமால நடிக்கலையா அப்படின்னு எல்லாரும் கேள்வி கேட்கலாம். ஆனா உண்மை அதுதான்.சிவாஜி போட்ட அந்த வேஷம் எதுன்னா அரசியல்வாதி வேஷம்தான். சரி இதை எப்படி நடிக்காத வேஷம்னு சொல்லறதுக்கு பல விஷயங்கள் இருக்கு.நிஜத்துலேயும் அது எப்படி அப்படிங்கறதுக்காக பல விஷயங்களை சொல்லலாம். பொதுவா அரசியல்வாதின்னாலே என்ன இமேஜ் இருக்கு. அரசியல்வாதின்னாலே அவங்க பேச்சும் செயலும் எப்படி இருக்க...

சிவாஜியின் சிறப்பு நம்பர் திரைப்படங்கள்

படம்
நடிகர்திலகத்தின் சிறப்பு நெம்பர் பட வரிசையில் அமைந்த 1 25 50 75 100 125 150 175 200 225 250 275 வது திரைப்படங்கள் பற்றிய சிறப்பு விசேஷமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். 1.பராசக்தி .. திருச்சியிலே இருக்கற ஒரு நாடக கம்பெனியிலே சிவாஜியை டைரக்டர் ASA சாமி வந்து சந்திச்சு ஒரு விஷயத்தை சொல்றாரு.கணேஷ் நீ உடனடியா மெட்ராசுக்கு போகணும்.பராசக்தி படத்துக்காக போட்டோ ஷுட் எடுக்கறாங்கலாம்.நீ உடனடியா பிளைட்லே போன்னு சொல்றார். இதை பத்தி பின்னாலே சிவாஜி சொன்னப்போ போட்டோ ஷுட்டுக்காக பிளைட்லே போன நடிகன் நானாத்தான் இருப்பேன்.சிவாஜி  அப்ப எந்த சினிமாலேயும் நடிச்சதில்லே.ஒரு சாதாரண நாடக நடிகனாத்தான் அப்ப இருந்தார்.படம் முடியறதுக்குள்ளே பல பிரச்சினைகள் சிவாஜிக்கு . இந்த ஒரு படம் முடிஞ்சு அதுக்கு மேலே என்ன ஆகப் போகுதுன்னு யாருக்கும் தெரியாது.சிவாஜிக்கு முன்னாலேயே பல வருஷமா சினிமாலே நடிச்சிட்டு இருந்தாங்க.அப்படி பல பேரு துண்டு துக்கடா வேஷத்துலேதான் நடிச்சுட்டு இருந்தாங்க.அவங்க கூட கொஞ்சம் பிரபலமா இருந்தாங்க.சிவாஜி அப்படி கூட இல்லே.இப்படி இருந்த நிலை அன்னைக்கு. இதெல்லாம் பராசக்தி ரிலிசாகி சாயந்தரம் வரைக்க...

சிவாஜியின் 50 Top திரைபடங்கள்

படம்
1.1952  இந்த வருடம் தமிழில் வெளிவந்த  படங்கள் 28.மொழிமாற்றுப் படங்கள் 4.ஒருபடம்கூட பெயர் சொல்லும்படி அமையவில்லை.1952 ஆம் வருடம் இப்படியே போய் விடுமா என்ற நிலையில் அந்த வருட 10 வது மாதத்தில் வெளியானது பராசக்தி .ஒன்றுமே சிறப்பாக அமையாத இந்த வருடத்தில் பராசக்தி தமிழ் சினிமா சரித்திரத்திலேயே அழிக்க முடியாத படமாக அமைநந்து விட்டது. சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் 21 நடிகர் நடிகையர் நடித்திருந்தார்கள்.38 வாரங்கள் வரை ஓடிய திரைப்படம்.சிவாஜிகணேசன் அந்த காலத்திலேயே அதுவும் முதல் படத்திலேயே  ,Multi split personality 'குணம் காட்டும் காட்சியில் நடித்து அசத்தியிருப்பார் சிவாஜி.தமிழ்சினிமாவின் ஸ்பெசல் திரைப்படம் பராசக்தி. 1953. 2.திரும்பிப் பார். மொத்த படத்தில் இருந்து  சில முக்கியமான க்ளிப்புகளை இணைத்து படம் வெளிவருவதற்கு முன்பு வெளியிடப்படும் டிரெயிலர் என்ற சிறப்பு விளம்பர உத்தியை முதன் முதலாக தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட திரைப்படம் திரும்பிப்பார்.மிகவும் மோசமான குணம்கொண்ட கதாநாயக வேடத்தில்நடித்து அதை மிகவும் புகழ் பெற வைத்து காட்டினார் சிவாஜி. 3. மனோகரா முதலில் தமி...

மலைச்சாமி குயிலு என்ன உறவு அது?

படம்
எந்த ஒரு தமிழ் சினிமாவிலும் காட்டாத ஒரு புதுமையை முதல் மரியாதை படத்துலே பாரதிராஜா செஞ்சிருப்பார். காதல் சினிமாக்களை எடுத்துக்கிட்டா கதாநாயகனோ கதாநாயகியோ காதலை சொல்லறமாதிரி காட்சி இருக்கும்.ஒரு தலைக்காதல் இருக்கும்.முக்கோண காதல் படங்கள் இருக்கு.இதெல்லாம் படத்துலேயே காட்சியமைப்புகளிலே காட்டிருவாங்க.முதல் மரியாதை படத்தை பொறுத்தவரை அது இருக்கா இல்லையான்னு நம்மளையே யோசிக்க வெச்ச படம். மலைச்சாமி குயிலை நேசிக்கறது எந்த அர்த்தத்துலேன்னு பாக்கறவங்க எண்ணத்துலேயே வெச்சிருப்பார் இயக்குனர்.நான் உன்னை விரும்பறேன்னு சொல்ல முடியாது.அப்படி காட்டவும் முடியாது.அது இருக்கா இல்லையான்னு பட்டவர்த்தனமா காட்ட முடியாது.மெல்லிசா சின்ன உணர்வுகளை கூட வெளிப்படுத்தற காட்சிகள் கூட இருக்காது.அதேசமயம் பாக்கறவங்களுக்கும் அவங்க உணர்வை சொல்லியாகணும்.அந்த ஒரு சின்ன நூலிலே தான் அவங்க உறவை சொல்லியாகணும். கட்டுன மனைவியையே 20 வருஷத்துக்கு மேலே தொடாம வாழ்ந்த ஒரு மனுஷனோட கௌரவம் ஒரு வார்த்தையாலே சிதைஞ்சு போகக் கூடாது. மலைச்சாமி குயிலு உறவுலேதான் கதையோட முடிவே இருக்கும்.ரொம்ப நாசூக்கா ஒரு சின்ன நூல் அளவுக்கு கொஞ்ச கொஞ்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்