இடுகைகள்

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

ராஜபார்ட் ரகசியங்கள்

படம்
1990 கள்லே , திரைப்பட காட்சிகளிலே ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாங்க.. படத்தின் டைட்டில் காட்சி ,அல்லது ஆரம்ப கதை பிளாஸ்பேக் காட்சிகள் இடம் பெற்றால் அதை கறுப்பு வெள்ளையில் காட்டுவாங்க. இந்த டெக்னிக்  உத்தியை எல்லாம் 1973 லேயே P.மாதவன் யூஸ் பண்ணியிருப்பார். ராஜபார்ட் ரங்கதுரை.. படத்தோட ஆரம்ப காட்சிகள் பிளாக் அண்ட் ஒயிட்லே ஓடும். டைட்டில் காட்சி வரும் பாருங்க. 'காயாத கானகத்தே நின்றுலாவும் காரிகையேன்னு "டைட்டில் பாட்டு வரும்.இந்த காட்சிலே  சின்ன வயசு சிவாஜி கேரக்டர்லே வர்ற பையன் ,ஸ்ரீதேவியோட பாடற மாதிரி காட்சி.பாட்டு ஒரு நாலு வரி போன பின்னாலே ,கறுப்பு வெள்ளையிலே ஓடிட்டு இருக்கற படம் அப்படியே கலருக்கு மாறும் .அந்த கேரக்டரோட தலையை காமிச்சு , காலை காமிச்சு கையை ,உடம்பை பார்ட் பார்ட்டா காமிச்சு டைட்டில் வரிசையா ஓடும். டைரக்சன் P.மாதவன்னு கார்டு வர்றப்போ ,தலையை காமிக்கற அந்த பிரேம் ,டைட்டில் முடியறப்போ , தலை அப்படியே திரும்பும் பாருங்க. தியேட்டரே திருவிழா கோலமா மாறிடும். விசில் சத்தம், கை தட்டல் சத்தம் காதை கிழிக்க அந்த இன்ட்ரோ காட்சியா ,சிவாஜியை காமிப்பாங்க. இந்த கை கால் உடம்புன்னு...

சனிக்கிழமை சக்கரவர்த்தி

படம்
​நடிகர் திலகத்தின் சனிக்கிழமைச் சாதனைகள்:  ​பொதுவாகவே, புதிய திரைப்படங்களை சனிக்கிழமைகளில் வெளியிடத் தயாரிப்பாளர்கள் பெரும் தயக்கம் காட்டுவார்கள். வார இறுதி விடுமுறையைக் கணக்கில் கொண்டு பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளிலும், அல்லது பண்டிகை கால விசேஷ நாட்களிலுமே திரைப்படங்கள் திரைக்கு வருவது காலங்காலமாகப் பின்பற்றி வரும் ஒரு நடைமுறை. ​ஆனால், இந்த விதிகளுக்கெல்லாம் விதிவிலக்காகத் திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். தமிழ் சினிமா வரலாற்றில் சனிக்கிழமைகளில் அதிகப்படியான திரைப்படங்களை ரிலீஸ் செய்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு.  ​சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்த நடிகர் திலகத்தின் திரைப் பயணத்தில்,  எண்ணற்ற படங்கள் இதுபோல சனிக்கிழமைகளில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தாலும், அவற்றுள் காலத்தால் அழியாத  மிக முக்கியமான 25 திரைப்படங்களைப் பற்றி இந்தப் பதிவில் நாம் விரிவாகக் காணலாம். ​ ​தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு நடிகரின் இரண்டாவது படம் என்பது எப்போதும் ஒரு சவாலான விஷயம். முதல் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தக்கவைக்க வேண்டிய கட்டாயம் இருக்கு...

அணைக்கட்டுகளில் எடுக்கப்பட்ட சிவாஜி பாடல்கள்

படம்
வணக்கம் நண்பர்களே! இன்னைக்கு இருக்கிற டெக்னாலஜில, சும்மா ஒரு பட்டனை தட்டுனா போதும்... கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்ல ஆயிரம் அதிசயங்களை நம்ம கண் முன்னாடி கொண்டு வந்திடலாம்.  ஆனா, எந்த டெக்னாலஜி வசதியுமே இல்லாத அந்த காலத்துல, 'இயற்கையோட பிரம்மாண்டத்தை அப்படியே திரையில எப்படிக் கொண்டு வர்றது?' அப்படின்னு யோசிச்சப்போ கிடைச்ச ஒரு விடைதான் 'அணைக்கட்டுகள், பார்க்குகள். ​கேமரா லென்ஸுக்கும், சினிமா பாட்டுக்கும் அணைக்கட்டுகள் ,பார்க்குகள் ஒரு பெரிய 'லவ் ஸ்பாட்'னே சொல்லலாம். குறிப்பா, அந்த காலத்துல 35mm கேமராக்களுக்கு  பெரும்பாலும் அணைக்கட்டு ,பார்க்குகளை  விட ஒரு சிறந்த தீனி வேற எதுவுமே இல்லைன்னு சொல்லலாம்.. அந்த நீளமான அணை, மேல இருந்து ஆர்ப்பரிச்சு கொட்டுற தண்ணி... இதையெல்லாம் வைட் ஆங்கிள்ல  பார்க்கும்போது தியேட்டர்ல உட்கார்ந்திருக்கிற நமக்கு ஒரு மிரட்டலான உணர்வைத் தரும். ​தண்ணியில பட்டுத் தெறிக்கிற சூரிய வெளிச்சம், ஒரு நேச்சுரலான ஃபில்டர் மாதிரி கேமராவுக்கு உதவியா இருக்கும்.கறுப்பு-வெள்ளை காலத்துல அந்த சாம்பல் நிற நிழல்களும், கலர் படங்கள் வந்தப்போ அந்த நீல நிற நீரும் ஒளிப்பதிவாளர...

14 குழந்தைகளுடன் உயிர் தப்பிய சிவாஜி

படம்
"14 குழந்தைகள்.. நூலிழையில் உயிர் தப்பிய சிவாஜி!" - எங்க மாமா படப்பிடிப்பில் சம்பவம் ! ​சினிமான்னா நமக்கு உடனே ஞாபகம் வர்றது ஆக்ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட். ஆனா, ஒரு ஆக்டிங் யுனிவர்சிட்டி-யே ஒரு இடத்துல தடுமாறி நின்னார்னா அது எங்க தெரியுமா? குழந்தைகளோட நடிக்கும்போதுதான்! அவர் எத்தனையோ சவாலான கதாபாத்திரங்களை பண்ணியிருக்கார். ஆனா, 14 குழந்தைகளோட ஒரே நேரத்துல நடிச்சு, அந்தப் படப்பிடிப்புல அவருக்கு மரண பயமே வந்த ஒரு சம்பவத்தைப் பத்தி உங்களுக்கு தெரியுமா?  ​"1970-ல ஏ.சி. திருலோக்சந்தர் இயக்கத்துல வெளிவந்த சூப்பர் ஹிட் படம் தான் 'எங்க மாமா'. இது ஹிந்தியில் ஷம்மி கபூர் நடிச்ச 'பிரம்மச்சாரி' படத்தோட ரீமேக். இந்தப் படத்துல சிவாஜி சார் கூட ஜெயலலிதா , வெண்ணிற ஆடை நிர்மலா பாலாஜின்னு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிச்சிருந்தாங்க.இந்தப் படத்துல சிவாஜி ஒரு ஹீரோவா நடித்திருந்தாலும்  படத்துலே  அந்த 14 குழந்தைகளும் உண்மையான ஹீரோக்கள் தான். நடிகர்திலகம்  ஒரு பழைய பேட்டிலே  சொல்லும்போது சிரிச்சுக்கிட்டே சொன்ன விஷயம் என்னன்னா, 'ஒரு குழந்தையோட நடிக்கிறதே பெரிய வித்தை. இதுல 14 ...

அசோகனுக்கு உதவ முன்வந்த சிவாஜி

படம்
"வணக்கம் மக்களே! 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன்... கேமரா முன்னாடி நின்னா அவர் ஒரு சிங்கம், ஒரு மகா கலைஞன். ஆனா, அந்த மேக்கப் கலைஞ்சதுக்கு அப்புறம் அவர் எப்படிப்பட்ட மனுஷன்? 'ஏன் இவரை இவ்வளவு கொண்டாடுறோம்'னு நீங்க ஆச்சரியப்படுற மாதிரி, சினிமாவுல கூட பார்க்க முடியாத ரெண்டு ட்விஸ்ட்டான சம்பவங்கள் அவரோட நிஜ வாழ்க்கையில நடந்திருக்கு. அது என்னன்னு தெரிஞ்சுக்க வீடியோவை கடைசி வரைக்கும் பாருங்க!" ​சம்பவம் 1: மதுரையில் நடந்த அந்த மர்மமான நட்பு! ​ "சிவாஜி சார் ஒரு ஊருக்கு போறாருன்னா அங்க இருக்குற பெரிய விஐபி-க்கள் எல்லாம் அவரைப் பார்க்க வரிசையா வருவாங்க.. ஆனா, மதுரையில ஒருத்தர் இருந்தாரு... அவருக்கு சினிமாவே பிடிக்காது, சினிமாவும் பாத்ததில்லே. சினிமாவுலே இருக்கற சிவாஜி சினிமாவுலே எவ்வளவு பெரிய ஆளுன்னும் தெரியாது. சிவாஜியோட நடிப்பு ,சினிமா இதெல்லாம் தெரியாது. பாத்ததும் இல்லே. அவரை பொறுத்த வரை சிவாஜி நல்ல மனுசர் .நல்ல நண்பர் அவ்வளவுதான். அவர்தான் 'பெரிய கருப்பண்ணம்பலம்'. இவங்க ரெண்டு பேருக்கும் இடையில ஒரு விசித்திரமான நட்பு இருந்தது." ஒரு நாள் இவரை வற்புறு...

சிவாஜியும் நல்லி செட்டியாரும்

படம்
​நடிகர் திலகம் சிவாஜியும் நல்லி செட்டியாரும்: சில நினைவுகள் ​17.10.1952 தீபாவளி தினத்தன்று பராசக்தி படம் சென்னை பாரகன் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. படம் தொடங்கி சிறிது நேரம் கழித்து சிவாஜி படம் பார்க்க வந்து அமருகிறார். அவருடைய இருக்கைக்கு மூன்றாவதாக அமர்ந்திருந்த 12 வயது சிறுவன் சிவாஜிக்கு வணக்கம் சொல்ல, அவரும் திரும்பிப் பார்த்து வணக்கம் சொல்கிறார். அந்தச் சிறுவன் தான் நல்லி செட்டியார். இதுதான் நல்லியின் முதல் சிவாஜி தரிசனம். ​பள்ளிப் படிப்பை முடித்த நல்லி செட்டியார் கடையின் வியாபாரத்தை கவனிக்கத் தொடங்கினார். நல்லி கடைக்கு சிவாஜியின் துணைவியார் கமலாம்மாள் அடிக்கடி வந்து புடவைகள் வாங்கிச் செல்வார். கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த சிவாஜி குடும்பத்தாருக்கு துணிகள், புடவைகள் எடுத்துத் தருபவர் கமலாம்மாள் தானாம். படப்பிடிப்பிலிருந்து திரும்பி வரும் சிவாஜி வீட்டில் கார் இல்லாமல் இருந்தால், நல்லி கடைக்கு புடவை எடுக்க கமலாம்மாள் சென்று விட்டார்களா என்று கேட்பாராம். ​1966-இல் சிவாஜி, பத்மினி, கே.ஆர். விஜயா நடித்த இருமலர்கள் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது. குடும்பத்தோடு கொடைக்கானல் ...

நீதிபதி ரத்தினவேல் பாண்டியனுக்கு விழா எடுத்த சிவாஜி

படம்
மாண்புமிகு நீதிபதி எஸ். ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்று இருந்த நேரம். அவருக்கு பசும்பொன் பைன் ஆர்ட்ஸ் சார்பாக ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என முடிவெடுத்து, அந்த அமைப்பில்  இருந்தவர்கள்  சிவாஜி அவர்கள் 'சின்ன அண்ணாமலை' தயாரித்துக் கொண்டிருந்த 'மனிதனும் தெய்வமாகலாம்' என்ற படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு கோவூரில் நடந்து கொண்டிருந்த போது சந்தித்து விவரம் கூறினார்கள்.. ​அதைக் கேட்ட அவர் மிகவும் மகிழ்ச்சியுடன், "கட்டாயம் நடத்தப்பட வேண்டிய நமது குடும்ப விழா" என்று கூறி, "வெளியே ஹோட்டல்களில் தேநீர் விருந்து, சொற்பொழிவு, பாராட்டுரை என்று நடத்துவதை விட, தமது வீட்டில் புல்வெளியில் டேபிள் சேர் போட்டு இரவு விருந்துடன் பாராட்டு விழா நடத்தலாம்" என்று கூறிவிட்டு, மறுநாள் காலையில் தம்முடைய தம்பி வி.சி. சண்முகத்தை சந்தித்து தேதியை நிச்சயம் செய்து கொள்ளுங்கள் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார். சிவாஜியின் தம்பி வி.சி. சண்முகம், சிவாஜியின் தங்கையின் கணவர் மாப்பிள்ளை வேணுகோபாலும் அதற்கான உதவிகளைச் செய்தார்கள். ​22-04-1974 உயர் நீ...

youtube யார் top

படம்
தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் மற்றும் 'எம்.ஜி.ஆர் ஆகியோரின் திரைப்பயணம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றின் ஒரு அங்கமாகும். கருப்பு-வெள்ளை காலம் முதல் வண்ணப் படங்கள் வரை இவர்கள் செய்த சாதனைகள் இன்று டிஜிட்டல் யுகத்திலும், குறிப்பாக யூடியூப் போன்ற தளங்களில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன. இன்றைய தலைமுறையினர் கூட இவர்களது நடிப்பையும், வசன உச்சரிப்பையும், சண்டைக் காட்சிகளையும் வியந்து பார்த்து வருகின்றனர். ​பழைய திரைப்படங்கள் பலவும் டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு (Remastered) யூடியூபில் பதிவேற்றப்படும்போது, அவை பல லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைக்கின்றன. குறிப்பாக, பாடல்களைத் தாண்டி ஒரு முழுத் திரைப்படத்தையும் அமர்ந்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இவர்களது அழியாத புகழுக்குச் சான்றாகும். கருப்பு-வெள்ளை காலத்திலிருந்து வண்ணப் படங்கள் வரை இவர்களது ஆதிக்கம் திரையரங்குகளில் திருவிழாக் கோலத்தை உருவாக்கியது. ஒரு காலக்கட்டத்தில் திரையரங்கு வாசலில் முட்டி மோதிய ரச...

சிவாஜி பட தலைப்பு ஒற்றுமை

படம்
ஒரு தலைப்பு என்பது ஒரு படத்திற்கு முகவரி போன்றது. ஆனால், நடிகர் திலகத்தின் படங்களில் சில சொற்கள் மீண்டும் மீண்டும் தலைப்புகளில் இடம்பெற்றாலும், அவை ஒவ்வொன்றும் ஒரு புதிய பரிமாணத்தையே நமக்குக் காட்டின. "ஒரே சொல்... ஆனால் இரு வேறு கதைக் கருக்கள்" என்ற ரீதியில் அமைந்த அவரது படங்களின் பெயர்கள், ஒரு தேடலைப் போலவே சுவாரசியமானவை. காலங்கள் கடந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அந்தத் தலைப்புகளின் அணிவகுப்பை இங்கே விரிவாகக் காண்போம். மனிதன்:  1953-ல் வெளியான 'மனிதனும் மிருகமும்' மனித இயல்புகளைப் பேசியது. 1975-ல் வெளியான 'மனிதனும் தெய்வமாகலாம்' ஆன்மீகத்தை ஒரு புதிய கோணத்தில் அணுகியது.  1975-லேயே 'அவன்தான் மனிதன்' வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து 1977-ல் 'அவன் ஒரு சரித்திரம்' வெளியானது (இவ்விரண்டு படங்களிலும் மஞ்சுளா நாயகி). ​மகன்:  1969-ல் தந்தை-மகன் பாசத்தைச் சொல்லும் 'தெய்வமகன்' (3 வேடம்), 1974-ல் 'என் மகன்' (2 வேடம்) மற்றும் 1992-ல் வெள்ளிவிழா கண்ட 'தேவர் மகன்' என 'மகன்' வரிசை நீண்டது. ​ராஜாக்களின் ...

நடிகனில் ஓர் அவன் தான் மனிதன்

படம்
இளையதிலகம் பிரபு... பெரியதம்பி பட சூட்டிங் பொள்ளாச்சியில் நடந்தது. 1996 ஆம் வருசம். அன்னைக்கு கடைசிநாள் சூட்டிங். பொள்ளாச்சி வந்தார்னா போய் பாக்கறது வழக்கம். நான் பொள்ளாச்சிதான். கடைசி நாள் சூட்டிங்காச்சே ..போய் பாத்துட்டு வந்திடலாம்னு நாங்க போனோம்.போக லேட் ஆயிடுச்சு. பிரபு சாருக்கு சூட்டிங் முடிஞ்சு பிளைட்டுக்கு போயாகணும். அந்த அவசரத்திலயும் ,சூட்டிங்லே இருந்த அத்தனை தொழிலாளிகளுக்கும் புதுத்துணி அன்பளிப்பை தன் கையாலேயே கொடுக்கறார். படத்துலே வேலை செஞ்ச ஒரு தொழிலாளி சொன்னார்:அவுட்டோர் சூட்டிங் வந்தாலே பிரபு சார் இப்படித்தான். எல்லாருக்கும் ஏதோ ஒண்ணு செஞ்சுதான் அனுப்பி வைப்பார்.நான் பல சூட்டிங்லே பாத்திருக்கேன்னு சொன்னார்.தயாரிப்பாளர் பண்றத இவர் செய்யறாறேன்னு நாங்க யோசிச்சோம்.இந்த மாதிரி தெரியாத விஷயத்தை தான் அம்மா கிரியேசன் சிவா ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாலே ஒரு யூடியூப் சேனல்லே சொன்னார்.பிரபுவுக்கு தயாரிப்பாளர் சொன்ன சம்பளத்துலே பாதிதான் சூட்டிங்  முடிஞ்சதும் கிடைக்கும். பாதி சம்பளம் இப்படிப்பட்ட செலவுகள்லே போயிடும். இன்னொரு சம்பவம்.ராஜகுமாரன் சூட்டிங் .ஆடி வரட்டும் மயிலைக்காளை...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்